உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/62.ஆள்வினையுடைமை

விக்கிமூலம் இலிருந்து

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- 1. அரசியல்- அதிகாரம் 62. ஆள்வினையுடைமை

[தொகு]

பரிமேலழகர் உரை

[தொகு]

அதிகார முன்னுரை:

அஃதாவது, இடைவிடாது மெய்ம்முயற்சி உடையனாதல்;அஃது ஆளும்வினையெனக் காரியத்தாற் கூறப்பட்டது.மடி(யை) கெடுத்தாலும், வினை முயற்சியான் அன்றி ஆளப்படாமையின், இது மடியின்மையின்பின் வைக்கப்பட்டது.

குறள் 611 (அருமையுடைத்)

[தொகு]

அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும்/அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும்

'பெருமை முயற்சி தரும். (01)'/பெருமை முயற்சி தரும்.

இதன்பொருள்
அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும்= தஞ்சிறுமை நோக்கி நாம் இவ்வினைமுடித்தல் அருமை உடைத்துஎன்று கருதித் தளராது ஒழிக; பெருமை முயற்சி தரும்= அது முடித்தற்கு ஏற்ற பெருமையைத் தமக்கு முயற்சி உண்டாக்கும்.
உரைவிளக்கம்
சிறுமைநோக்கி என்பது, 'பெருமை தரும்' என்றதனானும், வினைமுடித்தல் என்பது, அதிகாரத்தானும் வருவிக்கப்பட்டன. விடாது முயலத் தாம் பெரியர் ஆவர்; ஆகவே, அரியனவும் எளிதின் முடியும் என்பதாம்.

குறள் 612 (வினைக்கண்)

[தொகு]

வினைக்கண் வினைகெட லோம்பல் வினைக்குறைவினைக் கண் வினை கெடல் ஓம்பல் வினைக் குறை

'தீர்ந்தாரிற் றீர்ந்தன் றுலகு. (02)'தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.

இதன்பொருள்
வினைக்குறை தீர்ந்தாரின் உலகு தீர்ந்தன்று= வினையாகிய குறையைச் செய்யாதுவிட்டாரை உலகம் விட்டது; வினைக்கண் வினை கெடல் ஓம்பல்= ஆதலால், செய்யப்படும் வினைக்கண் தவிர்ந்து இருத்தலை ஒழிக.
உரைவிளக்கம்
'குறை' இன்றியமையாப் பொருள். அது "பயக்குறை யில்லைத் தாம்வாழு நாளே" என்பதனானும் அறிக. இதற்கு வினை செய்யவேண்டும் குறையை நீங்கினாரின் நீங்கிற்று என்பாரும் உளர்:

குறள் 613 (தாளாண்மை)

[தொகு]

தாளாண்மை யென்னும் தகைமக்கட் டங்கிற்றே/தாளாண்மை என்னும் தகைமைக் கண் தங்கிற்றே

'வேளாண்மை என்னுஞ் செருக்கு. (03)'/ வேளாண்மை என்னும் செருக்கு.

இதன்பொருள்
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே= முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த குணத்தின் கண்ணே நிலைபெற்றது; வேளாண்மை என்னும் செருக்கு= எல்லார்க்கும் உபகாரம்செய்தல் என்னும் மேம்பாடு.
உரைவிளக்கம்
பொருள் கைகூடுதலான் உபகரித்தற்கு உரியார் முயற்சியுடையார் அவ்வக்குணங்கள் மேல்வைத்தும், அது பிறர்மாட்டு இல்லை என்பார் 'தங்கிற்றே' என்றும் கூறினார்.
இவை மூன்று பாட்டானும் முயற்சியது சிறப்புக் கூறப்பட்டது.

குறள் 614 (தாளாண்மையில்லா)

[தொகு]

தாளாண்மை யில்லாதான் வேளாண்மை பேடிகை/தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடி கை

'வாளாண்மை போலக் கெடும். (04)'//வாளாண்மை போலக் கெடும்.

இதன்பொருள்
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை= முயற்சி இல்லாதவன் உபகாரியாம் தன்மை; பேடி கை வாளாண்மை போலக் கெடும்= படை கண்டால் அஞ்சும் பேடி அதனிடைத் தன்கையில் வாளை ஆளுதல்தன்மைபோல இல்லையாம்.
உரைவிளக்கம்
'ஆள்' என்பது முதனிலைத் தொழிற்பெயர். பேடி வாளைப் பணிகோடற் கருத்துடையள் ஆயினும், அது தன் அச்சத்தான் முடியாதவாறு போல, முயற்சியில்லாதான் பலர்க்கும் உபகரித்தற் கருத்துடையனாயினும், அது தன் வறுமையான் முடியாது என்பதாம். 'வாளாண்மை' என்பதற்கு, வாளாற் செய்யும் ஆண்மை என்று உரைப்பாரும் உளர்.
இதனான் அஃது இல்லாதானது குற்றம் கூறப்பட்டது.

குறள் 615 (இன்பம்விழை)

[தொகு]

இன்பம் விழையான் வினைவிழைவான் றன்கேளிர்// இன்பம் விழையான் வினை விழைவான் தன் கேளிர்

'துன்பந் துடைத்தூன்றுந் தூண். (05)'// துன்பம் துடைத்து ஊன்றும் தூண்.

இதன்பொருள்
இன்பம் விழையான் வினை விழைவான்= தனக்கு இன்பத்தை விரும்பானாகி, வினை முடித்தலையே விரும்புவான்; தன் கேளிர் துன்பம் துடைத்து ஊன்றும் தூண்= தன் கேளிராகிய பாரத்தின் துன்பத்தினை நீக்கி, அதனைத் தாங்கும் தூணாம்.
உரைவிளக்கம்
இஃது ஏகதேச உருவகம். 'ஊன்றும்' என்றது, அப்பொருட்டாதல் "மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்கு" என்பதனானும் அறிக. சுற்றத்தார், நட்டாரது வறுமையுந் தீர்த்து, அவர்க்கு ஏமஞ்செய்யும் ஆற்றலை உடையனாம் எனவே, தன்னைக் கூறவேண்டா ஆயிற்று. காரியத்தை விழையாது, காரணத்தை விழைவான் எல்லாப் பயனும் எய்தும் என்றதனால், காரணத்தை விழையாது காரியத்தை விழைவான் யாதும் எய்தான் என்பது பெற்றாம்.
இதனால் அஃது உடையானது நன்மை கூறப்பட்டது.
‡. நாலடியார் 397.

குறள் 616 (முயற்சிதிரு)

[தொகு]

முயற்சி திருவினை யாக்கு முயற்றின்மை// முயற்சி திருவினை ஆக்கும் முயற்று இன்மை

'யின்மை புகுத்தி விடும். (06)'// இன்மை புகுத்தி விடும்.

இதன்பொருள்
முயற்சி திருவினை ஆக்கும்= அரசர்மாட்டு உளதாய முயற்சி அவரது செல்வத்தினை வளர்க்கும்; முயற்று இன்மை இன்மை புகுத்திவிடும்= அஃது இல்லாமை வறுமையை அடைவித்துவிடும்.
உரைவிளக்கம்
செல்வம் அறுவகை அங்கங்கள். வறுமை அவற்றான் வறியராதல். அதனை அடைவிக்கவே, பகைவரான் அழிவர் என்பது கருத்து.

†. குறள் 381.

குறள் 617 (மடியுளாள்)

[தொகு]

மடியுளாண் மாமுகடி யென்ப மடியிலான் // மடி உளாள் மா முகடி என்ப மடி இலான்

'றாளுளா டாமரையி னாள் (07).'// தாள் உளாள் தாமரையினாள்.

இதன்பொருள்
மா முகடி மடி உளாள்= கரியசேட்டை ஒருவன் மடியின்கண்ணே உறையும்; தாமரையினாள் மடி இலான் தாள் உளாள் என்ப= திருமகள் மடியிலானது முயற்சி்க்கண்ணே உறையும் என்று சொல்லுவர் அறிந்தோர்.
உரைவிளக்கம்
பாவத்தின் கருமை அதன்பயனாய 'முகடி'மேல் ஏற்றப்பட்டது. மடியும் முயற்சியும் உடையார்மாட்டு நிலையை அவை தம்மேல் வைத்துக்கூறினார்.
இவை இரண்டு பாட்டானும் அவ்விருமைக்கும் ஏது கூறப்பட்டது.

குறள் 618 (பொறியின்மை)

[தொகு]

பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்// பொறி இன்மை யார்க்கும் பழி அன்று அறிவு அறிந்து

'தாள்வினை யின்மை பழி. (08).'// ஆள்வினை இன்மை பழி.

இதன்பொருள்
பொறி இன்மை யார்க்கும் யார்க்கும் பழிஅன்று= பயனைத் தருவதாய விதியில்லாமை ஒருவற்கும் பழியாகாது; அறிவு அறிந்து ஆள்வினை இன்மை பழி= அறிய வேண்டும் அவற்றை வினைசெய்யாமையே பழியாவது.
உரைவிளக்கம்
அறிய வேண்டுவன வலி முதலாயின. தெய்வம் இயையாவழி ஆள்வினை உடைமையான் பயனில்லை என்பாரை நோக்கி, உலகம் பழவினைபற்றிப் பழியாது, ஈண்டைக் குற்றம் உடைமைபற்றியே பழிப்பது என்றார். அதனால் விடாது முயல்க என்பது குறிப்பெச்சம்.
¶. காலம், இடம் ஆகியவை.

குறள் 619 (தெய்வத்தா)

[தொகு]

தெய்வத்தா னாகா தெனினு முயற்சிதன் // தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்

'மெய்வருத்தக் கூலி தரும் (09).' // மெய் வருத்தக் கூலி தரும்.

இதன்பொருள்
தெய்வத்தான் ஆகாது எனினும்= முயன்றவினை, பால்வகையாற் கருதிய பயனைத் தாராதாயினும்; முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்= முயற்சி தனக்கு இடமாகிய உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியளவு தரும், பாழாகாது.
உரைவிளக்கம்
தெய்வத்தான் ஆயவழித் தன்அளவின் மிக்க பயனைத் தரும் என்பது உம்மையான் பெற்றாம். இருவழியும் பாழாகல் இன்மையின், தெய்வநோக்கி இராது முயல்க என்பது கருத்து.

குறள் 620 (ஊழையு)

[தொகு]

ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித் // ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றித்

'தாழா துஞற்று பவர் (10).' // தாழாது உஞற்றுபவர்.

இதன்பொருள்
ஊழையும் உப்பக்கம் காண்பர்= பயனை விலக்குவதாய ஊழினையும் புறங் காண்பர்; உலைவு இன்றித தாழாது உஞற்றுபவர்= அவ்விலக்கிற்கு இளையாது வினையைத் தாழ்வற முயல்வார்.
உரைவிளக்கம்
தாழ்வறுதல், சூழ்ச்சியினும் வலி முதலிய அறிதலினும், செயலினும் குற்றமறுதல். ஊழ் ஒருகாலாக, இருகாலாக அல்லது விலக்கல்ஆகாமையின் பலகால் முயல்வார் பயன்எய்துவர் என்பார், 'உப்பக்கம் காண்பார்' என்றார்.
தெய்வத்தான் இடுக்கண் வரினும் முயற்சிவிடற்பாலது அன்று என்பது, இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.