திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/092.மெய் முதுகாஞ்சி

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



92. முதுகாஞ்சி[தொகு]

இலக்கணம்:-

நிலையாமையை மொழியும் காஞ்சித் திணையின் ஒரு துறையைக் குறிப்பிடுவது காஞ்சி எனப்படும். கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமை என்பது தொல்காப்பியர் முதுகாஞ்சித் துறைக்குக் காட்டிய விளக்கம்.

இளமைகழிந் தறிவு மிக்கோர் இளைமை
கழியாத வறிவின் மாக்கள்தமக்கு
மொழியப் படுவது முதுகாஞ்சி யாகும்.
- முத்து வீரியம் 1127
கழறிளமை யொழியறிஞ ரிளமையுறு மறிவின்மாக்
கட்கஅறைதல் முதுகாஞ்சியே.
- பிரபந்ததீபிகை 30
முதுகாஞ்சி:-
இளமை கழிந்தறிவு மிக்கோர் இளைமை
கழியாத வறிவின் மாக்கட்குக்
கூறுவதாம்.
- தொல்காப்பியம் விளக்கவுரை, ப.207

இஃதாவது அச்சம், பயம், ஆய்ந்தறிதல் முதலிய குணாதிசயங்கள் குறைந்த இளமையாளர்க்கு ஆன்றவிந்தடங்கிய சான்றோர் அறிவுரை கூறுமுகத்தான் அமைவது இப்பனுவல்.

மெய் முதுகாஞ்சி

காப்பு

நிலைமண்டில ஆசிரியப்பா

விண்ணக வேந்தே! மெய்வழி தெய்வமே!
அண்ணல்நின் ஆர்புகழ் அகிலவர் தெரிவுற
முதுமொழி யுரைக்க முனைந்தனன் தேவரீர்!
இதமொடு நாவினில் இருந்தருள் புரிக!

நூல்

ஆழிசூழ்ந் தியன்ற அம்புவி மாந்தரீர்

வாழிய நீவிர்! வாழிய நீவிர்!
எம்பெரு மானின் இணைமலர்த் தாள்படிந்(து)|r}}
செம்பொருள் கண்டு சிந்தையுள் மலர்ந்த
இன்பநற் செய்திகள் இனியநும் எழில்முனர்
அன்புடன் வழங்க அடியனேன் விழைந்தனன்
முழமுதற் பொருள்தம் திருவுளம் இரங்கி
வழங்கிய படைப்பில் மனுப்பிறப் புயர்ந்தது
உன்னத மாக மனிதனைப் படைத்து
நன்னய இருதயம் தனிலிறை அமர்வுறும் (1)

கடவுள்

கடல்சூழ் காசினி கனிந்துறை மக்காள்!

கடத்தினுள் இறைவன் உறைவதான் இறையைக்
கடவுள் எனும்நா மம்கொண் டழைத்தனர்
கடத்தினுள் இருந்திறை காரியப் படினும்
கடவுளை மாந்தர் காண்கிலர் மறந்தனர்
அண்டத் தில்இறை அகண்டமாய் நின்றவர்
பிண்டத் திருந்து பேணினர் எனினும்
கடவுளை எண்ணிலர் காசினி மாந்தர்
கடவு(ள்)செய் நன்றி கருதிலர் மேலும்
கடவுள் இலையென உளறவும் செய்தனர்
கடவுளை வெளியே தேடவும் மேயினர்
ஈசன் இருப்பிடம் இதயம் தனிலென
நேசமாய்ச் சிவமதம் நவின்றது அறிமின்

இருதய கமல வாசனென் றிறையை
அருண்மிகு வைணவர் அழைத்தனர் கேண்மின்
தூய இருதயர் பரம பிதாவென
ஆய கிறித்தவர் அறைந்தனர் காண்மின்
கல்பெனும் இருதயப் பிரகாசர் இறையென
அல்லா என்றே அறைந்ததிஸ் லாம்மதம்
எல்லா மதமும் இறைவன் இருப்பிடம்
நல்லித யம்மென நவின்றது தெளிவாய்
அத்தகு இறைவனைத் தன்னுள் அறிவது
சித்தம் தெளிதல் திருவுயர் ஞானம். (2)

உடம்பு

இடமகல் ஞாலத்திருந்துறை நல்லிர்!
உடம்பது மெய்யுடன் உடன்பட் டியங்கலால்
உடம்பெனப் படுமே உறுவாழ் வதுவே
உடம்பினில் உயிரே ஜீவன் என்பது
திடம்பெற அறிமின் சீவனே சிவனாம்
உடம்பெடுத் தேமெய் உணர்வுற லாகும்
இடம்தவம் இயற்ற இதுவே துறையாம்
திடமுயர் பேரின் பம்பெற வேண்டில்
உடம்பின் துணையால் உயர்கதி எய்தும்
ஐவழி நுகர்வுக் கிடமிவ் வுடம்பே
மெய்ந்நெறி சார்தற் கிதுவே நற்றுணை. (3)

உயிர்

அயர்வில் திரைசெறி அப்புசூழ் புவியீர்!

உயிரிலா உடலம் தனித்தியங் காது
உயிரே உடற்குச் சீர்சிறப் பருளும்
உயிரே மதிப்பு மகிழ்ச்சியெ லாம்தரும்
உயிரே வலிமை ஆண்மையெ லாம்தரும்
உயிரே அல்பகல் ஓயா தூழியம்
இயற்றும் இன்பம் இச்சையெ லாம்தரும்
உயிரே வயது வாழ்வுயெ லாம்தரும்
உயிரே ஊண்சுவை உணர்வும் வழங்கும்
உயிரே பிரம்மப் பிரகா சம்தரும்
உயிரே கலைகல் விக்குஆ தாரம்
உயிரே காட்சியும் மாட்சியும் வழங்கும்
உயிரிலா உடலம் பிணமெனெப் படுமே. (4)

ஆத்ம தரிசனம்

உயிரின் தரிசனம் ஆத்ம தரிசனம்
உயிரின் தரிசனம் காயத்ரி தரிசனம்
உயிர்தரி சனமே உபநய னம்பெறல்
உயிர்தரி சிப்பவர் த்விஜன் எனப்படும்
ஆற்றில் கிடந்து துறையறி பான்மை
மாற்றிப் பிறத்தல் ஞானஸ் நானம்
புத்தன் ஆதல் அருட்பெருஞ் சோதி
சித்தன் ஆதல் சிவனுடன் ஒன்றல்
தனக்கு உவமையில் தலைவனை அறிதல்
ஊனுடல் வயது வரையறைக் குட்படும்
உயிருள வரையே உறுப்புகள் மதிப்புறும் (5)

பிணியும், மூப்பும் (முதுமை)

பிணியும் மூப்பும் சாக்கா டும்மெய்
அணிசேர் மனுவிற் கவசியம் நேரும்
வாதம் பித்தம் சிலேத்துமம் மூன்றன்
நீதம் மாறில் நெருக்கும் பிணிகள்
மூப்பு நிச்சயம் வந்தே தீரும்
ஒப்பிதற் கெவர்க்கும் இயலா என்றும்
கட்டிளம் மேனியர் தம்மெழில் உவந்து
மட்டிலா மகிழ்ச்சி மீதுறப் பெறுவர்
புதுமை பூத்தவர் போலே மயங்குவர்
முதுமை வந்துறும் முறைமை எண்ணிலர்
கமலக் கண்கள் பீளை தள்ளிடும்
இமைகள் சுருங்கி ஒளியிழந் துற்றிடும்
வள்ளைச் செவிகள் குறும்பி ஒழுக்குறும்
எள்பூ நாசி சளியொழுக் குற்றிடும்
முத்துப் பற்கள் சுரைவிதை போல்வேர்
அத்து உதிர்ந்திடும் ஆகும் பொக்கைவாய்
பவள வாயினில் சளைவாய் ஊற்றெழும்
அவலத் தோற்றம் ஆங்குறும் தளர்வு
கார்கூந் தல்தான் வெளுத்து நரைத்திடும்
சீர்கெட் டேமுது கும்கூன் விழுந்திடும்
கொழுவிய மேனியில் திரைமலிந் திலங்கும்
எழிலது மங்கி இளைப்புறும் மேனி
கொக்கிரு மல்தான் கூடிக் குலவும்
மக்கள் சுற்றமும் வெறுத்திடும் நிலையுறும்
மலஜலம் நில்லா தொழுக்குறும் கண்டோர்
விலகிடும் 'சீச்சீ' எனுநிலை வந்துறும்
ஓடித் தாண்டிடும் வலிமை கட்டுடல்
வாடி மெலிந்து வளைதடி துணைகொளும்
வசந்தம் வாழ்வெனும் நிலையது கெட்டு
கசந்து அழுதிடும் நேரமும் வந்துறும். (6)

சாக்காடு (சாவு)

பிறப்புறு நாளைக் கணக்குரை மாந்தர்
இறப்புறு நாளை உரைக்கவும் கூடுமோ?
எமன்எதிர்த் திடுகால் என்செய்வர் அந்தோ
தமர்உற வெதுவும் துணைவரா தக்கால்
வந்தே றும்மச் சாவெனும் கொடுமை
எந்த விதத்தும் தவிர்க்கவே இயலா
செல்வர் வறியவர் வல்லார் மாட்டார்
பல்கலை பயின்றார் பாரகத் தரசர்
நல்லார் கெட்டார் நலமுளோர் நலிந்தார்
எல்லோ ரையுமெமன் பற்றியே தீர்வன்
பொன்தரில் போகான் புகழ்ந்திடில் மயங்கான்
வன்மற லியெனும் வல்பிணிக் கரசன். (7)

நிலையாமை

அலைசெறிந் தார்கடல் ஆர்புவி மாந்தரீர்!
இளமையும் நில்லா வலிமையும் குன்றும்
வளமுடை யோமெனும் மயக்கமும் அழியும்
செல்வம் உடையோம் எனும்செருக் கழியும்
செல்வர் வறியவ ராதலும் உண்டு
செல்வராய் வறியவ ராதலும் உண்டு
யான்என தென்று செருக்குறும் மாந்தர்
தீனக் குரலிறைத் தழுவதும் உண்டு
ஆணவத் தாலே அழிந்தோர் பல்லோர்
ஊண்வெறி கொண்டே ஒழிந்தனர் எண்ணிலர். (8)

தெய்வ அவதாரம்

இங்ஙனம் இப்புவி மயங்கிய காலை
தங்கமா மேரு தனித்தலை மைப்பதி
எல்லாம் வல்லார் எம்பிரான் ஆண்டவர்
பொல்லாப் பிறவிப் பிணிதவிர் பெருமான்
இகத்துடை மாந்தர்க்கு எமபயம் கடத்தும்
ஜகத்குரு மெய்வழி சாலைஆண்டவர்கள்
பொன்மார்க் கப்பதிப் பொன்னரங் கையர்
நன்மார்க்கர் எனும் நாமமேற் றிவர்ந்தார்
சாவா வரந்தரும் தருமர்வான் வள்ளல்
மூவா முதல்வர் முனிவர்கட் கரசர்
வையக மிசையே வந்தவ தரித்தார்
மெய்யகம் தந்து வெவ்வினை தவிர்க்கும்
ஐயஎன் தெய்வம் ஆலமுண் டருள்வார் (9)

மெய்வழி

மனுக்குலம் உய்ய வான்பரி சருள
தனக்கு உவமையில் தெய்வ தயாநிதி
வந்தனர் வானக மன்றினின் றிங்ஙண்
செந்தமிழ்ப் புவியில் செகமெலாம் உய்ய
தந்தனர் சாவா வரமதும் மற்று
விந்தையார் விண்ணகச் செல்வம் அருள்வார்
ஒன்றே குலமும் ஒருவரே தேவன்
என்றோர் உயர்ந்த இனிய மெய்வழியை
நன்றே நிறுவ நண்ணினர் நாயகர்
பொன்றாப் புகழ்ப்பொன் னாட்டின் பரமர்
மறைகள் ஆகமம் வகுத்த சீர்பெருந்
துறையே மெய்வழி எனத்தெளி வித்தனர். (10)

நம்பிக்கைகள் ஆறு

இறைவர் ஒருவரே; இறைவரின் மாட்சிசொல்
மறைகள் உண்டு; வானவர் உண்டு;
மரணம் உண்டு; அவரவர் செயல்படி
மரணத் தின்பின் தீர்ப்புநாள் உண்டு;
வருவன முன்உரை தீர்க்கத் தரிசியர்
இருளறு மொழியோர் ஈண்டுண் டறிமின். (11)

பாதகம் எட்டு

புலையெனும் புண்உணும் பொல்லாக் கொடுமை
கொலைபுரி பாதகம், களவு, பொய், சூது
கள்சா ராயப் போதையாம் பேதைமை,
பிறர்மனை நயக்கும் பெருங்கொடும் பாதகம்,
உயிர்நடுக் குறச்செய் புகையென் னும்பகை,
உள்ளம் நரகுறச் செய்திரைக் காட்சி
அவசியம் இன்றிய அரசியல் விமர்சனம்
இவையெண் பாதகம் இவை தவிர்த்திடுக
பாதகம் இல்லாப் பண்புயர் ஓர்குலம்
நீதநன் னெறியுயர் நேரியர் அனந்தர்கள்
சத்திய தேவ பிரம்ம குலமென
நித்தியர் அருளினர் மெய்வழி தெய்வம்
உண்ணல் உறங்கல் பெண்மயல் உழன்று
எண்ணம் பலவாய் இயங்கிடும் மாந்தர்
வாழ்வின் இறுதி சாவே என்பர்
தாழ்வுற் றேமன் தன்கைப் படுவர்
வாழ்வின் முடிவில் இருவிதம் உண்டு
வாழ்வுயிர் அடக்கம் வீழ்துயர்ச் சாவு
படைத்த வித்து பாங்குற அடங்கி
உடையவர் தாளில் ஒன்றிடு இன்பம்
மடையுடை சுக்கிலம் சிதறி ஏமனின்
கடைநர கேகல் சாவுத் துன்பம். (12)

ஜீவப் பிரயாணம்

ஓவா(து) அலைகடல் சூழ் உலகினரே!
ஜீவப் ரயாணம் அடைந்தவர்க் கிருக்கும்
தேவ அடையா ளங்கள் செப்புதும்
தெய்வத் தீர்த்தம் தந்தால் ஏற்கும்
தெய்வ பாசுரம் படித்தால் வேர்க்கும்
இளமை மஞ்சள் வண்ணம் பூக்கும்
வளமாய் கைகால் துவளும் இணங்கும்
கனமிலா திருக்கும் பூப்போல் மென்மை
அனல்போல் இலேசாய் சூடும் இருக்கும்
ஜீவ சக்தி வெளியே றாது
நாற்ற மிறாது மாறாய் மணக்கும்
மண்ணில் இட்டால் மட்கா நிலையுறும். (13)

சாவின் அடையாளம்

எமன்கைப் பட்டுச் சாவோர் மேனி
தமதுயிர்ச் சக்தி வெளியே றிடுங்காண்!
கனக்கும் நாறும், விறைக்கும், ஜில்லிடும்,
புழுக்கும், தீர்த்தம் ஏலா(து) முகமும்
கோரமாய்த் தோன்றும் வீங்கும் வெடிக்கும்
சீரெலாம் கெட்டுச் சேரும் நரகிடை
கடல்சூழ் எழிலார் காசினி யோரே!
இடமகல் ஞாலத் தென்பிறப் பினரே!
பேரின் பம்விழை பெருந்தகை யினரே!
சீர்மெய் வேண்டும் செழுங்கலை யினரே!
வாரும் மெய்வழி, சாரும் வல்பிணி
தீரும், இறைதாள் காரும் உள்களி
கூறும், இன்னல் மாறும், ஈரெண்
பேறும் சுவர்க்கம் சேரும் நிலையுறும்
பளிங்கு இதயப் பண்பின் நல்லிர்!
தெளிமின்! எளியேன் செப்பும் மெய்ம்மொழி
கல்வியின் பயன்இறை கழல்மலர் தொழுதல்
நல்உடல் பயன்இறை தனைஉள் காணல்
பிறப்பின் பயன்கொடும் தீக்குணம் துறத்தல்
உறவும் துணையும் தெய்வம் ஒருவரே. (14)

உறுப்புகளின் பயன்

கண்களின் பயன்இறை தரிசனம் செய்தல்
செவிகளின் பயன்நிறை திருமொழி கேட்டல்
வாய்பெறு பயன்இறை மாண்புகழ் போற்றல்
கரங்களின் பயன்பரன் திருப்பணி இயற்றல்
கால்களின் பயன்ஆ லயம்வலம் வருதல்
சிந்தை ஒவாது தெய்வம்சிந் தித்தல்
எமபடர் தாண்டா வாழ்வுவாழ் வல்ல
தமரென ஆண்டவர் தனைஉணர்ந் தறிக!
மாற்றிப் பிறந்து மறுபிறப் பெய்துக!
ஆற்றின் துறையறிந் தரனடி சேர்க!
ஒன்றே மெய்வழி செய்வழி உய்வழி
நன்றே பற்றி நலமெலாம் எய்துக!
வெற்றிமே டேறுக! வெற்றிமே டேறுக!
வாழிய நீவிர்! வாழிய நீவிர்! (15)

மெய் முதுகாஞ்சி இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!