திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/082.அருள் புறநிலை வாழ்த்து
ஆதியே துணை
108 வகை சிற்றிலக்கியங்கள்
- 001.திரு அங்கமாலை
- 002.திரு அட்டகம்
- 003.திரு அட்ட மங்கலம்
- ✸004.ஆன்மராக மாலை
- 005.திரு அம்மானை
- ✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
- 007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
- 008.திருவருட்சாலை ஆற்றுப்படை
- 009.திருஇணைமணிமாலை
- 010.அருள் இயன்மொழி வாழ்த்து
- 011.திரு இரட்டைமணி மாலை
- 012.அருள் இருபா இருபஃது
- 013.திரு உந்தியார்
- 014.திரு உலா
- 015.திரு உலா மடல்
- ✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
- ✸017.கலியை வெல் உழிஞை மாலை
- ✸018.அருள் உற்பவ மாலை
- 019.திருப்பொன்னூஞ்சல்
- 020.திருவூர் இன்னிசை வெண்பா
- 021.திருவூர் நேரிசை வெண்பா
- 022.திருவூர் வெண்பா
- 023.அருள் எண் செய்யுள்
- 024.திருஎழுகூற்றிருக்கை
- 025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
- 026.திரு ஒருபா ஒருபஃது
- 027.திரு ஒலியந்தாதி
- ✸028.நற்கடிகை வெண்பா
- ✸029.வான் கடைநிலை
- ✸030.திருக்கண்படை நிலை
- 031.சாலைக் கலம்பகம்
- ✸032.நன்காஞ்சி மாலை
- 033.தெய்வ காப்பியம்
- 034.திருக் காப்பு மாலை
- 035.பூவடிப் போற்றிகள்
- 036.விண்பாங்கரசர் தென்பாங்கு
- 037.ஞானக் குழமகன்
- 038.ஊறல்மலைக் குறமங்கை
- 039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
- ✸040.அருட் கைக்கிளை
- 041.மெய் பெறு நிலை
- 042.திருவருட்கோவை
- 043.திருச்சதகம்
- 044.அருட் சாதகம்
- 045.வண்ணப்பூ
- ✸046.அறக்களவஞ்சி
- 047.செய்ந்நன்றி சாற்று
- 048.திருச் செவியறிவுறூஉ
- 049.திருத்தசாங்கம்
- ✸050.திருத்தசாங்கத்தயல்
- 051.அருள் தண்டக மாலை
- 052.அறம் வேண்டகம்
- ✸053.ஒளிர் தாரகை மாலை
- ✸054.அருட்சேனை மாலை
- 055.திருக்கண்ணெழில்
- 056.தெய்வத் திருவருளெம்பாவை
- ✸057.அறப்போர் மாலை
- 058.அறிதுயிலெடை நிலை
- 059.அன்பு விடு தூது
- 060.நற்றொகைச் செய்யுள்
- ✸061.அருள் நயனப் பத்து
- 062.எழில் நவமணிமாலை
- 063.சிவரத்தின மாலை
- 064.திரு நாம மாலை
- 065.அறம் நாற்பது
- 066.வான்மதியரசர் நான்மணி மாலை
- 067.அருள் நூற்றந்தாதி
- ✸068.நறு நொச்சி மாலை
- 069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
- 070.தெய்வமணிப் பதிகம்
- 071.அருட் பதிற்றந்தாதி
- ✸072.அமுத பயோதரப் பத்து
- 073.யுக உதயப் பரணி
- 074.நல் சந்த மாலை
- ✸075.திரு பவனிக் காதல்
- 076.சாலையூர்ப் பள்ளு
- 077.நன்மதியரசர் பன்மணிமாலை
- 078.குரு திருவடி எழில் மணிமுடி
- 079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
- 080.மெய்ப்புகழ்ச்சி மாலை
- ✸081.திருப் புறநிலை
- ✸082.அருள் புறநிலை வாழ்த்து
- 083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
- 084.திருப்பெயர் நேரிசை வெண்பா
- 085.தவத்ததிகாரம்
- ✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
- ✸087.திருப்பெருமங்கலம்
- ✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
- 089.நித்திய மங்கல வள்ளை
- 090.திருமடல்
- 091.மெய்ப்பொருள் மணிமாலை
- 092.மெய் முதுகாஞ்சி
- 093.இறைதிரு மும்மணிக் கோவை
- 094.அருள் மும்மணி மாலை
- 095.தவ மெய்க் கீர்த்தி
- ✸096.நல் வசந்த மாலை
- ✸097.திருவரலாற்று வஞ்சி
- 098.மறலியை வெல் வருக்கக் கோவை
- 099.உயர் வருக்க மாலை
- ✸100.கலியை வெல் வாகை மாலை
- ✸101.அருள் வாதோரண மஞ்சரி
- 102.திருவாயுறை வாழ்த்து
- 103.திரு விருத்தம்
- ✸104.ஞான விளக்கு நிலை
- ✸105.வீர வெட்சி மாலை
- ✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
- 107.வெற்றி மணி மாலை
- ✸108.இதயம் நெகிழ் மாலை
✸ தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.
✫ 82. புறநிலை வாழ்த்து
[தொகு]இலக்கணம்:-
வழிபடும் தெய்வம் நின்புறம் நின்று நின்னைக் காப்பதாகுக என ஒருவரை வாழ்த்தும் பொருண்மையில் அமையும் இலக்கிய வகை ஆகலான் இஃது புறநிலை வாழ்த்து எனப் பெயர் பெறுவதாயிற்று.
புறநிலை வாயுறை செவியறி வுறூஉவெனத் திறமையின் மருட்பாச் செய்யுளின் வருமே - பன்னிரு பாட்டியல் 213.
வழிபடு தெய்வ நிற்புறங் காப்பப் பழிதீர் செல்வமோ டொருகாற் கொருகாற் சிறந்து பொலிவா யெனமருட் பாவாற் புகல்வது புறநிலை வாழ்த்தெனப் படுமே - முத்துவீரியம் 1120
புறநிலை வாயுறை வாழ்த்துப் புவியில் ஒருவன்செவி யறிவே யுறுத்த லகப்புறக் கைக்கிளை ஆனவிந்த நெறியிற் பொருள்களை யன்றிமருட்பா நிகழ்த்தலினால் அறியவிந் நாற்செயுளல்லாத பாவினும் ஆமென்பரே - நவநீதப் பாட்டியல் 55
நான் வழிபடுந் தெய்வமாகிய பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள், நிற்கு சகல இகபர சௌபாக்கியங்களையும் அருள்வார்களாக என வாழ்த்தும் பாடற் பொருண்மையில் அமைவதிது வாயிற்றென்க.
அருள் புறநிலை வாழ்த்து
காப்பு
நேரிசை வெண்பா
வாழ்த்தி வணஙகிடும் மெய்வழிதெய் வத்தைசிரம்
தாழ்த்தித் திருவடியே தஞ்சமென - ஊழுழி
உற்றதுணை நற்றவரை வெற்றிகரம் பெற்றவரை
பற்றியிரு நற்றாள் துணை
நூல்
மருட்பா
என்னன் பினரே! என்னன் பினரே
நன்மா ராயம் நவிலுவன் கேண்மின்
வாழிய! மெய்வழி ஆண்டவர் வான்புகழ்
வாழிய! விண்ணிலும் மண்ணிலும் செங்கோல்
தேன்கனிச் சுவைமிகு செழுமொழி யமுதம்
ஊனினை உருக்கிடும் உள்ளொளி பெருக்கிடும்
மண்ணுல கோர்களை விண்ணவ ராக்கிடும்
பண்முதிர் பழமறை ஒண்சுடர் துலக்கியும்
எழுகதிர் கோடியின் ஒளிதனை விஞ்சிடும்
கொழுமுனை இலங்கிடும் கோதறு கிளரொளி (10)
பழவினை பாற்றி மும்மலம் வீற்றி
எழில்பொலி வேற்றி இருந்தவம் ஆற்றிடும்
முழுமுதற் பொருளவர் அருட்பெருஞ் சுடர்காண்
வழுவிலா வானவர் மாட்சிமிக் கோங்கிடும்
ஆதிநா யகம்காண் அழகிய புவிதனில்
நீதி நடவுசெய் நிர்மல சொரூபர்
வேத நாயகமவர் மாமறை யாவும்
ஓதி உணர்த்திய ஒருபெருந் துறைவர்
வித்துநா யகமாம் மெய்வழி காட்டி
சத்தியஞ் சார்வுறச் செய்தனித் தலைவர்காண் (20)
வித்துக ளெம்மை அந்நாட் டினுக்கு
வித்தாய் வித்தி விளைவித் தருள்புரி
எமதுயிர்க் குயிராய் இலங்கிடு போதர்
சமரச நாதர் சற்குரு கொண்டல்
நரராய்ப் பிறந்து நலிவுற்ற எம்மை
சுரராய்ப் பிறப்பித்த சிந்தைமந் திரம்காண்
மாற்றிப் பிறப்பித்த மாதாவாய் மெய்யமுத
ஊற்றுப் பெருக்கால் உவந்தூட்டும் உத்தமியாம்
தந்தையாய் வானாட்டுச் செல்வம் மிகவருள்
விந்தை விமலர் மெய்யரசர் ஆண்டவர்காண் (30)
சாகாத கல்வியைத் தந்து வளர்த்திட்ட
போகா எமன்பயத்தைப் போக்கியவர் என்தெய்வம்
தேகா லயத்தின் திறம்தெரி வித்து
ஆகாயந் தன்னில் அழைத்தினி தேகிப்
பிரணவப் பட்சியின் ஆசனத் திருத்தினர்
மரண மிலாது வாழ்பதி காட்டினர்
ஆதியாய் நின்ற அவ்வுயிர் உற்பவர்
சேதியைச் சிறப்பாய் செப்பிமெய் காட்டினர்
பூதங்கள் ஐந்தும் பொறிபுலன் காட்டினர்
பேதங்கள் இல்லாப் பெருநிலை காட்டினர் (40)
அவன்அவள் அதுவெனும் அம்மூ வகையும்
சிவனொடு சக்தி சிறந்திருப் பதனையும்
ஐங்கரன் தோற்றம் அறுமுகம் காட்டினர்
பைங்கொடி திருமகள் பாற்கடல் பள்ளி
அனந்த சயனத் தரங்கரைக் காட்டினர்
தினம்புதி யவரின் திருவுருக் காட்டினர்
ஊன்றிய பாதம் தூக்கிய திருவடி
ஆன்றநற் றாள்கள் அற்புதம் காட்டினர்
விஸ்வரூ பத்தின் விளங்கொளி மிளிர
ஆஸ்ரமமாம் வாசி அதனிலை தெரிய (50)
தேவகா யத்திரி திருஎழில் காட்டினர்
ஆவி நின்றொளிர் அற்புதம் விளக்கி
விஜய காண்டீப விற்கரம் தந்து
துவஜ கம்பத்தின் திருவுருக் காட்டினர்
மங்காத் திருநீற்றின் மாட்சி அறிவித்து
பொங்கும் ஆகாய கங்கையில் மூழ்குவித்(து)|r}}
ஜீவசிம் மாசனச் சிறப்பினைக் காட்டினர்
தேவசிம் மாசனத் திருவினில் ஏற்றினர்
திருக்கயி லைப்பதி ஸ்ரீவை குண்டம்
அருட்பிரம் மாபுர அருகனின் அசோகம் (60)
பரமண் டலமும் மெகராஜ் அனைத்தும்
சிரத்திரு மண்டலத் தின்னிடைக் காட்டினர்
ஒருசொல் கீதையில் உணர்த்தும் அதிசயம்
குருமொழி ஆட்சி பெருகுயர் நீட்சி
பிரம்மம் தன்திரு முகத்தில் பிறப்பித்து
பிராம்மணன் நீயென் றருட்பெயர் சூட்டினர்
பொதிகைத் திருமலை போதி விருட்சம்
சதுர கிரிதனைத் தன்னிலறி வித்தனர்
கரத்தால் திரிக்கா அறுபுரி நூலை
வரத்தால் தரிப்பித் தருள்செய் துரைகாண் (70)
ஏழ்நிலை மாடத் தேற்றி யிருத்தி
வாழ்நிலை காட்டி வழியறி வித்து
புறங்கிடந் தலையும் போக்கினை யொழித்து
அறவலம் செய்யும் அகச்செயல் அறிவித்து
ஒருதிரு தரிசனை இருவினை போக்கிடும்
வரந்தரு திருவினை வாழ்த்திடும் மன்னவர்
வேகாக் காலும் போகாப் புனலும்
சாகாத் தலையும் தன்னிலறி வித்தனர்
பிண்டஉற் பத்தி அறுத்தடை வாசல்
அண்டர்கோன் இருப்பிடம் அதுதெளி வித்தனர் (80)
கற்பகத் தருவாம் விஸ்வச் சுலாவெனும்
சொற்பதம் கடந்த புட்பகந் தியெனும்
வேர்மேல் தலைகீழ் ஆன விருட்சமும்
சீரார் நூற்றுப் பதினெட் டங்கம்
காட்சி தந்துயிர்ச் சாட்சி யானவர்
மீட்சி பெற்றதென் மெல்லுயிர் தயவால்
கொழுமு னைக்கொலு வாசனம் அமர்ந்த
எழில்மிளிர் அன்னை ஈரைந் தகவையாள்
அன்னை திருமலர் அடிநிழல் அமர்ந்தோர்
தன்னை அறிவர் தலைவரை உணர்வர் (90)
குண்டலி யாள்தனை கொண்டோர் அஜபா
விண்டமர்ந் துறைவர் மிக்கின் புறச்செய்
எங்கும் இலாதோர் இன்பம் வழங்கினார்
சங்கு சக்கர தாரியாய் துலங்கினர்
வெட்டாத சக்கரம் விளங்கியங் கொளிர்ந்து
எட்டாத புட்பம் மணம்கமழ்ந் திலங்கவும்
பேசாத மந்திரம் பேரொளி துலங்கவும்
மாசில் லாமணி மந்த்ரம் விளங்கவும்
போக்கும் வரவும் பொலிந்த ஆருயிர்
காக்கும் ஆண்டவர் கருணைதான் என்னோ! (100)
தேக்கும் அருட்பேர் சீர்கடல் காண்மின்
ஆக்கும் நித்திய அற்புத வரமருள்
அன்பே சிவமாய் ஆனமெய் பொருளவர்
என்பால் இரங்கி யருள்புரி தெய்வம்
பொன்னரங் கையரைப் போற்றுமின் நீவிரும்
என்போ லும்நல் வாழ்வுபெற் றுய்யலாம்
இறவா வரம்பெற் றோங்கலாம்
மறவா திருந்து மலரடி பணிமினே! (108)
- Subpages
- மெய்வழி பக்தி இலக்கியங்கள்
- மெய்வழி அடியார்களின் படைப்புகள்
- சமய இலக்கியம்
- அகரமுதலான வரிசையில் படைப்புகள்
- இறையியல்
- சிற்றிலக்கியங்கள்
- திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108
- கவிதைகள்
- திரட்டு நூல்கள்
- 2017 படைப்புகள்
- பாடல்கள்
- தற்கால புலவர்களின் படைப்புகள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் இயற்றிய 108 வகைப் பிரபந்தங்கள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் படைப்புகள்