திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/23.ஈகை

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


23. ஈகை[தொகு]

அதிகார முன்னுரை
அஃதாவது, வறியராய் ஏற்றார்க்கு மாற்றாது கொடுத்தல். இது மறுமை நோக்கியது ஆகலின், இம்மை நோக்கிய ஒப்புரவுஅறிதலின் பின் வைக்கப்பட்டது.

குறள்: 221 (வறியார்க்கொன்)[தொகு]

வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து (01)
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து.
பரிமேலழகர் உரை
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை= ஒரு பொருளும் இல்லாதார்க்கு அவர் வேண்டியது ஒன்றைக் கொடுபபதே பிறர்க்குக் கொடுததலாவது;
மற்று எல்லாம்குறியெதிர்ப்பை நீரது உடைத்து= அஃது ஒழிந்த எல்லாக் கொடையும் குறியெதிர்ப்பைக் கொடுக்கும் நீர்மையை உடைத்து.
பரிமேலழகர் உரை விளக்கம்
வறியவர் அல்லாதார்க்கு ஒரு பயன் நோக்கிக் கொடுப்பன. 'குறியெதிர்ப்பா'வது அளவு குறித்து வாங்கி அவ்வாங்கியவாறே எதிர்கொடுப்பது. 'நீரது' என்புழி 'அது' என்பது பகுதிப்பொருள் விகுதி. பின்னும் தன்பால் வருதலின் குறியெதிர்ப்பை 'நீரது உடைத்து' என்றார். இதனால் ஈகையது இலக்கணம் கூறப்பட்டது

குறள்: 222 (நல்லாறெனினுங்)[தொகு]

நல்லா றெனினுங் கொளறீது மேலுலகம்
இல்லெனினு மீதலே நன்று (02)
நல் ஆறு எனினும் கொளல் தீது மேல் உலகம்
இல் எனினும் ஈதலே நன்று.
பரிமேலழகர் உரை
கொளல் நல் ஆறு எனினும் தீது= ஏற்றல் வீட்டுலகிற்கு நல்லநெறி என்பார் உளராயினும் அது தீது;
மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று= ஈந்தார்க்கு அவ்வுலகு எய்துதல் இல்லை என்பார் உளராயினும் ஈதலே நன்று.
பரிமேலழகர் உரை விளககம்
எனினும் என்பது இருவழியும் அங்ஙனம் கூறுவார் இன்மை விளக்கி நின்றது. பிரிநிலை ஏகாரத்தால் பிற அறங்களின் ஈதல் சிறந்தது என்பது பெற்றாம். நல்லது கூறுவார் தீயதும் உடன் கூறினார்.

குறள்: 223 (இலனென்னும்)[தொகு]

இலனென்னு மெவ்வ முரையாமை யீதற்
குலனுடையான் கண்ணே யுள (03)
இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன் உடையான் கண்ணே உள.
பரிமேலழகர் உரை
இலன் என்னும் எவ்வம் உரையாமை= யான் வறியன் என்று இரப்பான் சொல்லும் இளிவரவைத் தான் பிறர்கண் சொல்லாமையும்;
ஈதல்= அதனைத் தன்கண் சொன்னார்க்கு மாற்றாது ஈதலும்,
உள குலன் உடையான் கணணே= இவை இரண்டும் உளவாவன குடிப்பிறந்தான் கண்ணே.
பரிமேலழகர் உரைவிளக்கம்
மேல் 'தீது' என்றது ஒழிதற்கும், 'நன்று' என்றது செய்தற்கும் உரியவனை உணர்த்தியவாறு. இனி, 'இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்' என்பதற்கு அவ்விளிவரவை ஒருவன் தனக்குச்சொல்வதற்கு முன்னே அவன் குறிப்பறிந்து கொடுத்தல் எனவும், அதனைப்பின்னும் பிறன்ஒருவன்பால் சென்று அவன் உரையாவகையால் கொடுத்தல் எனவும், "யான் இதுபொழுது பொருளுடையவன் அல்லேன்", எனக் கரப்பார் சொல்லும் இளிவரவைச் சொல்லாது கொடுத்தல் எனவும் உரைப்பாருமுளர். அவர் 'ஈதல்' என்பதனைப் பொருட்பன்மை பற்றி வந்த பன்மையாக உரைப்பர்.

குறள்:224 (இன்னாதிரக்கப்)[தொகு]

இன்னா திரக்கப் படுத லிரந்தவ
ரின்முகங் காணு மளவு (04)
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன் முகம் காணும் அளவு.
பரிமேலழகர் உரை
இரக்கப் படுதல் இனனாது= இரத்தலேயன்றி இரக்கப்படுதலும் இனிது அன்று;
இரந்தவர் இன் முகம் காணும் அளவு= ஒரு பொருளை இரந்தவர் அது பெற்றதனால் இனிதாகிய அவர் முகங் காணும் அளவும்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
எச்ச உம்மையும், முற்றும்மையும் விகாரத்தால் தொக்கன. இரக்கப்படுதல்- இரப்பார்க்கு ஈவல் என்றுஇருத்தல். அதனை 'இன்னாது' என்றது, "எல்லாம் இரப்பார்க்கு ஒன்று ஈயாமை (நாலடியார், 145) கூடுங்கொல்லோ" எனனும் அச்சம் நோக்கி. எனவே, எல்லாப்பொருளும் ஈதல் வேண்டும் என்பது பெறப்பட்டது.

குறள்: 225 (ஆற்றுவாராற்றல்)[தொகு]

ஆற்றுவா ராற்றல் பசியாற்ற லப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின் (05)
ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
பரிமேலழகர் உரை
ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்= தவத்தான் வலியார்க்கு வலியாவது, தம்மையுற்ற பசியைப் பொறுத்தல்.
அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்= அவ்வலிதான் அங்ஙனம் பொறுத்தற்கு அரிய பசியை ஈகையான் ஒழிப்பாரது வலிக்குப்பின்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
தாமும் பசித்துப் பிறரையும் அது தீர்க்கமாட்டாதார் ஆற்றலின், தாமும் பசியாது பிறரையும் அது தீர்ப்பார் ஆற்றல் நன்று என்பதாம்.

குறள்: 226 (அற்றாரழி)[தொகு]

அற்றா ரழிபசி தீர்த்தலஃ தோருவன்
பெற்றான் பொருள்வைப் புழி (06)
அற்றார் அழி பசி தீர்த்தல் அஃது ஒருவன்
பெற்றான் பொருள் வைப்புழி.
பரிமேலழகர் உரை
அற்றார் அழி பசி தீர்த்தல்= வறியாரது மிக்க பசியை அறன் நோக்கித் தீர்க்க;
பொருள் பெற்றான் ஒருவன் வைப்புழி அஃது= பொருள் பெற்றான் ஒருவன் அதனைத் தனக்கு உதவ வைக்கும் இடம் அவ்வறம் ஆகலான்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
எல்லா நன்மைகளும் அழிய வருதலின் 'அழிபசி' என்றார். 'அறம் நோக்கி' என்பது எஞ்ச நின்றது. அற்றார் அழிபசி தீர்த்த பொருள் பின் தனக்கே வந்து உதவும் என்பதாம்.

குறள்: 227 (பாத்தூண்)[தொகு]

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
தீப்பிணி தீண்ட லரிது (07)
பாத்து ஊண் மரீஇயவனைப் பசி என்னும்
தீப் பிணி தீண்டல் அரிது
பரிமேலழகர் உரை
பாத்து ஊண் மரீஇயவனை= எஞ்ஞான்றும் பகுத்து உண்டல் பயி்ன்றவனை;
பசி என்னும் தீப் பிணி தீண்டல் அரிது= பசி என்று சொல்லப்படும் தீய நோய் தீண்டல் இல்லை.
பரிமேலழகர் உரை விளக்கம்
இவ்வுடம்பின் நின்று ஞான ஒழுக்கங்களை அழித்து, அதனால்வரும் உடம்புகட்கும் துன்பம் செய்தலின், 'தீப்பிணி' எனப்பட்டது. தனக்கு மருத்துவன் தான் ஆகலின் பசிப்பிணி அணுகாது என்பதாம்.
இவை ஆறு பாட்டானும் ஈதலின் சிறப்புக் கூறப்பட்டது.

குறள்: 228 (ஈத்துவக்கும்)[தொகு]

ஈத்துவக்கு மின்ப மறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர் (08)
ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல் தாம் உடைமை
வைத்து இழக்கும் வன்கணவர்.
பரிமேலழகர் உரை
தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கணவர்= தாம் உடைய பொருளை ஈயாது வைத்துப் பின் இழந்துபோம் அருளிலாதார்;
ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல்= வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து, அவர் உவத்தலான் அருளுடையார் எய்தும் இன்பத்தினைக் கண்டறியார் கொல்லோ?
பரிமேலழகர் உரைவிளக்கம்
'உவக்கும்' என்பது காரணத்தின்கண் வந்த பெயரெச்சம். அஃது 'இன்பம்' என்னும் காரியப்பெயர் கொண்டது. அறிந்தாராயின், தாமும் அவ்வின்பத்தை எய்துவதல்லது வைத்து இழவார் என்பது கருத்து.

குறள்: 229 (இரத்தலின்)[தொகு]

இரத்தலி னின்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல் (09)
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.
பரிமேலழகர் உரை
நிரப்பிய தாமே தமியர் உணல்= பொருட்குறை நிரப்பவேண்டி வறியார்க்கு ஈயாது தாமே தனித்து உண்டல்;
இரத்தலின் இன்னாது மன்ற= ஒருவர்க்குப் பிறர்பால் சென்று இரத்தலினும் இன்னாது ஒருதலையாக.
பரிமேலழகர் உரைவிளக்கம்
பொருட்குறை நிரப்புதலாவது, ஒரோ எண்களைக் குறித்து அத்துணை ஈட்டுதும் என ஈட்டத்தையே மேற்கொண்டு இவறிக் கூட்டுதல். தனித்தல், பிறரை ஒழித்தல். இரத்தற்கு உள்ளது அப்பொழுதை இளிவரவே, பின் நல்குரவு இல்லை. தமியர் உண்டற்கு அவை இரண்டும் உளவாம் ஆகலின், 'இரத்தலின் இன்னாது' என்றார். 'நிரப்பிய' என்பதற்குத் 'தேடிய உணவுகளை' என்று உரைப்பாரும் உளர்.

குறள்: 230 (சாதலின்)[தொகு]

சாதலி னின்னாத தில்லை யினிததூஉ
மீத லியையாக் கடை (10)
சாதலின் இன்னாதது இல்லை இனிது அதூஉம்
ஈதல் இயையாக் கடை.
பரிமேலழகர் உரை
சாதலின் இன்னாதது இல்லை= ஒருவற்குச் சாதல்போல இன்னாதது ஒன்று இல்லை;
அதூஉம் ஈதல் இயையாக்கடை இனிது= அத்தன்மைத்தாகிய சாதலும், வறியார்க்கு ஒன்று ஈதல் முடியாதவழி இனிது.
பரிமேலழகர் உரைவிளக்கம்
பிறர்க்குப் பயன்படாத உடற்பொறை நீங்குதலான் 'இனிது' எனறார்.
இவை மூன்றுபாட்டானும் ஈயாமையின் குற்றம் கூறப்பட்டது.