உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/73.அவையஞ்சாமை

விக்கிமூலம் இலிருந்து

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- அங்கவியல்

[தொகு]

பரிமேலழகர் உரை

[தொகு]

அதிகாரம் 73. அவை அஞ்சாமை

[தொகு]
அதிகார முன்னுரை
அஃதாவது, சொல்லுதற்குரிய அவையினை அறிந்து சொல்லுங்கால் அதற்கு அஞ்சாமை. அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.

குறள் 721 (வகையறிந்து)

[தொகு]

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் () வகை அறிந்து வல்லவை வாய் சோரார் சொல்லின்

றொகையறிந்த தூய்மை யவர். (01) தொகை அறிந்த தூய்மையவர்.

இதன்பொருள்
வகை அறிந்து வல்லவை வாய் சோரார்- கற்றுவல் அவை அல்லா அவை என்னு்ம் அவையின் வகையினை அறிந்து வல்ல அவைக்கண் ஒன்று சொல்லுங்கால் அச்சத்தான் வழுப்படச் சொல்லார்; சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர்= சொல்லின் தொகை எல்லாம் அறிந்த தூய்மையினை உடையார்.
உரை விளக்கம்
இருந்தாரது வன்மை அவைமேல் ஏற்றப்பட்டது. வல்லவை என்பதற்குத் தாம் கற்றுவல்ல நூற்பொருள்களை என்று உரைப்பாரும் உளர். அச்சத்தான் என்பது அதிகாரத்தான் வந்தது. 'சொல்லின்றொகை', 'தூய்மை' என்பனவற்றிற்கு மேல் உரைத்தாங்கு உரைக்க.
₦. திருக்குறள், 711.

குறள் 722 (கற்றாருட்)

[தொகு]

கற்றாருட் கற்றா ரெனப்படுவர் கற்றார்முற் () கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார் முன்

கற்ற செலச்சொல்லு வார். (02) கற்ற செலச் சொல்லுவார்.

இதன்பொருள்
கற்றாருள் கற்றார் எனப்படுவர்= கற்றார் எல்லாரினும் இவர் நன்கு கற்றார் என்று உலகத்தாரான் சொல்லப்படுவார்; கற்றார் முன் செலச் சொல்லுவார்= கற்றார் அவைக்கண் அஞ்சாதே தாம் கற்றவற்றை அவர் மனம் கொள்ளும்வகை சொல்லவல்லார்.
உரை விளக்கம்
உலகம் அறிவது அவரையேயாகலின், அதனாற் புகழப்படுவாரும் அவர் என்பதாம்.

குறள் 723 (பகையகத்துச்)

[தொகு]

பகையகத்துச் சாவா ரெளிய ரரிய () பகை அகத்துச் சாவார் எளியர் அரியர்

ரவையகத் தஞ்சா தவர். (03) அவை அகத்து அஞ்சாதவர்.

இதன்பொருள்
பகையகத்துச் சாவார் எளியர்= பகையிடை அஞ்சாது புக்குச் சாவவல்லார் உலகத்துப் பலர்; அவையகத்து அஞ்சாதவர் அரியர்= அவையிடை அஞ்சாது புக்குச் சொல்லவல்லார் சிலர்.
உரை விளக்கம்
அஞ்சாமை 'சாவார்' என்பதனோடும் கூட்டி, அதனாற் சொல்லவல்லார் என்பது வருவித்து உரைக்கப்பட்டது.
இவை மூன்று பாட்டானும் அவை அஞ்சாரது சிறப்புக் கூறப்பட்டது.

குறள் 724 (கற்றார்முற்)

[தொகு]

கற்றார்முற் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற () கற்றார் முன் கற்ற செலச் சொல்லித் தாம் கற்ற

மிக்காருண் மிக்க கொளல். (04) மிக்காருள் மிக்க கொளல்.

இதன்பொருள்
கற்றார் முன் கற்ற செலச் சொல்லி= பல நூல்களையும் கற்றார் அவைக்கண் தாம் கற்றவற்றை அவர் மனம் கொள்ளுமாற்றாற் சொல்லி; தாம் கற்ற மிக்க மிக்காருள் கொளல்= அவற்றின் மிக்க பொருள்களை அம் மிகக் கற்றாரிடத்து அறிந்து கொள்க.
உரை விளக்கம்
எல்லாம் ஒருவர்க்குக் கற்றல் கூடாமையின், வேறு வேறாய கல்வியுடையார் பலரிருந்த அவைக்கண், தாம் கற்றவற்றை அவர்க்கு ஏற்பச் சொல்லுக; சொல்லவே, அவரும் அவைஎல்லாம் சொல்லுவராகலான், ஏனைக் கற்கப் பெறாதன கேட்டறியலாம் என்பதாயிற்று.
இதனால் அதனது ஒருசார் பயன் கூறப்பட்டது.

குறள் 725 (ஆற்றின்)

[தொகு]

ஆற்றி னளவறிந்து கற்க வவையஞ்சா () ஆற்றின் அளவு அறிந்து கற்க அவை அஞ்சா

மாற்றங் கொடுத்தற் பொருட்டு. (05) மாற்றம் கொடுத்தல் பொருட்டு.

இதன்பொருள்
ஆற்றின் அளவு அறிந்து கற்க= சொல் இலக்கணநெறியானே அளவை நூலை அமைச்சர் உட்பட்டுக் கற்க; அவை அஞ்சா மாற்றம் கொடுத்தற் பொருட்டு= வேற்று வேந்தர் அவையிடை அஞ்சாது அவர் சொல்லிய சொற்கு உத்தரம் சொல்லுதற் பொருட்டு.
உரை விளக்கம்
அளவை நூல், சொன்னூல் கற்றே கற்க வேண்டுதலின், அதற்கு அஃது 'ஆறு' எனப்பட்டது. அளக்கும் கருவியை 'அளவு' என்றார், ஆகுபெயரான். அவர் சொல்லை வெல்வதொருசொல் சொல்லலாவது, நியாயத்து வாத செற்ப விதண்டைகளும், சல சாதிகளும் முதலிய கற்றார்க்கே ஆகலின், அவற்றைப் பிழையாமற் கற்க என்பதாம்.
இதனால் அதன் காரணம் கூறப்பட்டது.

குறள் 726 (வாளொடென்)

[தொகு]

வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடெ () வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என்

னுண்ணவை யஞ்சு பவர்க்கு. (06) நுண் அவை அஞ்சுபவர்க்கு.

இதன்பொருள்
வன் கண்ணர் அல்லார்க்கு வாளொடு என்= வன்கண்மை உடையர் அல்லாதார்க்கு வாளோடு என்ன இயைபு உண்டு? நுண்ணவை அஞ்சுபவர்க்கு நூலொடு என்= அதுபோல நுண்ணியாரது அவையை அஞ்சுவார்க்கு நூலோடு என்ன இயைபு உண்டு?
உரை விளக்கம்
இருந்தாரது நுண்மை அவைமேல் ஏற்றப்பட்டது. நூற்கு உரியர் அல்லர் என்பதாம்.

குறள் 727 (பகையகத்துப்)

[தொகு]

பகையகத்துப் பேடிகை யொள்வா ளவையகத் () பகை அகத்துப் பேடி கை ஒள்வாள் அவை அகத்து

தஞ்சு மவன்கற்ற நூல். (07) அஞ்சும் அவன் கற்ற நூல்.

இதன்பொருள்
பகை அகத்துப் பேடி கை ஒள்வாள்= எறியப்படும் பகை நடுவண் அதனை அஞ்சும் பேடி பிடித்த கூர்வாளை ஒக்கும்; அவை அகத்து அஞ்சுமவன் கற்ற நூல்- சொல்லப்படும் அவை நடுவண் அதனை அஞ்சுமவன் கற்ற நூல்.
உரை விளக்கம்
'பேடி' பெண்ணியல்பு மிக்கு ஆணியல்பும் உடையவள். களமும் வாய்த்துத் தானும் நன்றாய் இருந்ததேயாயினும் பிடித்தவள் குற்றத்தால் வாள் சிறப்பின்றாயினாற் போல, அவையும் வாய்த்துத் தானும் நன்றாய் இருந்ததேயாயினும், கற்றவன் குற்றத்தால் நூல் சிறப்பின்றாயிற்று.

குறள் 728 (பல்லவை)

[தொகு]

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையு () பல்லவை கற்றும் பயம் இலரே நல் அவையுள்

ணன்கு செலச்சொல்லா தார். (08) நன்கு செலச் சொல்லாதார்.

இதன்பொருள்
நல் அவையுள் நன்கு செலச் சொல்லாதார்- நல்லார் இருந்த அவைக்கண் நல்ல சொற்பொருள்களைத் தம் அச்சத்தான் அவர்க்கு ஏற்கச் சொல்லமாட்டாதார்; பல்லவை கற்றும் பயம் இலரே= பல நூல்களைக் கற்றார் ஆயினும் உலகிற்குப் பயன்படுதல் இலர்.
உரை விளக்கம்
அறிவார்முன் சொல்லாமையின், கல்வியின் உண்மையறிவார் இல்லை என்பதாம். இனிப் 'பயமிலர்' என்பதற்குக் கல்விப் பயனுடையர் அல்லர் என்று உரைப்பாரும் உளர்.

குறள் 729 (கல்லாதவரிற்)

[தொகு]

கல்லாதவரிற் கடையென்ப கற்றறிந்து () கல்லாதவரின் கடை என்ப கற்று அறிந்தும்

நல்லா ரவையஞ்சு வார். (09) நல்லார் அவை அஞ்சுவார்.

இதன்பொருள்
கற்று அறிந்தும் நல்லார் அவை அஞ்சுவார்= நூல்களைக் கற்று வைத்தும், அவற்றாற் பயன் அறிந்து வைத்தும் நல்லார் இருந்த அவையினை அஞ்சி ஆண்டுச் சொல்லாதாரை; கல்லாதவரின் கடை என்ப= உலகத்தார் கல்லாதவரினும் கடையர் என்று சொல்லுவர்.
உரை விளக்கம்
அக்கல்வி அறிவுகளாற் பயன், தாமும் எய்தாது பிறரை எய்துவிப்பதும் செய்யாது, கல்வித் துன்பமே எய்தி நிற்றலின் 'கல்லாதவரிற் கடை' என உலகம் பழிக்கும் என்பதாம்.

குறள் 730 (உளரெனினு)

[தொகு]

உளரெனினு மில்லாரொ டொப்பர் களனஞ்சிக் () உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் களன் அஞ்சிக்

கற்ற செலச்சொல்லா தார். (10) கற்ற செலச் சொல்லாதார்.

இதன்பொருள்
களன் அஞ்சிக் கற்ற செலச் சொல்லாதார்= அவைக்களத்தை அஞ்சித் தாம் கற்றவற்றை அதற்கு ஏற்கச் சொல்லமாட்டாதார்;

உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர்= உயிர் வாழ்கின்றார் ஆயினும், உலகத்தாரால் எண்ணப்படாமையின் இறந்தாரோடு ஒப்பர்.

உரை விளக்கம்
ஈண்டுக் களன் என்றது, ஆண்டு இருந்தாரை.
இவை ஐந்து பாட்டானும் அவை அஞ்சுவாரது இழிபு கூறப்பட்டது.

அமைச்சியல் முற்றிற்று