திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/48.வலியறிதல்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


பொருட்பால்- 1. அரசியல்- அதிகாரம் 48. வலியறிதல்[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகார முன்னுரை
அஃதாவது, அவ்வுபாயங்களுள் ஒறுத்தல் குறித்த அரசன் நால்வகை வலியையும் அளந்தறிதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.

குறள் 471 (வினைவலியுந்)[தொகு]

வினைவலியுந் தன்வலியு மாற்றான் வலியுந்வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்

துணைவலியுந் தூக்கிச் செயல். (01)துணை வலியும் தூக்கிச் செயல்.

இதன் பொருள்
வினை வலியும்= தான் செய்யக் கருதிய வினைவலியையும்; தன் வலியும்= அதனைச்செய்து முடிக்கும் தன் வலியையும்; மாற்றான் வலியும்= அதனை விலக்கலுறும் மாற்றான் வலியையும்; துணை வலியையும்= இருவர்க்கும் தூணையாவார் வலியையும்; தூக்கிச் செயல்= சீர்தூக்கித் தன் வலி மிகுமாயின் அவ்வினையைச் செய்க.
விளக்கம்
இந்நால் வகை வலியுள் 'வினைவலி' அரண்முற்றலும், கோடலும் முதலிய தொழிலானும், ஏனைய மூவகை ஆற்றலானும் கூறுபடுத்துத் தூக்கப்படும். 'தன்வலி' மிகவின்கட் செய்க என்ற விதியால், தோற்றல் ஒருதலையாய குறைவின்கண்ணும், வேறல் ஐயமாய ஒப்பின்கண்ணும் ஒழிக என்பது பெற்றாம்.

குறள் 472 (ஒல்வதறிந்து)[தொகு]

ஒல்வதறிவ தறிந்ததன் கட்டங்கிச்ஒல்வது அறிந்து அதன்கண் தங்கிச்

செல்வார்க்குச் செல்லாத தில். (02)செல்வார்க்குச் செல்லாதது இல்.

இதன் பொருள்
ஒல்வது அறிவது அறிந்து= தமக்கியலும் வினையையும் அதற்கறிய வேண்டுவதாய வலியையும் அறிந்து; அதன்கண் தங்கிச் செல்வார்க்கு= எப்பொழுதும் மன மொழி மெய்களை அதன்கண் வைத்துப் பகைமேற் செல்லும் அரசர்க்கு; செல்லாதது இல்= முடியாத பொருள் இல்லை.
விளக்கம்
'ஒல்வது' எனவே வினைவலி முதலாய மூன்றும் அடங்குதலின், ஈண்டு 'அறிவது' என்றது துணைவலியே யாயிற்று. எல்லாப் பொருளும் எய்துவர் என்பதாம்.
இவை இரண்டு பாட்டானும் வலியின் பகுதியும் அஃதறிந்து மேற்செல்வார் எய்தும் பயனும் கூறப்பட்டன.

குறள் 473 (உடைத்தம்)[தொகு]

உடைத்தம் வலியறியா ரூக்கத்தி னூக்கிஉடைத்தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி

'யிடைக்கண் முரிந்தார் பலர். (03)இடைக்கண் முரிந்தார் பலர்.

இதன் பொருள்
உடைத் தம் வலி அறியார்= கருத்தாவாதலை உடைய தம் வலியின் அளவு அறியாதே; ஊக்கத்தின் ஊக்கி= மன எழுச்சியால் தம்மின் வலியாரோடு வினை செய்தலைத் தொடங்கி; இடைக்கண் முரிந்தார் பலர்= அவர் அடர்த்தலான் அது செய்து முடிக்கப்பெறாது இடையே கெட்ட அரசர் உலகத்துப் பலர்.
விளக்கம்
உடைய என்பது, அவாய் நின்றமையின், செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. மூவகை ஆற்றலுள்ளுஞ் சிறப்புடைய அறிவுடையோர் சிலராதலின், 'முரிந்தார் பலர்' என்றார். அதனால் தம் வலியறிந்தே தொடங்குக என்பது எஞ்சிநின்றது.

குறள்: 474 (அமைந்தாங்)[தொகு]

அமைந்தாங் கொழுகா னளவறியான் றன்னைஅமைந்து ஆங்கு ஒழுகான் அளவு அறியான் தன்னை

வியந்தான் விரைந்து கெடும் (04).வியந்தான் விரைந்து கெடும்.

இதன்பொருள்
ஆங்கு அமைந்து ஒழுகான்= அயல் வேந்தரோடு பொருந்தி ஒழுகுவதுஞ் செய்யாது; அளவு அறியான்= தன் வலியளவு அறிவதுஞ்செய்யாது; தன்னை வியந்தான்= தன்னை வியந்து அவரோடு பகைத்த அரசன்; விரைந்து கெடும்= விரையக் கெடும்.
விளக்கம்
காரியத்தைக் காரணமாக உபசரித்து 'வியந்தான்' என்றார். விரைய என்பது திரிந்து நின்றது. நட்பாய் ஒழுகுதல், வலியறிந்து பகைத்தல் என்னும் இரண்டனுள் ஒன்றன்றே அயல்வேந்தரோடு செய்ற்பாலது; இவையன்றித் தான் மெலியனாய் வைத்து அவரோடு பகைகொண்டானுக்கு ஒருபொழுதும் நிலையின்மையின், 'விரைந்துகெடும்' என்றார்.
இவை இரண்டுபாட்டானும் தன் வலியறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.

குறள் 475 (பீலிபெய்)[தொகு]

பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ்பீலி பெய் சாகாடும் அச்சு இறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின் (05).சால மிகுத்துப் பெயின்.

இதன் பொருள்
பீலி பெய் சாகாடும் அச்சு இறும்= பீலி ஏற்றிய சகடமும் அச்சு முரியும்; அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்= அப் பீலியை அது பொறுக்கும் அளவின்றி மிகுத்து ஏற்றின்.
விளக்கம்
உம்மை சாகாட்டது வலிச்சிறப்பேயன்றிப் பீலியது நொய்ம்மைச் சிறப்புத் தோன்ற நின்றது. 'இறும்' என்னும் சினைவினை முதன்மேன் நின்றது. எளியர் என்று பலரோடு பகைகொள்வான், தான் வலியனே ஆயினும் அவர் தொக்கவழி வலியழியும் என்னும் பொருள் தோன்ற நின்றமையின், இது பிறிதுமொழிதல் என்னும் அலங்காரம்; இதனை நுவலா நுவற்சி என்பாரும், ஒட்டு என்பாரும் உளர். ஒருவன் தொகுவார் பலரோடு பகைகொள்ளற்க என்றமையின், இதனான் மாற்றான் வலியும் அவன் துணைவலியும் அறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.

குறள் 476 (நுனிக்கொம்பர்)[தொகு]

நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கிநுனிக் கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்

னுயிர்க்கிறுதி யாகி விடும். (06)உயிர்க்கு இறுதி ஆகி விடும்.

இதன்பொருள்
கொம்பர் நுனி ஏறினார் அஃது இறந்து ஊக்கின்= ஒரு மரக்கோட்டினது நுனிக்கண்ணே ஏறிநின்றார் தம் ஊக்கத்தால் அவ்வளவினைக் கடந்து மேலும் ஏற ஊக்குவராயின்; உயிர்க்கு இறுதி ஆகி விடும்= அவ்வூக்கம் அவர் உயிர்க்கு இறுதியாய் முடியும்.
உரைவிளக்கம்
'நுனிக்கொம்பர்' என்பது கடைக்கண் என்பது போலப் பின்முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத்தொகை. பன்மை அறிவின்மைபற்றி இழித்தற்கண் வந்தது. இறுதிக்கு ஏதுவாவதனை 'இறுதி' என்றார். பகைமேற் செல்வான் தொடங்கித் தன்னாற் செல்லலாம் அளவுஞ் சென்றுநின்றான், பின் அவ்வளவின் நில்லாது மனவெழுச்சியான் மேலுஞ் செல்லுமாயின், அவ்வெழுச்சி வினைமுடிவிற்கு ஏதுவாகாது அவன் உயிர்முடிவிற்கு ஏதுவாம் என்னும் பொருள்தோன்ற நின்றமையின், இதுவும் மேலை அலங்காரம்.
அளவறிந்து நிற்றல் வேண்டும் என்றமையின், இதனால் வினைவலி அறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.

குறள் 477 (ஆற்றின்)[தொகு]

ஆற்றி னளவறிந் தீக வதுபொருள்ஆற்றின் அளவு அறிந்து ஈக அது பொருள்

போற்றி வழங்கு நெறி. (07)போற்றி வழங்கும் நெறி.

இதன்பொருள்
ஆற்றின் அளவு அறிந்து ஈக= ஈயும் நெறியானே தமக்குள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப ஈக; அது பொருள் போற்றி வழங்கும் நெறி= அங்ஙனம் ஈதல் பொருளைப் பேணிக்கொண்டு ஒழுகும் நெறியாம்.
உரைவிளக்கம்
ஈயும் நெறி மேல் இறைமாட்சியுள் "வகுத்தலும் வல்லதரசு" (பார்க்க: 385-ஆம் குறளுரை) என்புழி உரைத்தாம். எல்லைக்கேற்ப ஈதலாவது, ஒன்றான எல்லையை நான்கு கூறாக்கி, அவற்றுள் இரண்டனைத் தன் செலவாக்கி, ஒன்றனை மேல் இடர்வந்துழி அது நீக்குதற்பொருட்டு வைப்பாக்கி, நின்றவொன்றனை ஈதல்; பிறரும் "வருவாயுட் கால்வழங்கி வாழ்தல்" (பார்க்க: திரிகடுகம்-21) என்றார். பேணிக்கொண்டொழுகுதல் ஒருவரோடு நட்பிலாத அதனைத் தம்மோடு நட்பு உண்டாக்கிக் கொண்டு ஒழுகுதல். முதலிற் செலவு சுருங்கிற் பொருள் ஒருகாலும் நீங்காது என்பதாம்.

குறள் 478 (ஆகாறளவு)[தொகு]

ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லைஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் கேடு இல்லை

போகா றகலாக் கடை. (08)போகு ஆறு அகலாக் கடை.

இதன்பொருள்
ஆகு ஆறு அளவு இட்டிதாயினும் கேடு இல்லை= அரசர்க்குப் பொருள் வருகின்ற நெறியளவு சிறிதாயிற்றானும் அதனாற் கேடில்லையாம்; போகு ஆறு அகலாக் கடை= போகின்ற நெறியளவு அதனிற் பெருகாதாயின்.
உரைவிளக்கம்
'இட்டிது' எனவும், 'அகலாது' எனவும் வந்த பண்பின் தொழில்கள் பொருள்மேல் நின்றன. பொருள் என்பது அதிகாரத்தான் வருவித்து, அளவு என்பது பின்னும் கூட்டி உரைக்கப்பட்டன. முதலும் செலவும் தம்முள் ஒப்பினும் கேடில்லை என்பதாம்.

குறள் 479 (அளவறிந்து)[தொகு]

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுளபோலஅளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல

வில்லாகித் தோன்றாக் கெடும். (09)இல்லாகித் தோன்றாக் கெடும்.

இதன்பொருள்
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை= தனக்கு உள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப வாழமாட்டாதான் வாழ்க்கைகள்; உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்= உள்ளனபோலத் தோன்றி, மெய்ம்மையான் இல்லையாய்ப் பின்பு அத்தோற்றமும் இன்றிக் கெட்டுவிடும்.
உரைவிளக்கம்
அவ்வெல்லைக்கேற்ப வாழ்தலாவது, அதனிற் சுருக்கக் கூடாதாயின் ஒப்பவாயினும் ஈத்தும் துய்த்தும் வாழ்தல். தொடக்கத்திற் கேடு வெளி்ப்படாமையின், 'உளபோல', 'தோன்றா' என்றார். முதலிற் செலவு மிக்கால் வரும் ஏதங் (பார்க்க: நல்வழி-25) கூறியவாறு.

குறள் 480 (உளவரை)[தொகு]

உளவரை தூக்காத வொப்புர வாண்மைஉள வரை தூக்காத ஒப்புரவு ஆண்மை

வளவரை வல்லைக் கெடும். (10)வள வரை வல்லைக் கெடும்.

இதன்பொருள்
உள வரை தூக்காத ஒப்புரவு ஆண்மை= தனக்குள்ள அளவு தூக்காமைக்கு ஏதுவாய ஒப்புரவாண்மையால்; வள வரை வல்லைக் கெடும்= ஒருவன் செல்வத்தின் எல்லை விரையக் கெடும்.
உரைவிளக்கம்
ஒப்புரவே ஆயினும் மிகலாகாது என்றமையான் இதுவுமது.(479 ஆம் குறளிற் கூறியதுபோன்று)
இவை நான்கு பாட்டானும் மூவகை ஆற்றலுள் பெருமையின் பகுதியாய பொருள்வலியறிதல் சிறப்பு நோக்கி வகுத்துக் கூறப்பட்டது.