திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/089.நித்திய மங்கல வள்ளை
ஆதியே துணை
108 வகை சிற்றிலக்கியங்கள்
- 001.திரு அங்கமாலை
- 002.திரு அட்டகம்
- 003.திரு அட்ட மங்கலம்
- ✸004.ஆன்மராக மாலை
- 005.திரு அம்மானை
- ✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
- 007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
- 008.திருவருட்சாலை ஆற்றுப்படை
- 009.திருஇணைமணிமாலை
- 010.அருள் இயன்மொழி வாழ்த்து
- 011.திரு இரட்டைமணி மாலை
- 012.அருள் இருபா இருபஃது
- 013.திரு உந்தியார்
- 014.திரு உலா
- 015.திரு உலா மடல்
- ✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
- ✸017.கலியை வெல் உழிஞை மாலை
- ✸018.அருள் உற்பவ மாலை
- 019.திருப்பொன்னூஞ்சல்
- 020.திருவூர் இன்னிசை வெண்பா
- 021.திருவூர் நேரிசை வெண்பா
- 022.திருவூர் வெண்பா
- 023.அருள் எண் செய்யுள்
- 024.திருஎழுகூற்றிருக்கை
- 025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
- 026.திரு ஒருபா ஒருபஃது
- 027.திரு ஒலியந்தாதி
- ✸028.நற்கடிகை வெண்பா
- ✸029.வான் கடைநிலை
- ✸030.திருக்கண்படை நிலை
- 031.சாலைக் கலம்பகம்
- ✸032.நன்காஞ்சி மாலை
- 033.தெய்வ காப்பியம்
- 034.திருக் காப்பு மாலை
- 035.பூவடிப் போற்றிகள்
- 036.விண்பாங்கரசர் தென்பாங்கு
- 037.ஞானக் குழமகன்
- 038.ஊறல்மலைக் குறமங்கை
- 039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
- ✸040.அருட் கைக்கிளை
- 041.மெய் பெறு நிலை
- 042.திருவருட்கோவை
- 043.திருச்சதகம்
- 044.அருட் சாதகம்
- 045.வண்ணப்பூ
- ✸046.அறக்களவஞ்சி
- 047.செய்ந்நன்றி சாற்று
- 048.திருச் செவியறிவுறூஉ
- 049.திருத்தசாங்கம்
- ✸050.திருத்தசாங்கத்தயல்
- 051.அருள் தண்டக மாலை
- 052.அறம் வேண்டகம்
- ✸053.ஒளிர் தாரகை மாலை
- ✸054.அருட்சேனை மாலை
- 055.திருக்கண்ணெழில்
- 056.தெய்வத் திருவருளெம்பாவை
- ✸057.அறப்போர் மாலை
- 058.அறிதுயிலெடை நிலை
- 059.அன்பு விடு தூது
- 060.நற்றொகைச் செய்யுள்
- ✸061.அருள் நயனப் பத்து
- 062.எழில் நவமணிமாலை
- 063.சிவரத்தின மாலை
- 064.திரு நாம மாலை
- 065.அறம் நாற்பது
- 066.வான்மதியரசர் நான்மணி மாலை
- 067.அருள் நூற்றந்தாதி
- ✸068.நறு நொச்சி மாலை
- 069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
- 070.தெய்வமணிப் பதிகம்
- 071.அருட் பதிற்றந்தாதி
- ✸072.அமுத பயோதரப் பத்து
- 073.யுக உதயப் பரணி
- 074.நல் சந்த மாலை
- ✸075.திரு பவனிக் காதல்
- 076.சாலையூர்ப் பள்ளு
- 077.நன்மதியரசர் பன்மணிமாலை
- 078.குரு திருவடி எழில் மணிமுடி
- 079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
- 080.மெய்ப்புகழ்ச்சி மாலை
- ✸081.திருப் புறநிலை
- ✸082.அருள் புறநிலை வாழ்த்து
- 083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
- 084.திருப்பெயர் நேரிசை வெண்பா
- 085.தவத்ததிகாரம்
- ✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
- ✸087.திருப்பெருமங்கலம்
- ✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
- 089.நித்திய மங்கல வள்ளை
- 090.திருமடல்
- 091.மெய்ப்பொருள் மணிமாலை
- 092.மெய் முதுகாஞ்சி
- 093.இறைதிரு மும்மணிக் கோவை
- 094.அருள் மும்மணி மாலை
- 095.தவ மெய்க் கீர்த்தி
- ✸096.நல் வசந்த மாலை
- ✸097.திருவரலாற்று வஞ்சி
- 098.மறலியை வெல் வருக்கக் கோவை
- 099.உயர் வருக்க மாலை
- ✸100.கலியை வெல் வாகை மாலை
- ✸101.அருள் வாதோரண மஞ்சரி
- 102.திருவாயுறை வாழ்த்து
- 103.திரு விருத்தம்
- ✸104.ஞான விளக்கு நிலை
- ✸105.வீர வெட்சி மாலை
- ✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
- 107.வெற்றி மணி மாலை
- ✸108.இதயம் நெகிழ் மாலை
✸ தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.
89. மங்கல வள்ளை
[தொகு]இலக்கணம்:-
பெண்டிர் பெருமையைப் பாடும் பொருண்மையுடையது மங்கல வள்ளை என்னும் இலக்கியம்.
கோதிலாக் கற்பிற் குலமகளை - நீதிசேர் மங்கல வள்ளை வகுப்பொடு வெண்பாவால் இங்காமொன் பான்என் றிசை - வெண்பாப்பாட்டியல் 54
மேற்குலத்திற் பிறந்த மின்னாளை வெண்பா ஒன்பதாலும் வகுப்பொன்பதினாலும் வழுத்துவது மங்கல வள்ளை யாகும். - முத்து வீரியம் 1111
மாசில் குலமகளை வகுப்பு வெண்பாவினால் வருபொரு ளுரைத்தலாய் ஒன்பதொன்ப தாகப் பாடின் மங்கல வள்ளை - பிரபந்த மரபியல் - 13
ஒன்பது வெண்பா வகுப்பால் உயர்குல மங்கையைப் பாடுவது மங்கல வள்ளை - இலக்கண விளக்கம் 828
உலகமெலாம் மெய்ம்மணம் நிறைந்து வீசப் பூத்தாள் ஆகிய எங்கள் ஆத்தாள் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களைப் போற்றிப் பாடுவது இப்பனுவலின் நோக்கம்.
நித்திய மங்கல வள்ளை
காப்பு
நேரிசை வெண்பா
திங்கள் திருவதனர் எங்கள் உயிர்க்கரசர்
பொங்கும் திருப்புகழைப் போற்றுதற்கு - மங்கல
வள்ளை எனப்பாட மென்மலர்த்தாள் காப்பாகும்
கொள்ளையின் பம்கூடும் தேர்.
நூல்
நேரிசை வெண்பா
அன்னாய்! எனதுயிராய் ஆனவளே! மெய்வழியாம்
பொன்னரங்கம் தன்னில் பொலிபவளே! - நின்றன்
திருவுதரம் தாங்கிச் செகமெல்லாம் ஈன்றாய்
அருள்மலர்த்தாள் என்றும் துணை. (1)
காலம் கடந்தமிகு காருண்யத் தாய்மணியே!
ஞாலம்முற் றுய்யநல மெய்வழியைச் - சீலமிக
கொண்டுவந்த கோமகளே! கோகிலமே! வாழியென
விண்டுபதம் போற்றும் பணிந்து. (2)
சற்குணங்கள் அத்தனையின் தாயகமே! நேயகநின்
பொற்குணத்தால் பூதலமுற் றுய்கிறதே - பொற்குணத்தாய்
ஏமன் அமல்கடத்தி இன்ப நெறிநடத்தி
சேமம் வழங்கினைமெய்ச் சீர். (3)
மந்திரங்கள் யாவுமொரு மேனியதாய் நின்றனையே
விந்தையித னின்வேறு யில்லையம்மா! - சிந்தை
நிறைந்தவளே! சேயிழையே! சீரனந்தர் நெஞ்சில்
உறைந்துவரம் ஈந்தருள்கின் றாய். (4)
ஒருமொழியால் மாமறைகள் யாவும் தெளிவிக்கும்
திருமகளே! தேவிபுகழ் எங்கும் - குருமணியாய்ச்
சித்தம் இரங்கிவந்த தெய்வத்தாய் சீர்நிறைந்த
சத்தினிநீ! வித்தையெலாம் நீ! (5)
அம்மா! நினக்குநிகர் அம்புவியில் எங்குமிலை
சும்மா இருக்கும் சுகமளித்தாய் - வெம்மாயக்
காட்டைக் கருவறுத்து வேட்டையெம னைமடித்து
தேட்டை வழங்கினையம் மா (6)
கோடி கடந்த குருமணியாய் நின்றாய்நீ
வாடும் உயிப்பயிர்க்கு வான்மழையே - நாடியுனை
நம்பியபேர் உம்பரென நல்லருள்பெற் றுய்ந்தனர்கள்
செம்பொருள்தந் தாயம்மை நீ. (7)
மடைதிறந்த வெள்ளமென வேதாந்தம் வாக்யம்
அடைந்தனம்நின் ஆரருளால் ஏமன் - படைகடத்தி
மெய்யாம் நெறிநடத்தி வெய்ய வினைகெடுத்தாய்
உய்யவரம் தந்தாய் உவந்து. (8)
கதியில்லை நீயின்றிக் கண்மணியென் அம்மா!
நிதிதந்தாய் எம்முள் நிறைந்தாய் - மதிச்செல்வி
மெய்வழிதந் தாருயிர்கள் செய்வழியைத் தேர்ந்தளித்த
தெய்வத்தாய் தஞ்சம்நும் தாள். (9)
- மெய்வழி பக்தி இலக்கியங்கள்
- மெய்வழி அடியார்களின் படைப்புகள்
- சமய இலக்கியம்
- அகரமுதலான வரிசையில் படைப்புகள்
- இறையியல்
- சிற்றிலக்கியங்கள்
- திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108
- கவிதைகள்
- திரட்டு நூல்கள்
- 2017 படைப்புகள்
- பாடல்கள்
- தற்கால புலவர்களின் படைப்புகள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் இயற்றிய 108 வகைப் பிரபந்தங்கள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் படைப்புகள்