திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/68.வினைசெயல்வகை
1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து
2.வான்சிறப்பு
3.நீத்தார்பெருமை
4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை
6.வாழ்க்கைத்துணைநலம்
7.மக்கட்பேறு
8.அன்புடைமை
9.விருந்தோம்பல்
10.இனியவைகூறல்
11.செய்ந்நன்றியறிதல்
12.நடுவுநிலைமை
13.அடக்கமுடைமை
14.ஒழுக்கமுடைமை
15.பிறனில்விழையாமை
16.பொறையுடைமை
17.அழுக்காறாமை
18.வெஃகாமை
19.புறங்கூறாமை
20.பயனிலசொல்லாமை
21.தீவினையச்சம்
22.ஒப்புரவறிதல்
23.ஈகை
24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை
26.புலான்மறுத்தல்
27.தவம்
28.கூடாவொழுக்கம்
29.கள்ளாமை
30.வாய்மை
31.வெகுளாமை
32.இன்னாசெய்யாமை
33.கொல்லாமை
34.நிலையாமை
35.துறவு
36.மெய்யுணர்தல்
37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்
பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி
40.கல்வி
41.கல்லாமை
42.கேள்வி
43.அறிவுடைமை
44.குற்றங்கடிதல்
45.பெரியாரைத்துணைக்கோடல்
46.சிற்றினஞ்சேராமை
47.தெரிந்துசெயல்வகை
48.வலியறிதல்
49.காலமறிதல்
50.இடனறிதல்
51.தெரிந்துதெளிதல்
52.தெரிந்துவினையாடல்
53.சுற்றந்தழால்
54.பொச்சாவாமை
55.செங்கோன்மை
56.கொடுங்கோன்மை
57.வெருவந்தசெய்யாமை
58.கண்ணோட்டம்
59.ஒற்றாடல்
60.ஊக்கமுடைமை
61.மடியின்மை
62.ஆள்வினையுடைமை
63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு
65.சொல்வன்மை
66.வினைத்தூய்மை
67.வினைத்திட்பம்
68.வினைசெயல்வகை
69.தூது
70.மன்னரைச்சேர்ந்தொழுகல்
71.குறிப்பறிதல்
72.அவையறிதல்
73.அவையஞ்சாமை
74.நாடு
75.அரண்
76.பொருள்செயல்வகை
77.படைமாட்சி
78.படைச்செருக்கு
79.நட்பு
80.நட்பாராய்தல்
81.பழைமை
82.தீநட்பு
83.கூடாநட்பு
84.பேதைமை
85.புல்லறிவாண்மை
86.இகல்
87.பகைமாட்சி
88.பகைத்திறந்தெரிதல்
89.உட்பகை.
90.பெரியாரைப்பிழையாமை
91.பெண்வழிச்சேறல்
92.வரைவின்மகளிர்
93.கள்ளுண்ணாமை
94.சூது
95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை
97.மானம்
98.பெருமை
99.சான்றாண்மை
100.பண்புடைமை
101.நன்றியில்செல்வம்
102.நாணுடைமை
103.குடிசெயல்வகை
104.உழவு
105.நல்குரவு
106.இரவு
107.இரவச்சம்
108.கயமை
1.களவியல்
109.தகையணங்குறுத்தல்
110.குறிப்பறிதல்
111.புணர்ச்சிமகிழ்தல்
112.நலம்புனைந்துரைத்தல்
113.காதற்சிறப்புரைத்தல்
114.நாணுத்துறவுரைத்தல்
115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை
117.படர்மெலிந்திரங்கல்
118.கண்விதுப்பழிதல்
119.பசப்புறுபருவரல்
120.தனிப்படர்மிகுதி
121.நினைந்தவர்புலம்பல்
122.கனவுநிலையுரைத்தல்
123.பொழுதுகண்டிரங்கல்
124.உறுப்புநலனழிதல்
125.நெஞ்சொடுகிளத்தல்
126.நிறையழிதல்
127.அவர்வயின்விதும்பல்
128.குறிப்பறிவுறுத்தல்
129.புணர்ச்சிவிதும்பல்
130.நெஞ்சொடுபுலத்தல்
131.புலவி
132.புலவிநுணுக்கம்
133.ஊடலுவகை
திருக்குறள் பொருட்பால்- இரண்டாவது அங்கவியல்
[தொகு]பரிமேலழகர் உரை
[தொகு]அதிகாரம் 68. வினைசெயல்வகை
[தொகு]- அதிகார முன்னுரை
- அஃதாவது, அத்திட்பமுடைய அமைச்சன் அவ்வினையைச் செய்யுந்திறம். அதிகாரமுறைமையும் இதனானே விளங்கும்.
குறள் 671 (சூழ்ச்சி)
[தொகு]சூழ்ச்சி முடிவுதுணி வெய்த லத்துணிவு சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் அத் துணிவு
தாழ்ச்சியுட் டங்குத றீது. (01) தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
தொடரமைப்பு: சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல், அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
- இதன்பொருள்
- சூழ்ச்சி முடிவு துணிவெய்தல்= விசாரத்திற்கு எல்லையாவது, விசாரிக்கின்றான் இனி இது தப்பாது என்னும் துணிவினைப் பெறுதல்; அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது= அங்ஙனந் துணிவு பெற்ற வினை, பின் நீட்டிப்பின்கண் தங்குமாயின், அது குற்றமுடைத்து.
- உரை விளக்கம்
- 'சூழ்ச்சி முடிவு துணிவெய்தல்' எனவே, துணிவெய்தும் அளவுஞ் சூழவேண்டும் என்பது பெற்றாம். பின்னர்த் `துணிவு` ஆகுபெயர். நீட்டிப்புச் செய்யுங் காலத்துச் செய்யாமை. அஃதுள்ளவழிக் காலக் கழிவாகலானும், பகைவர் அறிந்து அழித்தலானும் முடியாமையின் அதனைத் தீது என்றார்.
குறள் 672 (தூங்குக)
[தொகு]தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்குக தூங்கிச் செயல்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை. (02) தூங்காது செய்யும் வினை.
தொடரமைப்பு: தூங்கிச் செயற்பால தூங்குக, தூங்காது செய்யும்வினை தூங்கற்க.
- இதன்பொருள்
- தூங்கிச் செயற்பால தூங்குக= நீட்டித்துச் செய்யும் பகுதியவாய வினைகளுள் நீட்டிக்க; தூங்காது செய்யும் வினை தூங்கற்க= நீட்டியாது செய்யும் வினைகளுள் நீட்டியாது ஒழிக.
- உரை விளக்கம்
- இருவழியும் இறுதிக்கண் தொக்க ஏழாவது விரி்ககப்பட்டது. இருவகை வினைகளும் வலியானும் காலத்தானும் அறியப்படும். மாறிச் செய்யின், அவை வாயா என்பது கருத்து. மேல் தூங்காமை என்றார், ஈண்டதனைப் பகுத்துக் கூறினார்.
- இவை இரண்டுபாட்டானும் பொதுவகையால் வினைசெய்யும் திறம் கூறப்பட்டது.
குறள் 673 (ஒல்லும்வா)
[தொகு]ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே யொல்லாக்கால் ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல். (03) செல்லும் வாய் நோக்கிச் செயல்.
தொடரமைப்பு: ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்று, ஒல்லாக்கால் செல்லும் வாய் நோக்கிச் செயல்.
- இதன்பொருள்
- ஒல்லும் வாய் எல்லாம் வினைநன்று= வினைசெய்யுங்கால், இயலும் இடத்தெல்லாம் போராற் செய்தல் நன்று; ஒல்லாக்கால் செல்லும் வாய்நோக்கிச் செயல்= அஃது இயலாவிடத்து, ஏனை மூன்று உபாயத்துள்ளும் அது முடிவதோர் உபாயநோக்கிச் செய்க.
- உரை விளக்கம்
- இயலுமிடம், பகையில் தான் வலியனாய காலம். அக்கலத்துத் தண்டமே நன்று என்றார், அஞ்சுவது அதற்கேயாகலி்ன். இயலாவிடம் ஒத்தகாலமும், மெலியகாலமும். அவ்விரண்டு காலத்தும் சாம பேத தானங்களுள் அதுமுடியும் உபாயத்தாற் செய்க என்றார், அவை ஒன்றற்கொன்று வேறுபாடு உடையவேனும் உடம்படுத்தற் பயத்தான் தமக்குள் ஒக்குமாகலின். இதனால் வலியான், ஒப்பான், மெலியான் என நிலை மூவகைத்து என்பதூஉம், அவற்றுள் வலியது சிறப்பும் கூறப்பட்டன.
குறள் 674 (வினைபகை)
[தொகு]வினைபகை யென்றிரண் டினெச்ச நினையுங்காற் வினை பகை என்று இரண்டின் எச்சம் நினையும் கால்
றீயெச்சம் போலத் தெறும். (04) தீ எச்சம் போலத் தெறும்.
தொடரமைப்பு: வினை பகை என்று இரண்டின் எச்சம், நினையுங்கால் தீ எச்சம் போலத் தெறும்.
- இதன்பொருள்
- வினை பகை என்ற இரண்டின் எச்சம்= செய்யத் தொடங்கிய வினையும், களையத்தொடங்கிய பகையும் என்று சொல்லப்பட்ட இரண்டனது ஒழிவும்; நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும்= ஆராயுங்கால் தீயினது ஒழிவுபோலப் பின் வளர்ந்து கெடுக்கும்.
- உரை விளக்கம்
- இனி இக்குறை என்செய்வது என்று இகழ்ந்து ஒழியற்க, முடியச் செய்க என்பதாம். பின் வளர்தல் ஒப்புமைபற்றிப் பகையெச்சமும் உடன் கூறினார். இதனான் வலியான் செய்யுந்திறம் கூறப்பட்டது.
குறள் 675 (பொருள்கருவி)
[தொகு]'பொருள்கருவி காலம் வினையிட னொடைந்து'பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்
மிருடீர வெண்ணிச் செயல். (05) இருள் தீர எண்ணிச் செயல்.
தொடரமைப்பு: பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும், இருள் தீர எண்ணிச் செயல்.
- இதன்பொருள்
- பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்= வினைசெய்யுமிடத்துப் பொருளும் கருவியும் காலமும் வினையும் இடனுமாகிய இவ்ஐந்தனையும்; இருள் தீர எண்ணிச் செயல்= மயக்கம் அற எண்ணிச் செய்க.
- உரை விளக்கம்
- எண்ணொடு பிற வழியும் கூட்டப்பட்டது. 'பொருள்' அழியும் பொருளும் ஆகும் பொருளும். 'கருவி' தன் தானையும், மாற்றார் தானையும். 'காலம்' தனக்கு ஆம் காலமும், அவர்க்கு ஆம் காலமும். 'வினை' தான் வல்ல வினையும், அவர் வல்லவினையும். 'இடம்' தான் வெல்லும் இடமும், அவர் வெல்லும் இடமும். இவற்றைத் தான் வென்றிஎய்தும் திறத்திற் பிழையாமல் எண்ணிச் செய்க என்பதாம்.
குறள் 676 (முடிவுமிடை)
[தொகு]முடிவு மிடையூறு முற்றியாங் கெய்தும் () முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல். (06) படுபயனும் பார்த்துச் செயல்.
தொடரமைப்பு: முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல்.
- இதன்பொருள்
- முடிவும்= வினை செய்யுங்கால் அது முடிதற்கு உளதாம் முயற்சியும்; இடையூறும்= அதற்கு வரும் இடையூறும்; முற்றியாங்கு எய்தும் படுபயனும்= அது நீங்கி முடிந்தாற் தான் எய்தும் பெரும்பயனும்; பார்த்துச் செயல்= சீர்தூக்கிச் செய்க.
- உரை விளக்கம்
- 'முடிவு' ஆகுபெயர். முயற்சி இடையூறுகளது அளவிற் பயனது அளவு பெரிதாயிற் செய்க என்பதாம்.
குறள் 677 (செய்வினை)
[தொகு]செய்வினை செய்வான் செயன்முறை யவ்வினை செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
யுள்ளறிவா னுள்ளங் கொளல். (07) உள்ளறிவான் உள்ளம் கொளல்.
தொடரமைப்பு: செய்வினை செய்வான் செயன்முறை, அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல்.
- இதன்பொருள்
- செய்வினை செய்வான் செயன்முறை= அவ்வாற்றாற் செய்யப்படும் வினையைத் தொடங்கினான் செய்யும் முறைமையாவது; அவ்வினை உள் அறிவான் உள்ளம் கொளல்= அதனது உளப்பாட்டினை அறிவான் கருத்தினைத் தானறிதல்.
- உரை விளக்கம்
- அவ்வாறு என்றது பொருள் முதலிய எண்ணலையும், முடிவு முதலிய தூக்கலையும். 'உள்ளறிவான்' முன்செய்து போந்தவன். அவன் கருத்து, அவன் செய்து போந்த உபாயம். அதனை அறியவே, தானும் அதனாற் செய்து பயன் எய்தும் என்பதாம்.
- இவை மூன்று பாட்டானும் ஒப்பான் செய்யும் திறம் கூறப்பட்டது.
குறள் 678 (வினையான்)
[தொகு]வினையான் வினையாக்கிக் கோட னனைகவுள் வினையான் வினை ஆக்கிக் கோடல் நனை கவுள்
யானையால் யானையாத் தற்று. (08) யானையால் யானை யாத்து அற்று.
தொடரமைப்பு: வினையான் வினை ஆக்கிக் கோடல், நனை கவுள் யானையால் யானை யாத்தற்று
- இதன்பொருள்
- வினையான் வினை ஆக்கிக் கோடல்= செய்கின்ற வினையாலே அன்னது பிறிதும் ஓர் வினையை முடித்துக் கொள்க; நனை கவுள் யானையால் யானை யாத்தற்று= அது மதத்தான் நனைந்த கபோலத்தினையுடைய யானையாலே அன்னது பிறிதுமோர் யானையைப் பிணித்ததனோடு ஒக்கும்.
- உரை விளக்கம்
- பிணித்தற்கு அருமை தோன்ற 'நனைகவுள்' என்றார்?. 'நனைகவுள்' என்பது பின்னும் கூட்டப்பட்டது. தொடங்கிய வினையானே, பிறிதும் ஓர் வினையை முடித்தற்கு உபாயம் ஆமாறு எண்ணிச் செய்க; செய்யவே, அம்முறையான் எல்லாவினையும் எளிதில் முடியும் என்பதாம்.
குறள் 679 (நட்டார்க்கு)
[தொகு]'நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே'நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
யொட்டாரை யொட்டிக் கொளல். (09) ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
தொடரமைப்பு: நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே, ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
- இதன்பொருள்
- நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே= வினைசெய்வானால், தன் நட்டார்க்கு இனியவற்றைச் செய்தலினும் விரைந்து செய்யப்படும்; ஒட்டாரை ஒட்டிக் கொளல்= தன் பகைவரோடு ஒட்டாரைத் தனக்கு நட்பாக்கிக் கோடல்.
- உரை விளக்கம்
- அவ்வினை வாய்த்தற்பயத்தவாய இவ்விரண்டும் பகைவர்க்குத் தன் மெலிவு புலனாவதன் முன்னே செய்க என்பார், 'விரைந்தது' என்றார்; விரைந்து செய்யப்படுவது என்றவாறு. வினைசெய்யுந்திறம் ஆகலின் பகைவரோடு ஒட்டார் ஆயிற்று. தன் ஒட்டார், பிறருட் கூடாமல் மாற்றிவைத்தல் எனினும் அமையும்.
குறள் 680 (உறைசிறியா)
[தொகு]'உறைசிறியா ருண்ணடுங்க லஞ்சிக் குறைபெறிற்'உறை சிறியார் உள் நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து. (10) கொள்வர் பெரியார்ப் பணிந்து.
தொடரமைப்பு: உறை சிறியார் உள் நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் பெரியார்ப் பணிந்து கொள்வர்.
- இதன்பொருள்
- உறை சிறியார்= ஆளுமிடம் சிறியராய அமைச்சர்; உள் நடுங்கல் அஞ்சி= தம்மின் வலியராய் எதிர்ந்தவழித் தம் பகுதி நடுங்கலை அஞ்சி; குறை பெறின் பெரியார்ப்பணிந்து கொள்வர்= அந்நிலைக்கு வேண்டுவதாய சந்து கூடுமாயின், அவரைத் தாழ்ந்து அதனை ஏற்றுக் கொள்வர்.
- உரை விளக்கம்
- இடம்- நாடும் அரணும். அவற்றது சிறுமை ஆள்வார்மேல் ஏற்றப்பட்டது. மெலியாரோடு சந்திக்குவலியார் இயைவது அரிதாகலின், 'பெறின்' என்றார். அடியிலே மெலியராயினார், தம் பகுதியும் அஞ்சிநீங்கின் முதலொடுங் கெடுவார் ஆகலின் அது வாராமற் சிறிது கொடுத்துஞ் சந்தினை ஏற்றுக் கொள்க என்பதாம். பணிதல் மானமுடையார்க்குக் கருத்தன்மையின், கொள்வர் என உலகியலாற் கூறினார்.
- இவை மூன்று பாட்டானும் மெலியான் செய்யும் திறன் கூறப்பட்டது.