திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/072.அமுத பயோதரப் பத்து
ஆதியே துணை
108 வகை சிற்றிலக்கியங்கள்
- 001.திரு அங்கமாலை
- 002.திரு அட்டகம்
- 003.திரு அட்ட மங்கலம்
- ✸004.ஆன்மராக மாலை
- 005.திரு அம்மானை
- ✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
- 007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
- 008.திருவருட்சாலை ஆற்றுப்படை
- 009.திருஇணைமணிமாலை
- 010.அருள் இயன்மொழி வாழ்த்து
- 011.திரு இரட்டைமணி மாலை
- 012.அருள் இருபா இருபஃது
- 013.திரு உந்தியார்
- 014.திரு உலா
- 015.திரு உலா மடல்
- ✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
- ✸017.கலியை வெல் உழிஞை மாலை
- ✸018.அருள் உற்பவ மாலை
- 019.திருப்பொன்னூஞ்சல்
- 020.திருவூர் இன்னிசை வெண்பா
- 021.திருவூர் நேரிசை வெண்பா
- 022.திருவூர் வெண்பா
- 023.அருள் எண் செய்யுள்
- 024.திருஎழுகூற்றிருக்கை
- 025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
- 026.திரு ஒருபா ஒருபஃது
- 027.திரு ஒலியந்தாதி
- ✸028.நற்கடிகை வெண்பா
- ✸029.வான் கடைநிலை
- ✸030.திருக்கண்படை நிலை
- 031.சாலைக் கலம்பகம்
- ✸032.நன்காஞ்சி மாலை
- 033.தெய்வ காப்பியம்
- 034.திருக் காப்பு மாலை
- 035.பூவடிப் போற்றிகள்
- 036.விண்பாங்கரசர் தென்பாங்கு
- 037.ஞானக் குழமகன்
- 038.ஊறல்மலைக் குறமங்கை
- 039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
- ✸040.அருட் கைக்கிளை
- 041.மெய் பெறு நிலை
- 042.திருவருட்கோவை
- 043.திருச்சதகம்
- 044.அருட் சாதகம்
- 045.வண்ணப்பூ
- ✸046.அறக்களவஞ்சி
- 047.செய்ந்நன்றி சாற்று
- 048.திருச் செவியறிவுறூஉ
- 049.திருத்தசாங்கம்
- ✸050.திருத்தசாங்கத்தயல்
- 051.அருள் தண்டக மாலை
- 052.அறம் வேண்டகம்
- ✸053.ஒளிர் தாரகை மாலை
- ✸054.அருட்சேனை மாலை
- 055.திருக்கண்ணெழில்
- 056.தெய்வத் திருவருளெம்பாவை
- ✸057.அறப்போர் மாலை
- 058.அறிதுயிலெடை நிலை
- 059.அன்பு விடு தூது
- 060.நற்றொகைச் செய்யுள்
- ✸061.அருள் நயனப் பத்து
- 062.எழில் நவமணிமாலை
- 063.சிவரத்தின மாலை
- 064.திரு நாம மாலை
- 065.அறம் நாற்பது
- 066.வான்மதியரசர் நான்மணி மாலை
- 067.அருள் நூற்றந்தாதி
- ✸068.நறு நொச்சி மாலை
- 069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
- 070.தெய்வமணிப் பதிகம்
- 071.அருட் பதிற்றந்தாதி
- ✸072.அமுத பயோதரப் பத்து
- 073.யுக உதயப் பரணி
- 074.நல் சந்த மாலை
- ✸075.திரு பவனிக் காதல்
- 076.சாலையூர்ப் பள்ளு
- 077.நன்மதியரசர் பன்மணிமாலை
- 078.குரு திருவடி எழில் மணிமுடி
- 079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
- 080.மெய்ப்புகழ்ச்சி மாலை
- ✸081.திருப் புறநிலை
- ✸082.அருள் புறநிலை வாழ்த்து
- 083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
- 084.திருப்பெயர் நேரிசை வெண்பா
- 085.தவத்ததிகாரம்
- ✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
- ✸087.திருப்பெருமங்கலம்
- ✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
- 089.நித்திய மங்கல வள்ளை
- 090.திருமடல்
- 091.மெய்ப்பொருள் மணிமாலை
- 092.மெய் முதுகாஞ்சி
- 093.இறைதிரு மும்மணிக் கோவை
- 094.அருள் மும்மணி மாலை
- 095.தவ மெய்க் கீர்த்தி
- ✸096.நல் வசந்த மாலை
- ✸097.திருவரலாற்று வஞ்சி
- 098.மறலியை வெல் வருக்கக் கோவை
- 099.உயர் வருக்க மாலை
- ✸100.கலியை வெல் வாகை மாலை
- ✸101.அருள் வாதோரண மஞ்சரி
- 102.திருவாயுறை வாழ்த்து
- 103.திரு விருத்தம்
- ✸104.ஞான விளக்கு நிலை
- ✸105.வீர வெட்சி மாலை
- ✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
- 107.வெற்றி மணி மாலை
- ✸108.இதயம் நெகிழ் மாலை
✸ தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.
✫ 72.பயோதரப் பத்து
[தொகு]இலக்கணம்:-
பயோதரம் என்பது தனம், மார்பகம். தாய்க்குலத்தின் அமுதகலசம். அதன் அழகை வருணித்துப் பாடுவது பயோதரப் பத்து என்னும் சிற்றிலக்கியவகையாகும்.
பயோதரப் பத்தே பாவையர் தனத்தைப் பத்துச் செய்யுளிற் பகரமாய்ப் பகர்தலே - பிரபந்த தீபம் 71
பயோதரங்கண் ணுரைத்திடில் அப்பேர்ப்பத்தாம் - சிதம்பரப் பாட்டியல் 30
கண்மெல் முலைமேற் கலித்துறை மன்விருத்த மெண்ண யனப்பத் தின்முலைப்பத்து - பிரபந்தத்திரட்டு 22
தந்துரைத்த மன்விருத்தஞ் சார்ந்த கலித்துறைதான் அந்தமுறுங் கண்முலைமே லையிரண்டாய் - வந்தால் நயன பயோதரப்பத் தாமென்று நன்னூற் பயனுணர்ந்தார் முன்பு பகர் - வெண்பாப் பாட்டியல் 47
மலயத்துவச பாண்டியன் திருமகளாக வந்த மீனாட்சியம்மைக்கு மூன்று மார்பகங்கள் இருந்ததாகவும் சொக்கநாதரைக் கண்டதும் மூன்றில் நடுவில் இருந்த ஒன்று மறைந்ததாகவும் புராண இலக்கியவியலார் கூறிவைத்துச் சென்றுள்ளனர். அந்த மூன்றாவது பயோதரம் என்னும் அமுத கலசந்தான் ஞானப்பால் அருளும் மாட்சிமையுடையது. அதனை எச்சில்வாய் வைத்து உண்ணவியலாது. அதனால் தெய்வ அன்னையை உண்ணாமுலையம்மை என்று குறிப்பிடுவர். ஊனக்கண் காணாத, ஞானக்கண்ணுற்று காணக்கூடிய, வரையறாது பொங்கிப் பெருகும் எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் அமுத கலசமின்றேல் ஞானமுமில்லை; வித்தையுமில்லை. பராசக்தி, மார்க்கக்காரி, ஆதிபராபரை என்று வழங்கப் பெறும் ஆதித்தாயின் அமுதகலசத்தை வர்ணித்துப் பாடுவது பயோதரப் பத்து என்னும் இச்சிற்றிலக்கியமாகும். இதில் குறிப்பிடப் பெறும் பயோதரம் என்பது இறைவனின் திருநா பொருந்திய திருவாய்.
அமுத பயோதரப் பத்து
காப்பு
கட்டளைக்கலித்துறை / அந்தாதித் தொடை
ஆதிப ராபரை அன்னை அமிர்த கலசந்தனை
நீதியும் வேதமும் நித்யம் சுரந்திடும் நல்லூற்றினை
போதம் வழங்கிடும் வெம்பசி தாகம் விலக்கியருள்
பாதம் புகழ்ந்திடக் காப்பெமக் கேமெய் வழிதெய்வமே!
நூல்
தெய்வ அமுதம் சுரந்தே பொழியும் திருவங்கமே
வையக மாந்தரை வானவ ராக்கிமெய்ப் பாலருத்தும்
செய்ய பயோதரச் சீரெழில் எங்ஙனம் செப்புவனோ!
துய்யது செம்மை நிறத்தது தேன்சுவை பொங்குவதே! (1)
பொங்கிப் பொழிவது பொல்லார்க் கெட்டாதந்தப் பூங்கரகம்
தங்கித் தரிப்பது சர்வ வரங்களும் தானருளி
இங்கிதம் தந்தது எங்களுக் கென்றுமே மங்காதது
சங்கத் தமிழ்அமு தம்பெரு கிப்பொழி யும்ஊற்றிதே (2)
ஊற்றுப் பெருக்கினால் தான்வந்த தெல்லா மறைகளுமே
மாற்றறி யாதசெம் பொன்குழைத் தேநல் வடிவமைந்த
பேற்றினுக் கெல்லாம் பெரும்பேறு பொங்கும் பயோதரமே
ஏற்றருந் தும்பிள்ளை என்றுமே பேரின்பம் எய்திடுமே (3)
எய்தும் பரபோகம் இன்பமெய்ப் பாலங் கருந்தினர்க்கே
வெய்துயர் தீருமே எச்சில்வாய் வைத்தருந் தாயிடமே
மெய்ப்பாலைப் பல்லா யிரவர்க்கு ஒன்றாய் வழங்கிடுமே
துய்ப்பார்க் கிறவா வரந்தரும் தெய்வப் பயோதரமே (4)
தரமே இலங்கிடும் தாயங்க மேநும் தயவிலதேல்
வரமேது வான்மெய்ம் மறையேது வையக மாந்தரெல்லாம்
உரமாக மெய்வழி யுற்று மறலிவென் றுய்ந்திடவே
பரபோகம் எய்திடச் செய்மெய் வழிதெய்வ வான்தனமே (5)
தனமே சிவந்த நிறத்த திறந்தது மெய்வழியின்
இனமே பெருக்குற இன்பமெய்ப் பால்தந் திலங்கிடுதே
வனமே செழித்தது விண்மாது வந்திங்கு மேவியதால்
தினமெய் வணக்கம் புரிவார்க்கு மெய்ப்பால் தருந்தனமே (6)
தருந்தன மின்பத்துப் பாலிங்கு பொங்கி வழிகின்றதே
அருந்திட வம்மின்கள் அம்புவி மாந்தர் அனைவருமே
வருந்திடச் செய்யெமன் வாதனை தீரவே வானகமெய்
மருந்தென வேஅமு தம்தரும் மெய்த்தாய்ப் பயோதரமே (7)
மேதினி மீதொரு மாது பெறாதது போல்வதிதே
மாதன மேயிது சீதன மேபர போகமருள்
சாதனம் சாலையர் சற்சனர்க் கின்பம் பொழிதருமால்
நூதன மானது மெய்வழி ஆண்டவர் நாதனமே (8)
தனமிது பெற்றவர்க் கென்றுமே இல்லை தரித்திரமே
தினமொரு நாழியென் தாய்தரு மெய்ப்பால் அருந்துவரேல்
மனமது செம்மையு மாகிஉ யிர்வளர்ந் தோங்கிடுமால்
தனம்பெற வையக மாந்தரீர் வம்மின் தளிர்த்தோங்கவே (9)
ஓங்கிடும் மெய்வழி உத்தமித் தாயின்மெய்ப் பால்சுவைத்தால்
ஈங்குறும் இன்னல்கள் மாறிடும் ஏறிடும் இன்பசுகம்
தீங்குறு ஏமன் தருமிடர் தீர்ந்திடும் செங்கமலம்
பாங்குறு மெய்வழி தெய்வத்திருநா பயோதரமே. (10)
- Subpages
- மெய்வழி பக்தி இலக்கியங்கள்
- மெய்வழி அடியார்களின் படைப்புகள்
- சமய இலக்கியம்
- அகரமுதலான வரிசையில் படைப்புகள்
- இறையியல்
- சிற்றிலக்கியங்கள்
- திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108
- கவிதைகள்
- திரட்டு நூல்கள்
- 2017 படைப்புகள்
- பாடல்கள்
- தற்கால புலவர்களின் படைப்புகள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் இயற்றிய 108 வகைப் பிரபந்தங்கள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் படைப்புகள்