திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/64.அமைச்சு
1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து
2.வான்சிறப்பு
3.நீத்தார்பெருமை
4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை
6.வாழ்க்கைத்துணைநலம்
7.மக்கட்பேறு
8.அன்புடைமை
9.விருந்தோம்பல்
10.இனியவைகூறல்
11.செய்ந்நன்றியறிதல்
12.நடுவுநிலைமை
13.அடக்கமுடைமை
14.ஒழுக்கமுடைமை
15.பிறனில்விழையாமை
16.பொறையுடைமை
17.அழுக்காறாமை
18.வெஃகாமை
19.புறங்கூறாமை
20.பயனிலசொல்லாமை
21.தீவினையச்சம்
22.ஒப்புரவறிதல்
23.ஈகை
24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை
26.புலான்மறுத்தல்
27.தவம்
28.கூடாவொழுக்கம்
29.கள்ளாமை
30.வாய்மை
31.வெகுளாமை
32.இன்னாசெய்யாமை
33.கொல்லாமை
34.நிலையாமை
35.துறவு
36.மெய்யுணர்தல்
37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்
பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி
40.கல்வி
41.கல்லாமை
42.கேள்வி
43.அறிவுடைமை
44.குற்றங்கடிதல்
45.பெரியாரைத்துணைக்கோடல்
46.சிற்றினஞ்சேராமை
47.தெரிந்துசெயல்வகை
48.வலியறிதல்
49.காலமறிதல்
50.இடனறிதல்
51.தெரிந்துதெளிதல்
52.தெரிந்துவினையாடல்
53.சுற்றந்தழால்
54.பொச்சாவாமை
55.செங்கோன்மை
56.கொடுங்கோன்மை
57.வெருவந்தசெய்யாமை
58.கண்ணோட்டம்
59.ஒற்றாடல்
60.ஊக்கமுடைமை
61.மடியின்மை
62.ஆள்வினையுடைமை
63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு
65.சொல்வன்மை
66.வினைத்தூய்மை
67.வினைத்திட்பம்
68.வினைசெயல்வகை
69.தூது
70.மன்னரைச்சேர்ந்தொழுகல்
71.குறிப்பறிதல்
72.அவையறிதல்
73.அவையஞ்சாமை
74.நாடு
75.அரண்
76.பொருள்செயல்வகை
77.படைமாட்சி
78.படைச்செருக்கு
79.நட்பு
80.நட்பாராய்தல்
81.பழைமை
82.தீநட்பு
83.கூடாநட்பு
84.பேதைமை
85.புல்லறிவாண்மை
86.இகல்
87.பகைமாட்சி
88.பகைத்திறந்தெரிதல்
89.உட்பகை.
90.பெரியாரைப்பிழையாமை
91.பெண்வழிச்சேறல்
92.வரைவின்மகளிர்
93.கள்ளுண்ணாமை
94.சூது
95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை
97.மானம்
98.பெருமை
99.சான்றாண்மை
100.பண்புடைமை
101.நன்றியில்செல்வம்
102.நாணுடைமை
103.குடிசெயல்வகை
104.உழவு
105.நல்குரவு
106.இரவு
107.இரவச்சம்
108.கயமை
1.களவியல்
109.தகையணங்குறுத்தல்
110.குறிப்பறிதல்
111.புணர்ச்சிமகிழ்தல்
112.நலம்புனைந்துரைத்தல்
113.காதற்சிறப்புரைத்தல்
114.நாணுத்துறவுரைத்தல்
115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை
117.படர்மெலிந்திரங்கல்
118.கண்விதுப்பழிதல்
119.பசப்புறுபருவரல்
120.தனிப்படர்மிகுதி
121.நினைந்தவர்புலம்பல்
122.கனவுநிலையுரைத்தல்
123.பொழுதுகண்டிரங்கல்
124.உறுப்புநலனழிதல்
125.நெஞ்சொடுகிளத்தல்
126.நிறையழிதல்
127.அவர்வயின்விதும்பல்
128.குறிப்பறிவுறுத்தல்
129.புணர்ச்சிவிதும்பல்
130.நெஞ்சொடுபுலத்தல்
131.புலவி
132.புலவிநுணுக்கம்
133.ஊடலுவகை
திருக்குறள் பொருட்பால்- இயல் 02 அங்கவியல்
[தொகு]பரிமேலழகர் உரை
[தொகு]இயல் முன்னுரை: இனி முறையானே அரசியல் நடாத்துதற்கண், ஒன்றற்கொன்று துணையாய அங்கங்கள் ஆறனது இயல்பு முப்பத்திரண்டு அதிகாரததான் கூறுவான் எடுத்துக்கொண்டு, அவை ஆறனுள்ளும் "காவற்சாகாடு உகைத்தற்"கண், அவ்வரசற்கு இணையாய அமைச்சனது இயல்பு, பத்து அதிகாரத்தான் கூறுவான் தொடங்கி, முதற்கண்அமைச்சுக்கூறுகின்றார்.
அதிகாரம் 64. அமைச்சு
[தொகு]அதிகார முன்னுரை அஃதாவது, அமைச்சனது தன்மை; என்றது, அவன்தன் குணங்களையும் செயல்களையும்.
குறள் 631 (கருவியுங்)
[தொகு]'கருவியுங் காலமுஞ் செய்கையுஞ் செய்யு'கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
'மருவினையு மாண்ட தமைச்சு. (01)'அரு வினையும் மாண்டது அமைச்சு.
- இதன்பொருள்
- கருவியும்= வினைசெய்யுங்கால் அதற்கு வேண்டுங் கருவிகளும்; காலமும்= அதற்கேற்ற காலமும்; செய்கையும்= அது செய்யுமாறும்; செய்யும் அருவினையும்= அவ்வாற்றிற் செய்யப்படும் அவ்வரிய வினைதானும்; மாண்டது அமைச்சு= வாய்ப்ப எண்ணவல்லவனே அமைச்சனாவான்.
- உரைவிளக்கம்
- 'கருவி'கள்: தானையும் பொருளும். 'காலம்' அது தொடங்குங் காலம். 'செய்கை' எனவே, அது தொடங்கும் உபாயமும், இடையூறு நீக்கி முடிவு போக்குமாறும் அடங்கின. சிறிய முயற்சியாற் பெரிய பயன் தருவதென்பார், 'அருவினை' என்றார். இவை ஐந்தனையும் வடநூலார் மந்திரத்திற்கு அங்கம் என்ப.
குறள் 632 (வன்கண்)
[தொகு]வன்கண் குடிகாத்தல் கற்றறித லாள்வினையோவன்கண் குடி காத்தல் கற்று அறிதல் ஆள்வினையோடு
'டைந்துடன் மாண்ட தமைச்சு. (02)'<ஐந்துடன் மாண்டது அமைச்சு.
- இதன்பொருள்
- வன்கண்= வினைசெய்தற்கண் அசைவின்மையும்; குடிகாத்தல்= குடிகளைக் காத்தலும்; கற்றுஅறிதல்= நீதிநூல்களைக் கற்றுச் செய்வன தவிர்வன அறிதலும்; ஆள்வினை= முயற்சியும்; ஐந்துடன் மாண்டது அமைச்சு= மேற்சொல்லிய அவ்வங்கங்கள் ஐந்துடனே திருந்தவுடையானே அமைச்சனாவான்.
- உரைவிளக்கம்
- எண்ணொடு நீண்டது, அவ்வைந்து எனச் சுட்டுவருவிக்க. இந்நான்கனையும் மேற்கூறியவற்றோடு தொகுத்துக் கூறியது, அவையும் இவற்றோடு கூடிய மாட்சிமைப்பட வேண்டுதலானும், அவற்றிற்கு ஐந்தென்னும் தொகை பெறுதற்கும். இனி, இதனை ஈண்டெண்ணியவற்றிற்கே தொகையாக்கிக் 'குடிகாத்தல்' என்பதனைக் குடிப்பிறப்பும் அதனை ஒழுக்கத்தாற் காத்தலும் எனப் பகுப்பாரும், 'கற்றறிதல்' என்பதனைக் கற்றலும் அறிதலும் எனப் பகுப்பாரும்உளர். அவர் 'உடன்' என்பதனை முற்றும்மைப் பொருட்டாக்கியும், 'குடி'யென்பதனை ஆகுபெயர் ஆக்கியும் இடர்ப்படுப.
குறள் 633 (பிரித்தலும்)
[தொகு]பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
'பொருத்தலும் வல்ல தமைச்சு. (03)'பொருத்தலும் வல்லது அமைச்சு.
- இதன்பொருள்
- பிரித்தலும்= வினைவந்துழிப் பகைவர்க்குத் துணையாயினாரை அவரிற் பிரிக்கவேண்டிற் பிரித்தலும்; பேணி்க்கொளலும்= தம்பாலரை அவர் பிரியாமற் கொடை இன்சொற்களாற் பேணிக்கொள்ளுதலும்; பிரிந்தார்ப் பொருத்தலும்= முன்னே தம்மினும் தம்பாலாரினும் பிரிந்தாரை மீண்டும் பொருத்தவேண்டிற் பொருத்தலும்; வல்லது அமைச்சு= வல்லவனே அமைச்சனாவான்.
- உரைவிளக்கம்
- இவற்றுள் அப்பொழுதை நிலைக்கேற்ற செயலறிதலும், அதனை அவர்அறியாமல், ஏற்ற உபாயத்தாற் கடைப்பிடித்தலும் அரியவாதல் நோக்கி, 'வல்லது' என்றார். வடநூலார், இவற்றுள் பொருத்தலைச் 'சந்தி'யென்றும், பிரித்தலை 'விக்கிரகம்' என்றுங் கூறுப.
குறள் 634 (தெரிதலுந்)
[தொகு]தெரிதலுந் தேர்ந்து செயலு மொருதலையாச்தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
'சொல்லலும் வல்ல தமைச்சு. (04)'சொல்லலும் வல்லது அமைச்சு.
- இதன்பொருள்
- தெரிதலும்= ஒரு காரியச்செய்கை பலவாற்றால் தோன்றின், அவற்றுள் ஆவது ஆராய்ந்து அறிதலும்; தேர்ந்து செயலும்= அது செய்யுங்கால் வாய்க்குந் திறன்நாடிச் செய்தலும்; ஒருதலையாச் சொல்லலும்= சிலரைப் பிரித்தல் பொருத்தல் செயற்கண், அவர்க்கு இதுவே செயற்பாலது என்று துணிவுபிறக்கும் வகை சொல்லுதலும்; வல்லது அமைச்சு= வல்லவனே அமைச்சனாவான்.
- உரைவிளக்கம்
- 'தெரிதல்' செயன்மேலதாயிற்று; வருகின்றது அதுவாகலின்.
குறள் 635 (அறனறிந்தான்)
[தொகு]அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்அறன் அறிந்தான் ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும்
'திறனறிந்தான் றேர்ச்சித் துணை. (05)'திறன் அறிந்தான் தேர்ச்சித் துணை.
- இதன்பொருள்
- அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான்= அரசனாற் செய்யப்படும் அறங்களை அறிந்து, தனக்கு ஏற்ற கல்வியான் நிறைந்தமைந்த சொல்லை உடையனாய்; எஞ்ஞான்றும் திறன் அறிந்தான்= எக்காலத்தும் வினை செய்யும் திறங்களை அறிந்தான்; தேர்ச்சித் துணை= அவர்க்குச் சூழ்ச்சித் துணையாம்.
- உரைவிளக்கம்
- தன்னரசன் சுருங்கிய காலத்தும் பெருகிய காலத்தும் இடைநிகராய காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். 'சொல்லான்' என்பதனை, ஒடு உருபின் பொருட்டாய ஆன் உருபாக்கி உரைப்பாரும் உளர்.
- இவை ஐந்து பாட்டானும் அமைச்சரது குணத்தன்மை கூறப்பட்டது.
குறள் 636 (மதிநுட்ப)
[தொகு]மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்மதி நுட்பம் நூலோடு உடையார்க்கு அதி நுட்பம்
'யாவுள முன்னிற் பவை. (06)'யா உள முன் நிற்பவை.
- இதன்பொருள்
- மதி நுட்பம் நூலோடு உடையார்க்கு= இயற்கையாகிய நுண்ணறிவைச் செயற்கையாகிய நூலறிவோடு உடையராய அமைச்சர்க்கு; அதி நுட்பம் முன் நிற்பவை யா உள= மிக்க நுட்பத்தையுடைய சூழ்ச்சிகளாய் முன்னிற்பன யாவை உள?
- உரைவிளக்கம்
- மதிநுட்பம் என்பது பின்மொழி நிலையல். அது தெய்வம்தர வேண்டுதலின் முற்கூறப்பட்டது. 'நூல்' என்பதூஉம், 'அதிநுட்பம்' என்பதூஉம் ஆகுபெயர். 'அதி' என்பது, வடசொல்லுள் மிகுதிப் பொருளதோர் இடைச்சொல்; அது திரிந்து, நுட்பம் என்பதனோடு தொக்கது. 'முன்னிற்றல்' மாற்றார் சூழ்ச்சியாயின, தம்சூழ்ச்சியால் அழியாது நிற்றல். இனி அதினுட்பம் என்று பாடம்ஓதி, அதனின்நுட்பம் யா என்று உரைப்பாரும் உளர். அவர் சூழ்ச்சி்க்கு இனமாய் முன் சுட்டப்படுவது ஒன்று இல்லாமையும், சுட்டுப்பெயர் ஐந்தாம் உருபு ஏற்றவழி, அவ்வாறு நில்லாமையும் அறிந்திலர்.பகைவர் சூழ்வனவற்றைத் தாமறிந்து அழித்து, அவர்அறிந்து அழியாதனதாஞ் சூழ்வர் என்பது கருத்து.
குறள் 637 (செயற்கை)
[தொகு]செயற்கை யறிந்தக் கடைத்து முலகத்செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
'தியற்கை யறிந்து செயல். (07)'இயற்கை அறிந்து செயல்.
- இதன்பொருள்
- செயற்கை அறிந்தக் கடைத்தும்= நூல்நெறியான் வினசெய்யும் திறஙகளை அறிந்தவிடத்தும்; உலகத்து இயற்கை அறிந்து செயல்= அப்பொழுது நடக்கின்ற உலகவியற்கையை அறிந்து அதனோடு பொருந்தச் செய்க.
- உரைவிளக்கம்
- 'கடைத்தும்' என்புழி 'து' பகுதிப்பொருள்விகுதி. நூல் நெறியே ஆயினும், உலகநெறியோடு பொருந்தாதன செய்யற்க; செய்யின் அது பழிக்கும் என இயற்கையறிவாற் பயன் கூறியவாறு.
குறள் 638 (அறிகொன்றறி)
[தொகு]அறிகொன்றறியா னெனினு முறுதிஅறி கொன்று அறியான் எனினும் உறுதி
'யுழையிருந்தான் கூறல் கடன். (08)'உழை இருந்தான் கூறல் கடன்.
- இதன்பொருள்
- அறி கொன்று அறியான் எனினும்= அறிந்து சொல்லியாரது அறிவையும் அழித்து, அரசன் தானும் அறியானே ஆயினும்; உறுதி கூறல் உழையிருந்தான் கடன்= அக்குற்றம் நோக்கி யொழியாது அவனுக்கு உறுதியாயின கூறுதல் அமைச்சனுக்கு முறைமை.
- உரைவிளக்கம்
- 'அறி'யென்பது முதனிலைத் தொழிற்பெயர். 'கோறல்' தான் கொள்ளாமை, மேலும் இகழ்ந்து கூறல். 'உழையிருந்தான்' எனப் பெயர்கொடுத்தார், அமாத்தியர் என்னும் வடமொழிப் பெயர்க்கும் பொருண்மை அதுவாகலின். உறுதி கூறாக்கால், அவனது இறுதி எய்தற்குற்றத்தை உலகம் தன்மேல் ஏற்றும் என்பார், 'கூறல் கடன்' என்றார்.
- இவை இரண்டுபாட்டானும் அவர் செயல் கூறப்பட்டது.
குறள் 639 (பழுதெண்ணு)
[தொகு]பழுதெண்ணு மந்திரியிற் பக்கத்துட் டெவ்வோபழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
'ரெழுபது கோடி யுறும். (09)'எழுபது கோடி உறும்.
- இதன்பொருள்
- பக்கத்துள் பழுது எண்ணும் மந்திரியின்= பக்கத்திருந்து பிழைப்ப எண்ணும் அமைச்சன் ஒருவனில்; ஓர் எழுபது கோடி தெவ் உறும்= அரசனுக்கு எதிர்நிற்பார் ஓர் எழுபது கோடி பகைவர் உறுவர்.
- உரைவிளக்கம்
- 'எழுபதுகோடி' என்றது, மிகப்பலவாய எண்ணிற்கு ஒன்று காட்டியவாறு. வெளிப்பட நிற்றலான் அவர் காக்கப் படுவர், இவன் உட்பகையாய் நிற்றலாற் காக்கப்படான் என்பது பற்றி இவ்வாறு கூறினார். எழுபதுகோடி மடங்கு நல்லர் என்றுரைப்பாரும், 'எழுபது கூறு தலை' யென்று பாடம் ஓதுவாரும் உளர்.
குறள் 640 (முறைப்படச்)
[தொகு]முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்முறைப் படச் சூழ்ந்தும் முடிவு இலவே செய்வர்
'திறப்பா டிலாஅ தவர். (10)'திறப்பாடு இலாஅதவர்.
- இதன்பொருள்
- முறைப் படச் சூழ்ந்தும் முடிவு இலவே செய்வர்= செய்யப்படும் வினைகளை முன் அடைவுபட எண்ணி வைத்தும், செய்யுங்கால் அவை முடிவு இலவாகவே செய்யாநிற்பர்; திறப்பாடு இலாதவர்= முடித்தற்கு ஏற்ற கூறுபாடு இல்லாதார்.
- உரைவிளக்கம்
- அக்கூறுபாடாவன: வந்தவந்த இடையூறுகட்கு, ஏற்றஏற்ற பரிகாரம் அறிந்து செய்தலும், தாம் திண்ணியர் ஆதலுமாம். பிழையாமல் எண்ணவல்லராய் வைத்தும், செய்து முடிக்கமாட்டாரும் உளர் என்பதாம்.
இவை இரண்டு பாட்டானும் அமைச்சருள் விடப்படுவாரது குற்றம் கூறப்பட்டது.