திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/10.இனியவைகூறல்
1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து
2.வான்சிறப்பு
3.நீத்தார்பெருமை
4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை
6.வாழ்க்கைத்துணைநலம்
7.மக்கட்பேறு
8.அன்புடைமை
9.விருந்தோம்பல்
10.இனியவைகூறல்
11.செய்ந்நன்றியறிதல்
12.நடுவுநிலைமை
13.அடக்கமுடைமை
14.ஒழுக்கமுடைமை
15.பிறனில்விழையாமை
16.பொறையுடைமை
17.அழுக்காறாமை
18.வெஃகாமை
19.புறங்கூறாமை
20.பயனிலசொல்லாமை
21.தீவினையச்சம்
22.ஒப்புரவறிதல்
23.ஈகை
24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை
26.புலான்மறுத்தல்
27.தவம்
28.கூடாவொழுக்கம்
29.கள்ளாமை
30.வாய்மை
31.வெகுளாமை
32.இன்னாசெய்யாமை
33.கொல்லாமை
34.நிலையாமை
35.துறவு
36.மெய்யுணர்தல்
37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்
பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி
40.கல்வி
41.கல்லாமை
42.கேள்வி
43.அறிவுடைமை
44.குற்றங்கடிதல்
45.பெரியாரைத்துணைக்கோடல்
46.சிற்றினஞ்சேராமை
47.தெரிந்துசெயல்வகை
48.வலியறிதல்
49.காலமறிதல்
50.இடனறிதல்
51.தெரிந்துதெளிதல்
52.தெரிந்துவினையாடல்
53.சுற்றந்தழால்
54.பொச்சாவாமை
55.செங்கோன்மை
56.கொடுங்கோன்மை
57.வெருவந்தசெய்யாமை
58.கண்ணோட்டம்
59.ஒற்றாடல்
60.ஊக்கமுடைமை
61.மடியின்மை
62.ஆள்வினையுடைமை
63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு
65.சொல்வன்மை
66.வினைத்தூய்மை
67.வினைத்திட்பம்
68.வினைசெயல்வகை
69.தூது
70.மன்னரைச்சேர்ந்தொழுகல்
71.குறிப்பறிதல்
72.அவையறிதல்
73.அவையஞ்சாமை
74.நாடு
75.அரண்
76.பொருள்செயல்வகை
77.படைமாட்சி
78.படைச்செருக்கு
79.நட்பு
80.நட்பாராய்தல்
81.பழைமை
82.தீநட்பு
83.கூடாநட்பு
84.பேதைமை
85.புல்லறிவாண்மை
86.இகல்
87.பகைமாட்சி
88.பகைத்திறந்தெரிதல்
89.உட்பகை.
90.பெரியாரைப்பிழையாமை
91.பெண்வழிச்சேறல்
92.வரைவின்மகளிர்
93.கள்ளுண்ணாமை
94.சூது
95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை
97.மானம்
98.பெருமை
99.சான்றாண்மை
100.பண்புடைமை
101.நன்றியில்செல்வம்
102.நாணுடைமை
103.குடிசெயல்வகை
104.உழவு
105.நல்குரவு
106.இரவு
107.இரவச்சம்
108.கயமை
1.களவியல்
109.தகையணங்குறுத்தல்
110.குறிப்பறிதல்
111.புணர்ச்சிமகிழ்தல்
112.நலம்புனைந்துரைத்தல்
113.காதற்சிறப்புரைத்தல்
114.நாணுத்துறவுரைத்தல்
115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை
117.படர்மெலிந்திரங்கல்
118.கண்விதுப்பழிதல்
119.பசப்புறுபருவரல்
120.தனிப்படர்மிகுதி
121.நினைந்தவர்புலம்பல்
122.கனவுநிலையுரைத்தல்
123.பொழுதுகண்டிரங்கல்
124.உறுப்புநலனழிதல்
125.நெஞ்சொடுகிளத்தல்
126.நிறையழிதல்
127.அவர்வயின்விதும்பல்
128.குறிப்பறிவுறுத்தல்
129.புணர்ச்சிவிதும்பல்
130.நெஞ்சொடுபுலத்தல்
131.புலவி
132.புலவிநுணுக்கம்
133.ஊடலுவகை
திருக்குறள் பத்தாவது அதிகாரம் இனியவை கூறல்.
பரிமேலழகர் உரை
[தொகு]- பரிமேலழகரின் அதிகார முன்னுரை
- அஃதாவது, மனத்தின்கண் உவகையை வெளிப்படுப்பனவாகிய இனிய சொற்களைச் சொல்லுதல். இதுவும் விருந்தோம்புவார்க்கு இன்றியமையாதாகலின், விருந்தோம்பலின்பின் வைக்கப்பட்டது.
திருக்குறள் 91 (இன்சொலா)
[தொகு]- இன்சொலா லீர மளைஇப் படிறிலவாஞ்
- செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
தொடரமைப்பு:
- (இதன்பொருள்)
- இன்சொல்= இன்சொலாவன;
- ஈரம் அளைஇப் படிறு இலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்= அன்போடு கலந்து வஞ்சனையிலவாய் இருக்கின்ற அறத்தினை உணர்ந்தார் வாயிற்சொற்கள்.
- பரிமேலழகர் உரைவிளக்கம்
- 'ஆல்' அசைநிலை. அன்போடு கலத்தல்= அன்புடைமையை வெளிப்படுத்தல். படிறின்மை= வாய்மை. மெய்யுணர்ந்தார் நெஞ்சிற்கெல்லாம் செம்மையுடைத்தாய்த் தோன்றலின், 'செம்பொரு'ளெனப் பட்டது. இலவாஞ் சொ்ல்லென இயையும். 'வாய்' என வேண்டாது கூறினார், தீய சொற் பயிலாவென்பது அறிவித்தற்கு.
- இதனான் இன்சொற்கு இலக்கணங் கூறப்பட்டது.
திருக்குறள் 92 (அகனமர்ந்)
[தொகு]- அகனமர்ந் தீதலி னன்றே முகனமர்ந்
- தின்சொல னாகப் பெறின்.
- (இதன்பொருள்)
- அகன் அமர்ந்து ஈதலின் நன்று= நெஞ்சுவந்து ஒருவற்கு வேண்டிய பொருளைக் கொடுத்தலினும் நன்று;
- முகன் அமர்ந்து இன்சொலன் ஆகப்பெறின்= கண்டபொழுதே முகம் இனியனாய் அதனோடு இனிய சொல்லையும் உடையனாகப் பெறின்.
- பரிமேலழகர் உரைவிளக்கம்
- இன்முகத்தோடு கூடிய இன்சொல் ஈதல்போலப் பொருள்வயத்தன்றித் தன்வயத்ததாயினும், அறநெஞ்சுடையார்க்கல்லது இயல்பாகவின்மையின், அதனினும் அரிதுஎன்னுங் கருத்தான், 'இன்சொலனாகப்பெறின்' என்றார்.
திருக்குறள் 93 (முகத்தா)
[தொகு]- முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானா
- மின்சொ லினதே யறம்.
- (இதன்பொருள்)
- முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி= கண்டபொழுதே முகத்தான் விரும்பி இனிதாக நோக்கி;
- அகத்தான் ஆம் இன்சொலினதே அறம்= பின் நண்ணியவழி மனத்துடனாகிய இனிய சொற்களைச் சொல்லுதலின் கண்ணே அறம்.
- பரிமேலழகர் உரைவிளக்கம்
- 'நோக்கி' என்னும் வினையெச்சம் இன்சொலென அடையடுத்து நின்ற முதனிலைத் தொழிற்பெயர் கொண்டது. ஈதலின் கண்ணதன்று என்றவாறு.
- இவை இரண்டு பாட்டானும் இன்முகத்தோடுகூடிய இன்சொல் முன்னரே பிணித்து்க் கோடலின் விருந்தோம்புதற்கட் சிறந்ததென்பது கூறப்பட்டது.
திருக்குறள் 94 (துன்புறூஉந்)
[தொகு]- துன்புறூஉந் துவ்வாமை யில்லாகும் யார்மாட்டு
- மின்புறூஉ மின்சொ லவர்க்கு.
- துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
- இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
- (இதன்பொருள்)
- யார் மாட்டும் இன்பு உறூஉம் இன்சொலவர்க்கு= எல்லார் மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை உடையார்க்கு;
- துன்பு உறூஉம் துவ்வாமை இல்லாகும்= துன்பத்தை மிகுவிக்கும் நல்குரவு இல்லையாம்.
- பரிமேலழகர் உரைவிளக்கம்
- நா முதலிய பொறிகள் சுவை முதலிய புலன்களை நுகராமை யுடைமையின், 'துவ்வாமை' யென்றார். 'யார்மாட்டும்இன்புறூஉம் இன்சொலவர்க்கு'ப் பகையும் நொதுமலுமின்றி உள்ளது நண்பேயாம்; ஆகவே, அவர் எல்லாச் செல்வமும் எய்துவர் என்பது கருத்து.
திருக்குறள் 95 (பணிவுடைய)
[தொகு]- பணிவுடைய னின்சொல னாத லொருவற்
- கணியல்ல மற்றுப் பிற.
- (இதன்பொருள்)
- ஒருவற்கு அணி பணிவு உடையன் இன்சொலனாதல்= ஒருவனுக்கு அணியாவது தன்னால் தாழப்படுவார்கண் தாழ்ச்சி உடையனாய் எல்லார்கண்ணும் இனிய சொல்லையும் உடையனாதல்;
- பிறஅல்ல= இவை யிரண்டுமன்றி மெய்க்கணியும் பிற அணிகள் அணியாகா.
- பரிமேலழகர் உரைவிளக்கம்
- இன்சொலனாதற்கு இனமாகலின், பணிவுடைமையும் உடன் கூறினார். 'மற்று' அசைநிலை. வேற்றுமை உடைமையாற் 'பிற' வெனவும், இவைபோலப் பேரழகு செய்யாமையின் அல்லவெனவுங் கூறினார்.
- இவை இரண்டு பாட்டானும் இனியவை கூறுவார்க்கு இம்மைப்பயன் கூறப்பட்டது.
திருக்குறள் 96 (அல்லவை)
[தொகு]- அல்லவை தேய வறம்பெருகு நல்லவை
- நாடி யினிய சொலின்.
- (இதன்பொருள்)
- நல்லவை நாடி இனிய சொலின்= பொருளாற் பிறர்க்கு நன்மை பயக்குஞ் சொற்களை மனத்தான் ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுமாயின்;
- அல்லவை தேய அறம் பெருகும்= அவனுக்குப் பாவங்கள் தேய அறம் வளரும்.
- பரிமேலழகர் உரைவிளக்கம்
- தேய்தல் தன் பகையாகிய அறம் வளர்தலின் தனக்கு நிலையின்றி மெலிதல். "தவத்தின்முன் நில்லாதாம் பாவம்" (நாலடியார், 51) என்பதூஉம் இப்பொருட்டு. நல்லவை நாடிச் சொல்லுங்காலும் கடியவாகச் சொல்லின், அறனாகாது என்பதாம்.
- இதனான் மறுமைப்பயன் கூறப்பட்டது.
திருக்குறள் 97 (நயனீன்று)
[தொகு]- நயனீன்று நன்றி பயக்கும் பயனீன்று
- பண்பிற் றலைப்பிரியாச் சொல்.
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்.
- (இதன் பொருள்)
- நயன் ஈன்று நன்றி பயக்கும்= ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும்;
- பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்= பொருளாற் பிறர்க்கு நன்மையைக் கொடுத்து இனிமைப் பண்பின் நீங்காத சொல்.
- பரிமேலழகர் உரைவிளக்கம்
நீதி உலகத்தோடு பொருந்துதல். 'பண்'பென்பது ஈண்டு அதிகாரத்தான் இனிமைமேல் நின்றது. தலைப்பிரிதல் ஒருசொல் நீர்மைத்து.
திருக்குறள் 98 (சிறுமையு)
[தொகு]- சிறுமையு ணீங்கிய வின்சொல் மறுமையு
- மிம்மையு மின்பந் தரும்.
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்.
- (இதன்பொருள்)
- சிறுமையுள் நீங்கிய இன்சொல்= பொருளாற் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல்;
- மறுமையும் இம்மையும் இன்பம் தரும்= ஒருவனுக்கு இருமையினும் இன்பத்தைப் பயக்கும்.
- பரிமேலழகர் உரைவிளக்கம்
- மறுமையின்பம் பெரிதாகலின் முற்கூறப்பட்டது. இம்மையின்பமாவது, உலகம் தன்வயத்தது ஆகலான் நல்லன எய்தி இன்புறுதல்.
- இவை இரண்டு பாட்டானும் இருமைப்பயனும் ஒருங்கெய்துதல் வலியுறுத்தப்பட்டது.
திருக்குறள் 99 (இன்சொலினி)
[தொகு]- இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ
- வன்சொல் வழங்கு வது.
- (இதன்பொருள்)
- இன்சொல் இனிது ஈன்றல் காண்பான்= பிறர்கூறும் இன்சொல் தனக்கின்பம் பயத்தலை அனுபவித்து அறிகின்றவன்;
- வன்சொல் வழங்குவது எவன்கொல்= அது நிற்கப் பிறர்மாட்டு வன்சொல்லைச் சொல்லுவது என்ன பயன் கருதி?
- பரிமேலழகர் உரைவிளக்கம்
- இனிதென்றது வினைக்குறிப்புப்பெயர். கடுஞ்சொற் பிறர்க்கும் இன்னாதாகலின், அது கூறலாகாது என்பது கருத்து.
திருக்குறள் 100 (இனியவுள)
[தொகு]- இனிய வுளவாக வின்னாத கூறல்
- கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
- (இதன்பொருள்)
- இனிய உளவாக இன்னாத கூறல்= அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க அவற்றைக் கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறல்;
- கனி இருப்பக் காய் கவர்ந்தற்று= இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க அவற்றை நுகராது இன்னாத காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும்.
- பரிமேலழகர் உரைவிளக்கம்
- 'கூற'வென்தனால் சொற்கள் என்பது பெற்றாம். பொருளை விசேடித்துநின்ற பண்புகள் உவமைக்கண்ணும் சென்றன. `இனிய கனிகள்' என்றது, ஒளவையு்ண்ட நெல்லிக்கனி போல அமிழ்தானவற்றை. 'இன்னாத காய்கள் என்றது காஞ்சிரங்காய்போல நஞ்சானவற்றை. கடுஞ்சொற்சொல்லுதல் முடிவில் தனக்கே இன்னாது என்பதாம்.
- இவை இரண்டுபாட்டானும் இன்னாத கூறலின் குற்றங்கூறப்பட்டது.