திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/3.நீத்தார்பெருமை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பரிமேலழகர் உரை [தொகு]

மூன்றாவது அதிகாரம் நீத்தார் பெருமை [தொகு]


பரிமேலழகரின் அதிகார முன்னுரை:
அஃதாவது, முற்றத்துறந்த முனிவரது பெருமை கூறுதல். அவ்வற முதற்பொருள்களை உலகிற்கு உள்ளவாறு உணர்த்துவார் அவராகலின், இது வான்சிறப்பி்ன் பின் வைக்கப்பட்டது.

திருக்குறள்: 21 (ஒழுக்கத்து) [தொகு]


ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து    ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவற் றுணிவு. (01)                     வேண்டும் பனுவல் துணிவு.
பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்) ஒழுக்கத்து நீத்தார் பெருமை = தத்தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை;
விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு = விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் இதுவே விழுமிது எனவிரும்பும், நூல்களது துணிவு.
பரிமேலழகர் உரை விளக்கம்:
தமக்கு உரிய ஒழுக்கத்தின்கண்ணே நீன்று துறத்தலாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் உரிய ஒழுக்கங்களை வழுவாது ஒழுக அறம் வளரும்; அறம் வளரப் பாவம் தேயும்; பாவந் தேய அறியாமை நீங்கும்; அறியாமை நீங்க நித்த அநித்தங்களது வேறுபாட்டுணர்வும், அழிதன்மாலையவாய இம்மை மறுமை இன்பங்களின் உவர்ப்பும், பிறவித்துன்பங்களும் தோன்றும்; அவை தோன்ற வீட்டின்கண் ஆசையுண்டாம்; அஃது உண்டாகப் பிறவிக்குக் காரணம் ஆகிய 'பயன்இல்' முயற்சிகள் எல்லாம் நீங்கி வீட்டிற்குக் காரணமாகிய யோகமுயற்சி உண்டாம்; அஃது உண்டாக, மெய்யுணர்வு பிறந்து புறப்பற்றாகிய 'எனது' என்பதும், அகப்பற்றாகிய 'யான்' என்பதும் விடும்; ஆகலான் இவ்விரண்டு பற்றையும் இம்முறையே உவர்த்து விடுதல் எனக் கொள்க.
பனுவல் எனப் பொதுப்படக் கூறியவதனான், ஒன்றையொன்று ஒவ்வாத சமயநூல்கள் எல்லாவற்றிற்கும் இஃது ஒத்த துணிவென்பது பெற்றாம்.
செய்தாரது துணிவு 'பனுவன்'மேல் ஏற்றப்பட்டது.

திருக்குறள்: 22 (துறந்தார்) [தொகு]


துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்      துறந்தார் பெருமை துணைக் கூறின் வையத்து
திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று. (02)           இறந்தாரை எண்ணிக் கொண்டற்று.
பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்) துறந்தார் பெருமை துணைக் கூறின் = இருவகைப் பற்றினையும் விட்டாரது பெருமையை இவ்வளவு என்று எண்ணால் கூறி அறியலுறின், அளவுபடாமையான்;
வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று = இவ்வுலகத்துப் பிறந்து இறந்தாரை எண்ணி இத்துணையார் என அறியலு்ற்றாற் போலும்.
பரிமேலழகர் உரை விளக்கம்:
முடியாது என்பதாம். கொண்டால் என்னும் வினையெச்சம் கொண்டு எனத் திரிந்து நின்றது.

திருக்குறள்: 23 (இருமைவகை)[தொகு]

இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
"இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு. (03)
பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்) இருமை வகை தெரிந்து = பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப வின்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து;
ஈண்டு அறம் பூண்டார் பெருமை = அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே;
உலகு பிறங்கிற்று = உலகின்கண் உயர்ந்தது.
பரிமேலழகர் உரை விளக்கம்:
"தெரிமாண் தமிழ்மும்மைத் தென்னம் பொருப்பன்" என்புழிப் போல 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது.
பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது.
இதனால், திகிரி உருட்டி உலகம் முழுதாண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது.
இவை மூன்று பாட்டானும், நீத்தார்பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.

திருக்குறள்: 24 (உரனென்னுந்)[தொகு]

உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்
வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து.
"உரனென்னுந் தோட்டியானோரைந்துங் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து." (04)
பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்) உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் = திண்மை என்னும் தோட்டியால் பொறிகளாகிய யானை ஐந்தனையும் தத்தம் புலன்கள்மேற் செல்லாமற் காப்பான்;
வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து = எல்லா நிலத்தினும் மிக்கது என்று சொல்லப்படும் வீட்டுநிலத்திற்கு ஓர் வித்தாம்.
பரிமேலழகர் உரை விளக்கம்:

இஃது ஏகதேச உருவகம்.

'திண்மை' ஈண்டு அறிவின் மேற்று.
அந்நிலத்திற் சென்று முளைத்தலின் 'வித்து' என்றார்; ஈண்டுப்பிறந்து இறந்து வரும் மகன்அல்லன் என்பதாம்.

திருக்குறள்: 25 (ஐந்தவித்தான்)[தொகு]

"ஐந்தவித்தா னாற்ற லகல்விசும்பு ளார்கோமா // ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்புளார் கோமான்
னிந்திரனே சாலுங் கரி. (05) // // இந்திரனே சாலும் கரி.
பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) ஐந்து அவித்தான் ஆற்றல் = புலன்களிற் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு;
அகல் விசும்புளார் கோமான் இந்திரனே சாலும் கரி = அகன்ற வானத்துள்ளார் இறைவனாகிய இந்திரனே அமையுஞ் சான்று.
பரிமேலழகர் உரை விளக்கம்:
'ஐந்தும்' என்னும் முற்றும்மையும், 'ஆற்றற்கு' என்னும் நான்கன் உருபும் விகாரத்தால் தொக்கன.
தான் ஐந்தவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவன் ஆற்றல் உணர்த்தினான்ஆகலின் 'இந்திரனே சாலுங்கரி' என்றார்.

திருக்குறள்: 26 (செயற்கரிய)[தொகு]

"செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் // // செயற்கு அரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (06) // // செயற்கு அரிய செய்கலாதார்.
பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்) செயற்கரிய செய்வார் பெரியர் = ஒத்த பிறப்பினாராய மக்களுள் செய்தற்கு எளியவற்றைச் செய்யாது அரியவற்றைச் செயவார் பெரியர்;
செயற்கரிய செய்கலாதார் சிறியர் = அவ்வெளியவற்றைச் செய்து அரியவற்றைச் செய்யமாட்டாதார் சிறியர்.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
செயற்கு எளியவாவன, மனம் வேண்டியவாறே அதனைப் பொறிவழிகளால் புலன்களிற் செலுத்தலும், வெஃகலும், வெகுடலும் முதலாயின.
செயற்கு அரியவாவன இயமம், நியமம் முதலாய எண்வகை யோக உறுப்புக்கள்.
நீரிற் பலகான் மூழ்கல் (புறப்பொருள் வெண்பா மாலை, வாகைத்திணை, 14) முதலாய "நாலிரு வழக்கிற் றாபத பக்கம்" என்பாரும் உளர்; அவை நியமத்துள்ளே அடங்கலின், நீத்தாரது பெருமைக்கு ஏலாமை அறிக.

திருக்குறள்: 27 (சுவையொளி)[தொகு]

"சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின் // // சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே யுலகு." (07) // // வகை தெரிவான் கட்டே உலகு.
பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்) சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை = சுவையும் ஒளியும் ஊறும் ஓசையும் நாற்றமும் என்று சொல்லப்பட்ட தன்மாத்திரைகள் ஐந்தனது கூறுபாட்டையும்;
தெரிவான் கட்டே உலகு = ஆராய்வான் கண்ணதே உலகம்.
பரிமேலழகர் உரை விளக்கம்:
அவற்றின் கூறுபாடாவன பூதங்கட்கு முதலாகிய அவைதாம் ஐந்தும், அவற்றின் கண் தோன்றிய அப்பூதங்கள் ஐந்தும், அவற்றின் கூறாகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆக இருபதுமாம்.
'வகைதெரிவான் கட்டு' என உடம்பொடுபுணர்ந்ததனால், தெரிகின்ற புருடனும், அவன் தெரிதற் கருவியாகிய மான் அகங்கார மனங்களும், அவற்றிற்கு முதலாகிய மூலப்பகுதியும் பெற்றாம்.
தத்துவம் இருபத்தைந்தனையும் தெரிதலாவது, மூலப்பகுதி ஒன்றில் தோன்றிய தன்மையிற் பகுதியே யாவதல்லது விகுதியாகாது எனவும், அதன்கண் தோன்றிய மானும், அதன்கண் தோன்றிய அகங்காரமும், அதன்கண் தோன்றிய தன்மாத்திரைகளும் ஆகிய ஏழும் தத்தமக்கு முதலாயதனை நோக்க விகுதியாதலும், தங்கண் தோன்றுவனவற்றை நோக்கப் பகுதியாதலும் உடையவெனவும், அவற்றின்கண் தோன்றிய மனமும் ஞானேந்திரியங்களும் கன்மேந்திரியங்களும் பூதங்களுமாகிய பதினாறும் தங்கண் தோன்றுவன இன்மையின் விகுதியேயாவதல்லது பகுதியாகாவெனவும், புருடன் தான் ஒன்றில் தோன்றாமையானும் தன்கண் தோன்றுவன இன்மையானும், இரண்டும் அல்லவெனவும் சாங்கிய நூலுள் ஓதியவற்றான் ஆராய்தல்.
இவ்விருபத்தைந்துமல்லது உலகெனப் பிறிது ஒன்று இல்லையென உலகினது உண்மையறிதலின் அவனறிவின் கண்ணதாயிற்று.
இவை நான்கு பாட்டானும் பெருமைக்கு ஏது ஐந்தவித்தலும், யோகப்பயிற்சியும், தத்துவ உணர்வும் என்பது கூறப்பட்டது.

திருக்குறள்: 28 (நிறைமொழி)[தொகு]

"நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து // // நிறை மொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்." (08) // // மறை மொழி காட்டி விடும்.
பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) நிறைமொழிமாந்தர் பெருமை = நிறைந்த மொழியினை உடைய துறந்தாரது பெருமையை;
நிலத்து மறைமொழி காட்டி விடும் = நிலவுலகத்தின் கண் அவர் ஆணையாகச் சொல்லிய மந்திரங்களே கண்கூடாகக் காட்டும்.
பரிமேலழகர் உரை விளக்கம்:
'நிறைமொழி' என்பது அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும் அவ்வப் பயன்களைப் பயந்தேவிடும் மொழி.
'காட்டுதல்', பயனான் உணர்த்துதல்.

திருக்குறள்: 29 (குணமென்னுங்)[தொகு]

"குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி // // குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்த லரிது." (09) // // கணமேயும் காத்தல் அரிது.
பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்) குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி = துறவு மெய்யுணர்வு அவாவின்மை முதலிய நற்குணங்களாகிய குன்றின் முடிவின்கண் நின்ற முனிவரது வெகுளி;
கணமேயும் காத்தல் அரிது = தான் உள்ளவளவு கணமேயாயினும், வெகுளப்பட்டாரால் தடுத்தல் அரிது.
பரிமேலழகர் உரை விளக்கம்:
சலியாமையும் பெருமையும்பற்றிக் குணங்களைக் குன்றாக உருவகம் செய்தார். 'குணம்' சாதியொருமை.
அநாதியாய் வருகின்றவாறு பற்றி ஒரோவழி வெகுளி தோன்றியபொழுதே அதனை மெய்யுணர்வு அழிக்கும் ஆகலின் 'கணமேயும்' என்றும், நிறைமொழி மாந்தர் ஆகலின் 'காத்தலரிது' என்றும் கூறினார்.
இவை இரண்டு பாட்டானும் அவர் ஆணை கூறப்பட்டது.

திருக்குறள்: 30 (அந்தணர்)[தொகு]

"அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் // அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்." (10) // // செந்தண்மை பூண்டு ஒழுகலான்.
பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் = எல்லா உயிர்கள்மேலும் செவவிய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்;
அந்தணர் என்போர் அறவோர் = அந்தணர் என்று சொல்லப்படுவார் துறவறத்தின் நின்றவர்.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
'பூணுதல்' விரதமாகக் கோடல். அந்தணர் என்பது, அழகிய தட்பத்தினை உடையார் என ஏதுப்பெயர்ஆகலின், அஃது அவ்வருளுடையார்க்கு அன்றிச் செல்லாது என்பது கருத்து.
அவ்வாறு ஆணை உடையார் ஆயினும், உயிர்கள்மாட்டு அருளுடையார் என்பது இதனால் கூறப்பட்டது.
'தெய்வப்புலவர் திருவள்ளுவர்' இயற்றிய திருக்குறளின் அறத்துப்பால் 'நீத்தார்பெருமை' அதிகாரமும், அதற்குப் பரிமேலழகர் வரைந்த உரையும் முற்றும்.