திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/081.திருப் புறநிலை
ஆதியே துணை
108 வகை சிற்றிலக்கியங்கள்
- 001.திரு அங்கமாலை
- 002.திரு அட்டகம்
- 003.திரு அட்ட மங்கலம்
- ✸004.ஆன்மராக மாலை
- 005.திரு அம்மானை
- ✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
- 007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
- 008.திருவருட்சாலை ஆற்றுப்படை
- 009.திருஇணைமணிமாலை
- 010.அருள் இயன்மொழி வாழ்த்து
- 011.திரு இரட்டைமணி மாலை
- 012.அருள் இருபா இருபஃது
- 013.திரு உந்தியார்
- 014.திரு உலா
- 015.திரு உலா மடல்
- ✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
- ✸017.கலியை வெல் உழிஞை மாலை
- ✸018.அருள் உற்பவ மாலை
- 019.திருப்பொன்னூஞ்சல்
- 020.திருவூர் இன்னிசை வெண்பா
- 021.திருவூர் நேரிசை வெண்பா
- 022.திருவூர் வெண்பா
- 023.அருள் எண் செய்யுள்
- 024.திருஎழுகூற்றிருக்கை
- 025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
- 026.திரு ஒருபா ஒருபஃது
- 027.திரு ஒலியந்தாதி
- ✸028.நற்கடிகை வெண்பா
- ✸029.வான் கடைநிலை
- ✸030.திருக்கண்படை நிலை
- 031.சாலைக் கலம்பகம்
- ✸032.நன்காஞ்சி மாலை
- 033.தெய்வ காப்பியம்
- 034.திருக் காப்பு மாலை
- 035.பூவடிப் போற்றிகள்
- 036.விண்பாங்கரசர் தென்பாங்கு
- 037.ஞானக் குழமகன்
- 038.ஊறல்மலைக் குறமங்கை
- 039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
- ✸040.அருட் கைக்கிளை
- 041.மெய் பெறு நிலை
- 042.திருவருட்கோவை
- 043.திருச்சதகம்
- 044.அருட் சாதகம்
- 045.வண்ணப்பூ
- ✸046.அறக்களவஞ்சி
- 047.செய்ந்நன்றி சாற்று
- 048.திருச் செவியறிவுறூஉ
- 049.திருத்தசாங்கம்
- ✸050.திருத்தசாங்கத்தயல்
- 051.அருள் தண்டக மாலை
- 052.அறம் வேண்டகம்
- ✸053.ஒளிர் தாரகை மாலை
- ✸054.அருட்சேனை மாலை
- 055.திருக்கண்ணெழில்
- 056.தெய்வத் திருவருளெம்பாவை
- ✸057.அறப்போர் மாலை
- 058.அறிதுயிலெடை நிலை
- 059.அன்பு விடு தூது
- 060.நற்றொகைச் செய்யுள்
- ✸061.அருள் நயனப் பத்து
- 062.எழில் நவமணிமாலை
- 063.சிவரத்தின மாலை
- 064.திரு நாம மாலை
- 065.அறம் நாற்பது
- 066.வான்மதியரசர் நான்மணி மாலை
- 067.அருள் நூற்றந்தாதி
- ✸068.நறு நொச்சி மாலை
- 069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
- 070.தெய்வமணிப் பதிகம்
- 071.அருட் பதிற்றந்தாதி
- ✸072.அமுத பயோதரப் பத்து
- 073.யுக உதயப் பரணி
- 074.நல் சந்த மாலை
- ✸075.திரு பவனிக் காதல்
- 076.சாலையூர்ப் பள்ளு
- 077.நன்மதியரசர் பன்மணிமாலை
- 078.குரு திருவடி எழில் மணிமுடி
- 079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
- 080.மெய்ப்புகழ்ச்சி மாலை
- ✸081.திருப் புறநிலை
- ✸082.அருள் புறநிலை வாழ்த்து
- 083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
- 084.திருப்பெயர் நேரிசை வெண்பா
- 085.தவத்ததிகாரம்
- ✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
- ✸087.திருப்பெருமங்கலம்
- ✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
- 089.நித்திய மங்கல வள்ளை
- 090.திருமடல்
- 091.மெய்ப்பொருள் மணிமாலை
- 092.மெய் முதுகாஞ்சி
- 093.இறைதிரு மும்மணிக் கோவை
- 094.அருள் மும்மணி மாலை
- 095.தவ மெய்க் கீர்த்தி
- ✸096.நல் வசந்த மாலை
- ✸097.திருவரலாற்று வஞ்சி
- 098.மறலியை வெல் வருக்கக் கோவை
- 099.உயர் வருக்க மாலை
- ✸100.கலியை வெல் வாகை மாலை
- ✸101.அருள் வாதோரண மஞ்சரி
- 102.திருவாயுறை வாழ்த்து
- 103.திரு விருத்தம்
- ✸104.ஞான விளக்கு நிலை
- ✸105.வீர வெட்சி மாலை
- ✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
- 107.வெற்றி மணி மாலை
- ✸108.இதயம் நெகிழ் மாலை
✸ தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.
✫ 81.புறநிலை
[தொகு]இலக்கணம்:-
தெய்வம் புறம் நின்று காக்க குற்றமில்லாத செல்வத்தோடு வாழ்வாயாக என மருட்பாவால் பாடப்பெறுவது புறநிலை வாழ்த்தாம்.
நீவணங் கொருவ னினைப்பாது காப்ப நின்னுடை வழிவழி நீளுவ தாக எனவியம் புவது புறநிலை யென்ப - முத்துவீரியம் 1098
புறநிலை யென்பது புகலுங் காலே நீவணங்கு தெய்வ நின்னைக் காக்க நின் சந்ததி முறைநீடு வாழ்க என்றலே - பிரபந்த தீபம் . 65
புறநிலை:- நீவணங்குந் தெய்வம் நின்னைப் பாதுகாப்ப நின்வழி மிகுவதாக வெனக் கூறுவது - தொன்னூல் விளக்கவுரை ப.205
தேவதேவேசர், திருக்கயிலைவாசர், திருவரங்கத்தண்ணல், தேவபரமண்டலத்தின் பிதா, அளவற்ற அருளாளர், நிகரற்ற அன்புடையர், தனிப்பெருங்கருணை கொண்ட அருட்பெருஞ்சோதியர், பிரம்மப் பிரகாச மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் தயவால் அனந்தாதி தேவர்களும் யதார்த்த இனிய வைராக்கிய நன்மன ஜெயசீலர்களும், வழிவழிச் சந்ததியினரும், இகபர சௌபாக்கியச் செல்வங்கள் குறைவிலாது பெற்று இனிது நீடுழி வாழ தெய்வம் துணையருள் பாலிக்க வேண்டும் என்று இறைஞ்சும் பனுவல் இதுவாமென்க.
திருப் புறநிலை
காப்பு
நேரிசை வெண்பா
அறநிலைமெய் யாண்டவரே அம்புவியிற் போந்து
இறவா வரமீய்ந்தீர் எங்கோன் - மறவாது
பொற்பாதம் போற்றும் புவியோர் அறஞ்செழிக்கச்
சொற்போதம் நிற்கும் துணை
நூல்
மருட்பா
மேதினியி லேபிறந்து வாழ்வுற்ற நல்லிரே
சேதியொன்று செப்பிடுவேன் கேண்மின்கள் நீதமாய்
ஆதி முழுமுதலே அம்புவியோர் உய்வதற்காய்
நீதித் திருமேனி கொண்டருள்செய் - நாதராய்
எம்போலும் மேனிகொண்ட ஏந்தலராய்! ஈடிணையில்
எம்மானாய் தென்னா டுடைசிவமாய் - பெம்மான்
பெருந்துறை மேவிய பேராளர்! மெய்யில்
இருந்துறையென் றேற்றிவைத்தார் சும்மா - இருக்கும்
சுகமருள்செய் தெய்வமாய் செண்பக வாசம்
திகழ்ந்து கமழும் திருவாய்! - புகழாரும் (10)
பொன்னரங்க நாயகராய்! பூதலத்தே போந்தார்கள்!
என்னரங்கத் தேயிலங்கும் என்சாமி! என்துரைகாண்!
நாலுவகை யோனியிடத் தேழ்வகைத் தோற்றத்து
சீலமனு வாகப் பிறப்பித்தார் - ஞாலமிதில்
தந்தைசுக்கி லத்திருந்து தாய்க்கருவில் வித்திட்டு
விந்தை மிகவே விளைவித்தார் - தொந்திவழி
பல்வகையாம் பேரிடர்கள் நீக்கிப் பிரசவித்தார்
நல்வகையாய்ப் பாது காத்துவளர்த் தெல்லா
நலங்கள் வளங்கள் நிறைவாகத் தந்து
கலங்காது எந்தனையும் காத்துத் துலங்கிடவே (20)
கல்வியெலாம் கற்பித்து கண்ணியமாய் காத்துலகில்
பல்விதமாம் மாந்தர்தம் பண்பறிந்து - நல்ல
ஒழுக்கம் பிறழா உணர்வூட்டி வாழ்வில்
இழுக்கும் தருணம் இடறி - நழுவாது
ஆங்காங்கு முன்னின்று ஆதரித்தார் பேதையரைப்
பாங்காகக் காத்துஇறை பக்திநெறி - ஓங்கிடவும்
பெண்மாயை வந்து பிரட்டுங்கால் எச்சரித்து
மண்மாயை தன்னில் மயங்காமல் ஒண்பொருளாய்!
தெய்வ நெறிதன்னில் சீராய் வளர்வித்தார்
உய்வதற்கு ஞான உயர்நூல்கள் - ஐயமறக் (30)
கற்பித்தார்! சிந்தைக் கசடறவே - பொற்புயர்ந்த
சான்றோர் துணைகூட்டிச் சற்குணங்க ளைவளர்த்து
தோன்றாத் துணையாக முன்னிருந்தார்! - ஊன்றிநின்று
கல்லாரைக் கற்பிக்கும் நற்றொழிலில் கூட்டுவித்து
நல்லாசி ரியயென நற்பெயரும் - வல்பிணிகள்
பற்றிப் படுத்தாமல் பேதை மயங்காமல்
வெற்றிமிகும் வேற்கரத்தார் வாழ்வித்தார் - நற்றவத்தார்
திக்குத் திசைகாட்டித் தங்களுளம் மிக்கிரங்கி
தக்க பருவம் தடுத்தாண்டார் - அக்காலம்
காமக் கடும்புயலில் கவிழ்ந்தழிந்து போகாமல் (40)
சேமத் திருவழங்கித் தேற்றினார் - தீமைகளால்
சிந்தை தடுமாறிச் சீரழிந்து சாகாமல்
தந்தை தயாபரராய்த் தாமேற்றார் - விந்தையுற்று
மிக்கெதிலும் செல்லாமல் மெய்யறிய வேண்டுமெனத்
தக்கதோர் ஆசை தனைவளர்த்தி - சொக்கிமிகப்
பொய்ப்போதத் தீவழியிற் போகாது காத்தார்கள்
மெய்ப்போத மெய்வழியில் மேவிடவே - மெய்வழிக்கு
ஆற்றுப் படுத்துமொரு அன்பினரைக் கூட்டுவித்தார்
ஊற்றுப் பெருக்கென்ன நல்லுரையால் - நாற்றை
வளர்ப்பதுபோல் என்னை வளர்வித்துத் தங்கள் (50)
வளவயலாம் மெய்வழியாம் செய்யில் - உளமிரங்கி
நட்டு வளர்க்கின்ற நற்றயவுக் கென்கடவேன்
மட்டில்பே ரன்பருளார் மாதவரை - தட்டின்றி
இகத்தும் பரத்தும் எல்லாந்தந் தாளும்
தகைசான்ற தன்னிகரில் தேவே - புகல்எனக்கு
சாலைத் திருத்தலத்தில் வாழஅருள் தந்தார்கள்
கோலத் திருமணியாம்! கோமானாம்! - சீலம்
சிறந்தோர்கள் மெய்யை அறிந்தோர்கள் பண்பு
நிறைந்தோர்வாழ் நல்லூர் இதனில் - உறைந்தேவாழ்
பாக்கியம் தந்தார் பரந்தாமா! பேதையரை (60)
ஆக்கியாள் வோர்தான்! அறவாழி! - நோக்கிநமை
வாழ்த்தவாய் ஈந்தார்! நினைக்க அறிநெஞ்சம்
தாழ்த்திப் பணியச் சிரம்தந்தார் - பூழியர்தாம்
ஏற்றி இறைஞ்ச இருகரங்கள் - ஆலயத்தைப்
போற்றி வலம்வரக்கால் தந்தார்கள் - மாற்றறியாப்
பொன்னை நவமணியை போற்றி வணங்கிடுவோம்
அன்னை நம்அத்தன் அருட்குருவாம் நம்தெய்வ
மன்னை மணிமொழியை மாதவரை மாமேரை
இன்னருளால் ஏன்றுகொண்ட எங்கோவை - தென்னா
டுடைசிவத்தை தங்கள் அருளார் அமுத (70)
மடைதிறந்து பாய வளர்ந்தோம் - கடைச்சிறியேம்
பெற்ற பரிசுகட்கு எல்லையில்லை பொற்கோவாம்
நற்றவரால் நாமும்நம் சார்ந்தோரும் - உற்றுப்
பாடிப் படிக்கப் பண்ணார்வே தாந்தமதும்
நாடி மகிழ்ஞான வாக்கியங்கள் - ஆடி
அகமகிழத் தேடு கூடகமும் திவ்ய
சுகமருளும் மான்மியமும் தெய்வ - மகமேரு
தந்த வரங்கட்கு ஈடிணையில் தன்னையறி
விந்தை அருளும் விமலேசர் - நந்தாய்க்கு
என்றுமே கொத்தடிமை ஏராந்த நாயகர்க்கு (80)
பொன்றாப் புகழரசர் பொற்பகர்தான் - குன்றா
மணிவிளக்கு மாதவர்காண் வையகத்தின் வானின்
அணிவிளக்கு ஆருயிரின் பாதம் பணிந்து
வழிவழிச் சந்ததியும் நல்லடிமை ஆவோம்
எழிலார்ந்த ஏந்தலர்க்கு எங்கட் கழியாத
வாழ்வருள வேண்டிடுவோம் வந்திப்போம் என்றென்றும்
யான்பெறு பேறுகள் நீவிரும் பெற்றுய்ய
தேனக மாந்தரீர் வம்மினகள் வம்மின்கள்
கோனவர் கருணைத் தயவால்
வானகச் செல்வராய் வாழ்வீர் இனிதே! (90)
- மெய்வழி பக்தி இலக்கியங்கள்
- மெய்வழி அடியார்களின் படைப்புகள்
- சமய இலக்கியம்
- அகரமுதலான வரிசையில் படைப்புகள்
- இறையியல்
- சிற்றிலக்கியங்கள்
- திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108
- கவிதைகள்
- திரட்டு நூல்கள்
- 2017 படைப்புகள்
- பாடல்கள்
- தற்கால புலவர்களின் படைப்புகள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் இயற்றிய 108 வகைப் பிரபந்தங்கள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் படைப்புகள்