நூறாசிரியம்
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
நூறாசிரியம்
பாவலரேறு
பெருஞ்சித்திரனார்
வெளியீடு:
தென்மொழி நூல் வெளியீட்டு – விற்பனையகம்,
5, அருணாசலத் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை– 5.
பதிப்பு | : | முதல் பதிப்பு : தி.பி.2027.மீனம் 3 (16.3.96) |
நூல் தலைப்பு | : | நூறாசிரியம் |
உள்ளடக்கம் | : | இலக்கியம்(செய்யுள்-உரையுடன்) |
ஆசிரியர் | : | பாவலரேறு பெருஞ்சித்திரனார் |
வெளியீடு | : | தென்மொழி நூல் வெளியீட்டு விற்பனையகம் |
5, அருணாசலத் தெரு, சென்னை - 600 005. | ||
அச்சாக்கம் | : | தென்மொழி அச்சகம், சென்னை - 5 |
உரிமை | : | தாமரை பெருஞ்சித்திரனார் |
தாள் | : | வெள்ளைத்தாள், |
60 பரப்பெடை(G.S.M) எண் மடிதெம்மி | ||
பக்கங்கள் | : | 24 + 432 |
அளவு | : | '21 செமீ x 13 செ.மீ' |
படிகள் | : | 1500 |
விலை | : | உரு 100/- மட்டும் |
பாவலரேறு ஐயா அவர்களின் மறைவிற்குப் பிறகு அவர்தம் முதற் (64-ஆம் அகவை) பிறந்த நாளை யொட்டி, விரிவான உரையுடன் கூடிய ' நூறாசிரியம் ' என்னும் இச் சிறந்த பா நூலை முழுமையாக வெளிக்கொணர்வதில் பெருமை கொள்கிறோம்!
இந் நூலின் முதற்பத்துப் பாக்கள் முதற்பகுதி-முதற் பதிப்பாக, தியி.. 2010 (1979) ஆம் ஆண்டு வெளிவந்தது. அதைத் தென்மொழி அன்பரான புலவர் வண்ணாங்குண்டு திரு.சிவசண்முகம் - கலாவதி இணையர் தம் திருமண பரிசாக வெளியிட்டு வழங்கினார். அதன் இரண்டாம் பதிப்பு, தென்மொழி அமைச்சராக இருந்த சீரிய தமிழ்த்தொண்டர் திரு. அழ.இளமுருகன் தம் அச்சகத்தில் அச்சிட்டு, திபி. 2017 (1985}, இல் வெளிக்கொணர்ந்தார். அடுத்த பத்துப் பாக்கள் கொண்ட இரண்டாம் பகுதி திபி. 2012 (1981)இல் கோவை - பெருஞ்சித்திரனார் நூல் வெளியீட்டுக் குழுவினரால் வெளியிடப் பெற்றது. அவற்றில் ஐயா அவர்களின் பதிப்பு முன்னுரைகள் இடம் பெற்றுள்ளன. அவை வருமாறு:
முதற் பதிப்பு முன்னுரை
' நூறாசிரியம் ' எனும் இந் நூல் நூறு ஆசிரியப் பாக்களைக் கொண்டது. ஆசிரியப்பாக்கள் அகவற்பாக்கள், ஆசிரியம் என்பது யாப்பையும் அகவல் என்பது ஒசையையும் குறிக்கும். ஓசையால் பெயர் பெறுவது ஆசிரியம் ஒன்றே. 'சீர்சால் அகவல்' எனும் சிறப்புற பேசப் பெறுவதில் பா வகை. இப்பாவகை 'ஆசிரியம்' எனப்படுவதால் இதன் தலைமை நிலை விளங்கும். பழஞ் செய்யுட்களுள் இதுவே பெரும்பான்மையாக நிற்கும் பா வகையாம். எளியார்க்கு எளியதும் வலியார்க்கு வலியதுமான இப் பா வகை, தமிழ் யாப்பு முறையில் முதல் தோற்றமாகவும் இருத்தல் வேண்டும் என்றும் கருதற்பாலது.
இதன் பெரும்பாலான பாக்கள், 'தென்மொழி' முதன் முதல் தொடங்கப் பெற்று இடைநின்ற ஓராண்டுக் காலத்து 5-9-61-இல் தொடங்கி 21-71-62 முடிய எழுதப்பெற்றன. பிற, சில ஆங்காங்கே காலங்கருதி எழுதப்பெற்று இதனுள் சேர்க்கப் பெற்றன. கிடைத்த ஓய்வு வீணே கழிய ஒருப்படாத என் உணர்வுள்ளம் இந்நூலின்கண் நின்று: திளைத்தது. என்று கூறின் மிகையாகாது.
பாகுபாடின்றி அவ்வக்கால் எழுந்த உணர்வுகளை யெல்லாம்.. ஒருங்கு திரட்டி எழுதப் பெற்றது இந்நூல். உண்மையும் திண்மையும் வாய்ந்த கருத்துகளை யாவரும் அறிதற்பொருட்டு இந்த யாப்பைத் தேர்ந்தெடுத்தேன். பாத்தளைகளால் பெரிதும் கட்டப்பெறாமல் சிறுசிறு சீர்களால் தொடுக்கப் பெற்ற பா வடிகள் நிரம்பியவாகலின் இப்பாக்கள் அருமுயற்சியின்றி ஐந்தாறு முறை படித்த அளவிலேயே மனத்தகப்படுக்கும் தன்மை வாய்ந்தவை. இவற்றின் பிற சிறப்புகள் படிப்பாளின் உணர்வுக்கும் அறிவுக்கும் கண்ணோட்டத்திற்கும் உரைகற்களாக நிறுத்தப்பட்டன.
இதிலுள்ள நூறு பாக்களும் வேறு வேறு கருத்துகள் பற்றியியங்குவன. பாடல்கள் அகம் புறம் என்னும் இருதிணைகளாகவும், பல்வேறு துறைகளாகவும் பகுக்கப்பெற்றுள்ளன. காலம் ஒட்டிச் சில புதுமுறைக் கருத்துகளும் இதில் சேர்க்கப்பெற்றுள்ளன.
பாடல்களுக்குப் பொழிப்பும் விரிப்பும் கொடுக்கப் பெற்றுள்ளன. தமிழ் நலம் நாடுவோர்க்கும். இலக்கிய நலந் துய்ப்பார்க்கும் அவை பெரிதும் துணையாகவிருக்கும். புரையும் கறையும் நிறைந்த போலி இலக்கியப் படைப்பு மிகுந்த இக்காலத்து நிறையும் விரையும் கலந்த இத்தகைய நூற்கள் வாழ்க்கைக்கு ஒளியும் வழியும் காட்டுவன என்பதைப் படிப்பார் தெள்ளிதின் உணர்வார்.
நூறாசிரியம் - முதல் பகுதி எனும் இந்நூல், முதற் பத்துப் பாட்டுகளையும் உரைகளையுமே கொண்டது.
இது, நெடுநாளைய தென்மொழி அன்பரும், சிறந்த தனித்தமிழ்ப் பற்றாளரும், புலவரும் ஆகிய வண்ணாங்குண்டு, திரு.சிவசண்முகம்- செல்வி கலாவதி ஆகியோர் திருமண விழாவில் வெளியிடப் பெறுகிறது. தம் திருமண மங்கல விழாவின் அன்புப் பரிசாக இதனை அச்சிட்டு வழங்குவித்த மணமகன் புலவர் திருசிவசண்முகம். அவர்களுக்கும், அவர்களின் தமிழ் விழைவிற்கிசைந்த - அவர் தந்தையார், திரு. அமு.இராமமூர்த்தி அவர்களுக்கும் என் நெஞ்சு நிறைந்த நன்றியும் வாழ்த்துகளும் என்றும் உரியவாகுக.
திபி 2010. விடை, 24 (7-5-79)
இரண்டாம் பதிப்பு முன்னுரை
உரைநடை என்பது ஒரு செடி போன்றது என்றால் அதன் பூக்களைப் போன்றவையே பாடல்கள்.
முழுமையான பொருள் தரும் பொருத்தமான அழகிய சொற்கள். தகுதியான முறையில், நிரல் நிறையாக உணர்வு ஒழுங்கிற்கு ஏற்ப அமைக்கப் பெறுவதே பாட்டு. இதில் கருத்துகள் பூக்களின் மணத்தைப் போன்றவை.
உரைநடையில் தனித்த ஓர் அடியே முழுப்பொருளையும் தந்துவிட முடியாது. பாட்டில் இணைந்த இரு சொற்களே, சில விடங்களில் ஒரே சொல்கூட முழுப் பொருளையும் தந்துவிடும்.
உரைநடையில் ஒருபக்கம் எழுதுவதைப் பாட்டில் ஒரு வரியில் எழுதிக் காட்டிவிட முடியும்.
"பகுத்தாய் வார்க்குத் தொகுத்தவை விளங்கா" (பாடல் 1; வரி 10) என்னும் ஒரு வரியில் உள்ள கருத்தை உரை நடையில் எத்தனைப் பக்கம் எழுதினாலும் விளக்குவது கடினம். எனவே பாடல் விதை போன்றது; உரைநடை அதனின்று வளர்ந்து எழும் மரம் போன்றது. கருத்துகளை நன்கு மனத்தில் அடக்கிக் கொள்ளவும், மீண்டும் அதை நினைவுகூரவம், பிறரிடம் எடுத்துக் கூறவும், காலத்தால் நிலைத்து நிற்கவும், பாடல் வடிவம் துணை நிற்கிறது.
எனவே, பாடல் நிலைக்கிறது; சுவை தருகிறது; அது தொடர்பான கருத்துகள் விரிய அடித்தளமாகிறது.
முன்னோர் கருத்துகளை அடக்கிய பாடல், உரைநடை என்னும் இரண்டு எழுத்து வடிவங்களின் பாடலே மிகுதி; பல்லோராலும் படிக்கப்பெறுகிறது; காலங்காலமாய் நினைவுகூரப்பெறுகிறது; காலத்தாலும், இடத்தாலும், மக்கள் பெருக்கத்தாலும், உலகியல் நடை மாற்றங்களாலும் அழிந்து போகாமல் பாடல் தன்னை மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்துக் கொள்கிறது.
நல்ல பாடல், பொதுவான பாடலை விட இன்னும் மிகுதியான உள்ளுயிர்ப்பும் ஆற்றலும் கொண்டு விளங்குகிறது.
நூறாசிரியப் பாடல் ஒவ்வொன்றும் அந்த வகையைச் சேர்ந்தது.
படிப்பதற்கும், மனத்தில் பதிப்பதற்கும், பயில்வதற்கும் எளிமையும், இனிமையும், சுவையும், ஆழமும், அகற்சியும் கொண்டு விளங்குபவை இப் பாடல்கள்!
பேச்சு ஆரவாரமும், உரைநடை அகற்சியும், உணர்வுச் சிதர்வுகளும் பரவலாகக் குமிழியிடும் இக்காலத்திற்கு, இத்தகைய பாடல்கள், படிப்பதற்கு கடினமாகவும், விளங்கிக் கொள்வதற்குச் சற்று ஆழமாகவும் இருப்பன போல் தோன்றலாம்.
ஆனால். அறிவு வளமும் மனநலமும் கொண்ட தமிழ் இலக்கிய ஈடுபாடுடையவர்களுக்கு, இப்பாடல்கள் மிகு சுவையும் இன்பமும் பயப்பவை! அறிவுணர்வை வளர்த்தெடுப்பவை! மனத்தை மேலும் நலமடையச் செய்பவை!
நேரடியாக இதுபோலும் இலக்கிய வடிவங்களைச் சுவைக்க இயலாதவர்கள் இவற்றின் ஈடுபாடுடைய பிறர் வாயிலாக இவ்விலக்கியத்தின் சுவை நலன்களையும் கருத்து வளங்களையும் கேட்டுணர்வார்களாயின், பின்னர் அவர்களும் தாமே இவைபோலும் இலக்கியங்களைப் படிக்க அவாவி நிற்பார்கள் என்பது உண்மை.
இலக்கியங்கள் இயற்கைக் காட்சிகளைப் போன்றவை!
பொருள் நசையும் உலகியல் நாட்டமும் உடைய புல்லிய அறிவுடையவர்கள், இயற்கையின் அழகையும் அமைதியையும் உணர முடியாதது போலவே, இலக்கிய நயங்களையும் உணர்ந்து சுவைக்க இயலாது. அவர்கள் போன்றவர்களுக்கு இப் பாடல்கள் ஒரு கால் தேவை இல்லாமல் போகலாம்!
ஆனால், அத்தகையவர்களும் இப் பாடல் வரிசையுள் உள்ள ஒரு பாடலை மட்டும், பிறர் வழியாகச் சுவைத்துப் பார்ப்பார்களாயின், கட்டாயம். அவர்களையும் இப் பாடல்கள் ஈர்த்துத் தம்முள் அடக்கும் என்பதில் ஐயமில்லை.
இவ்விரண்டாம் பதிப்பை முன்னாள் தென்மொழி அமைச்சரும், உறைத்த தென்மொழித் தொண்டரும் எமக்குப் பல்லாற்றானும் துணை நின்று நலம் பயக்கும், தூய மெய்த்தமிழ் அன்பரும், ஆகிய திரு. அழ.இளமுருகன் தம் அச்சகத்திலேயே அச்சிட்டு உதவியுள்ளார்.
அவர்க்கு எம் வாழ்த்தும் நன்றியும் உரியவாகுக.
நளி, 8. திபி. 2017 (24.11.86)
இரண்டாம் பகுதிச் சிறப்பு முன்னுரை
நூறாசிரியம் - இரண்டாம்பகுதி எனும் இந்நூல் இரண்டாம் பத்துப் பாட்டுகளையும் உரைகளையும் கொண்டது.
இது, கோவை, பெருஞ்சித்திரனார் நூல் வெளியீட்டுக் குழுவினரால் வெளியிடப் பெறுகிறது.
நம் நூல்கள் காலத்தால் வெளிவர வேண்டும் என்பதும், அவற்றால் தமிழின மக்கள் பயன்பெற வேண்டும் என்பதும், நூல் வெளியிட்டுக் குழுவினரின் கொள்கை, வாணிக நோக்கமும், மிகுந்த ஊதியக் கொள்ளையடிப்பும் அவர்களின் மன விருப்பமாக இருத்தல் இயலாது. ஏனெனில், நம் நூல்கள் அவற்றிற்கு நேர்மாறான விளைவுகளையே அவர்களுக்கு உண்டாக்கித் தருவன.
எனவே, உண்மைத் தமிழ்த் தொண்டும். நேர்மையான முன்னேற்றமுமே கருதி, பெருஞ்சித்திரனார் நூல் வெளியீட்டுக் குழு, இது போலும் நூல்களை வெளியிட உறுதி கொண்டிருத்தல் வேண்டும். அவர்களின் உறுதிக்கும், துணிவிற்கும் என்றும் நம் நன்றியும் வாழ்த்தும் அவர்களுக்கு உண்டு.
அவர்கள் முயற்சி வெல்க.
தமிழினம் அவர்கள் முயற்சிக்குத் தோள்தந்து துணை நிற்குமாக!
மேழம் 19, தி.பி. 2012 (1-4-81)
நூறாசிரியத்தின் பாடல்கள் யாவும் செறிவாக அமைந்திருத்தலின் அவை தெளிவான பொருள் விளக்கத்துடன் வெளிவர வேண்டும் என்னும் நோக்கொடு ஐயா அவர்கள் தென் மொழியில் இடையிடையே வெளியிட்டு வந்தார்கள். அவ்வாறு வெளிவந்தன அறுபத்தாறு பாடல்கள் ஆகும்.
அவ்வாறு உரையுடன் வெளிவந்த அறுபத்தாறு பாடல்கள் போக ஏனைய பாடல்கள் உரையெழுதப் படாமலே இருந்தன. அம் முப்பத்து நான்கு பாடல்களுக்கும் திருக்குறள் மணி புலவர் இறைக்குருவனார் அவர்கள், ஐயா அவர்களின் நோக்கிலும் போக்கிலுமாக உரை. எழுதி நிறைவுபடுத்தியிருக்கிறார்கள். ஐயா அவர்களின் இந் நூறாசிரியப் பாக்களுக்கு அறிவியல் அறிவொடு, வாழ்வியல் நுண்மாண் நுழைபுலம் சான்ற, தமிழ்ப் புலமையிலும் வல்லாரே உரையெழுதவியலும். இத் தகுதிகளுக்குரிய புலவர் இறைக்குருவனார் இக்குறுகிய காலத்து வலிய பணியை எடுத்துக் கொண்டு, அதைச் செவ்வனே செய்துள்ளார்.
இந்நூறு பாடல்களுக்குமேல் இத்துடன் இணைந்துள்ள 24 பாடல்கள் பின்னிணைப்பாக இந்நூலிலேயே அமைந்துள்ளன. அவை காலத்தால் உரையுடன் பின்பு வெளியிடப்பெறும்.
இந்நூலை, ஐயா அவர்களின் மறைவிற்குப் பிறகு முதல் நூலாகத் 'தென்மொழி நூல் வெளியீட்டு விற்பனையகம்' வெளிக் கொணர்ந்துள்ளது.
இந்நூலைப் பதிப்பித்து வெளிக்கொணர்தற்கு இதன், வடிவமைப்பு, அச்சீடு, பிழைதிருத்தம் முதலான பல்வேறு பணிகளில் திருவாளர்கள் மா.பூங்குன்றன், பாவலர் முல்லைவாணன், கி. குணத்தொகையன், மா.பொழிலன், திருவாட்டி குணவழகி, திரு. ஈகவரசன், வேங்கடேசன், இளங்கோவன் ஆகியோர் மனம் ஒன்றி ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் கூறும் நல்லுலகம் இந்நூற்பயன் கொண்டு சிறக்கும் என்று பெரிதும் நம்புகிறோம்.
தென்மொழி நூல் வெளியீட்டகத்தினர்
ப. அருளி
ஆய்வறிஞர் /துறைத்தலைவர்
தூயதமிழ்ச் சொல்லாக்க அகரமுதலிகள் துறை
இவ் ஆசிரியப்பாத் தொகையை யாத்தளித்த ஆசிரியர் பெருந்தகையாகிய நம் பாவலரேறு ஐயா அவர்கள் இன்று நம்மிடையே இல்லை! என்னும் நெஞ்சக் குமுறலோடு இவ் அணிந்துரை ஈண்டுப் புறம்பெயர்கின்றது. தொண்டு என்பதையே வாழ்க்கைப்பாடாய்க் கொண்டுபீடு நிரம்பிய அப் பெரும்பணியில் தம்மையும் தமரையும் பின்னிப் பிணைத்திழுத்தவாறு. நடையிட்ட நம் தூய்தமிழ்ச் செம்மல் - நம்மைத் தவிர்த்து முதற்புறம் பெயர்ந்து தொண்டு மாதங்கள் (ஒன்பது திங்கள்கள்) தொலைந்தன!.....
இந்நூல் உள்ளடக்கிய பாட்டுகள் யாவும் தென்மொழியிதழ் தொடங்கப்பெற்று ( 1.8.59. திபி. 1990. நளி: 16) இடையறவுற்ற காலத்திற்குப் பிற்பாடு (15.450. திபி. 1991-மேழம்:3) யாக்கப் பெற்றனவாகும். இக்காலங்களில் அவரெழுதித் தொகுத்து - வைத்துள்ள கையால் தைத்துக் களிநிறவுரை போர்த்திய கையேடு காட்டும் உண்மையிது! முத்து முத்தாக- எழிற்பெற எழுதிச் சேர்த்து வைத்த அச் சொத்துத் திரட்சியினின்று தான்-இப்பாக்களை ஒவ்வொன்றாகத் தெரிந்தெடுத்தும் பொழிப்பும் உரைவிளக்கமும் திணை, துறை குறிப்பீடுகளும் வரைந்து தென்மொழிசுவடி: 5 ஓலை:7- இலிருந்து வெளிப்படுத்தி வந்தார். சுவடி: 26-ஓலை: 5வரை இவ்வகையிலான அறுபத்தாறு அருந்திறப்பாக்களுக்கு இந்நடைமுறை அடர்ந்து தொடர்ந்தது! (தி.பி2023. கும்பம் 1992 மார்ச்சு வரை) இவற்றின் எழுத்து வழி வெளிப்பாட்டு எழுச்சிக் காலங்களாக 1961-1962 என்னும் ஈராண்டுகளையும் குறிக்கலாம்.
இவற்றிற்கும் முன்னாண்டாகிய 1960-இல் (திபி1991-தைத் திங்களில்) வெளிப்படுத்திய பொங்கல் சிறப்பு மலரில்தான் இந்நூல் உள்ளடக்கியுள்ள பழஞ்சிறப்பு வகை நடைகொண்ட பா ஒன்று- முதன் முதலாகப் பதிவுற்றது. உலகப் பொதுவுறவு நேயங் கமழும் கருத்தடங்கிய 'கடு அணிமைத்தே' என்னுந் தலைப்பிடப் பெற்ற முதல் ஆசிரியமே- இந் நூறாசிரியத்திற்கும் முந்தி வந்தது! பொழிப்பும் இழைந்தியைந்து காட்சி தந்தது. (திருவாளர். பேரா. இலெனின் தங்கப்பா அவர்களின் ஆங்கிலப் பெயர்ப்பையும் அணைத்திருந்தது. அவை- இதில் இல!)
இம் முதலாசிரியமே இந் நூற்றாக்கத்திற்கு (நூல்+தாக்கத்திற்கு அஃதாவது நூலொன்றே இவ்வகையில் எழுத வேண்டும் என்னும் தாக்குரவிற்கு-) வழிகோலியிருக்கக் கூடும்!
“நூறாசிரியம்” - என்னும் தலைப்பிட்டுத் தென்மொழியில் அடுத்துத் தொடங்கியபோது-அப் பா வெளியீட்டு முன்னுரையில்-"புரையும் கறையும் நிறைந்த போலி இலக்கியப் படைப்பு மிகுந்த இக்காலத்து நிறையும் விரையும் கலந்த இத்தகைய நூற்கள் வாழ்க்கைக்கு ஒளியும் வழியும் கூட்டுவன என்பதைப் படிப்பார் தெள்ளிதின் உணர்வர்!" என்றவாறு ஐயா அவர்கள் குறிப்பொன்றும் சுட்டியுள்ளார். ஆற்றல் சான்ற காலத்தால் கரைந்து போகாத வல்லிய மெய்யிலக்கியமாக இதனை வெளிப்படுத்திஅதன்வழி வாழ்க்கைத் தெளிவை உண்டாக்கும் பயனை விளைவிக்க வேண்டும் என்ற கருத்துரு அவர் நெஞ்சில் முகிழ்த்து நின்ற காட்சியே-இம் மேற்குறிப்புரையிடையே மேம்பட்டுத் தோன்றுகிறது. சிறந்த இலக்கியமாக இதனை நிலைநிறுத்தவேண்டும் என்பது நம் பாவலரேற்றின் பாரிய அவா! இந்நூல் அத்தகைமையைப் பற்றி இலங்குகின்றது! நீடி நிற்பதற்குரிய பன்னூறு சிறப்புக் கூறுகள் இதனுள் பதிவெய்தியுள்ளன!
தொடக்கத்தில் நம்பா மதத்தவராகவிருந்து-பின்னர், ஓரிறை நம்பிக்கையாளராக நிலை நின்றவர்-நம் பாவலரேறு அவர்கள்! தமிழென்னும் செம்மொழியில் ஆழ அடியூன்றி ஆரமாந்தி ஆர்ந்த தெளிவேந்தி ஆய்ந்து தேர்ந்த புலந்தோய்ந்து பொலிந்து ஒளிர்ந்தவர் இவர்!
தமிழ்க்கும் இவர்க்கும் எவ்வகையில் தொடர்பு என்று. இவரே ஒரு பாட்டில் விளக்குகையில் - தமிழ்தான் என் உயிர்மலர்ச்சி - உடலம்உள்ளுணர்வு-உலகம்-கருத்தெழுச்சி-பார்வை-செவியோசை-பிறவி. முழுமுதல்தாய்-தந்தை குரு-கல்வி காட்சி - உயிர்த்துணைவி-குடும்பம்உயிரின்பம்-குழவி உறவுரிமை-சுற்றம் உயர்வாழ்க்கை-தொண்டு. எழுத்துறவு - பேச்சு-அறிவியக்கம்-மூச்சு-உயிர்நட்பு-விருந்து-வினையாடல்-நனவுதிருமறைநூல்-கனவு-மதமெய்மம்-இறைவன்-யாவும் என்று அடுக்கமாக முழக்கமிடுகையிலேயே அவ் வெளிப்பாட்டின் உச்சி முகட்டில் “தமிழே எனக்கு இறைவன்!" என்று தலைப்பிட்டுள்ள காட்சியில் இவரின் முழு வாழ்க்கைநோக்கமும் போக்கும் கூட நன்கு பதிவுற்றுள்ளமையை உணரலாகும்.
தமிழையும் தம் வாழ்வையும் வேறு வேறாகக் கருதவேயியலாதவாறாக அவ்வளவு ஒன்றிப் பிணைந்த கொள்கை வாழ்க்கையர் என்பதனைத்
தோளுக் கென்றும் தோய்வில்லை என்
தொண்டுக் கென்றும் நைவில்லை!
வாளுக் கென்றும் பழுதில்லை - என்
வாழ்வும் தமிழும் ஒன்றன்றோ?!...
(கனிச்சாறு தொகுதி : 3 பா: 130)
என்று வியங்கொள்ளுமாறு கேள்விவழி இவரே விடைய கர்ந்துள்ள நிலையிலும் தெளிவாகக் காணலாம். தம் உள்ளத்தையே "தமிழ்கமழ்
உள்ளம்” என்றவாறு குறிப்பிட்டுப் (பா:9வரி:9) பீடும் பெருமையும் கொள்ளும் பேருள்ளத்தவராகிய இவரிடம் ஈடிணையில்லாத "தன்னம்பிக்கை" என்னும் செழுஞ்செம்மார்ப்புவீறு ஓர் இயற்கைப் படிவுபோல் இயல்பாய் இழைந்திருந்ததை அணுக்கமாகத் தோய்ந்திருந்த அனைவரும் அறிகுவர்!.
தம் பாட்டில் - அதன் சூட்டில் - அது தரும் பயனில் - விளைவில் - சுவையில் - நிரம்பிய நன்னம்பிக்கை இவர்க்கு மிக்கிருந்தமையை - இவரே ஓரிடத்தில் வீறொடு கூறிய,
“திக்குழம் புருக்கித் தெறிக்கும் எரிமலைப்
என்னும் நெருப்புத் தெறிப்பு வரிகளினூடே தெளியலாம்.
யாம் எடுத்துக் கொண்ட கொள்கை எப்படிப் பரவவேண்டும் என்று விரும்புகின்றேன் தெரியுமா?!..கேளுங்கள் என்கிறார், ஒரு பாட்டினிடையே!...
“....எங்கோள்
பொறியாய் எளியாய்க் கலையாய் அனலாய்
குறிப்பெறச் சிதறுகள் புயலுருக் கொள்க!
(கனிச்சாறு : 1.125)
1959-இல் தென்மொழியிதழைத் தொடங்கியதிலிருந்து 1995குன் திங்கள் 11ஆம் நாள் காலை வரையிலான முப்பத்தாறாண்டுகள்(36) கால இடைவெளியில் நிலைகுலையாத கொள்கைச் செயற்பாட்டாளராகவும், -தமிழ்மொழி-தமிழினம்-தமிழ்நாட்டுப்போராட்டக்காரராகவும் மாறாட்டமில்லாத மாட்சிமையுடன் வாழ்ந்தியங்கிய இவ்வயப்புலியாகிய நம் ஐயாவின் வாழ்க்கை - ஒரு சான்று வாழ்க்கையாகும்!
இவரின் கொள்கை வல்லுறுதி சான்ற வாழ்க்கையிடையே வெளிப்படுத்திய பன்னூறு பாக்களில் -இவ்வயிரவுறுதி நோக்கின் போக்குகளைக் காணலாம்.
அதிலொன்று இது!
வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்!
வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்ப்பொருட்டே ஆவேன்!
தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ்மேல்தான் வீழ்வேன்!
தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்!
சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்!
போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே!
புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லாம் அதுவே:
(தென்மொழி: 1975)
1956-இன் தொடக்கத்தில் ஐயாவின் முதல்நூலாகிய “கொய்யாக்கனி’ வெளிவந்தது. அந்நூலுக்குரிய மதிப்புப் பாமாலையில் 23 அகவையே வாய்ந்திருந்த இளையராக முன்னின்ற நம் பாவலரேறு ஐயா அவர்களைக்"குள்ளம் எப்படி; அப்படியிலாப் பெருங்கொள்கையுடையார் குறைகடல் எப்படி அப்படிக் குணநிறை துரை-மாணிக்கனார்'என்றவாறு பாவேந்தரே வாழ்த்திப் போற்றியிருப்பதிலிருந்து நம் ஐயாவின் நீடிய கொள்கைத் தொடர் நடக்கை வெள்ளிடை மலையாய் விளங்கித் தோன்றி யொளிர் கின்றமையை விளங்கிக் கொள்ளலாகும்!
ஆற்றொழுக்கு - அரிமா நோக்கம் - தவளைப் பாய்த்து - அன்ன முத்தகைத் திறஞ்சான்ற நூற்பாக்களையும் விஞ்சுகின்ற அளவில் - நுண்மாண்துழைபுலங் கொண்டு உத்திகளோடு இவர் வித்தியுள்ள பன்னூறு பாவித்துக்கள், நிகழ்கால - எதிர்காலத் தமிழினம் மலர்ச்சியும் புலர்ச்சியும் மீட்சியும் ஆட்சியும் கொள்ளுதற்கென உட்கொள்ளுவதற்குரிய நல்விளைவுகளை ஆக்கவல்லன.
பாடு பொருளுக்கேற்ப யாப்பு வகையைத் தெரிந்தெடுத்துக் கொள்ளுவதிலும் - கருத்தாழம் நிரம்பிய தேர்ந்த சொற்களை உரிய இடத்திலிட்டு ஒளிரச் செய்வதிலும் படித்தவுடன் அறிவுத்தெளிவும் புலப்பொலிவும் கொள்ளுகின்றபடியான உத்திகளைக் கையாளுவதிலும் பாவலரேறு அவர்கள் வல்லிய திறப்பெருமகனார் ஆவார். எண்பொருள வாகச்செலச் சொல்லும் இந்நுண்ணுட்பத் திறப்பயிற்சியில் கரை கண்டவர் என்பதைத் தமிழ்ச்சிட்டு இதழில் குழந்தைகளுக்கும் சிறுவர் சிறுமியர்க்கும் -பிறவற்றில் இளந்தையர்க்கும்- கற்றவர்க்கும் ஆய்வு முற்றியர்க்கும் - புலவர்க்குமாகப் பலபடிநிலைத் தகைமைகளில் யாத்துப் புறம் விடுத்துள்ள ஆக்கங்களால் அறியலாகும். அனைத்து ஆக்கங்களும் வெளிப்பாடுகளாக அமைந்திருக்குமேயல்லாமல் - வெளிப்படுத்தங்களாக அமைந்திரா இயல் பான சீரொழுங்கோட்டம் - அது அதற்குமுரிய பாங்கில் அமைந்தோடும்!
அகவலிசை இசைந்த ஆசிரியப் பாவகையை இந்நூலுக்கான இவர் கருதித் தேர்ந்தெடுத்தமைக்குரிய முதற்காரணம் துண்மையும் நொசிவும் துணங்கும்படத் திண்ணிதாகவும் தெள்ளிதாகவும் உரிய கருத்தகலத்திற்குத் தகத் தடங்கலற்ற முறையில் இதில் யாத்தளிக்க வியலும் என்னும் வசதிப்பாடே!
கருத்தாழம் நிரம்பிய இயற்கை வேர்ப்பொருள் செறிந்த நுண்ணிய பழந்திறஞ்சான்ற வளச் சொற்களை இவ்வகை யாப்பில் எளிதே இயைத்து நிலைநிறுத்திப் பயன் கொழிக்கச் செய்யலாம்! உயர்ந்த பழமைச் சொத்துகள் பயன்படுத்தப்பெறாததாலேயே பாழாகிப்போன வரலாறு தெளிந்த இவரின் நெஞ்சம் நம் மொழி வளங்காக்கவும் - முதுசொம்மை (பிதிரார்ஜிதத்தை) நம்மவர்க்கு உரிமையாக்கவும் எண்ணிய நல்லுணர்வின் செயற்பாடும் ஆகும், இது இருப்பவற்றையேனும் இழவாதிருக்க இவ்வுள்ளுணர்வு இவரிடம் எழுச்சி கொண்டிருந்தது உரிமை மறப்பை உடம்பாடாகக் கொண்டு உளுத்திழிந்து கொண்டிருக்கும் நம் தமிழர்களுக்கு உள்வலிவேற்றும் திடம்பாட்டு முயற்சியிது ஒருவகையில், இதுவும் ஓர் உரிமை மீட்பே “மறைந்து வரும் தமிழ்ச் சொற்கள்” என்னும் தலைப்பில் நீண்ட தொடர்களாகத் தொடருமாறு வழக்கமழிந்து வந்த வட்டார வழக்குச் சொற்களைத் தென்மொழியிதழில் வரிசைபடத் தொகுத்து வெளிப்படுத்தி வந்ததும் இவ்வகை முயற்சியிலொன்றே
கொய்யாக்கனி-மகள் புகு வஞ்சி. எண் சுவை எண்பது ஐயை முதலியன போன்ற பல்வேறு வாழ்வியல் உலகியல் இலக்கிய அமைப்புக் கருக்களையே - இத்தொகைநூலும் பெரும்பான்மையாகக் கொண்டிருக் கின்றதாகலின் இதனை ஐயா அவர்களின் அழுந்திய கொள்கைகளின் வெளிப்பாட்டுப் படையலிடாகக் கொள்ள வேண்டியதில்லை! சில்லிடங்களில் முழுத்தும் (முழுவதும்) வாழ்க்கைத் துய்ப்புகளையே பேசுவதையும் - சில்லிடங்களில் இறையியல் நம்பிக்கை யேற்படுத்த முயல்வதையும் சில்லிடங்களில் மெய்மவியல் சிந்தனை கொளுத்த முனைவதையும் சில்லிடங்களில் உடன் உறையும் போலியர்க்கு இரங்கியும் சினந்தும் வெறுத்தும் நோதற் கூறுதலையும் காண்கின்ற நிலைகளால் இம்மேற்குறித்த உணர்வை அனைவரும் உணர்ந்து கொள்ள நேரலாகும்.
ஆயினும் அவ்விடங்களில் மிகப் பெரும்பான்மையின, இலக்கியங்கள் என்ற பெயரில் இக்கால் வெளிப்பட்டாரவாரிக்கும் பொக்காந்தன்மை யுடைமைகளைப் பெற்றிராமல் - துய்ப்புணர்வுகளுக்குத் தீனியருத்தும்பல்வேறு நல்லிலக்கிய நயச்செறிவுகளால் மிளிருகின்ற மெய்ம்மைகள் நல்லறிவினார் நயந்து பாராட்டும்படியே நடையிடுகின்றன. இளம்பரு வத்திலேயே கணவனையிழந்த பெண்ணுக்கு மீண்டும் மணம் புணர்த்துமாறு அறிவுறுத்தலும் போட்டு: 13) கணவன் விருப்பத்திற்கேற்ப தன் விருப்பத்தினை விட்டுக் கொடுக்க மனைவி இசைந்தியங்க முற்படுகையில்கணவனானவன் அம் மனைவி விருப்பத்திற்கிசைய இயங்கும் இல்லறக் காட்சிகளை வாழ்வியல் செழிப்புற வழங்குதலும் (பாட்டு : 11) பல்வேறு கடைப்பிடிகளுக்கான நேரிய தூண்டல்களையும் இத் தொகைநூல் தொடையலிட்டிருக்கின்றது!
பாவேந்தர் - பாவாணர் - தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா காமராசர்-இந்தியெதிர்ப்புப்போரில் உயிர்நீத்த-உயிர்துறந்தஈகச் செம்மல்களாகிய விருகாம்பாக்கத்து அரங்கநாதன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து அரசேந்திரன் இளங்கோவன் செஞ்சிக் கோட்டத்துத் தேவனூர்ச் செம்மல் சிவலிங்கம் முதலிய புகழுக்குரியோர்களை ஏத்தி நிலை நிறுத்திப் போற்றி நினைவுகூரும் மறத்திற்கியலா அம்மறவர்களுக்கான மாட்சிப் பாடல்கள் தொடுவான் தொட்டொளிரும் காலத்தால் தேய்தலில்லா நடுகற்களாகவே நாட்டப் பெற்றுள்ளன. மிகப்பல பாடல்களில் அன்றைய வரலாற்று நிகழ்ச்சிகள் தெருள்செறியப் பதிவாக்கம் பெற்றுள்ளன.
பொருட்செறிவும் காலப் பழமையும் வாய்ந்த பன்னூற்றுக் கணக்கிலடங்கிய அழகிய தீந்தமிழ்ச் சொற்களையும் - அவற்றின் பொருள்களையும் அனைவரும் பொதுப்பட விளங்கிக்கொள்ளுதல் மிக அரிதாதலின் இதுகாறும் வெளிப்பட்ட அறுபத்தாறு பாடல்களுக்கும் ஐயா அவர்களே சிறக்க உரை வரைந்துள்ளார். அவை எதிர்காலத்தில் இன்னும் விளக்கங்கள் பெற்றுச் சிறப்பேறும்! உரையிலையேல் இம்முயற்சி பெரும்பயன் தராது போம் என்ற நிலையுண்மை யுணர்ந்தே இவ்வுடன் முயற்சியையும் உரிய வகையில் உரம் பெறுமாறு பிணைந்துள்ளார். அவரே -
குழந்தைகளுக்கெனப் பாடியவிடத்து இவ்வுண்மையைக்
“கரையில்லாத ஏரித் தண்ணீர்
கழனிக் கென்னும் உதவாது
உரையில்லாத செய்யுள் நூலோ
- என்றவாறு கருத்துரைப்பதினின்றும் கண்டுணரலாம்
பாடல்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அருஞ்சொற்கள் ஊடாடுகின்றன! அவை மீட்சிப் பேறு எய்துதலோடு வழிவழி வழங்க இந்நூல் வழி வழிகாலும் வாய்ந்துள்ளது. இவற்றொடு புத்தம் புதிய அழகிய சொல்லாக்கங்களையும் ஐயா அவர்கள் துணிந்தியைத்துள்ளார். பழையன பேணும் உரிமைக் காப்பு வயாவும், புதியன தேறிக்கூறி வீறும் புதுமைக் கோப்பு அவாவும் இவர்க்குள்ள சிறப்புப் பண்புகள். அவற்றின் அழகசைவுகளை நூலுள் பரக்கக் காணலாம்.
புதுச் சொல்லாக்கங்கள் சில:
1. விழியிலி - குருடன்
2. பொண்மை = பொய்மை
3. போன்மை = போலிமை
4. பின்னகம் = தலைமயிர்ப் பின்னல் (பாட்டு 10: வரி: 10)
5. பிஞ்சுமை = பிஞ்சாந்தன்மை (பாட்டு 11:வரி: 9, உரை)
6. கவற்சி = (கவல்+சி) கவற்சி =கவலை (பாட்டு: 12. உரை)
7. தண்ணுதல் = குளிர்ச்சியுறுதல்(பாட்டு: 16:6)
8. திண்ணுதல் = திணிதல்; திண்மையுடையதாதல் (பாட்டு 16:6)
தண்ணினுந் தண்ணுக; மண்ணினுந் திண்ணுக” (பாட்டு 16:6)
9. கோணூல் = (கோள்நூல்) ; கோள்பற்றிய இயல் (பாட்டு 16:உரை)
10. திண்பாடு = திணிவுறுகை; செறிவுறுதல்
“மண்போலும் திண்பாடும் “ (பாட்டு 16:உரை)
11. விழைபாடு = விருப்பப்பேறு; விருப்பம் (பாட்டு 24:உரை)
12. கள்ளிக்காய் = மிளகாய் (பாட்டு 29:2)
13. ஈனாக்கன்று: செய்கன்று. ஈன்றகன்று இறந்த விடத்து வைக்கோல் முதலிய செய்பொருள்களைக் கொண்டு செய்த பொய்க்கன்று. (பாட்டு 30:2)
14. வினைந்து = வினையைச் செய்து
“வாழில் வினைந்து“ (பாட்டு 33:2)
காட்சியழகும் ஆட்சியழகும்:சில இடங்கள்
(உரை: ஊன்றுகோல் இல்லாத குருடன் செல்வழியறியாமல் தடுமாறித் தவித்தல் போல.)
(ஆட்டுக்குட்டிகள் பாலருந்தும் காட்சி)
உரை: இளமையான முன்னங்கால்களை நிலத்தே படிதலுற ஊன்றி, பின் கால்களால் எவ்வுதல் செய்து, தம் புனிற்றிளந் தலைகளான் செய்கின்ற முட்டுதலுக்கு)
3. “............................ முகில்திரி விசும்பிற்
கயிறாடு தொம்பர்க் கைக்கழி யன்ன
“உரை: உள்ளே கொண்ட பகை நாளுக்குநாள் ஊறிப் புளிப்பேறும் தன்மைகொண்ட நெஞ்சினோர்.”
5. “கவண் முகத் துருவிய சிறுகல் போல
விசைப்பே அளவிடைப் பொழுதே” (பா:31:வரி:2-3)
(உரை கல்லெறி கருவியின் முனையினின்று உருவிப்போகும் சிறு கல்லைப் போலும் வாழ்க்கையில் விசைப்பு-ஓர் அளவுபட்ட சிறுபொழுதே...)
7. “மஞ்சமை குன்றத்து மணிவாய் குடைந்து
துமி துரி ஈட்டிய மூரித் தேறல்
தமிழ்பெறக் கெழிஇய தகையோர் தொடர்போல்
முற்ற முற்றச் சுவை மூவாதே” (பா:40:வரி:59)
8, எஞ்சிய தின்னவர்க் கிவ்வள வெறுமுன்
துஞ்சிய ரெவருந் தோன்றிலா தாரே (பா:3:வரி:9-10)
9. விழைவே வேண்டலின் நனிகுறை வினதே” (பா9:வரி:)
இலக்கிய இலக்கணப் பயிற்சியின் தோய்வையுணர்த்தும் மிகப் பல்விடங்கள் இந்நூலில் ஒளிருகின்றன: (அலமரல் - துயரச் சுழற்சி. (ஒ.நோ. ‘அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி” (தொல்காப் பியம்.உரி:8:13) பாவலரேறு ஐயா அவர்களின் உரையுரைப்பின் மிகப் பல்லிடங்களில் கருத்துத் துலக்கத்திற்கான விரிப்புக்குரிய இடங்களில் - உரிய எல்லையிகவாத தெள்ளிமைசான்ற உரைப்புச் சுடருகின்றது! ('வானோக்கி எண்கர் வாளி எப்பின் அன்ன” - பாட்டு : 2 : வரி : 1213) (வானோக்கி = போக்கிற்குத் தடுப்பு அற்ற இப் பரந்து அகன்ற வானத்தில்-) மிக நுண்ணிய வெளிப்பாடு ஒன்றையும் இவ்விடத்திற் கருதலாம். பிற்பகுதிப் பாட்டொன்றில் கடற்கரை மணலைக் குறிக்க வருமிடத்தில்,"கரைசிறுமணல்” என்கின்றார். (ஆற்று மணலினும் கடல் மணல் சிறியதாகையால். மிகப் பல்லிடங்களில் உவமைத் திறத்தின் கொள்ளையழகுகளைக் கண்டுவக்கலாம்! ('நுங்கேய் கிளிஞ்சில்') (பிற்பகுதிப்பாட்டு (உரை துங்கு போலும் கிளிஞ்சில்)
இன்னவாறு பன்னூறு சிறப்புக் கூறுகளைச் செறிவுற்றாரும் இத் தொகைநூல்- தமிழிலக்கியவுலகுக்குப் பெருந்தொகை வரவென்பதை வருங்காலம் வல்லிதாயுணரும் அக்காலம்
“நெடுந்தொலை விலையே, கடுஅணி மைத்தே”
(தென்மொழி: இயல்! இசை 1-12)
அறம் பெருகும், தமிழ் படித்தால்!
அகத்தில் ஒளி பெருகும்!
திறம் பெருகும் உரம் பெருகும்!
தீமைக் கெதிர் நிற்கும்
மறம் பெருகும் ஆண்மை வரும்!
மருள் விலகிப் போகும்!
புறம் பெயரும் பொய்மை யெலாம்
புதுமை பெறும் வாழ்வே!
( பள்ளிப்பறவைகள்: பக்கம் 129 )
( 12-3-96 )
முன் புதையுண்ட முத்தமிழ்ச் சிறப்பினை மன்பதைக்கு உணர்த்து தலையே தம் வாழ்க்கை நோக்கமாகக் கொண்டு ஒவாது உஞற்றிய பாவலரேறு அவர்களின் செறிவுறு பாக்களையும் விரிவுறு விளக்கங்களையுந் தாங்கி வீறார்ந்து விளங்குவது நூறாசிரியம் என்னும் இந்நூல்:
தமிழின் விழுமிய இலக்கிய ஆக்கங்களான கழக நூல்களில் ஆய்வும் தோய்வும் உடைய அறிஞர் பெருமக்களும், தமிழ் உணர்வாளர்களும் இந்நூலைப் படித்த அளவில் விம்மிதமெய்திச் செம்மாப்புறுதல் உறுதி.
பாவலரேறு அவர்களின் அரிய படைப்புகளான இந்நூல் அகவல் களெல்லாம், இடைக்காலத்தே இறுக்கந் தளர்ந்து போன் யாப்பமைதிக்கும், பொக்காய்ப் போன சொல்லாட்சிக்கும், பொய்க்கோலம் பூண்ட புனைந்துரைகளுக்கும் மாறாக உணர்வழுத்தத்திற்கேற்ற செவ்விய யாப்பமைதியும், செஞ்சொற் செறிவும், நயத்தக்க நல்லணியும் கொண்டு, கற்பாரை ஈர்க்குந் திறத்தில் இணையற்று விளங்குகின்றன.
கழக இலக்கியங்களின் சிறப்பு, மூலநூல் ஆசிரியர்களான பாவலர்களின் திறத்திற்கு எவ்வாற்றானும் குறையாத நிலையிலும், ஒரோவழி அவர்களையும் விஞ்சும் வகையிலும் அஃகியகன்ற நுண்ணிய உரைகளை எழுதிய உரையாசிரியர் பெருமக்களாலும் உயர்ந்துநிற்கின்றது.
அவ்வகையில் இந்நூறாசிரியம் பாவலரேறு அவர்களாலேயே பொழிப்பும் விரிப்புமான நிலையில் தெளிவான விளக்கம் எழுதப்பெற்ற இரட்டைச் சிறப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வுரையைப் பயில்வோர் இப்பாடல்கள் ஒரேயொரு சொல்லையே அசையையோ கூடவறிதே தாங்கி நிற்பனவல்ல என்பதை உணரலாம். ஒவ்வொரு சொல்லும் எத்துணை ஆழமான, பொருளுணர்ச்சியோடு திறம்படக் கையாளப் பெற்றிருக்கின்றன என்பதை
“மடிப்பிள்ளை குழவியும் இடைப்பிள்ளை பிள்ளையும்
நடைப்பிள்ளை சேயுமாம்”
என்பது போலும் விளக்கங்களால் அறியலாம். அவ்வாறே சில சொற்களின் தோற்றம் பற்றியும் வளர்ச்சியும் திரிபுநிலைகளும் பற்றியும் விரிவான விளக்கங்கள் இவ்வுரையில் ஆங்காங்கு இடம்பெற்றுள்ளன.
புதுச்சொற்புனைவுகளும் புத்தம்புது உவமைகளும் இந்நூலில் ஆங்காங்குப் பொன்னும் மணியும்போல் மின்னி மிளிர்கின்றன
பழந்தமிழ் இலக்கியங்களில் சிறந்து நிற்கும் உள்ளுறையும் இறைச்சியும் என்னும் புனைவுகள் இந்நூற் பாடல்களில் எத்துணை இயைபுற யாக்கப்பெற்றிருக்கின்றன என்பதற்கு இதன்கன் உள்ள ஊரே பெடையடை” எனத் தொடங்கும் அகப்பாடலைச் சான்றாகக் கொள்ளலாம்.
உன்மத்தம் (ஊமத்தம்) பூவைக் குறிக்கக் கையாளும் ஊற்றி” பாவலரேற்றின் உவமைத் திறத்திற்கும் புதுச்சொற் புணைவிற்கும் ஏற்றதொரு சான்றாம். ஊற்றியாவது Funnal என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம்.
கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே, நூறாசிரியம் என்னும் இதன் பெயருக்கு ஏற்ப நூறு அகவற்பாக்களால் இந்நூல் எழுத்து வடிவில் நிறைவு பெற்றதேனும், அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து உரை எழுதி ஐயா அவர்கள் தொடர்ந்து தென்மொழியில் வெளியிட்டு வந்தார்கள்.
இடையிடையே பாவேந்தர், அண்ணா, பெரியார் முதலானோர் மறைவு குறித்துப் பாவலரேறு எழுதிய கையறுநிலைப் பாக்கள் இந்நூறாசிய வரிசையில் இடம்பெற்றமையானும், இந்தி வல்லாண்மையை எதிர்த்துத் தமிழ்நாடு கொந்தளித் தெழுந்தகாலை அவ்வெழுச்சிக்கு அடிப்படையான உணர்வைத் தென்மொழி வழியாகத் தெள்ளிதிற் பரப்பிவந்த பாவலரேறு ‘தமிழ்நானூறு’ என்னும் நூலைப் புனையத் திட்டமிட்டு எழுதி வெளியிட்டு வந்த பாடல்கள் தொடரவியலாது விடுபட்டமையால் அப்பாடல்கள் பன்னிரண்டும் இதன்கண் சேர்க்கப் பெற்றமையானும் நூறாசிரியம் அதன் அளவீட்டைக் கடந்து நீண்டுகொண்டிருந்தது. நூற்றைத் தாண்டி இருபத்து நான்கு பாடல்கள் வளர்ந்துநின்றன.
அறுபத்தாறாம் பாடலை உரையுடன் தென்மொழியில் வெளியிட்ட போது அதுவே தாம் உரையொழுதி வெளியிடும் இறுதிப் பாடல் என்பதைப் பாவலரேறு எண்ணியிருக்க முடியாது!
நூறாசிரியத்தில் இருபத்து நான்கு பாடல்கள் மிகுந்துநிற்ப, அறுபத்தாறாம் பாடலுக்கு உரையெழுதி வெளியிட்டதோடு பாவலரேறு அவர்கள் நெடுந்துயில் கொண்டுவிட்ட நிலையில், அவர்தம் பாவன்மைக்கும் உரைத்திறத்திற்கும் ஒருருவிலான எடுத்துக்காட்டாக விளங்கும் இந்நூறாசிரியத்தை வெளியிட முனைந்து முப்பத்து நான்கு பாடல்களுக்கு ஐயா அவர்களின் போக்கிலேயே உரைகண்டு நூறாசிரியத்தை அதன் பெயருக்கேற்ப நிறைவு செய்து வெளியிடுகின்றோம்.
எஞ்சிநிற்கும் இருபத்து நான்கு பாடல்களும் இந்நூலின் கண் பின்னிணைப்பாக இடம்பெற்றுள்ளன. அப்பாடல்களைப் படிப்போர் உரையின் இன்றியமையாமையையும் உரைகாண்பதிலுள்ள சிக்கல்களையும் உணரக்கூடும்.
நூறாசிரியம் தொடர்பாக ஐயாஅவர்கள் எழுதிவைத்திருந்த சில குறிப்புகளும் இந்நூலின் இறுதியில் இடம்பெற்றுள்ளன.இலக்கியங்களை அகப்பொருள் புறப்பொருள் என்று இருவகை யாகவும், பல்வேறு திணைகளாகளாகவும் பலப்பல துறைகளாகவும் பாகுபடுத்தமைத்த பழந்தமிழ் மரபு, கழகக் காலத்தோடு ஒருவாறு விடுபட்டுப் போயிற்று.ஆயினும் முன்னை மரபை யொட்டி இந்நூறாசிரியப் பாடல்கள் திணை துறைப் பாகுபாட்டு விளக்கங்களைத் தாங்கி நிற்கின்றன. சில பாடல்கள் புதிய துறை வகுக்கப்பட வேண்டியனவாய் உள்ளன.
தமிழிலக்கிய வரலாற்றில் தனிச் சிறப்பொடு தடம்பதித்து நிற்கும் இவ்வரிய வாழ்வியல் இலக்கியத்தை அன்பர்கள் ஊன்றிப்பயின்று பயன்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
- இறை
எண் | தலைப்பு |
பக்கஎண் |
1. | 1 |
2. | 7 |
3. | 10 |
4. | 12 |
5. | 18 |
6. | 22 |
7. | 27 |
8. | 33 |
9. | 39 |
10. | 44 |
11. | 49 |
12. | 54 |
13. | 59 |
14. | 65 |
15. | 72 |
16. | 80 |
17. | 85 |
18. | 89 |
19. | 92 |
20. | 97 |
21. | 99 |
22. | 104 |
23. | 108 |
24. | 113 |
25. | 122 |
26. | 125 |
27. | 130 |
28. | 133 |
29. | 139 |
30. | 143 |
31. | 146 |
32. | 156 |
33. | 161 |
34. | 164 |
35. | 167 |
36. | 170 |
37. | 174 |
38. | 176 |
39. | 185 |
40. | 189 |
41. | 193 |
42. | 198 |
43. | 201 |
44. | 204 |
45. | 207 |
46. | 210 |
47. | 217 |
48. | 219 |
49. | 222 |
50. | 226 |
51. | 230 |
52. | 245 |
53. | 249 |
54. | 252 |
55. | 256 |
56. | 259 |
57. | 265 |
58. | 263 |
59. | 272 |
60. | 275 |
61. | 279 |
62. | 282 |
63. | 285 |
64. | 289 |
65. | 292 |
66. | 295 |
67. | 304 |
68. | 308 |
69. | 312 |
70. | 317 |
71. | 320 |
72. | 323 |
73. | 326 |
74. | 329 |
75. | 331 |
76. | 333 |
77. | 337 |
78. | 340 |
79. | 342 |
80. | 344 |
81. | 347 |
82. | 350 |
83. | 353 |
84. | 356 |
85. | 359 |
86. | 364 |
87. | 367 |
88. | 370 |
89. | 372 |
90. | 377 |
91. | 380 |
92. | 383 |
93. | 387 |
94. | 390 |
95. | 393 |
96. | 396 |
97. | 399 |
98. | 402 |
99. | 410 |
100. | 413 |
| 418-430 |
| 431 |
முதற் குறிப்பு | பாடப் பெற்ற நாள் | பாட்டு எண் | பக்க எண் |
---|---|---|---|
அங்கா வெனுமங் | 23 | 108 | |
அடைவா யெஃகம் | 29-09-61 | 80 | 340 |
அண்ணாமலைசெய் | 55 | 256 | |
அம்மவாழி தோழி | 11-05-62 | 46 | 210 |
அறிவெனும் விரிசிற | 29-10-62 | 99 | 410 |
அன்பெனப் புகழ்கோ | 05-11-62 | 11 | 49 |
அன்னையும் மறந்தான் | 07-11-62 | 63 | 285 |
ஆயுங் காலை | 15-11-62 | 30 | 143 |
ஆற்றிலம் என்றே | 53 | 249 | |
இதுசொல் விழவே | 16-11-62 | 20 | 97 |
இவளே | 61 | 279 | |
இவனியா -... தாறலை | 57 | 263 | |
இவனியா... பேராய | 32 | 156 | |
இற்றைப் புரிந்தவர் | 93 | 367 | |
உயிரின் மாட்டே | 21-11-62 | 100 | 413 |
உலகத் தீரே | 20-11-62 | 02 | 7 |
உவர்துளி குறையினும் | 09-11-62 | 96 | 396 |
உள்ளுவன் கொல்லோ | |||
உறக்கத் தெறுந்தழீ | 41 | 193 | |
உற்றே மெனநீ | 97 | 399 | |
ஊருண் கூவல் | 73 | 326 | |
ஊரே பெடையடை | 05 | 18 | |
எக்கர் இடுமண | 16-11-62 | 67 | 304 |
எந்தையு மன்னையும் | 19-5-62 | 37 | 174 |
எம்மையுங் காவார் | 62 | 282 | |
எவர்கொல் அவர்க்கே | 56 | 259 | |
எவர்கொல் துணையே | 12 | 54 | |
எவன்கொல் அறியும் | 05-11-62 | 31 | 146 |
எழுந்தீ நாற்றம் | 72 | 323 | |
எள்ளாடு செக்கர் | 44 | 204 | |
ஐயிரு திங்கள் | 83 | 353 | |
ஒன்றிறை உலகம் | 21-11-62 | 01 | 1 |
கவுள் நனை வேழம் | 54 | 252 | |
காசிற் கில்லை | 07-06-61 | 65 | 292 |
காமரா சென்னும் | 85 | 359 | |
குடுமித் தேங்காய் | 40 | 189 | |
குவடேய்ங் கூரை | 81 | 347 | |
குன்றம் பொடித்து | 03 | 10 | |
குன்றுசீர் வைத்த | 07-01-61 | 70 | 317 |
முதற் குறிப்பு | பாடப் பெற்ற நாள் | பாட்டு எண் | பக்க எண் |
---|---|---|---|
கூரிள எயிற்று | 31-1-62 | 75 | 331 |
கூழினும் புளித்தோ | 29 | 139 | |
கைம்பாற் கள்ளி | 26-9-61 | 25 | 122 |
கையணையாக | 48 | 219 | |
சாய்தலு மில்லேம் | 30-1-62 | 69 | 312 |
செடிகொடி மரனுஞ் | 91 | 380 | |
செம்பொன் மாணிழை | 6-11-62 | 28 | 133 |
செவிக்கின் னாத | 79 | 342 | |
சென்றுநொந் தார்வழி | 76 | 333 | |
சொல்லொடு புனையின் | 15-6-62 | 34 | 164 |
தணந்த சுறவத்து | 7-11-62 | 13 | 59 |
திமிர்தல் தவிர்ந்தன | 29-10-62 | 17 | 85 |
தும்பை சூடிலர் | 51 | 230 | |
தேறுக நெஞ்சம் | 52 | 245 | |
தோட்குரி யோயே | 38 | 170 | |
நகையும் வாரா | 7-11-61 | 18 | 89 |
நல்லியல் மாந்தர் | 5-9-62 | 95 | 393 |
நாடுபல வாக | 21-11-62 | 07 | 27 |
நானுகம் பெரிதே | 29-10-62 | 68 | 308 |
நிலமுது கொருபுறம் | 27 | 130 | |
நுரைதிரை சாய்த்த | 7-9-61 | 74 | 329 |
நூலோர் அழுந்திய | 23-2-62 | 87 | 387 |
நெஞ்சுநில னாக | 16-11-62 | 15 | 72 |
நெடுங்கல் அடுக்கத்து | |||
நெடுந்தொலை விலையே | 92 | 183 | |
பரல்பரந்து அரலை வாரி | 04 | 12 | |
பல்கலை தெரித்த | 6-10-61 | 78 | 340 |
பாடுக புலவீர் | 58 | 266 | |
பிரிவுறு மகனே | 1-2-62 | 38 | 176 |
பிறர்மனந் தூக்கி | 7-9-61 | 82 | 350 |
புரைமிக வுரைவாய் | 5-11-62 | 84 | 356 |
புலம்புகோ யானே | 3-11-62 | 94 | 390 |
புனையினும் பூட்டு | 60 | 275 | |
பெறல்தந் தாளே | 30-10-62 | 35 | 167 |
மடவை நடுமுள் | 22-10-62 | 98 | 402 |
மருத்து வோனே | 26-9-61 | 64 | 287 |
மருப்பு நீண்டு | 27-9-61 | 77 | 337 |
மருளாய் வாழி | 90 | 380 | |
மலர்மிசை நாற்றம் | 26-9-61 | 22 | 104 |
மலைமென் நெஞ்சே | 59 | 272 | |
மழையினும் இருளினும் | 8-11-62 | 19 | 92 |
மறவி வாழியோ | 21 | 99 | |
மானமும் உயிரும் | 5-12-91 | 66 | 295 |
முதுசெம் பரத்தை | 88 | 370 |
முதற் குறிப்பு | பாடப் பெற்ற நாள் | பாட்டு எண் | பக்க எண் |
---|---|---|---|
முரசுகடிப் புண்ட | 24 | 133 | |
முற்றச் சிலம்பியின் | 23-2-62 | 26 | 125 |
முன்றில் வேங்கை | 21-5-62 | 47 | 217 |
மெய்யெனக் கொள்ளினுங் | 14-11-62 | 43 | 201 |
யாங்கியா னாற்றுவன் | 28-9-61 | 10 | 44 |
யாங்கோய் வாளோ | 33 | 161 | |
யாண்டவ னாயினும் | 29-10-62 | 71 | 300 |
யாண்டுசில வாக | 45 | 207 | |
யாவர்ப் பாடுகங் | 27-9-61 | 50 | 226 |
வடுவின் றெடுத்த | 3-2-62 | 39 | 185 |
வலிதே காலம் | 08 | 33 | |
வளிநிலந் துறந்த | 86 | 364 | |
வற்றக் காய்ந்த | 42 | 198 | |
வானத் தாயினும் | 21-11-62 | 89 | 372 |
வானினு முயர்க | 16 | 80 | |
விரைவா கின்றே | 14 | 56 | |
விழவிற் றப்பிய | 06 | 22 | |
விழைவே வேண்டலின் | 6-10-61 | 09 | 39 |
அளியல் யாமே | |||
ஆலங் கொழுவிலை | 21-5-62 | ||
உளப்போங் கல்லை | |||
உள்ளுவன் கொல்லோ | 20-11-62 | ||
ஊன்றிய வித்தே | 2-2-62 | ||
ஏவலன் மகனே | 7-11-62 | ||
ஒருபுடை அவலம் | |||
கேளே வேண்டெம் | 28-9-61 | ||
கேண்கொணர்ந் தன்பின் | |||
தீதலர் தெரித்த | 26-9-61 | ||
தேமாங் கொழுந்தை | 3-2-62 | ||
தொக்கின் தொகாது | |||
நெகிழ்ந்த கைதொழ | 16-11-62 | ||
நெஞ்சுநலம் அழுகிய | |||
நெடுங்கல் அடுக்கத்து | 2-2-62 | ||
பசுந்தழை பொடிந்து | 5-9-61 | ||
பொறி மயங்கி அறிவயர | 29-10-62 | ||
மஞ்சள் மசித்து | 2-2-62 | ||
மனையறம் புரந்த | 31-1-62 | ||
மின்னகம் புலந்தர | |||
முகில்தொடு தெங்கின் | 23-2-62 | ||
முப்புடை முந்நீர் | 20-2-62 | ||
மெய்யறி நெஞ்சே | |||
யாக்கைக் குளிரிகு |