திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/86.இகல்

விக்கிமூலம் இலிருந்து

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- அங்கவியல்[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகாரம் 86.இகல்[தொகு]

அதிகார முன்னுரை
இனி, அவற்றான் வரும் வெகுளி காமங்களுள் அரசர்க்கு வெகுளி பெரும்பான்மைத்து ஆகலின், அதனான் வருவன கூறுவான் தொடங்கி, முதற்கண் இகல் கூறுகின்றார். அஃதாவதும, இருவர் தம்முள் பொருது வலிதொலைதற்கு ஏதுவாய மாறுபாடு.

குறள் 851 (இகலென்ப )[தொகு]

இகலென்ப வெல்லா வுயிர்க்கும் பகலென்னும் ( ) இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும்

பண்பின்மை பாரிக்கு நோய். (01) பண்பு இன்மை பாரிக்கும் நோய்.

தொடரமைப்பு: எல்லா உயிர்க்கும் பகல் என்னும் பண்பு இன்மை பாரிக்கும் நோய், இகல் என்ப.

இதன்பொருள்
எல்லா உயிர்க்கும் பகல் என்னும் பண்பு இன்மை பாரிக்கும் நோய்= எல்லா உயிர்கட்கும், பிறஉயிர்களோடு கூடாமை என்னும் தீக்குணத்தை வளர்க்கும் குற்றம்; இகல் என்ப= இகல்என்று சொல்லுவர் நூலோர்.
உரைவிளக்கம்
மக்களையும், விலங்குகளோடு ஒப்பிப்பது என்பது தோன்ற 'எல்லாஉயிர்க்கும்' என்றும், பகுதிக்குணத்தை இடைநின்று விளைத்தலின் 'பகல் என்னும் பண்பின்மை' என்றும் கூறினார். நற்குணமின்மை அருத்தாபத்தியான் தீக்குணம் ஆயிற்று. இதனால் இகலது குற்றம் கூறப்பட்டது.

குறள் 852 (பகல்கருதிப் )[தொகு]

பகல்கருதிப் பற்றா செயினு மிகல்கருதி ( ) பகல் கருதிப் பற்றா செயினும் இகல் கருதி

யின்னாசெய் யாமை தலை. (02) இன்னா செய்யாமை தலை.

தொடரமைப்பு: பகல் கருதிப் பற்றா செயினும், இகல் கருதி இன்னா செய்யாமை தலை.

இதன்பொருள்
பகல் கருதிப் பற்றா செயினும்= தம்மோடு கூடாமையைக் கருதி ஒருவன் வெறுப்பன செய்தானாயினும்; இகல் கருதி இன்ன செய்யாமை தலை= அவனோடு மாறுபடுதலைக் குறித்துத் தாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமை உயர்ந்தது.
உரை விளக்கம்
செய்யின், பகைமை வளரத் தாம் தாழ்ந்துவரலானும், ஒழியின் அப் பற்றாதன தாமே ஓய்ந்துபோகத் தாம் ஓங்கிவரலானும் 'செய்யாமை தலை' என்றார். பற்றாத என்பது விகாரமாயிற்று.

குறள் 853 ( இகலென்னு)[தொகு]

இகலென்னு மெவ்வநோய்நீக்கிற் றவலில்லாத் ( ) இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் தவல் இல்லாத்

தாவில் விளக்கந் தரும். (03) தாவில் விளக்கம் தரும்.

தொடரமைப்பு: இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின், தவல் இல்லாத் தாவில் விளக்கம் தரும்

இதன்பொருள்
இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின்= மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பத்தைச் செய்யு நோயை ஒருவன் தன்மனத்தினின்று நீக்குமாயின்; தவல் இல்லாத் தாவில் விளக்கம் தரும்= அவனுக்கு அந்நீக்குதல், எஞ்ஞான்றும் உளனாதற்கு ஏதுவாய புகழைக் கொடுக்கும்.
உரை விளக்கம்
தவல் இல்லாமை அருத்தாபத்தியான் அப்பொருட்டாயிற்று. தாவில் விளக்கம் வெளிப்படை. யாவரு நண்பர்ஆவார், ஆகவே, எல்லாச் செல்வமும் எய்திக் கொடை முதலிய காரணங்களான் புகழ்பெறும் என்பதாம்.

குறள் 854 ( இன்பத்துள்)[தொகு]

இன்பத்து ளின்பம் பயக்கு மிகலென்னுந் ( ) இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல் என்னும்

துன்பத்துட் டுன்பங் கெடின். (04) துன்பத்துள் துன்பம் கெடின்.

தொடரமைப்பு: இகல் என்னும் துன்பத்துள் துன்பம் கெடின், இன்பத்துள் இன்பம் பயக்கும்.

இதன்பொருள்
இகல் என்னும் துன்பத்துள் துன்பம் கெடின்= மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க துன்பம் ஒருவனுக்கு இல்லையாயின்; இன்பத்துள் இன்பம் பயக்கும்= அவ்வின்மை அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பத்தினைக் கொடுக்கும்.
உரை விளக்கம்
'துன்பத்துட் துன்பம்': பலரொடு பொருது வலிதொலைதலான் யாவர்க்கும் எளியனாய் உறுவது. அதனை இடையின்றியே பயத்தலின், இகல் என்னும் என்றார். 'இன்பத்துள் இன்பம்': யாவரு நட்பாகலின் எல்லாப் பயனும் எய்தியுறுவது.

குறள் 855 ( இகலெதிர்)[தொகு]

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே () இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை யாரே

மிகலூக்குந் தன்மை யவர். (05) மிகல் ஊக்கும் தன்மையவர்.

‘’’தொடரமைப்பு:’’’ இகல் எதிர் சாய்ந்து ஒழுகவல்லாரை, மிகல் ஊக்கும் தன்மையவர் யார்.

இதன்பொருள்
இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை= தம்முள்ளது மாறுபாடு தோன்றியவழி அதனை ஏற்றுக்கொள்ளாது சாய்ந்து ஒழுகவல்லாரை; மிகல் ஊக்கும் தன்மையவர் யார்= வெல்லக் கருதும் தன்மயுடையார் யாவர்?
உரை விளக்கம்
இகலை ஒழிந்து ஒழுகல் வேந்தார்க்கு எவ்வாற்றானும் அரிதாகலின், வல்லாரை என்றும், யாவர்க்கும் நண்பர் ஆகலின், அவரை வெல்லக் கருதுவார் யாரும்இல்லை என்றும் கூறினார்.
இவை நான்கு பாட்டானும் இகலாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.

குறள் 856 (இகலின் )[தொகு]

இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை ( ) இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை

தவலுங் கெடலு நணித்து. (06) தவலும் கெடலும் நணித்து.

‘’’தொடரமைப்பு:’’’இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை, தவலும் கெடலும் நணித்து.

இதன்பொருள்
இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை= பிறரொடு மாறுபடுதற்கண் மிகுதல் எனக்கு இனிதென்று அதனைச் செய்வானது உயிர்வாழ்க்கை; தவலும் கெடலும் நணித்து= பிழைத்தலும் முற்றக்கெடுதலும் சிறிது பொழுதுள் உளவாம்.
உரை விளக்கம்
மிகுதல்: மேன்மேல் ஊக்குதல். இனிது என்பது, தான் வேறல் குறித்தல். பிழைத்தல்- வறுமையான் இன்னாதாதல். முற்றக்கெடுதல்- இறத்தல். இவற்றோடு நணித்து என்பதனைத் தனித்தனிக் கூட்டி உம்மைகளை எதிரதும் இறந்ததும் தழீஇய எச்சவும்மைகளாக உரைக்க. பொருட்கேடும், உயிர்க்கேடும் அப்பொழுதே உளவாம் என்பதாம்.

குறள் 857 (மிகன்மேவன் )[தொகு]

மிகன்மேவன் மெய்ப்பொருள் காண ரிகன்மேவ ( ) மிகல் மேவல் மெய்ப் பொருள் காணார் இகல் மேவல்

லின்னா வறிவி னவர். (07) இன்னா அறிவினவர்.

‘’’தொடரமைப்பு:’’’இகல் மேவல் இன்னா அறிவினவர், மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார்

இதன்பொருள்
இகல் மேவல் இன்னா அறிவினவர்= இகலோடு மேவுதலையுடைய இன்னாத அறிவினை உடையார்; மிகல் மேவல் மெய்ப்பொரு்ள் காணார்= வெற்றி பொருந்தலையுடைய நீதிநூற் பொருளை அறியமாட்டார்.
உரை விளக்கம்
'இன்னாவறிவு', தமக்கும் பிறர்க்கும் தீங்கு பயக்கும் அறிவு. வெற்றிவழி நின்றார்க்கு உளதாவது, காணப்படும் பயத்ததாகலின் மெய்ந்நூல் எனப்பட்டது. இகலால் அறிவு கலங்குதலின், காணார் என்றார்.
இவை இரண்டு பாட்டானும் இகலினார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.

குறள் 858 (இகலிற் )[தொகு]

இகலிற் கெதிர்சாய்த லாக்க மதனை ( ) இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் அதனை

மிகலூக்கி னூக்குமாங் கேடு. (08) மிகல் ஊக்கின் ஊக்குமாம் கேடு.

’’’தொடரமைப்பு:’’’ இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம், அதனை மிகல் ஊக்கின் கேடு ஊக்குமாம்.

இதன்பொருள்
இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம்= தன்னுள்ளத்து மாறுபாடு தோன்றியவழி, அதனை எதிர்தலை ஒழிதல் ஒருவனுக்கு ஆக்கமாம்; அதனை மிகல் ஊக்கின் கேடு ஊக்குமாம்= அது செய்யாது அதன்கண் மிகுதலை மேற்கொள்வானாயின், கேடும் தன்கண் வருதலை மேற்கொள்ளும்.
உரை விளக்கம்
எதிர்தல்: ஏற்றுக்கோடல். சாய்ந்தபொழுதே வருதலின், சாய்தல் ஆக்கம் என்றார். 'இகலிற்கு' எனவும், 'அதனை' எனவும் வந்தன வேற்றுமை மயக்கம்.

குறள் 859 (இகல்காணா )[தொகு]

இகல்காணா னாக்கம் வருங்கா லதனை ( ) இகல் காணான் ஆக்கம் வருங்கால் அதனை

மிகல்காணுங் கேடு தரற்கு. (09) மிகல் காணும் கேடு தரற்கு.

தொடரமைப்பு: ஆக்கம் வருங்கால் இகல் காணான், கேடு தரற்கு அதனை மிகல் காணும்.

இதன்பொருள்
ஆக்கம் வருங்கால் இகல் காணான்= ஒருவன் தன்கண் ஆக்கம் வரும்வழிக் காரணமுண்டாயினும் இகலை நினையான்; கேடு தரற்கு அதனை மிகல் காணும்= தனக்குக் கேடு செய்துகோடற்கண் காரணம் இன்றியும் அதன்கண் மிகுதலை நினைக்கும்.
உரை விளக்கம்
இகலான் வரும் கேடு பிறரான் அன்று என்பது தோன்றத் 'தரற்கு' என்றார். நான்காவதும் இரண்டாவதும் ஏழாவதன்கண் வந்தன. ஆக்கக் கேடுகட்கு முன் நடப்பன, இகலினது இன்மை, உண்மைகள் என்பதாம்.

குறள் 860 (இகலானாம் )[தொகு]

இகலானா மின்னாத வெல்லா நகலானா () இகலான் ஆம் இன்னாத எல்லாம் நகலான் ஆம்

நன்னய மென்னுஞ் செருக்கு. () நல் நயம் என்னும் செருக்கு.

’’’தொடரமைப்பு:‘’’ இகலான் இன்னாத எல்லாம் ஆம், நகலான் நன்னயம் என்னும் செருக்கு ஆம்.

இதன்பொருள்
இகலான் இன்னாத எல்லாம் ஆம்= ஒருவனுக்கு மாறுபாடு ஒன்றானே இன்னாதன எல்லாம் உளவாம்; நகலான் நன்னயம் என்னும் செருக்கு ஆம்= நட்பு ஒன்றானே நல்லநீதி என்னும் பெருஞ்செல்வம் உளதாம்.
உரை விளக்கம்
'இன்னாத'ன: வறுமை, பழி, பாவம் முதலாயின. 'நகல்': மகிழ்தல். நகல் என்பதூஉம், செருக்கு என்பதூஉம் தத்தம் காரணங்கட்கு ஆயின. 'நயம் என்னும் செருக்'கெனக் காரியத்தைக் காரணமாக உபசரித்தார்.
இவை மூன்று பாட்டானும் அவ்விருமையும் கூறப்பட்டன.