உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/61.மடியின்மை

விக்கிமூலம் இலிருந்து

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- 1. அரசியல்- அதிகாரம் 61. மடியின்மை

[தொகு]

பரிமேலழகர் உரை

[தொகு]

அதிகார முன்னுரை:

அஃதாவது, கருதியன செய்யுங்கால் சோம்புதல் இல்லாமை. ஊக்கமுடையார்க்கு ஒரோவழிக் குணவயத்தான் மடிவருதல் நோக்கி இஃது ஊக்கமுடைமையின் பின் வைக்கப்பட்டது.

குறள் 601 (குடியென்னுங்)

[தொகு]

குடியென்னுங் குன்றா விளக்க மடியென்னுகுடி என்னும் குன்றா விளக்கம் மடி என்னும்

'மாசூர மாய்ந்து விடும். (01)'மாசு ஊர மாய்ந்து விடும்.

இதன்பொருள்
குடி என்னும் குன்றா விளக்கம்= தான் பிறந்த குடியாகிய நந்தாவிளக்கு; மடி என்னும் மாசு ஊர மாய்ந்து கெடும்= ஒருவன் மடியாகிய இருள் அடர நந்திப்போம்.
உரைவிளக்கம்
உலகநடையுள்ள துணையும் இடையறாது தன்னுள் பிறந்தாரை விளக்குதலின், குடியைக் 'குன்றா விளக்கம்' என்றும், தாமதகுணத்தான் வருதலின் மடியை 'மாசு' என்றும், அஃது ஏனை இருள்போலாது, அவ்விளக்கைத் தான் அடர்ந்து மாய்க்கும் வலியுடைமையின், 'மாசூர மாய்ந்துகெடும்' என்று கூறினார். 'கெடு'தல் பெயர்வழக்கமும் இல்லையாதல்.

குறள் 602 (மடியை)

[தொகு]

மடியை மடியா வொழுகல் குடியைக் /மடியை மடியா ஒழுகல் குடியைக்

'குடியாக வேண்டு பவர். (02) /'குடியாக வேண்டுபவர்.

இதன்பொருள்
குடியைக் குடியாக வேண்டுபவர்= தாம் பிறந்த குடியை மேன்மேலும் நற்குடியாக வேண்டுவார்; மடியை மடியா ஒழுகல்= மடியை மடியாகவே கருதி முயற்சியோடு ஒழுகுக.
உரைவிளக்கம்
முயற்சியோடு என்பது அவாய்நிலையான் வந்தது. நெருப்பிற் கொடியது பிறிதின்மைபற்றி நெருப்பை நெருப்பாகவே கருதுக என்றாற்போல, மடியின் தீயது பிறிதின்மைபற்றிப் பின்னும் அப்பெயர்தன்னானே கூறினார். அங்ஙனம் கருதியதனைக் கடிந்து முயன்று ஒழுகவே தாம்உயர்வர்; உயரவே குடியுயரும் என்பார், 'குடியைக் குடியாக வேண்டுபவர்' என்றார். அங்ஙனம் ஒழுகாக்கால், குடிஅழியும் என்பது கருத்து. இனி 'மடியா' என்பதனை வினையெச்சமாக்கிக் கெடுத்தொழுகுகІ என்று உரைப்பாரும் உளர்.
І. மணக்குடவர்.

குறள் 603 (மடிமடிக்கொண்)

[தொகு]

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த/மடி மடிக்கொண்டு ஒழுகும் பேதை பிறந்த

'குடிமடியுந் தன்னினு முந்து. (03)'/குடி மடியும் தன்னினும் முந்து.

இதன்பொருள்
மடி மடிக்கொண்டு ஒழுகும் பேதை பிறந்த குடி= விடத்தகுவதாய மடியைத் தன்னுள்ளே கொண்டொழுகும் அறிவில்லாதான் பிறந்த குடி; தன்னினும் முந்து மடியும்= அவன்தன்னினும் முந்துற அழியும்.
உரைவிளக்கம்
அழிவு தருவதனை அகத்தேகொண்டு ஒழுகதலின் 'பேதை' என்றும், அவனால் புறந்தரப்படுவது ஆகலின், குடிதன்னினும் முந்துற அழியும் என்றும் கூறினார். ஆக்கத்திற் பிற்படினும், அழிவின் முற்படும் என்பதாம்.

குறள் 604 (குடிமடிந்து)

[தொகு]

குடிமடிந்து குற்றம் பெருகு மடிமடிந்துகுடி மடிந்து குற்றம் பெருகும் மடி மடிந்து

'மாண்ட வுஞற்றில வர்க்கு. (04)'மாண்ட உஞற்று இலவர்க்கு.

இதன்பொருள்
மடி மடிந்து மாண்ட உஞற்று இலவர்க்கு= மடியின்கண்ணே வீழ்தலான் திருந்திய முயற்சி இலராயினார்க்கு; குடி மடிந்து குற்றம் பெருகும்= குடியும் மடிந்து குற்றமும் பெருகும்.
உரைவிளக்கம்
'மடிந்து' எனத் திரிந்துநின்ற வினையெச்சம் 'இலவர்' என்னும் குறிப்புவினைப் பெயர் கொண்டது. குற்றங்கள் முன்னர்க்கூறுப.
இவை நான்கு பாட்டானும் மடியின் தீமை கூறப்பட்டது.

குறள் 605 (நெடுநீர்)

[தொகு]

நெடுநீர் மறவி மடிதுயி னான்குங்நெடுநீர் மறவி மடி துயில் நான்கும்

'கெடுநீரார் காமக் கலன். (05)'கெடும் நீரார் காமக் கலன்.

இதன்பொருள்
மடி நெடுநீர் மறவி துயில் நான்கும்= மடியும், விரைந்துசெய்வதனை நீட்டித்துச் செய்யும் இயல்பும், மறப்பும், துயிலும்ஆகிய இந்நான்கும்; கெடும் நீரார் காமக் கலன்= இறக்கும் இயல்பினை உடையார் விரும்பி ஏறும் மரக்கலம்.
உரைவிளக்கம்
முன்னிற்கற்பாலதாய 'மடி' செய்யுள் நோக்கி இடைநின்றது. நெடுமையாகிய காலப்பண்பு, அதன்கண்நிகழ்வதாய செயன்மேல் நின்றது. காலநீட்டத்தையுடைய செயல் முதல் மூன்றும் தாமதகுணத்தின் தோன்றி உடன்நிகழ்வதாகலின், மடியோடு ஒருங்கு எண்ணப்பட்டன. இறக்கும் இயல்பு- நாள்உலத்தல். இவை துன்புறு நீரார்க்கு இன்புறுத்துவபோன்று காட்டி, அவர் விரும்பிக்கொண்டவழித் துன்பத்திடை வீழ்தலின், நாள் உலந்தார்க்கு ஆக்கம்பயப்பது போன்று காட்டி, அவர் விரும்பி ஏறியவழிக் கடலிடை வீழ்க்கும் கலத்தினை ஒக்கும் என்னும் உவமைக் குறிப்புக் 'காமக்கலன்' என்னு்ம் சொல்லான் பெறப்பட்டது. இதற்கு விரும்பிப் பூணும் ஆபரணம் என்று உரைப்பாரும் உளர்.

குறள் 606 (படியுடையார்)

[தொகு]

படியுடையார் பற்றமைந்தக் கண்ணு மடியுடையார்படி உடையார் பற்று அமைந்தக் கண்ணும் மடி உடையார்

'மாண்பய னெய்த லரிது. (06)'மாண் பயன் எய்தல் அரிது.

இதன்பொருள்
படி உடையார் பற்று அமைந்தக்கண்ணும்= நிலம் முழுதும் ஆண்டாராது செல்வம் தானே வந்து எய்தியவிடத்தும்; மடி உடையார் மாண் பயன் எய்தல் அரிது= மடியுடையார் அதனான் மாண்ட பயனை எய்துதல் இல்லை.
உரைவிளக்கம்
உம்மை எய்தாமை விளக்கிநின்றது. மாண்பயன்- பேரின்பம். அச்செல்வம் அழியாமல் காக்கும் முயற்சிஇன்மையின் அழியும்;அழியவே, தம்துன்பம் நீங்கா என்பதாம். இதற்கு நிலம் முழுதுமுடைய வேந்தர் துணையாதல் கூடியவிடத்தும் என்று உரைப்பாரும் உளர்.
₡. மணக்குடவர்.

குறள் 607 (இடிபுரிந்)

[தொகு]

இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்துஇடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடி புரிந்து

'மாண்ட வுஞற்றி லவர். (07)'மாண்ட உஞற்று இலவர்.

இதன்பொருள்
மடி புரிந்து மாண்ட உஞற்று இலவர்= மடியை விரும்புதலான் மாண்ட முயற்சி இல்லாதார்; இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர்= தம் நாட்டார்முன் கழறுதலை மிகச்செய்து அதனாற் பயன் காணாமையின் பின் இகழ்ந்து சொல்லும் சொல்லைக் கேட்பர்.
உரைவிளக்கம்
'இடி'$ என்னும்முதனிலைத் தொழிற்பெயரான், நட்டார் என்பது பெற்றாம். அவர் இகழ்ச்சி சொல்லவே, பிறர்இகழ்ச்சி சொல்லாமையே முடிந்தது. அவற்றிற்கு எல்லாம் மாறுசொல்லும் ஆற்றல் இன்மையின், 'கேட்பர்' என்றார்.

$. குறள்- 784.

குறள் 608 (மடிமை)

[தொகு]

மடிமை குடிமைக்கட் டங்கி்ற்றன் னொன்னார்க்மடிமை குடிமைக் கண் தங்கின் தன் ஒன்னார்க்கு

'கடிமை புகுத்தி விடும். (08)'அடிமை புகுத்தி விடும்.

இதன்பொருள்
மடிமை குடிமைக்கண் தங்கின்= மடியினது தன்மை குடிமை உடையான்கண்ணே தங்குமாயின்; தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும்= தன் பகைவர்க்கு அடியனாம் தன்மையை அடைவித்து விடும்.
உரைவிளக்கம்
'மடியி'னது தன்மை காரியக்கேடு. 'குடிமை', குடிசெய்தல்தன்மை. அஃது அதனை உடைய அரசன்மேற்றாதல், 'தன் ஒன்னார்க்கு' என்றதனான் அறிக. அடியனாந்தன்மை, தாழ்ந்துநின்று ஏவல் கேட்டல்.
இவை நான்கு பாட்டானும் மடிமைக் குற்றங்கள் கூறப்பட்டன.

குறள் 609 (குடியாண்மை)

[தொகு]

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்குடி ஆண்மையுள் வந்த குற்றம் ஒருவன்

'மடியாண்மை மாற்றக் கெடும். (09)'மடி ஆண்மை மாற்றக் கெடும்.

இதன்பொருள்
ஒருவன் மடி ஆண்மை மாற்ற= ஒருவன் தன் மடியாளும் தன்மையை ஒழிக்கவே; குடி ஆண்மையுள் வந்த குற்றம் கெடும்= அவன் குடியுள்ளும், ஆண்மையுள்ளும் வந்த குற்றங்கள் கெடும்.
உரைவிளக்கம்
'மடியா'ளும் தன்மை, மடியுடைமைக்கு ஏதுவாய தாமதகுணம். 'குடியாண்மை' என்பது, உம்மைத்தொகை. அவற்றின்கண் வந்த 'குற்றம்' என்பது, மடியானன்றி முன்னே பிறகாரணங்களான் நிகழ்ந்தவற்றை. அவையும் மடியாண்மையை மாற்றி முயற்சி உடையனாக நீங்கும் என்பதாம்.
♣ . காலம், இடம், செய்வினையின் மூலம், முடிவு முதலிய அறியாதிருத்தலும், சூழ்வன சூழாதிருத்தலும், துணைவலிமை தெரியாமையும் முதலானவை.

குறள் 610 (மடியிலா)

[தொகு]

மடியிலா மன்னவ னெய்து மடியளந்தான்மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்

'றாஅய தெல்லா மொருங்கு. (10)'தாஅயது எல்லாம் ஒருங்கு.

இதன்பொருள்
அடி அளந்தான் தாஅயது எல்லாம்= தன் அடியளவானே எல்லாவகை உலகையும் அளந்த இறைவன் கடந்த பரப்பு முழுதையும்; மடி இலா மன்னவன் ஒருங்கு எய்தும்= மடியிலாத அரசன் முறையான் அன்றி, ஒருங்கே எய்தும்.
உரைவிளக்கம்
'அடியளந்தான்' என்றது, வாளா பெயராய் நின்றது. தாவியது என்பது இடைக்குறைந்த நின்றது. எப்பொழுதும் வினையின்கண்ணே முயறலின், இடையீடு இன்றி எய்தும் என்பதாம்.
இவை இரண்டு பாட்டானும், மடியிலாதான் எய்தும் பயன் கூறப்பட்டது.