திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/54.பொச்சாவாமை

விக்கிமூலம் இலிருந்து

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- 1. அரசியல்- அதிகாரம் 54. பொச்சாவாமை[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகார முன்னுரை:அஃதாவது, உருவும் திருவும் ஆற்றலும் முதலாயவற்றான் மகிழ்ந்து, தற்காத்தலினும் பகையழித்தல் முதலிய காரியங்களினும் சோர்தலைச் செய்யாமை. மேற்சொல்லிய சுற்றத்தாராற் பயனுள்ளது இச்சோர்வு இல்வழியாகலின், இது சுற்றந்தழாலின் பின் வைக்கப்பட்டது.

குறள் 531 (இறந்த)[தொகு]

இறந்த வெகுளியிற் றீதே சிறந்தஇறந்த வெகுளியின் தீதே சிறந்த

'வுவகை மகிழ்ச்சியிற் சோர்வு. (01)'உவகை மகிழ்ச்சியின் சோர்வு.

இதன்பொருள்
சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு= மிக்க உவகைக்களிப்பான் வரும் மறவி; இறந்த வெகுளியின் தீது= அரசனுக்கு அளவிறந்த வெகுளியினும் தீது.
உரைவிளக்கம்
மிக்க உவகை பெருஞ்செல்வம், பேரின்பம், பெருமிதம் என்று இவற்றான் வருவது. அளவு பகைவரை அடர்த்தற்கும், கொடியோரை ஒறுத்தற்கும் வேண்டுவது. 'இறந்த வெகுளி' ஒரோவழிப் பகைவரையும் கொல்லும்; இஃது அன்னதன்றித் தன்னையே கோறலின், அதனினும் தீது ஆயிற்று.

குறள் 532 (பொச்சாப்புக்)[தொகு]

பொச்சாப்புக் கொல்லும் புகழை யறிவினைபொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை

'நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. (02)'நிச்ச நிரப்புக் கொன்றாங்கு.

இதன்பொருள்
புகழைப் பொச்சாப்புக் கொல்லும்= ஒருவன் புகழினை அவன் மறவி கெடுக்கும்; அறிவினை நிச்ச நிரப்புக் கொன்றாங்கு= அறிவினை நிச்சநிரப்புக் கெடுக்குமாறு போல.
உரைவிளக்கம்
'நிச்சநிரப்பு' நாள்தோறும் இரவான் வருந்தித் தன் வயிறு நிறைத்தல். அஃது அறிவுடையான்கண் உண்டாயின் அவற்கு இளிவரவானும், பாவத்தானும் எள்ளற்பாட்டினை விளைத்து, அவன் நன்குமதிப்பினை அழிக்கும். அதுபோல மறவியும், புகழுடையான்கண் உண்டாயின் அவற்குத் தற்காவாமையானும் காரியக்கேட்டானும் எள்ளற்பாட்டினை விளைத்து அவன் நன்குமதிப்பினை அழிக்கும் என்பதாயிற்று.
இவை இரண்டுபாட்டானும் பொச்சாப்பினது குற்றம் கூறப்பட்டது.

குறள் 533 (பொச்சாப்பார்க்கில்லை)[தொகு]

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து

'தெப்பா னூலோர்க்குந் துணிவு. (03)'எப்பால் நூலோர்க்கும் துணிவு.

இதன்பொருள்
பொச்சாப்பார்க்குப் புகழ்மை இல்லை= பொச்சாந்து ஒழுகுவார்க்குப் புகழுடைமை இல்லை; அது உலகத்து எப்பால் நூலோர்க்கும் துணிவு= அவ்வின்மை இந்நீதிநூல் உடையார்க்கேயன்றி உலகத்து எவ்வகைப்பட்ட நூலுடையார்க்கும் ஒப்பமுடிந்தது.
உரைவிளக்கம்
அரசர்க்கேயன்றி அறமுதலிய நான்கினும் முயல்வார் யாவர்க்கும் கைகூடாமையின் புகழில்லை என்பது தோன்ற, 'எப்பால் நூலோர்க்கும் துணிவு' என்றார்.

குறள் 534 (அச்சமுடையார்க்)[தொகு]

அச்ச முடையார்க் கரணில்லை யாங்கில்லைஅச்சம் உடையார்க்கு அரண் இல்லை ஆங்கு இல்லை

'பொச்சாப் புடையார்க்கு நன்கு. (04)'பொச்சாப்பு உடையார்க்கு நன்கு.

இதன்பொருள்
அரண் அச்சம் உடையார்க்கு இல்லை= காடு மலை முதலிய அரண்களுக்குள்ளே நிற்பினும் மனத்தின்கண் அச்சம் உடையார்க்கு அவற்றால் பயன் இல்லை. ஆங்கு நன்கு பொச்சாப்பு உடையார்க்கு இல்லை= அதுபோலச் செல்வம்எல்லாம் உடையராயினும், மனத்தின்கண் மறவியை உடையார்க்கு அவற்றான் பயனில்லை.
உரைவிளக்கம்
நன்மைக்கு ஏதுவாகலின், 'நன்கு' என்றார். அச்சமுடையார் நின்ற அரண் அழியுமாறுபோல, மறவியுடையாருடைய செல்வங்களும் அழியும் என்பதாயிற்று.

குறள் 535 (முன்னுறக்)[தொகு]

முன்னுறக் காவா திழுக்கியான் றன்பிழைமுன்னுறக் காவாது இழுக்கியான் தன் பிழை

'பின்னூ றிரங்கி விடும். (05)'பின் ஊறு இரங்கி விடும்.

இதன்பொருள்
முன்னுறக் காவாது இழுக்கியான்= தன்னாற் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான்; பின் ஊறு தன் பிழை இரங்கிவிடும்= பின் வந்துற்ற காலத்துக் காக்கலாகாமையின் அப்பிழைப்பினை நினைந்து இரங்கிவிடும்.
உரைவிளக்கம்
காக்கப்படும் தன்மைகளாவன: சோர்வு பார்த்துப் பகைவர் செய்வன. ஊற்றின்கண் என்புழி உருபும் சாரியையும் உட்ன்தொக்கன. உற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின், 'இரங்கி விடும்' என்றார்.
இவை மூன்றுபாட்டானும் பொச்சாப்பு உடையார்க்கு வரும் ஏதம் கூறப்பட்டது.

குறள் 536 (இழுக்காமை)[தொகு]

இழுக்காமை யார்மாட்டு மென்றும் வழுக்காமை இழுக்காமை யார் மாட்டும் என்றும் வழுக்காமை

வாயி னதுவொப்ப தில். (06) வாயின் அது ஒப்பது இல்.

இதன்பொருள்
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின்= அரசர்க்கு மறவாமைக் குணம் யாவர்மாட்டும் எக்காலத்தும் ஒழிவின்றி வாய்க்குமாயின்; அது ஒப்பது இல்= அதனை ஒக்கும் நன்மை பிறிது இல்லை.
உரைவிளக்கம்
வினைசெய்வார், சுற்றத்தார் என்னும் தம்பாலார்கண்ணும் ஒப்பவேண்டுதலின் 'யார்மாட்டும்' என்றும், தாம் பெருகிய ஞான்றும் சுருங்கிய ஞான்றும் ஒப்பவேண்டுதலின் 'என்றும்' என்றும், எல்லாக் காரியங்களினும் ஒப்பவேண்டுதலின், 'வழுக்காமை' என்றும் கூறினார். 'வாயின்' என்பது முதனிலைத் தொழிற்பெயர் அடியாகவந்த வினையெச்சம். வாய்த்தல்- நேர்படுதல்.

குறள் 537 (அரியவென்)[தொகு]

அரியவென் றாகாத வில்லைபொச் சாவாக்அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவாக்

'கருவியாற் போற்றிச் செயின். (07)'கருவியான் போற்றிச் செயின்.

இதன்பொருள்
அரிய என்று ஆகாத இல்லை= இவை செய்தற்கு அரியன என்று சொல்லப்பட்டு ஒருவற்கு முடியாத காரியங்கள் இல்லை; பொச்சாவாக் கருவியான் போற்றிச் செயின்= மறவாத மனத்தானே எண்ணிச் செய்யப்பெறின்.
உரைவிளக்கம்
பொச்சாவாத என்பதன் இறுதிநிலை விகாரத்தான் தொக்கது. அந்தக்கரணமாதலின் 'கருவி' என்றார். இடைவிடாத நினைவும், தப்பாத சூழ்ச்சியும் உடையார்க்கு எல்லாம் எளிதின் முடியும் என்பதாம்.
இவை இரண்டுபாட்டானும் பொச்சாவாமையது சிறப்புக் கூறப்பட்டது.

குறள் 538 (புகழ்ந்தவை)[தொகு]

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யாபுகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் செய்யாது

'திகழ்ந்தார்க் கெழுமையு மில். (08)'இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.

இதன்பொருள்
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும்= நீதி நூலுடையார் இவை அரசர்க்கு உரியன என்று உயர்த்துக்கூறிய செயல்களைக் கடைப்பிடித்துச் செய்க; செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்= அங்ஙனம் செய்யாது மறந்தவர்க்கு எழுமையினும் நன்மையில்லை ஆகலான்.
உரைவிளக்கம்
அச்செயல்களாவன : மூவகையாற்றலும், நால்வகை உபாயமும், ஐவகைத் தொழிலும், அறுவகைக் குணமும் முதலாய செயல்கள். சாதி தருமம்ஆகிய இவற்றின் வழீஇயோர்க்கு உள்ளது நிரயத்துன்பமே ஆகலின், 'எழுமையும்இல்' என்றார். 'எழுமை' ஆகுபெயர். இதனான் பொச்சாவாது செய்யவேண்டுவன கூறப்பட்டன.
( இவற்றுள் மூவகை ஆற்றலை 466 ஆம் குறள் உரையினும், நால்வகை உபாயத்தை 467 ஆம் குறள்உரையினும், ஐவகைத்தொழிலை 462 ஆம் குறள்உரையினும், அறுவகைக்குணத்தை 485 ஆம் குறள்உரையினும் காண்க.)

குறள் 539 (இகழ்ச்சியிற்)[தொகு]

இகழ்ச்சியிற் கெட்டாரை யுள்ளுக தாந்தம்இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம்

'மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. (09)'மகிழ்ச்சியின் மைந்து உறும் பொழுது.

இதன்பொருள்
தம் மகிழ்ச்சியின் தாம் மைந்து உறும் போழ்து= அரசர் தம் மகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும்பொழுது; இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக= முற்காலத்து அதனின்ஆய சோர்வாற் கெட்டவர்களை நினைக்க.
உரைவிளக்கம்
காரணங்களோடு அவர்க்கு உளதாய உரிமையை மகிழ்ச்சிமேல் ஏற்றித் 'தம் மகிழ்ச்சியின்' என்றும், இகழ்ச்சியும் கேடும் உடன் தோன்றும்ஆகலின், 'மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து' என்றும் கூறினார். கெட்டாரை உள்ளவே, தாமும் அவ்வாறே கெடுதும் என்று அதன்கண் மைந்துறார் என்பது கருத்து. எண்ணுக என்று பாடம் ஓதுவாரும் உளர்.
( மணக்குடவர்)

குறள் 540 (உள்ளிய)[தொகு]

உள்ளிய தெய்த லெளிதுமன் மற்றுந்தாஉள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்

'னு்ள்ளிய துள்ளப் பெறின். (10)'உள்ளியது உள்ளப் பெறின்.

இதன்பொருள்
தான் உள்ளியது எய்துதல் எளிதுமன்- அரசனுக்குத் தான் எய்தநினைத்த பொருளை அந்நினைத்த பெற்றியே எய்துதல் எளிதாம்; மற்றும் உள்ளியது உள்ளப் பெறின்= பின்னும் அதனையே நினைக்கக் கூடுமாயின்.
உரைவிளக்கம்
அது கூடாது என்பது ஒழிந்து நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. அதனையே நினைத்தலாவது, மறவியின்றி அதன்கண்ணே முயறல்.
இவை இரண்டுபாட்டானும் பொச்சாவாமைக்கு உபாயம் கூறப்பட்டது.