உள்ளடக்கத்துக்குச் செல்

அட்டவணை:அப்பாத்துரையம் 14.pdf

Wikidata items
Transclusion_Status_Detection_Tool
விக்கிமூலம் இலிருந்து
தலைப்புஅப்பாத்துரையம் 14
ஆசிரியர்கா. அப்பாதுரை
தொகுப்பாளர்கல்பனா சேக்கிழார்
பதிப்பகம்தமிழ்மண் பதிப்பகம், கோ. இளவழகன்
முகவரிசென்னை
ஆண்டுமுதற்பதிப்பு, 2017
மூலவடிவம்pdf
மெய்ப்புநிலை Add an OCR text layer
தொகுதிகள்1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47

நூற்பக்கங்கள்




8

அப்பாத்துரையம் - 14

கி.மு.4000ஆண்டுக்கு முன்னிருந்தே தென்னகம் அதாவது பண்டைத் தமிழகம் மாண்ட நாகரிக உலக மக்களான எகிப்தியர், ஏலமியர், சுமேரியர், பாலஸ்தீனர், பினீசியர், கிரேக்கர், உரோமர் ஆகியவர்களுடனும், அராபியருடனும், வெனீசியருடனும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இடையறா வாணிகத் தொடர்பு கொண்டிருந்தது. அவ் வாணிகத்தில் தமிழகச் சரக்குகள், சிறப்பாகக் கொங்குத் தமிழகச் சரக்குகளே பெரும் பங்கு கொண்டிருந்தன. உலக மொழிகளிலெல்லாம் அச்சரக்குகளின் பெயர்கள் தமிழ்ச் சொற்களின் திரிபாகவே ன்றளவும் வழங்கி வந்துள்ளன. இது அவ் வாணிக வளத்தின் தான்மைக்கும் உலகளாவிய விரிவகற்சிக்கும், தமிழகமும் கொங்குத்தமிழகமும் அதில் கொண்டிருந்த உயிர்ப் பங்கிற்கும் சான்றுகள் ஆகும். அக்கால உலக வாணிகச் சரக்குகளான தேக்கு (ஆங்கிலம்: teak) அகில் (இலத்தீனம்: Aquila, அகில், கழுகு; ஆங்கிலம்: Eagle, கழுகு, eaglewood, அகில்) சந்தனம் (ஆங்கிலம்: Sandalwood), யானைத் தந்தம் (தமிழ்: இபம்-யானை; ஆங்கிலம் el- eph-ant யானை; iv-Ory தந்தம்), சர்க்கரை (பண்டைத் தமிழ்: சக்கரை ஆங்கிலம்: Sugar; பிரஞ்சு: Sucre), மயில்தோகை. (ஏபிரேயம்: tukhim), குரங்குகள் (ஏபிரேயம்: Kapi). அரிசி (கிரேக்கம்: Oriza; ஆங்கிலம்: rice), மிளகு அல்லது திப்பிலி (கிரேக்கம்: Pipala; ஆங்கிலம்: Pepper) ஆகியவை தமிழகத்திலிருந்தே உலகளாவச் சென்றன என்பதை இச் சொற்களே காட்டுகின்றன. இச்சரக்குகள் பெரும்பாலாகக் கொங்குத் தமிழகத்துக்கும் அதன் சூழ்புலங்களுக்குமே சிறப்புரிமையானவை என்பதும் இங்கே கருதத் தக்கது ஆகும். இது கீழே விரிக்கப்பட விருக்கிறது.

எகிப்தியரின் மோட்டுக் கோபுரங்களின் (Pyramids) அடியிலும், சால்டியரின் 'ஊர்' என்ற பண்டைத் தலைநகரிலும் தமிழகக் கொங்கு நாட்டின் தேக்கும் எஃகும்; சிந்துவெளியில் அதன் தங்கமும் அந் நாட்களிலேயே (கி.மு. 4000-கி.மு. 2000) கொண்டு சென்று பயன்படுத்தப்பட்டிருந்தன என்று அறிகிறோம்.

கி.மு.8,6ஆம் நூற்றாண்டுகளிலிருந்து கிரேக்கரின் வாணிகத் தொடர்பும் பண்பாட்டுத் தொடர்பும் தமிழகத்தில் முன்னிலும் நெருக்கமாயின. கிரேக்கர்கள் பாவைவிளக்குப் போன்ற உயரிய