திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/69.தூது

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- இரண்டாவது அங்கவியல்[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகாரம் 69. தூது[தொகு]

அதிகாரமுன்னுரை
அஃதாவது, சந்தி விக்கிரகங்கட்கு வேற்று வேந்தரிடைச் செல்வாரது தன்மை. அவ்விரண்டனையும் மேல் வினைசெயல் வகையென்றமையின், இஃது அதன்பின் வைக்கப்பட்டது. தான் வகுத்துக் கூறுவான், கூறியது கூறுவான் எனத் தூது இருவகைப்படும். அவருள் முன்னோன் அமைச்சனோடு ஒப்பான் ஆகலானும், பின்னோன் அவனிற் காற்கூறு குணங் குறைந்தோனாகலானும் இஃது அமைச்சியல் ஆயிற்று.

குறள் 681 (அன்புடைமை)[தொகு]

அன்புடைமை யான்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் அன்பு உடைமை ஆன்ற குடிப் பிறத்தல் வேந்து அவாம்

பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. (01) பண்பு உடைமை தூது உரைப்பான் பண்பு.

தொடரமைப்பு: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்து அவாம் பண்புடைமை தூது உரைப்பான் பண்பு.

இதன்பொருள்
அன்பு உடைமை= தன் சுற்றத்தார் மாட்டு அன்புடையனாதலும்; ஆன்ற குடிப்பிறத்தல்= அமைச்சுப் பூணற்கமைந்த குடியின்கட் பிறத்தலும்; வேந்து அவாம் பண்பு உடைமை= அரசர் சாதி விரும்பும் பண்புடையனாதலும்; தூது உரைப்பான் பண்பு= தூது வார்த்தை சொல்வானுக்கு இலக்கணம்.
உரை விளக்கம்
முன்னைய இரண்டனாலும், முறையே சுற்றத்தார்க்குத் தீங்குவாராமல் தான் பேணிஒழுகலும், தன் முன்னோர் தூதியல் கேட்டறிதலும் பெற்றாம். 'வேந்தவாம் பண்புடைமை' முன்னர் மன்னரைச் சேர்ந்தொழுகற்கட் பெறப்படும். அதனால் வேற்றரசரும் அவன் வயத்தாராதல் பெறுதும்.

குறள் 682 (அன்பறிவா)[தொகு]

'அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்'அன்பு அறிவு ஆராய்ந்த சொல் வன்மை தூது உரைப்பார்க்கு

கின்றி யமையாத மூன்று. (02) இன்றியமையாத மூன்று.

தொடரமைப்பு:

இதன்பொருள்
அம்பு= தம்மரசன் மாட்டு அன்புடைமையும்; அறிவு= அவனுக்கு ஆவன அறியும் அறிவுடைமையும்; ஆராய்ந்த சொல்வன்மை= அவற்றை வேற்றரசரிடைச் சொல்லுங்கால் ஆராய்ந்து சொல்லுதல் வன்மையும் என; தூது உரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று= தூதுரைக்க உரியார்க்கு இன்றியமையாத குணங்கள் மூன்று.
உரை விளக்கம்
ஆராய்தல்: அவற்றிறுகு உடம்படும் சொற்களைத் தெரிதல். இன்றியமையாத மூன்று எனவே, அமைச்சர்க்குச் சொல்லிய பிற குணங்களும் வேண்டும் என்பது பெற்றாம். இவை இரண்டு பாட்டானும் இருவகையார்க்கும் பொதுவிலக்கணம் கூறப்பட்டது.

தொடரமைப்பு:

குறள் 683 (நூலாருள்)[தொகு]

நூலாரு ணூல்வல்ல னாகுதல் வேலாருள் () நூலாருள் நூல் வல்லன் ஆகுதல் வேலாருள்

வென்றி வினையுரைப்பான் பண்பு. (03) வென்றி வினை உரைப்பான் பண்பு.

தொடரமைப்பு:

இதன்பொருள்
வேலாருள் வென்றி வினை உரைப்பான் பண்பு= வேலையுடைய வேற்றரசரிடைச் சென்று தன்அரசனுக்கு வென்றிதரும் வினையைச் சொல்லுவானுக்கு இலக்கணமாவது; நூலாருள் நூல்வல்லன் ஆகுதல்= நீதி நூலையுணர்ந்த அமைச்சரிடைத் தான் அந்நூலை வல்லனாதல்.
உரை விளக்கம்
கோறன்மாலையர் என்பது தோன்ற வேலார் என்றும், தூதுவினை இரண்டும் அடங்க வென்றிவினை என்றும் கூறினார். வல்லனாதல் உணர்வுமாத்திரம் உடையராய அவர்முன் வகுக்குமாற்றல் உடையனாதல்.

குறள் 684 (அறிவுரு)[தொகு]

அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன் () அறிவு உரு ஆராய்ந்த கல்வி இம் மூன்றன்

செறிவுடையான் செல்க வினைக்கு. (04) செறிவு உடையான் செல்க வினைக்கு.

தொடரமைப்பு:

இதன்பொருள்
அறிவு= இயற்கையாகிய அறிவும்; உரு= கண்டார் விரும்பும் தோற்றப் பொலிவும்; ஆராய்ந்த கல்வி= பலரோடும் பலகாலும் ஆராயப்பட்ட கல்வியும் என; இம்மூன்றன் செறிவு உடையான்= நன்கு மதித்தற்கேதுவாய இம்மூன்றனது கூட்டத்தையுடையான்; வினைக்குச் செல்க= வேற்று வேந்தரிடைத் தூது வினைக்குச் செல்க.
உரை விளக்கம்
இம்மூன்றும் ஒருவன்பாற் கூடுதல் அரிதாகலின், செறிவுடையான் என்றார். இவற்றான் நன்கு மதிப்புடையனாகவே, வினை இனிது முடியும் என்பது கருத்து.

குறள் 685 (தொகச்சொல்லி)[தொகு]

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி () தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச் சொல்லி

நன்றி பயப்பதாந் தூது. (05) நன்றி பயப்பதாம் தூது.

தொடரமைப்பு:

இதன்பொருள்
தொகச் சொல்லி= வேற்றரசர்க்குப் பல காரியங்களைச் சொல்லும்வழிக் காரணவகையான் தொகுத்துச் சொல்லியும்; தூவாத நீக்கி நகச்சொல்லி= இன்னாத காரியங்களைச் சொல்லும்வழி வெய்ய சொற்களை நீக்கி இனிய சொற்களான் மனமகிழச் சொல்லியும்; நன்றி பயப்பது தூதாம்= தன் அரசனு்க்கு நன்மையைப் பயப்பவனே தூதனாவான்.
உரை விளக்கம்
பல காரியங்கட்கு உடம்படாதார் பரம்பரையான் அவற்றிற்குக் காரணமாயது ஒன்றைச் சொல்ல, அதனால் அவை விளைய மாறுய்த்துணர அருமையானும் சுருக்கத்தானும் உடம்படுவர். இன்னாதவற்றிற்கு உடம்படாதார் தம் மனமகிழச்சொல்ல, அவ்வின்னாமை காணாது உடம்படுவர் ஆதலின், அவ்விரு வாற்றானும் தன் காரியந் தவறாமல் முடிக்கவல்லான் என்பதாம். எண்ணும்மைகள் விகாரத்தான் தொக்கன.

குறள் 686 (கற்றுக்கண்)[தொகு]

கற்றுக்கண் ணஞ்சான் செலச்சொல்லிக் காலத்தாற் () கற்றுக் கண் அஞ்சான் செலச் சொல்லிக் காலத்தால்

றக்க தறிவதாந் தூது. (06) தக்கது அறிவதாம் தூது.

தொடரமைப்பு:

இதன்பொருள்
கற்று= நீதிநூல்களைக் கற்று; செலச்சொல்லி= தான்சென்ற கருமத்தைப் பகைவேந்தர் மனங்கொளச் சொல்லி; கண்அஞ்சான்= அவர் செயிர்த்து நோக்கின் அந்நோக்கிற்கு அஞ்சாடு; காலத்தால் தக்கது அறிவது தூதாம்= காலத்தோடு பொருந்த அது முடியத்தக்க உபாயம் அறிவானே தூதனாவான்.
உரை விளக்கம்
அவ்வுபாயம் அறிதற்பொருட்டு நீதிநூல் கல்வியும், அதனான் அன்றிப் பிறிதொன்றான் முடியும் காலம்வரின், அவ்வாறு முடிக்கவேண்டுதலின் 'காலத்தாற் தக்கது அறித'லும் இலக்கணம் ஆயின.

குறள் 687 (கடனறிந்து)[தொகு]

கடனறிந்து காலங் கருதி யிடனறிந் () கடன் அறிந்து காலம் கருதி இடன் அறிந்து

தெண்ணி யுரைப்பான் றலை. (07) எண்ணி உரைப்பான் தலை.

தொடரமைப்பு:

இதன்பொருள்
கடன் அறிந்து= வேற்றரசர் இடத்துத் தான்செய்யும் முறைமை அறிந்து; காலம் கருதி= அவர் செவ்வி பார்த்து; இடன் அறிந்து= சென்ற கருமஞ் சொல்லுதற்கேற்ற இடம் அறிந்து; எண்ணி= சொல்லுமாற்றை முன்னே விசாரித்து; உரைப்பான் தலை= அவ்வாறு சொல்லுவான் தூதரின் மிக்கான்.
உரை விளக்கம்
செய்யும் முறைமையாவது. அவர்நிலையுந் தன்னரசன் நிலையும், தன்னிலையும் தூக்கி அவற்றிற்கு ஏற்பக் காணும் முறைமையும் சொல்லுமுறைமையும் முதலாயின. செவ்வி- தன்சொல்லை ஏற்றுக்கொள்ளும் மனநிகழ்ச்சி; அது காலவயத்தது ஆகலின் 'காலம்' என்றார். 'இடம்'- தனக்குத் துணையாவார் உடனாயஇடம். 'எண்ணு'தல்- தான் அதுசொல்லுமாறும், அதற்கு அவர்சொல்லும் உத்தரமும், அதற்குப் பின் தான்சொல்லுவனவுமாக இவ்வாற்றான் மேன்மேல் தானே கற்பித்தல். வடநூலார் இவ்விரு வகையாருடன் ஓலைகொடுத்து நிற்பாரையும் கூட்டித் தாதரைத் தலை, இடை, கடை என்று வகுத்துக் கூறினார்ஆகலின், அவர்மதமும் தோன்றத் 'தலை' என்றார். தூது என்பது, அதிகாரத்தான் வந்தது.
இவை ஐந்து பாட்டானும் தான்வகுத்துக் கூறுவானது இலக்கணம் கூறப்பட்டது.

குறள் 688 (தூய்மை)[தொகு]

தூய்மை துணைமை துணிவுடைமை யிம்மூன்றின் () தூய்மை துணைமை துணிவு உடைமை இம் மூன்றின்

வாய்மை வழியுரைப்பான் பண்பு. (08) வாய்மை வழி உரைப்பான் பண்பு.

தொடரமைப்பு:

இதன்பொருள்
வழி உரைப்பான் பண்பு=தன் அரசன் வார்த்தையை அவன் சொல்லியவாறே வேற்றரசர்க்குச் சென்று சொல்லுவானது இலக்கணமாவன; தூய்மை= பொருள் காமங்களான் தூயனாதலும்; துணைமை= தனக்கு அவர்அமைச்சர் துணையாந் தன்மையும்; துணிவுடைமை= துணிதல்உடைமையு்ம்; இம்மூன்றின் வாய்மை= இம்மூன்றோடு கூடிய மெய்ம்மையும் என இவை.
உரை விளக்கம்
பொருள், காமங்கள்பற்றி வேறுபடக் கூறாமைப் பெருட்டுத் 'தூய்மை'யும், தனனரசனுக்கு உயர்ச்சி கூறியவழி எம்மனோர்க்கு அஃது இயல்பு எனக்கூறி, அவர் வெகுளி நீக்குதற்பொருட்டுத் 'துணைமை'யும், இது சொல்லின் ஏதஞ்செய்வர் என்று ஒழியாமைப்பொருட்டுத் 'துணிவுடைமை'யும், யாவரானும் தேறப்படுதற்பொருட்டு 'மெய்ம்மை'யும் வேண்டப்பட்டன. 'இன்' ஒடுவின் பொருட்கண் வந்தது.

குறள் 689 (விடுமாற்றம்)[தொகு]

விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம் () விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடு மாற்றம்

வாய்சோரா வன்க ணவன். (09) வாய் சோரா வன்கண் அவன்.

தொடரமைப்பு:

இதன்பொருள்
விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான்= தன்அரசன் சொல்லிவிட்ட வார்த்தையை வேற்றரசர்க்குச் சென்று சொல்லவுரியான்; வடு மாற்றம் வாய்சோரா வன்கணவன்= தனக்கு வரும் ஏதத்திற்கு அஞ்சி அவனுக்குத் தாழ்வான வார்த்தையை வாய்சோர்ந்துஞ் சொல்லாத திண்மையை உடையான்.
உரை விளக்கம்
தாழ்வு சாதிதருமம் அன்மையின், 'வடு' என்றார். 'வாய்சோரா' எனக் காரியம் காரணத்துள் அடக்கப்பட்டது.

குறள் 690 (இறுதிபயப்)[தொகு]

' இறுதி பயப்பினு மெஞ்சா திறைவற் இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு '

குறுதி பயப்பதாந் தூது. (10) உறுதி பயப்பதாம் தூது.

தொடரமைப்பு:

இதன்பொருள்
இறுதி பயப்பினும் எஞ்சாது= அவ்வார்த்தை தன் உயிர்க்கு இறுதி தருமாயினும், அதற்கு அஞ்சி ஒழியாது; இறைவற்கு உறுதி பயப்பது தூதாம்= தன்னரசன் சொல்லியவாறே, அவனுக்கு மிகுதியை வேற்றரசரிடைச் சொல்லுவானே தூதன்ஆவான்.
உரை விளக்கம்
'இறுதி பயப்பினும்' என்றதனால், ஏனைய பயத்தல் சொல்லவேண்டா ஆயிற்று.
இவை மூன்று பாட்டானும் கூறியது கூறுவானது இலக்கணம் கூறப்பட்டது.