திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
ஆதியே துணை
108 வகை சிற்றிலக்கியங்கள்
- 001.திரு அங்கமாலை
- 002.திரு அட்டகம்
- 003.திரு அட்ட மங்கலம்
- ✸004.ஆன்மராக மாலை
- 005.திரு அம்மானை
- ✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
- 007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
- 008.திருவருட்சாலை ஆற்றுப்படை
- 009.திருஇணைமணிமாலை
- 010.அருள் இயன்மொழி வாழ்த்து
- 011.திரு இரட்டைமணி மாலை
- 012.அருள் இருபா இருபஃது
- 013.திரு உந்தியார்
- 014.திரு உலா
- 015.திரு உலா மடல்
- ✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
- ✸017.கலியை வெல் உழிஞை மாலை
- ✸018.அருள் உற்பவ மாலை
- 019.திருப்பொன்னூஞ்சல்
- 020.திருவூர் இன்னிசை வெண்பா
- 021.திருவூர் நேரிசை வெண்பா
- 022.திருவூர் வெண்பா
- 023.அருள் எண் செய்யுள்
- 024.திருஎழுகூற்றிருக்கை
- 025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
- 026.திரு ஒருபா ஒருபஃது
- 027.திரு ஒலியந்தாதி
- ✸028.நற்கடிகை வெண்பா
- ✸029.வான் கடைநிலை
- ✸030.திருக்கண்படை நிலை
- 031.சாலைக் கலம்பகம்
- ✸032.நன்காஞ்சி மாலை
- 033.தெய்வ காப்பியம்
- 034.திருக் காப்பு மாலை
- 035.பூவடிப் போற்றிகள்
- 036.விண்பாங்கரசர் தென்பாங்கு
- 037.ஞானக் குழமகன்
- 038.ஊறல்மலைக் குறமங்கை
- 039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
- ✸040.அருட் கைக்கிளை
- 041.மெய் பெறு நிலை
- 042.திருவருட்கோவை
- 043.திருச்சதகம்
- 044.அருட் சாதகம்
- 045.வண்ணப்பூ
- ✸046.அறக்களவஞ்சி
- 047.செய்ந்நன்றி சாற்று
- 048.திருச் செவியறிவுறூஉ
- 049.திருத்தசாங்கம்
- ✸050.திருத்தசாங்கத்தயல்
- 051.அருள் தண்டக மாலை
- 052.அறம் வேண்டகம்
- ✸053.ஒளிர் தாரகை மாலை
- ✸054.அருட்சேனை மாலை
- 055.திருக்கண்ணெழில்
- 056.தெய்வத் திருவருளெம்பாவை
- ✸057.அறப்போர் மாலை
- 058.அறிதுயிலெடை நிலை
- 059.அன்பு விடு தூது
- 060.நற்றொகைச் செய்யுள்
- ✸061.அருள் நயனப் பத்து
- 062.எழில் நவமணிமாலை
- 063.சிவரத்தின மாலை
- 064.திரு நாம மாலை
- 065.அறம் நாற்பது
- 066.வான்மதியரசர் நான்மணி மாலை
- 067.அருள் நூற்றந்தாதி
- ✸068.நறு நொச்சி மாலை
- 069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
- 070.தெய்வமணிப் பதிகம்
- 071.அருட் பதிற்றந்தாதி
- ✸072.அமுத பயோதரப் பத்து
- 073.யுக உதயப் பரணி
- 074.நல் சந்த மாலை
- ✸075.திரு பவனிக் காதல்
- 076.சாலையூர்ப் பள்ளு
- 077.நன்மதியரசர் பன்மணிமாலை
- 078.குரு திருவடி எழில் மணிமுடி
- 079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
- 080.மெய்ப்புகழ்ச்சி மாலை
- ✸081.திருப் புறநிலை
- ✸082.அருள் புறநிலை வாழ்த்து
- 083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
- 084.திருப்பெயர் நேரிசை வெண்பா
- 085.தவத்ததிகாரம்
- ✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
- ✸087.திருப்பெருமங்கலம்
- ✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
- 089.நித்திய மங்கல வள்ளை
- 090.திருமடல்
- 091.மெய்ப்பொருள் மணிமாலை
- 092.மெய் முதுகாஞ்சி
- 093.இறைதிரு மும்மணிக் கோவை
- 094.அருள் மும்மணி மாலை
- 095.தவ மெய்க் கீர்த்தி
- ✸096.நல் வசந்த மாலை
- ✸097.திருவரலாற்று வஞ்சி
- 098.மறலியை வெல் வருக்கக் கோவை
- 099.உயர் வருக்க மாலை
- ✸100.கலியை வெல் வாகை மாலை
- ✸101.அருள் வாதோரண மஞ்சரி
- 102.திருவாயுறை வாழ்த்து
- 103.திரு விருத்தம்
- ✸104.ஞான விளக்கு நிலை
- ✸105.வீர வெட்சி மாலை
- ✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
- 107.வெற்றி மணி மாலை
- ✸108.இதயம் நெகிழ் மாலை
✸ தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.
83. பெயர் இன்னிசை வெண்பா
[தொகு]இலக்கணம்:-
ஒரு நாமம் ஓர்உருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டோமோ என்பார் மணிவாசகப் பெருமானவர்கள். ஆயிரமாயிரம் (ஸகஸ்ர) நாமங்களுக்குரிய எல்லாம்வல்ல எம்பெருமானார் திருப்புகழ், பெயர் இன்னிசை வெண்பா எனப்படும் நாற்பது பாடல்களால் பாடப் பெறுவது.
பெயரின்னிசையே பாட்டுடைத் தலைவன் பேரைச்சார இன்னிசை வெண்பா பேசலே - பிரபந்த தீபம் 62
என் உயிருள் நடம் புரியும் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் திருநாமங்களைப் பெயர் இன்னிசை வெண்பாவால் பாடிப் புகழ்வது இப்பனுவல்.
திருப்பெயர் இன்னிசை வெண்பா
காப்பு
அருள்நாமம் செப்பில் அறும்வினைகள் ஆன்ற
திருநாமம் இன்னிசையால் பாட விழைந்தேன்
குருநாமம் கூற்றுவனை வெல்லும்சா லைத்தாய்
பெருநாமம் காப்பென் றறி.
நூல்
ஆதியாம் அன்னை அனாதியாய் நின்றனையால்
ஆதி துணையென்றே ஆர்ந்துரைப்போம் அம்புவியில்
நீதித் திருமேனி நித்தியத்தை நீகொணர்ந்தாய்
பூதலத்தைச் சார்ந்துய்த்த லால். (1)
ஆதிசத்தி யாய்நின்று அத்தனையு மேபடைத்து
நீதி நடவினுக்காய் நீபோந்தாய் நிர்மலத்தாய்
வேதத்தாய் மெய்வழியை மண்ணுலகுக் கேகொணர்ந்தாய்
போதத்தாய் ஆனாய் பொலிந்து. (2)
முத்தொழிற்கு மேஅரசி மெய்வழித்தாய் இத்தரையில்
உத்தமித்தாய் சத்தினித்தாய் ஓங்குயர்வான் வித்தகித்தாய்
சுத்தம் வடித்துத் தெளித்தெடுத்த பத்தினித்தாய்
முத்திக்கு வித்தம்மா நீ. (3)
போதிப்பூ வாசம் பொலிந்துமெய்ஞ் ஞானமருள்
ஜாதிப்பூ நாயகிமெய்த் தாண்டகியே தாள்பணிந்தோர்
மாது வளரும்ச லாசனமார் சாலையினில்
தீதில் வரம்வழங்கும் தாய். (4)
தாய்மணியாய் இந்தச் சகமுழுதும் மெய்ப்பாலை
வாய்மடுத்த ஜீவனுய்யத் தான்வளர்க்கும் மெய்ம்மணத்தாய்
தூய்மையெலாம் கண்டஞ்சும் தூய்மையினாய் மெய்வழித்தாய்
வாய்மையெனும் வான்மதித்தாய் நீ. (5)
சற்குணத்தால் இந்தத் தாரணியை ரட்சிக்கும்
பற்குணத்தாய் மெய்வழியில் சத்தினிமெய்ப் பாற்கரசி
அற்புதமாய் எம்மை அரவணைத்த ஆரணத்தி
சொற்பதத்தாய் ஜோதித்தாய் நீ. (6)
ஆவிநின்று என்னுயிரை ஆதரிக்கும் ஆதிசத்தி
தேவிசத்தி தாள்மலரைச் சொன்மலரால் தோத்தரிக்க
ஜீவபதி வீற்றிருந்தாள் செம்மலராம் எம்தாயைப்
பூவுலகீர் வந்துதொழு மின். (7)
சேமமெலாம் சேர்த்தருளிச் சீருயர்பே ரின்பசிவ
காமவல்லி பத்துவய தானகன்னி கார்த்திகைத்தாய்
நாமமுரைத் தோர்பணிந்து தூமலர்த்தாள் தோத்தரித்தோர்
ஏமனமல் தீர்ந்துய்கு வார். (8)
வானுறைஉ மாப்பட்சி தன்னினத்தின் நோக்கறியும்
தானறியா மாந்தரறி யார்சகத்தில் அத்தன்மை
வானவர்கோன் மாதவத்தார் மாட்சியினை மெய்யனந்தர்
தானறிவார் என்றினிது சாற்று. (9)
சித்தமலம் தானறுத்து சீருயர்சி வம்மாக்கும்
வித்தகியாம் மெய்வழியின் சத்தினித்தாய் வேதமணி
சுத்தங்கள் தோத்தரிக்கும் தூயவள்காண் என்னம்மை
உத்திமிகக் கொண்டவளென் றோது. (10)
கதியிந்தக் காசினிக்கே நல்கும் தவத்தாள்
மதியரசி என்றும் புதியவள்காண் வாழ்வின்
விதிகடந்து மெய்ம்மைப் பதியிருந்து வானோர்
பதிகொடுக்கும் காருண்யத் தாய். (11)
அந்தமிலா இன்பத் தருள்வழங்கும் ஆரணத்தி
செந்தமிழில் வந்துலவும் சீருயிர்த்தாய் மெய்வழியில்
பந்தந் திரண்டோங்கும் துந்துமித்தாய் பார்பதித்தாய்
சொந்தம் உயிர்க்கன்னை தான். (12)
புத்தமுதம் பொங்கிவரச் சித்தமிக அன்பருள்செய்
உத்தமியே உத்யோ வனத்தரசி சாலையம்மா
அத்திபுரம் ஆளுடையாள் ஆயிரமாம் தோளுடையாள்
நத்தினர்க்கு முத்தியளிப் பாள். (13)
பெருவரங்கள் தந்தருளி பேரின்ப போகம்
தருமரசி எங்கள் தருமத்தாய் தெய்வக்
குருவரசி கோதற்றாள் சீதனங்கள் நந்தமக்குத்
தருமரசி தாள்கள் துணை. (14)
சொற்சத்தி தெய்வத்தாய் சூர்தடிந்தாள் பார்புரந்தாள்
விற்பதிவெண் கொற்றக் குடையுடையாள் மெய்வழித்தாய்
நற்பதவி எங்களுக்கு நல்கவந்த நாயகியாள்
பொற்பதத்தைப் போற்றும் இனிது. (15)
அரியருளாள் ஆரெழிலாள் அம்புவியிற் போந்து
திரிசூலி தெய்வத் திருவுருவாள் சாலைப்
பெரியம்மை பேதமிலாள் மெய்வழியைப் பாரில்
சரிசமமாய்ச் சாற்றும் சிறந்து. (16)
இமையவள்காண் ஈடில்லா அன்பினுக்கென் செய்வேன்
தமையறிந்து தன்னுணர்வால் காணஅருள் ஈயும்
அமலை அருமைத்தாய் ஆன்றவிந்த சான்றாள்
உமையவளும் ஆனாள் உவந்து. (17)
அந்நாட்டு வித்தெனவே அந்தரத்தில் சென்றிடச்செய்
அந்தரியென் றோர்நாமம் கொண்டவள்காண் அன்னவளை
சுந்தரியென் றும்நற்பேர் செப்பிடவாம் அன்னையிவள்
மந்திரத்தாய் என்பர் மகிழ்ந்து. (18)
இறைவி திருவருளால் எல்லாவே தங்கள்
மறைவுதிரை வின்றித் தெளிவிக்கும் சாலை
மறையரசி என்றோர் மாண்புடையாள் ஞானத்
துறையறிவித் தாளும் சிறந்து. (19)
ஆய கலைகள் அறுபத்து நான்கப்பால்
மேய கலைசாகா நற்கலையே தாம்விளங்கக்
காலம் கடந்த கலிக்கடையில் ஞானமருள்
கோலக் கலைவாணித் தாய். (20)
சேதங்கள் இல்லாத் திருநாட்டில் சேர்ந்ததனால்
மாதங்கி என்றோர் திருநாமம் அன்னையிவள்
பேதங்கள் இல்லாப் பெருமாட்டி தாள்பணிந்தால்
தீதொன்றும் வாரா தறி. (21)
செம்மலர்நோன் றாளமுதம் தந்தருளும் அன்னைதனை
அம்மணியென் றேநாம் அழைத்துய்வோம் ஆர்கலியில்
திம்மை எமன்விலகச் சீரார்மெய் தான்வழங்கும்
அம்மைக்கிங் கார்காண் இணை. (22)
ஆர்க்கும் கடல்சூழ்ந்த அம்புவியில் வெம்பவத்தைத்
தீர்க்கும் திருவுள்ளத் தாய்மணித் தாரகைக்கு
மார்க்கக்கா ரியென்றோர் மாதவத்து நாமமுண்டு
பார்க்குளிவள் பாதம் துணை. (23)
பொங்குமரு ளால்அமுதம் இங்ஙனந்தர்க் கீந்தருளும்
தங்கநாச் சிஎன்போம் தாய்மணியின் தண்ணளியால்
எங்கும் சமரசப்பேர் இன்பம் வழங்கும்தாய்
மங்கா மணிவிளக்கு காண். (24)
பூரணத்தில் எம்முயிர்தான் போய்ஒடுங்கத் தானருளும்
ஆரணத்தி என்தாய் அகிலாண்ட நாயகியாள்
நேர்நிகரில் தெய்வத்தாய் நற்றாள் துணைகொண்டோர்
பாருலகில் உய்வார் சிறந்து. (25)
ஓங்காரக் கோணத்தில் உற்ற திருமகளை
ஓங்காரி என்று பணிந்துய்மின் ஊருலகீர்
போங்காலன் கூற்றினைவெல் லாற்றலுளாள் சாலைவளர்
பாங்கரசி பொற்றாள் துணை. (26)
எண்டிசையும் மேல்கீழ் இலங்கியொளிர் என்தாயைக்
குண்டலித்தாய் என்று குறிப்போங்காண் காசினியில்
மண்டுபுகழ் மாதரசி மார்க்கமணி தெய்வத்தாய்
கண்டுபணிந் தோர்உய்வர் காண். (27)
ஆர்க்கும் எமபடரை அல்லல்தரு வெவ்வினையைத்
தீர்க்கும் திருமணியெம் தெய்வத்தாய் சீர்திகழும்
கார்க்கும்தீக் கைக்கொண்ட கார்த்திகைத்தாய் பாதமலர்
பார்க்குள் எல்லோர்க்கும் துணை. (28)
தீதகற்றி எம்முயிரைக் காத்துத் திருவிளங்கப்
பாதமலர் ஈந்த பராபரையைப் போற்றிசெய்து
வேதசத்தி என்றே பணிகுவமேல் வாழ்வினிலே
ஏதுமிடர் வாரா தறி. (29)
பேணியுயிர் காத்தருளும் ஆத்தாள்மெய்ச் சாலையருட்
காணியம்மை கற்பகத்தாய் கண்மணித்தாய் சர்வகலை
வாணியம்மை மாதவர்கள் வாழ வரமருள்செய்
தோணிபுரத் தெய்வம் துணை. (30)
பூரணித்தாய் பொன்மணியாள் பொய்யொழித்து மெய்வழங்கும்
ஆரணமார் பூங்கிளி கொஞ்சும் தபோவனத்தாள்
சீரனந் தாதியர்தம் சிந்தை நிறைந்தொளிரும்
காரணத்தாய் காப்பாள் இனிது. (31)
வேற்கரத்தாள் மெய்மணத்தாள் வல்லினைகள் தீர்த்தருள
பாற்கடலில் பள்ளிகொண்டாள் பண்புயர்ந்தாள் பாண்டியம்மை
நாற்கரத்தாள் நாடியபேர் நாமம் பதம்பெறச்செய்
ஆற்றலினாள் கூற்றினைவென் றாள். (32)
ஊறல் மலைசார்ந்த உத்யோவனத் திங்கே
மாறில் எழிலார் மலைக்குர மாதுநங்கை
ஊறு படாதுயிரைக் காக்கும் கனதவத்தாள்
நீறுபடச் செய்வாள் வினை. (33)
விந்தையார் அன்னை விமலை விளங்கொளிசேர்
அந்த ரத்தலைச்சி யென்றோர்பேர் அம்புவியில்
வந்துபல் சன்னதமார் வான்தவம் செய்தருளும்
எந்தாய்க்கு இல்லை நிகர். (34)
கற்பகத்தா ருஎங்கள் கண்மணித்தாய் எங்களுக்கு
நற்பதங்கள் நன்கருளு நாயகியாள்நற்றவத்தாள்
வெற்புஎமன் வெம்மைதவிர் வேற்கரத்தாள் மென்மயிலாள்
அற்புதத்தாய் என்றே அறி. (35)
அண்ணா மலைச்சியிவள் அம்புவியோர் வாய்வைத்து
உண்ணா முலைச்சியென ஊர்புகழும் உத்தமியாள்
பண்ணாரும் பாசுரங்கள் பாடும் பழம்புலமை
விண்ணாட் டரசியெங்கள் தாய். (36)
பொங்கிவரும் பேராறு போன்ம்அமுத மாரியினாள்
அங்கண் அழகிதெய்வக் கண்மணியாள் காசினியில்
துங்கத் திருமுகத்துத் தோகையிவள் தூமணியாள்
சங்குவளைப் பொற்கரத்தாள் காண். (37)
வேத குலச்சியென்னும் மெய்மலர்த்தாள் பொன்மேனி
நீதம் வழங்கியருள் நித்தியத்தாள் பத்தியத்தாள்
ஓதும் வரோதயமாய் ஒண்மணியாள் வெண்மணியாள்
பாதமலர் பற்றும் பணிந்து. (38)
உற்பனத்தாய் என்றுலகோர் ஓங்கிப் புகழ்ந்தினிது
சொற்பதத்தால் ஆகியிவள் வாழியெனத் தான்துலங்கும்
அற்புதத்தாய் வந்து அறம்செய்தாள் வானரசி
விற்பனத்தாய் என்றே விளம்பு. (39)
அறங்கண்ணி யென்றும் அறைந்திடுவர் அன்னைத்
துறவேற்ற தூமதித்தாய் தொல்பழஞ்சீர் தூய்மணியாள்
உறவாடி என்றும் உயிர்ப்பயிர்செய் தாயே
அறவாழி என்றே பணி. (40)
- Subpages
- மெய்வழி பக்தி இலக்கியங்கள்
- மெய்வழி அடியார்களின் படைப்புகள்
- சமய இலக்கியம்
- அகரமுதலான வரிசையில் படைப்புகள்
- இறையியல்
- சிற்றிலக்கியங்கள்
- திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108
- கவிதைகள்
- திரட்டு நூல்கள்
- 2017 படைப்புகள்
- பாடல்கள்
- தற்கால புலவர்களின் படைப்புகள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் இயற்றிய 108 வகைப் பிரபந்தங்கள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் படைப்புகள்