திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/102.நாணுடைமை

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- ஒழிபியல்[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகாரம் 102. நாணுடைமை[தொகு]

அதிகார முன்னுரை
அஃதாவது, மேற்சொல்லிய சால்பு பண்பு முதலிய குணங்களால் உயர்ந்தோர் தமக்கு ஒவ்வாத கருமங்களில் நாணுதல் உடையராந் தன்மை. அதிகாரமுறைமையும் இதனானே விளங்கும்.

குறள் 1011 (கருமத்தா )[தொகு]

கருமத்தா னாணுத னாணுத் திருநுத () கருமத்தால் நாணுதல் நாணுத் திரு நுதல்

னல்லவர் நாணுப் பிற. (01) நல்லவர் நாணுப் பிற.

தொடரமைப்பு: நாணுக் கருமத்தால் நாணுதல், பிற திருநுதல் நல்லவர் நாணு.

இதன்பொருள்
நாணுக் கருமத்தால் நாணுதல்= நன்மக்கள் நாணாவது இழிந்த கருமம் காரணமாக நாணுதல்; பிறதிருநுதல் நல்லவர் நாணு= அஃதன்றி மன மொழி மெய்கள் தொடுக்கத்தான் வருவனவோ எனின், அவை அவரளவல்ல, அழகிய நுதலினை உடைய குலமகளிர் நாண்கள்.
உரைவிளக்கம்
பிற குலமகளிர் நாண் என்றதனான், ஏனையது நன்மக்கள் நாண் என்பதும், 'நாணுதல்' என்றதனான், கருமத்து இழிவும் பெற்றாம். 'திருநுதல் நல்லவர்' என்பது புகழ்ச்சிக் குறிப்பு. ஏதுப்பன்மை பற்றிப் 'பிற'வென்றார். இனி அற்றமறைத்தல் முதலியன பொதுமகளிர் நாணோடு ஒக்கும் என்று உரைப்பாரும் உளர். அவர்க்கு நாண் கேடு பயக்கும் என விலக்கப்பட்டமையானும், அவர் பெயராற் கூறப்படாமையானும் அஃது உரையன்மை அறிக்.
இதனான் நாணினது இலக்கணம் கூறப்பட்டது.

குறள் 1012(ஊணுடை )[தொகு]

ஊணுடை யெச்ச முயிர்க்கெல்லாம் வேறல்ல () ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல

நாணுடைமை மாந்தர் சிறப்பு. (02) நாண் உடைமை மாந்தர் சிறப்பு.

தொடரமைப்பு: ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல, மாந்தர் சிறப்பு நாணுடைமை.

இதன்பொருள்
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல= ஊணும் உடையும் அவை ஒழிந்தனவும் மக்கள் உயிர்க்கெல்லாம் பொது; மாந்தர் சிறப்பு நாணுடைமை= நன்மக்கட்குச் சிறப்பாவது நாணுடைமையே, அவையல்ல.
உரைவிளக்கம்
ஒழிந்தன உறக்கமும் அச்சமும் காமமும், சிறப்பு; அவ்வுயிர்களின் வேறுபாடு. அச்சம் என்று பாடம் ஓதுவாரும் உளர்.

குறள் 1013 ( ஊனைக்குறித்த)[தொகு]

ஊனைக் குறித்த வுயிரெல்லா நாணென்னு () ஊனைக் குறித்த உயிர் எல்லாம் நாண் என்னும்

னன்மை குறித்தது சால்பு. (03) நன்மை குறித்தது சால்பு.

தொடரமைப்பு: உயிர் எல்லாம் ஊனைக் குறித்த, சால்பு நாண் என்னும் நன்மை குறித்தது.

இதன்பொருள்
உயிர் எல்லாம் ஊனைக் குறித்த= எல்லா உயிர்களும், உடம்பினைத் தமக்கு நிலைக்களனாகக் கொண்டு அதனை விடா; சால்பு நாண் என்னும் நன்மை குறித்தது= அதுபோலச் சால்பு, நாண் என்னும் நன்மைக்குணத்தைத் தனக்கு நிலைக்களனாகக் கொண்டு அதனை விடாது.
உரைவிளக்கம்
'உடம்பு' என்பது, சாதி ஒருமை. 'நன்மை' ஆகுபெயர். உயிர் உடம்போடு கூடியல்லது பயன் எய்தாதவாறு போலச் சால்பு நாணோடு கூடியல்லது பயன் எய்தாது என்பதாம். ஊணைக் குறித்த என்று பாடம் ஓதுவாரும் உளர்.Ŝ

Ŝ. மணக்குடவர்.

குறள் 1014 (அணியன்றோ )[தொகு]

அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற் () அணி அன்றோ நாண் உடைமை சான்றோர்க்கு அஃது இன்றேல்

பிணியன்றோ பீடு நடை. (04) பிணி அன்றோ பீடு நடை.

தொடரமைப்பு: சான்றோர்க்கு நாணுடைமை அணியன்றோ, அஃது இன்றேல் பீடு நடை பிணியன்றோ

இதன்பொருள்
சான்றோர்க்கு நாணுடைமை அணியன்றோ= சான்றோர்க்கு நாணுடைமை ஆபரணமாம்; அஃது இன்றேல் பீடு நடை பிணியன்றோ= அவ் ஆபரணம் இல்லையாயின் அவர் பெருமிதத்தையுடைய நடை, கண்டார்க்குப் பிணியாம்.
உரைவிளக்கம்
அழகுசெய்தலின் 'அணி' என்றும், பொறுத்தற்கு அருமையின் 'பிணி' என்றும் கூறினார். 'ஓ'கார இடைசசொற்கள் எதிர்மறைக்கண் வந்தன.
இவை மூன்று பாட்டானும் அதன் சிறப்புக் கூறப்பட்டது.

குறள் 1015 (பிறர்பழியுந் )[தொகு]

பிறர்பழியுந் தம்பழியு நாணுவர் நாணுக் () பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு

குறைபதி யென்னு முலகு. (05) உறைபதி என்னும் உலகு.

தொடரமைப்பு: பிறர் பழியும் தம் பழியும் நாணுவார், உலகு நாணுக்கு உறைபதி என்னும்.

இதன்பொருள்
பிறர் பழியும் தம் பழியும் நாணுவார்= பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியையும் ஒப்பமதித்து நாணுவாரை; உலகு நாணுக்கு உறைபதி என்னும்= உலகத்தார் நாணுக்கு உறைவிடம் என்று சொல்லுவார்.
உரைவிளக்கம்
ஒப்பமதித்தல்: அதுவும் தமக்கு வந்ததாகவே கருதுதல். அக்கருத்துடையார் பெரியராகலின், அவரை உயர்ந்தோர் யாவரும் புகழ்வர் என்பதாம்.
இதனால் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.

குறள் 1016(நாண்வேலி )[தொகு]

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் () நாண் வேலி கொள்ளாது மன்னோ வியன் ஞாலம்

பேணலர் மேலா யவர். (06) பேணலர் மேலாயவர்.

தொடரமைப்பு: மேலாயவர், வேலி நாண் கொள்ளாது, வியன் ஞாலம் பேணலர்.

இதன்பொருள்
மேலாயவர், வேலி நாண் கொள்ளாது= தமக்கு ஏமமாக நாணினைக் கொள்வதன்றி; வியன் ஞாலம் பேணலர்= அகன்ற ஞாலத்தைக் கொள்ள விரும்பார்.
உரைவிளக்கம்
பழிபாவங்கள் புகுதாமற் காத்தலின், 'வேலி' என்றார். நாணும், ஞாலமும் தம்முள் மாறாயவழி, அந்நாணினைக் கொள்வதல்லது, அவை புகுது நெறியாகிய ஞாலத்தினைக் கொள்ள விரும்பார் என்பதாம். 'மன்'னும் 'ஓ'வும் அசை. நாணாகிய வேலியைப் பெற்றல்லது ஞாலம்பெற விரும்பார் என்று உரைப்பாரும் உளர்.

குறள் 1017 (நாணால் )[தொகு]

நாணா லுயிரைத் துறப்ப ருயிர்ப்பொருட்டா () நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டான்

னாண்டுறவார் நாணாள் பவர். (07) நாண் துறவார் நாண் ஆள்பவர்.

தொடரமைப்பு: நாண் ஆள்பவர், நாணால் உயிரைத் துறப்பர், உயிர்ப்பொருட்டான் நாண் துறவார்.

இதன்பொருள்
நாண் ஆள்பவர்= நாணினது சிறப்பறிந்து அதனை விடாது ஒழுகுவார்; நாணால் உயிரைத் துறப்பர்= அந்நாணும் உயிரும் தம்முள் மாறாயவழி, நாண் சிதையாமற்பொருட்டு உயிரை நீப்பர்; உயிர்ப்பொருட்டு நாண் துறவார்= உயிர் சிதையாமற் பொருட்டு நாணினை நீக்கார்.
உரைவிளக்கம்
உயிரினும் நாண் சிறந்தது என்பதாம்.
இவை இரண்டு பாட்டானும் அவர்செயல் கூறப்பட்டது.

குறள் 1018 (பிறர்நாணத் )[தொகு]

பிறர்நாணத் தக்கது தானாணா னாயி () பிறர் நாணத்தக்கது தான் நாணான் ஆயின்

னறநாணத் தக்க துடைத்து. (08) அறம் நாணத் தக்கது உடைத்து.


தொடரமைப்பு: பிறர் நாணத்தக்கது தான் நாணான் ஆயின், அறம் நாணத்தக்கது உடைத்து.

இதன்பொருள்
பிறர் நாணத்தக்கது தான் நாணான் ஆயின்= கேட்டாரும் கண்டாரும் நாணத்தக்க பழியை, ஒருவ்ன் தான் நாணாது செய்யுமாயின்; அறம் நாணத்தக்கது உடைத்து= அந்நாணாமை, அவனை அறம் விட்டு நீங்கத்தக்க குற்றத்தினை உடைத்து.
உரைவிளக்கம்
'தான்' எனச் செய்வானைப் பிரிக்கின்றார் ஆகலின், 'பிறர்' என்றார். நாணோடு இயைபு இல்லாதானை அறஞ்சாராது என்பதாம்.

குறள் 1019( குலஞ்சுடுங்)[தொகு]

குலஞ்சுடுங் கொள்கை பிழைப்பி னலஞ்சுடு () குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும்

நாணின்மை நின்றக் கடை. (09) நாண் இன்மை நின்றக் கடை.

தொடரமைப்பு: கொள்கை பிழைப்பின் குலம் சுடும், நாணின்மை நின்றக்கடை நலம் சுடும்.

இதன்பொருள்
கொள்கை பிழைப்பின் குலம் சுடும்= ஒருவனுக்கு ஒழுக்கம் பிழைக்குமாயின் அப்பிழைப்பு, அவன் குடிப்பிறப்பு ஒன்றனையும் கெடுக்கும்; நாணின்மை நின்றக் கடை நலம் சுடும்= ஒருவன்மாட்டு நாணின்மை நின்றவழி, அந்நிலை அவன் நலம் யாவற்றையும் கெடுக்கும்.
உரைவிளக்கம்
நிற்றல்: ஒருபொழுதும் நீங்காமை. 'நலம்' சாதி யொருமையாகலின், பிறப்பு, கல்வி, குணம், செயல், இனம் என்று இவற்றான் வந்தன எல்லாம் கொள்ளப்படும். ஒழுக்கஅழிவினும், நாணழிவு இறப்பத் தீது என்பதாம்.

குறள் 1020 ( நாணகத்)[தொகு]

நாணகத் தில்லா ரியக்க மரப்பாவை () நாண் அகத்து இல்லார் இயக்கம் மரப் பாவை

நாணா லுயிர்மருட்டி யற்று. (10) நாணால் உயிர் மருட்டி அற்று.

தொடரமைப்பு: அகத்து நாண் இல்லார் இயக்கம், மரப்பாவை நாணால் உயிர் மருட்டியற்று.

இதன்பொருள்
அகத்து நாண் இல்லார் இயக்கம்= தம் மனத்தின்கண் நாண் இல்லாத மக்கள் உயிருடையார் போன்று இயங்குகின்ற இயக்கம்; மரப்பாவை நாணால் உயிர் மருட்டியற்று= மரத்தாற் செய்யப்பட்ட பாவை இயந்திரக் கயிற்றினான் ஆய தன்னியக்கத்தால் உயிருடைத்தாக மயக்கினாற் போலும்.
உரைவிளக்கம்
கருவியே கருத்தாவாயிற்று. நாணில்லாத மக்கள் இயக்கம், நாணுடைய பாவை இயக்கம் போல்வதல்லது உயிரியக்கம் அன்று என்பதாம்.
இவை மூன்று பாட்டானும், நாண் இல்லாரது இழிவு கூறப்பட்டது.