உள்ளடக்கத்துக்குச் செல்

திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/086.அருட்பெருமகிழ்ச்சி மாலை

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



✫ 86. பெருமகிழ்ச்சி மாலை

[தொகு]

இலக்கணம்:-

பெண்டிரைப் புகழ்ந்து பாடும் பொருண்மையுடைய இலக்கிய வகைகளுள் ஒன்று பெருமகிழ்ச்சி மாலை ஆகும். தெரிவை ஒருத்தியின் எழில், குணம், ஆக்கம், சிறப்பு, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, இல்லாளுக்குரிய ஒழுக்கங்களில் தவறாது ஒழுகல், இன்முகம் காட்டல், விருந்தினரைப் பேணுதல் போன்றவற்றைப் புகழ்ந்துரைத்தல் பெருமகிழ்ச்சி மாலையாம்.

பெருமகிழ்ச்சி  பெண்ணில் சிறந்தோள்
குணம் சிறப்பு அழகு எழில் குலம் முதல் கூறலே
- பிரபந்த தீபம் 32
பெறுதலைவி யழகுகுண மாக்கம் சிறப்போதல்
பெருமகிழ்ச்சியின் மாலையே
- பிரபந்த தீபிகை 12
தெரிவை யெழில்குண மாக்கம் சிறப்பை யுரைப்பது
பெருமகிழ்ச்சி மாலையெனப் பெயர் பெறுமே
- முத்துவீரியம் 1058

தாயினும் மிக்க கருணையுடைய எம்பெருமான் பிரம்மப் பிரகாச மெய்வழிச் சாலை ஆண்டவர்களையே அருள் மார்க்க அன்னை எனப் பாவித்து, அவர்களின் அற்புத அழகு, குணம் முதலியவற்றை விதந்தோதுவது இப்பனுவல்.

அருட்பெருமகிழ்ச்சி மாலை

காப்பு

கட்டளைக் கலித்துறை

உருவெடுத் தேவந் துலகம் புரக்குமெய் உத்தமியே
கருவுயிர்த் தெங்களை ஈன்றமுதமிக் களித்தனையே
குருமணி யாய்வந்த கோதகல் சீருயர் கோமதியே
பெருமகிழ்ச் சிமாலை பாடிட நின்மலர்த் தாள்காப்பிதே

நூல்

அண்டச ராசரம் யாவும் பொதிந்தாய் அகட்டிடையே
மண்டு புகழோங்கு மாதவத் தாயே மணிமொழியால்
எண்டிசை யும்மெய் யெழுந்து கலாபம் விரித்தனைய
பண்டு பழுத்த மறைமாட்சி எங்கும் பரந்ததுவே! (1)

பாரெலாம் உய்யவென் றேயவ தாரம் புரிந்தஅம்மா
சீரெலாம் எங்கள் சிறுஉயிர் உய்ந்திடத் தந்தனையே
காருலாம் உத்யோ வனச்சோலை தன்னில் அமர்ந்தருளி
நேருலாம் மெய்வழிக் காப்பு உலகுய்யச் செய்தனையே! (2)

அழகோ வியமென்னும் ஆரணங் கேஇந்த அம்புவியில்
எழுகோ மதித்தாய் இணையில் இறவா வரமளித்து
நழுவாது நன்னெறி தன்னில் நிலைத்து நமன்பயத்தில் (3)

விழுகாது காக்கும் விமலையே மெய்வழிச் சாலையம்மே!
திருமுகம் கண்டற்றே தீர்ந்தது எங்கள் பவப்பிணியே
அருள்மொழி கேட்டு அறியாமை வெவ்விருள் மாய்ந்ததுவே
குருகோ மதித்தாயே நால்கோடி கண்டாய் குவலயத்தே
திருவென் றொளிரும் இமையாத நாட்டத் திருமலையே (4)

குணமெனும் குன்றேறி நின்றாயே கோதிலாக் கோகிலமே
மணமிகு செண்பக வாசம் கமழுமென் மேனியம்மா
உணவுறக் கம்மற்று ஓங்கு தவத்தில் உறைமாதவி
இணங்கும் சுபாவத் திமையோர்க்கு என்றும் கதிநிதியே! (5)

அன்பெலாம் ஓருரு வாயினை அன்னாய் பராபரையே
இன்பெலாம் சீருரு வாகிய ஏந்திழை இன்னமுதே!
துன்பெலாம் தாம்சுமந் தேசுக மெற்களித் தாய் சகியே!
என்பும்பொ டித்துனக் அர்ச்சித்த போதும் இணையாகுமோ! (6)

சாதிகு லம்யாவு மேபடைத் தாய்ஒருங் கும்இணைத்தாய்
நீதி நிறைந்தாய் நிமலைநீ நிர்க்குணப் பிரம்மியம்மா!
ஆதியனாதியும் யாவும்நீ அத்தி புரத்தம்மையே!
வேதித்து மெய்ம்மை விளங்கவைத் தாய்மெய் வழியன்னையே! (7)

மதங்களின் நோக்கம் அறியாது பேதங்கொள் மக்களிடை
இதங்கொள் தெளிவுதந் தெம்மதம் சம்மத மென்றினிநல்
விதங்கொள வைத்தனை ஆரணத் தாயம்மை ஆண்டகியே!
பதங்கள் அருளினை பார்பதி பண்போங்கு பாண்டியம்மா! (8)

அறமெலாம் அற்புத மாய்த்திரண் டிங்கண் அவதரித்த
அறவாழி அம்மா! அருளாளி அன்புரு ஆரணத்தி!
துறவோர் வணங்கியே தோத்தரிக் கும்தவத் துய்மதியே!
மறவாதுன் தாள்கள் வணங்கத் திறன்தர வேண்டுதுமே! (9)

இல்லையு னக்கிணை எங்கணும் எத்திறத் தெக்காலமும்
எல்லைமெய்ச் சாலையில் எல்லா வரங்களும் எல்லோர்க்குமே
நல்லைநீ நானில மாந்தர்கள் உய்ந்திட நல்வழிகூர்
வல்லை நீ எல்லா வலமும் நீ நின்தாள் வழுத்துதுமே! (10)

அன்பே நிறைந்து அருளே உறைந்துள அன்னைநினின்
தென்பே வழங்கும் திருவே கனிந்த அருளமுதம்
நின்பே ரருட்திரு நோக்கால் தழுவிடும் நேரிழையே!
இன்பால் நிறையும் இனியைநீ என்னுயிர்ச் சாலையம்மா! (11)

விதிப்பால் கடத்தி வெம்பவக் கட்டறச் செய்திடும்நின்
மதிப்பால் அமுதம் சுவைத்தால் மறலி யமல்தவிரும்
பதிப்பால் அறவொளிர் பண்பால் நிறையுமெய்ஞ் ஞானமதும்
துதிப்பால் கலிமாரி பொங்குமுத் யோவனச் சோலையம்மே! (12)

பழுக்கா மனப்படி றேனையும் தாய்நீ பரிந்தெடுத்தாய்
அழுக்கே நிறைமூக் கொழுக்கே வழியும்தன் பிள்ளையினை
இழுக்கென எண்ணாதேயெடுத் தேயணை தாயைவிஞ்சும்
எழிற்றாய் நினக்கிணை எங்கும் எக்காலுமே இல்லையம்மா! (13)

எத்தகைத் தன்மைய ராயினும் தன்பிள்ளை தன்பிள்ளைதான்
முத்தெனத் தன்கரம் ஏந்தி அணைத்திடும் தாய்தன்மைபோல்
வித்தகி வாலை விமலையே! மெய்வழிச் சாலையம்மே!
சித்தம் இரங்கி எமையெடுத் தாள்தவத் தாய்மணியே! (14)

படிமிசை மண்படாப் பாதம் படிய நடமிடும்தாய்
மடிவைத்துக் கொஞ்சும் மாதாவேசாலை மணிக்குயிலே
இடியெமன் கைப்படா வண்ணமேகாத்தருள் ஏந்திழையே!
அடியேங்கள் நின்தாள் சிரம்புணையத்தரு வாயன்னையே! (15)

அருட்பெருமகிழ்ச்சி மாலை இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!