உள்ளடக்கத்துக்குச் செல்

திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/093.இறைதிரு மும்மணிக் கோவை

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.




93. மும்மணிக் கோவை

[தொகு]

இலக்கணம்:-

மூன்று மணிகளால் கோர்க்கப்பட்ட நூல் மும்மணிக்கோவை எனலாகும். ஆசிரியப்பா வெண்பா, கலித்துறை என்னும் இம்மூன்று யாப்புகளும் பா வைப்பு முறையாக அந்தாதித் தொடை அமைய அகத்துறையில் பாடப் பெறுவது மும்மணிக் கோவை எனப்படும்.

வெள்ளையும் அகவலும் நேரிசை ஆகக்
கலித்துறை வர அந்தாதி ஆகி
முறைமையின் இயல்வது மும்மணிக்கோவை
- பன்னிரு பாட்டியல்  - 156
அகவல் வெண்பா அசைஎண் கலித்துறை
தொகைமுப் பதுபெறச் சொற்றொடர் நிலையின்
கூறுதல் மும்மணிக் கோவைஆகும். 
- இலக்கண விளக்கம்  - 815
அகவல் வெண்பாக் கலித்துறையின் 
முப்பது விரவின் மும்மணிக் கோவை
- பிரபந்த மரபியல் 8
முன்னா சிரியம்பின் வெண்பாக் கலித்துறை முப்பதென்று 
சொன்னார்கள் மும்மணிக் கோவைக்கு 
- நவநீதப் பாட்டியல் 36

இப்பனுவல், எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் புகழை மும்மணிக் கோவையால் பாடப் பெற்றதாமென்க.

இறைதிரு மும்மணிக் கோவை

காப்பு

நேரிசை வெண்பா

பெம்மான் பெருந்துறையீர்! பொற்பாத மென்மலர்மேல்
மும்மணிக் கோவைபாட மிக்கார்ந்தேன் - அம்மா
எழுத்தாணி ஏடு தவறாமல் நிற்க
வழுத்துகின்றேன் மென்றாள் துணை

நூல்

பொழில் வளம்

நேரிசை ஆசிரியப்பா

ஊறல் மலையின் சாரல் தன்னில்
மாறில் உத்தி யோங்கும் வனத்தில்
கற்பகம் பாதிரி கொன்றை காயா
அற்புதச் செண்பகம் கோங்கு வேங்கை
மல்லிகை முல்லை இருவாட் சியொடு
அல்லி தாமரை நீலோற் பன்னம்
பன்மலர் பூத்து நன்மணம் கமழ
பொன்னொளிக் கதிரொளி பொற்கரம் தழுவ
மண்மகள் பேரெழில் துலங்க
விண்மகள் கண்டு வியப்பெய்தினளே! (1)

காட்சி

நேரிசை வெண்பா

எய்தரு ஏரார்ந்த கான்பொழிலில் ஏறனைய
மெய்யழகர் மிக்கினிது தோன்றினார் - துய்யர்
வடிவழகைக் கண்டு வாசமலர் கூடி
அடிமலரில் தாழும் பணிந்து. (2)

தலைவி தோன்றுதல்

கட்டளைக் கலித்துறை

பணிகள் புனைந்து மயிலாள் ஒசிந்து நடைபயின்று
அணிகள் குலுங்க அழகோவியமே உயிர்பெற்று
மணிமன் றனைய மலர்க்கா வதனில் எழில்பொங்க
மணியாள் இன்பக் கனியாள் வந்து நின்றனளே! (3)

ஐயம்

நேரிசை ஆசிரியப்பா

நின்றன ளந்த நேரிழை தானும்
தென்றல சைந்தது போல்பவ ளங்கு
கண்டனள் அந்தக் காளையர் தன்னை
எண்டிசை தன்னில் கண்டறி யாத
அயனோ அரியோ அழகார் வடிவம்
மயனே இயற்று சிலையோ இவர்தான்
நயனம் அகலா தவர்நோக் குதலென்
தயவோர் வடிவம் எனும்வா னவர்போன்ம்
மதனோ சிவனார் ஈன்ற
சுதனோ என்று மயக்குற் றனளே (4)

தெளிவு

நேரிசை வெண்பா

உற்றவர்தான் மானுடரோ விண்ணவரோ இப்புவியின்
கொற்றவரோ என்று கணிக்கறியாள் - மற்றவள்தான்
மானுடராய் வந்த வானவர்தான் என்பதனைத்
தானறிந்தாள் தையல் இனிது. (5)
புணர்ச்சி விதும்பல்

கட்டளைக் கலித்துறை

இனிதே இவளை இவர்நோக் குறவும் அவர்தன்னை
கனிந்தே நோக்கி நாணுற் றேதலை கவிழ்ந்திடவும்
கனியுட் சுவையால் கவினார் பொருளாய் கலந்தனரே!
தனியில் லையினி உடலம் இரண்டு உயிரொன்றே! (6)

கலந்துழி மகிழ்தல்

நேரிசை ஆசிரியப்பா

ஒன்றினர் உள்ளம் பாலும் நீரும்
நன்றே கலந்து ஒன்றா தல்போன்ம்
காந்தம் இரும்பைக் கவர்வது போலே
காந்தன் என்னைக் கவர்ந்தனர் தோழி
ஏனென் உள்ளம் இங்ஙன மாயது
தேனென் உயிருள் சுரந்தது காணே
என்செய லாகும் என்றனள் தலைவி
நின்செய லன்று அன்னவர் தாமும்
நின்பால் அன்பு கொண்டார்
அன்பால் இணைந்தனிர் ஆருயிர்கனிந்தே! (7)

தலைவி நிலை

நேரிசை வெண்பா

கனிந்தேஅக் காந்தன் கவர்ந்திடவும் சென்றாள்
இனிவேறில் என்னும் நிலையாள்- குனிந்தே
அவர்தாளை நோக்க அவரிவள்கை கோக்க
இவர்மகிழ்வுக் கில்லை தடை. (8)

கட்டளைக் கலித்துறை

தடையின் றெனினும் படைநாண் உற்றே விலகியிவள்
நடையும் தளர்ந்து பாங்கியை நோக்கிச் சென்றனளே
உடலே உயிரைப் பிரிவது போலும் உணர்வுற்றே
கடல்போற் பொங்கும் காதல ரங்கண் பிரிந்தனரே! (9)

பிரிவுழிக் கலங்கல்

நேரிசை ஆசிரியப்பா

பிரிந்தா ரிருவர் எனினும் மனனே
சரிந்தே விழுமன் னவரைக் காணில்
பரிந்தே பாங்கி யுடன்பட் டிடவும்
வருந்தி மீண்டும் பொழிலினைச் சார்ந்து
அருந்தும் அழகைக் கண்கள் ஆர
விருந்துண் டவர்போன்ம் உணர்வு தளிர்க்க
பருந்தாய் உளத்தைப் பறித்தே குதலேன்
பெருந்தோள் அரசர் இணைவை விரும்பிப்
பொருந்தும் காதல் நோய்க்கு
மருந்தும் பிணியும் அவரா யினரே! (10)

நேரிசை வெண்பா

ஆனார் மருந்துபிணிக் கன்னவரும் இன்னவளும்
தேனார் மொழியால் உரைகலந்து - வானோர்
ஊணுறக்கம் அற்றார்போல் உள்ளம் மருகினர்காண்
வாணுதலும் மன்னவரும் காண் (11)

தோழியர் ஐயம்

கட்டளைக் கலித்துறை

காணல்களித்தல் கனிந்துற வாடி இனிதிருந்தே
பூணும் அன்பு பெருகிட மேனி பசந்தனளே
காணும் தோழியர் கன்னியின் மாற்றம் கண்டனரே!
பேணும் உளத்தோர் நற்றா யிடமும் புகன்றனரே! (12)

நற்றாய் வினவல்

நேரிசை ஆசிரியப்பா

புகலவும் நற்றாய் பெரிது கலங்கி
இகழ்வுறும் என்றே எண்ணி மயங்கி
ஏடி!உன் மேனியில் மாற்றம தென்ன?
வாடிம யங்கும் இந்நிலை ஏனோ?
கூடிய தார்சொல் நாடிய தெங்கே?
ஆடிய நின்றன் ஆட்டம் உரைமின்
தேடி உனையே சிறப்பொடு வளர்த்த
பாடு அறிந்திலை பண்பிலை யோசொல்
நாடலர் தூற்றும் அந்தோ
மூடிடல் வேண்டா மொழிவாய் உண்மை (13)

தலைவி கலக்கம்

நேரிசை வெண்பா

உண்மை உரைமினென ஒண்டொடியாள் கேட்டளவே
கண்கள் மழைபொழியக் கன்னியவள் - எண்ணம்
மறைத்தாள் உரைகுழறி மாறுபட ஏதோ
அறைந்தேகும் அம்பொழிற்கே தான். (14)

வரைவு வேட்டல்

கட்டளைக் கலித்துறை

தானே பொழிலில் தலைவரைக் கண்டு தன்னிலையை
மானேர் விழியாள் மொழிந்தாள் இனிய மன்னவரும்
தேனார் மொழியாய் கலங்கேல் மணமும் நிகழ்த்திடுவோம்
ஊனுள் உயிருள் கலந்தாய் வருந்தேல் உத்தமியே! (15)

வரைவு நிகழ்தல்

நேரிசை ஆசிரியப்பா

உத்தமி இங்ஙன் உரைகால் தலைவர்
மெத்த நினைந்து மெல்லியல் தன்னை
நன்மணம் கொள்ள நாட்டம் உற்றார்
பொன்மணி போல்வாள் பொழிலிடைப் போதர
வானில் நின்று மாதவர் வாழ்த்த
கானில் புள்ளினம் கவினுற இசைக்க
முகில்குடை நிழற்ற மென்காற் றசைய
சுகஉத யம்கொள் சேயிழை யாட்கு
திங்கள் வதனர் தலைவர்
இங்ஙன் மங்கள தாரகை நாட்டும் (16)

தலைவி மகிழ்ச்சி

நேரிசை வெண்பா

நாட்டும் நலம்கொழிக்க நாரீமணிகளிக்க
வீட்டின் அறந்தொடங்கும் முன்னாளாய் - ஈட்டும்
இன்பமே என்றும் இதயங்கள் ஒன்றும்
பொன்பதம் மன்றல் வினை. (17)

கட்டளைக் கலித்துறை

விளைசுக மேவுற வீடற மேசெய மெல்லியலாள்
களைபெறு முகமலர் தெளிவுறு நெஞ்சம் கொண்டனளே
வளைகுலுங் கிடுகரம் கொலுசு சிணுங்கிட நடைபயின்று
தளைகள் அகன்றவள் தனியள் தொடங்கிடும் இல்லறமே (18)

பெற்றோர் சினம்

நேரிசை ஆசிரியப்பா

இல்லம் ஏகினள் பெற்றோர் உற்றார்
கொல்லும் நோக்கினர் கொதித்த வாக்கினர்
என்னோ நெஞ்சுரம் கொண்டாய் ஏந்திழை
நின்னால் வெம்பழி நேர்ந்தது ஓர்ந்திலை
ஊரவர் இகழ்தலும் உடனவர் எள்ளலும்
பேரது கெடலும் சீரழி நிலையும்
காரணம் நீயே நேர்வழி யதனால்
மாரணம் இதனின் மேலது என்று
முதுபெருங் குரவர் மொழிதலும்
மதிமுக நல்லாள் மாற்றுரை செய்யும் (19)

தலைவி உரை

நேரிசை வெண்பா

செய்தேன் தவறென்று செப்பினீர் சான்றோரே!
எய்தினேன் ஏற்றமிகு பேரின்பம் - தெய்வம்
திருமேனி கொண்டிவர்ந்தே செய்யும் அறமே
அருளோங்க ஆண்டார் அவர் (20)

கட்டளைக் கலித்துறை

அவர்தான் சிவமே! அமரர் தலைவர் அறிமின்கள்
பவமே கடத்தி பரவாழ் வுளமே அருள்புரியும்
தவமோர் உருவாய்த் தரணி மிசையே வருபெருமான்
புவனம் இதனில் எவர்க்கும் கிட்டாப் பொற்பதமே! (21)

பெற்றோரைத் தலைவரிடம் அழைத்தேகல்

நேரிசை ஆசிரியப்பா

பதம்பெற் றவளென் றறவோர் சொல்லும்
இதமற் றவர்கள் இகழ்வும் கருதேன்
நிதமும் புதியர் நித்தியர் சத்தியர்
சதமுற் றுயிர்கள் கதிபெற்றிடவே
அருள்செய் திடுவர் அவரென் கொண்கன்
இருள்கெட் டிடவும் திருபெற் றிடவும்
வரங்கள் வழங்கும் வள்ளல் கோமான்
தரங்கொள் நிதியர் தவமெய்ப் பதியர்
தஞ்சம் இறைவர் தாளில்
நெஞ்சம் அவற்கே இடமாய் வைத்தேன் (22)

நேரிசை வெண்பா

வைதார்கள் ஊரவர்கள் வாழ்த்தினார் வானோர்கள்
செய்தாள் பெரும்பழியென் றும்புகன்றார் - துய்யர்
வினைகெடுத்த வேதா தனைக்கொடுத்த தாதா
எனைக்காத்தார்க் கென்னோ செயும் (23)
பெற்றோர் தலைவரைக் காணல்

கட்டளைக் கலித்துறை

செய்யும் பெற்றோர் உற்றார்தமையே பொற்பதிக்கு
உய்யும் வகையே தரிசித் திடவே அழைத்தேகும்
நையும் இடர்கள் நமனர்கெடவே நண்ணினர்காண்
எய்தும் பரபோ கமதென் றவர்க்கே நெறிகாட்டும் (24)

நேரிசை ஆசிரியப்பா

காட்டும் தான்சார் தலைவர் பதியைக்
கூட்டும் அவர்தம் கொள்கை நெறியில்
தெய்வக் காதல் சிறப்பை உயர்வை
எய்தப் புகுதும் இணையில் பரிசை
செய்யறம் தன்னின் சீருயர் காட்சி
மெய்யறம் துலங்கும் மாதவர் மாட்சி
செப்பின ளாகச் சீர் முதுகுரவர்
ஒப்பினர் உள்ளம் உவந்தனர் நன்றே
தம்மகள் சார்ந்த மெய்வழி
எம்மதத் திற்கும் சம்மத உய்வழி (25)

பெற்றோர் மகிழ்ச்சி

நேரிசை வெண்பா

உய்வழியைச் சார்ந்தாள் உயர்ந்தாள் மகளென்று
மெய்யாய் மகிழ்ந்தார்கள் பெற்றோர்கள் - வையகத்தை
வாழ்விக்க வந்தார் மருகரென்று எண்ணியுளம்
ஆழ்ந்தார்கள் இன்பத் துறை. (26)

கட்டளைக் கலித்துறை

துறைகண் டவர்கள் நிறைகண் டுவந்தார் நீணிலத்தே
இறையொன் றினிதாம் குலமொன் றெனவே தாம்தெளிந்தார்
மறைகள் தெளியும் மதங்கள் குலங்கள் இணைந்தினிதே
உறையும் பதியே மகள்தேர்ந் தாளென் றுவந்தனரே (27)

பொதுவுரை

நேரிசை ஆசிரியப்பா

உவத்தல் மெய்யை உணர்தல் நன்றே
அவத்தில் உளத்தை ஆழ்த்தல் தீதே
தெய்வக் காதல் சிறப்பே பெருகும்
உய்யும் உயிர்க்கு துறக்கம் தருகும்
காதல் கொண்மின் இறைபால் உலகீர்!
சாதல் தவிரும் நீதம் நிறையும்
ஓதல் உணர்தல் வாழ்தல் தெய்வக்
காதல் செயவே! காதல் செயவே!
ஆதலால் மாந்தரீர் தெய்வக்
காதலால் பெரும்பேர் இன்பம் துலங்கும் (28)

நேரிசை வெண்பா

துலங்கும் உயிர்உய்யும் தெய்வநே சத்தால்
இலங்கும் இறவாத இன்பம் - நலங்கொள்
அகத்துறையென் றான்றோர்அன் றேயுரைத்த மெய்யாம்
சுகத்துறையத் தேர்மின் தெளி. (29)

கட்டளைக் கலித்துறை

தெளிமின் மனனே தேர்மின் நெறியாம் மெய்வழியே!
ஒளிரும் உயிரில் இனிமை கனியும் மகிழ்வோங்கிக்
களிமின் இறைபால் காதல் புரிமின் இறைநாமம்
விளிமின் விழிமின் எழுமின் பணிமின் உய்வீரே! (30)

இறைதிரு மும்மணிக் கோவை இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!