திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/59.ஒற்றாடல்
1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து
2.வான்சிறப்பு
3.நீத்தார்பெருமை
4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை
6.வாழ்க்கைத்துணைநலம்
7.மக்கட்பேறு
8.அன்புடைமை
9.விருந்தோம்பல்
10.இனியவைகூறல்
11.செய்ந்நன்றியறிதல்
12.நடுவுநிலைமை
13.அடக்கமுடைமை
14.ஒழுக்கமுடைமை
15.பிறனில்விழையாமை
16.பொறையுடைமை
17.அழுக்காறாமை
18.வெஃகாமை
19.புறங்கூறாமை
20.பயனிலசொல்லாமை
21.தீவினையச்சம்
22.ஒப்புரவறிதல்
23.ஈகை
24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை
26.புலான்மறுத்தல்
27.தவம்
28.கூடாவொழுக்கம்
29.கள்ளாமை
30.வாய்மை
31.வெகுளாமை
32.இன்னாசெய்யாமை
33.கொல்லாமை
34.நிலையாமை
35.துறவு
36.மெய்யுணர்தல்
37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்
பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி
40.கல்வி
41.கல்லாமை
42.கேள்வி
43.அறிவுடைமை
44.குற்றங்கடிதல்
45.பெரியாரைத்துணைக்கோடல்
46.சிற்றினஞ்சேராமை
47.தெரிந்துசெயல்வகை
48.வலியறிதல்
49.காலமறிதல்
50.இடனறிதல்
51.தெரிந்துதெளிதல்
52.தெரிந்துவினையாடல்
53.சுற்றந்தழால்
54.பொச்சாவாமை
55.செங்கோன்மை
56.கொடுங்கோன்மை
57.வெருவந்தசெய்யாமை
58.கண்ணோட்டம்
59.ஒற்றாடல்
60.ஊக்கமுடைமை
61.மடியின்மை
62.ஆள்வினையுடைமை
63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு
65.சொல்வன்மை
66.வினைத்தூய்மை
67.வினைத்திட்பம்
68.வினைசெயல்வகை
69.தூது
70.மன்னரைச்சேர்ந்தொழுகல்
71.குறிப்பறிதல்
72.அவையறிதல்
73.அவையஞ்சாமை
74.நாடு
75.அரண்
76.பொருள்செயல்வகை
77.படைமாட்சி
78.படைச்செருக்கு
79.நட்பு
80.நட்பாராய்தல்
81.பழைமை
82.தீநட்பு
83.கூடாநட்பு
84.பேதைமை
85.புல்லறிவாண்மை
86.இகல்
87.பகைமாட்சி
88.பகைத்திறந்தெரிதல்
89.உட்பகை.
90.பெரியாரைப்பிழையாமை
91.பெண்வழிச்சேறல்
92.வரைவின்மகளிர்
93.கள்ளுண்ணாமை
94.சூது
95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை
97.மானம்
98.பெருமை
99.சான்றாண்மை
100.பண்புடைமை
101.நன்றியில்செல்வம்
102.நாணுடைமை
103.குடிசெயல்வகை
104.உழவு
105.நல்குரவு
106.இரவு
107.இரவச்சம்
108.கயமை
1.களவியல்
109.தகையணங்குறுத்தல்
110.குறிப்பறிதல்
111.புணர்ச்சிமகிழ்தல்
112.நலம்புனைந்துரைத்தல்
113.காதற்சிறப்புரைத்தல்
114.நாணுத்துறவுரைத்தல்
115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை
117.படர்மெலிந்திரங்கல்
118.கண்விதுப்பழிதல்
119.பசப்புறுபருவரல்
120.தனிப்படர்மிகுதி
121.நினைந்தவர்புலம்பல்
122.கனவுநிலையுரைத்தல்
123.பொழுதுகண்டிரங்கல்
124.உறுப்புநலனழிதல்
125.நெஞ்சொடுகிளத்தல்
126.நிறையழிதல்
127.அவர்வயின்விதும்பல்
128.குறிப்பறிவுறுத்தல்
129.புணர்ச்சிவிதும்பல்
130.நெஞ்சொடுபுலத்தல்
131.புலவி
132.புலவிநுணுக்கம்
133.ஊடலுவகை
திருக்குறள் பொருட்பால்- 1. அரசியல்- அதிகாரம் 59. ஒற்றாடல்
[தொகு]பரிமேலழகர் உரை
[தொகு]அதிகார முன்னுரை:
- அஃதாவது, பகை நொதுமல் நட்பு என்னும் மூன்று திறத்தார்மாட்டும் நிகழ்ந்தன அறிதற்கு ஒற்றரை ஆளுதல். மேற்சொல்லிய இலக்கணத்தானாய அரசனுக்குத் தன் நாடுசெலுத்துங்காலும், பிறர் நாடுகொள்ளுங்காலும் வேண்டுவன கூறுகின்றாராகலின், அவ்விருமைக்கும் இன்றியமையாதாய இது முன்வைக்கப்பட்டது.
குறள் 581 (ஒற்றுமுரை)
[தொகு]ஒற்று முரைசான்ற நூலு மிவையிரண்டுந்ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும்
'தெற்றென்க மன்னவன் கண். (01)'தெற்றென்க மன்னவன் கண்.
- இதன்பொருள்
- ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும்= ஒற்றும், புகழமைந்த நீதிநூலுமாகிய இவை இரண்டனையும்; மன்னவன் கண் தெற்றென்க= அரசன் தன் இரண்டு கண்ணுமாகத் தெளிக.
- உரைவிளக்கம்
- ஒற்றுத் தன்கண் செல்லமாட்டாத பரப்பெல்லாம் சென்று கண்டு, ஆண்டு நிகழ்ந்தன எல்லாம் உணர்த்தலானும், நூல் அந்நிகழ்ந்தவற்றிற்குத் தன் உணர்வு செல்லமாட்டாத வினைகளை எல்லாம் சொல்லி உணர்த்தலானும், இவ்விரண்டனையுமே தனக்கு ஊனக்கண்ணும், ஞானக்கண்ணும் ஆகத் துணிந்துகொண்டு ஒழுகுக என்பதாம். ஒற்றனை 'ஒற்று' என்றார்,வேந்தனை 'வேந்து' என்றாற் போல. 'தெற்றென்க' என்பது தெற்றென் என்பது முதனிலையாக வந்த வியங்கோள். அது தெற்றென என்னும் செயவென் எச்சத்தான் அறிக.
- இதனால் ஒற்றினது சிறப்புக் கூறப்பட்டது.
குறள் 582 (எல்லார்க்கு)
[தொகு]எல்லார்க்கு மெல்ல நிகழ்பவை யெஞ்ஞான்றும்எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை யெஞ்ஞான்றும்
'வல்லறிதல் வேந்தன் றொழில். (02)'வல் அறிதல் வேந்தன் தொழில்.
- இதன்பொருள்
- எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல் அறிதல்= எல்லார்கண்ணும் நிகழ்வன எல்லாவற்றையும், நாள்தோறும் ஒற்றான் விரைந்தறிதல்; வேந்தன் தொழில்= அரசனுக்கு உரிய தொழில்.
- உரைவிளக்கம்
- 'எல்லார்க்கும்' என்றது மூன்று திறத்தாரையும். நான்காவது ஏழாவதன் பொருட்டு வந்தது. நிகழ்வன 'எல்லாம்' என்றது, நல்லவும் தீயவும் ஆய சொற்களையும், செயல்களையும். அவை நிகழ்ந்தபோதே, அவற்றிற்குத் தக்க அளியாகத் தெறலாகச் செய்ய வேண்டுதலின் 'வல்லறிதல்' என்றும், அவ்விரு தொழிற்கும் அறிதல் காரணமாகலின் அதனையே உபசாரவழக்கால் 'தொழில்' என்றும் கூறினார். ஒற்றான் என்பது, அதிகாரத்தான் வந்தது.
- இதனால் ஒற்றினாய பயன் கூறப்பட்டது.
குறள் 583 (ஒற்றினா)
[தொகு]ஒற்றினா னொற்றிப் பொருடெரியா மன்னவன்ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன்
'கொற்றங் கொளக்கிடந்த தில். (03)'கொற்றம் கொளக் கிடந்தது இல்.
- இதன்பொருள்
- ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன்= ஒற்றினானே எல்லார்கண்ணும் நிகழ்ந்தவற்றை ஒற்றுவித்து அவற்றான் எய்தும் பயனை ஆராயாத அரசன்; கொற்றம் கொளக்கிடந்தது இல்= வென்றியடையக் கிடந்தது வேறொரு நெறியில்லை.
- உரைவிளக்கம்
- அந்நிகழ்ந்தனவும், பயனும் அறியாது பகைக்கு எளியனாதல் பிறிதின் தீராமையின் 'கொற்றங் கொளக்கிடந்தது இல்' என்றார். இதற்குக் 'கொளக்கிடந்தது ஒரு வென்றியில்லை' Γ என்று உரைப்பினும் அமையும்.
- இதனால் அத்தொழில் செய்யாதவழி வரும் குற்றம் கூறப்பட்டது.
- Γ. மணக்குடவர்.
குறள் 584 (வினைசெய்வார்)
[தொகு]வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங்வினை செய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்று ஆங்கு
'கனைவரையு மாராய்வ தொற்று. (04)'அனைவரையும் ஆய்வது ஒற்று.
- இதன்பொருள்
- தம் வினை செய்வார் சுற்றம் வேண்டாதார் என்ற அனைவரையும் ஆராய்வது= தம் காரியம் செய்வார், சுற்றத்தார், பகைவர் என்று சொல்லப்பட்ட அனைவரையும் சொல், செயல்களான் ஆராய்வானே; ஒற்று= ஒற்றனாவான்.
- உரைவிளக்கம்
- 'தம்' என்றது, அரசனோடு உளப்படுத்தி அவனுக்குக் காரியம்செய்வார் செய்வனவும், சுற்றத்தார் தன்னிடத்தும் நாட்டிடத்தும் செய்வனவும், பகைவர் தன் அற்றம் ஆராய்தலும் மேல்தேறப்படுதலும், முன்னிட்டுத் தன்னிடத்துச் செய்வனவும் அறிந்து, அவற்றிற்கு ஏறறன செய்யவேண்டுதலின், இம்மூவகையாரையும் எஞ்சாமல் ஆராய வேண்டும் என்பார், 'அனைவரையும் ஆராய்வது ஒற்று' என்றார்.
குறள் 585 (கடாஅவுரு)
[தொகு]கடாஅ வுருவொடு கண்ணஞ்சா தியாண்டுகடாஅ உருவொடு கண் அஞ்சாது யாண்டும்
'முகாஅமை வல்லதே யொற்று. (05)'உகாஅமை வல்லதே ஒற்று.
- இதன்பொருள்
- கடாஅ உருவொடு= ஒற்றப்பட்டார் கண்டால், ஐயுறாத வடிவோடு பொருந்தி; கண் அஞ்சாது= அவர் ஐயுற்று அறியலுறின் செயிர்த்து நோக்கிய அவர் கண்ணிற்கு அஞ்சாது நின்று; யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று= நான்கு உபாயமும் செய்தாலும், மனத்துக் கொண்டவற்றை உமிழாமை வல்லவனே ஒற்றனாவான்.
- உரைவிளக்கம்
- 'கடா' என்பது, கடுக்கும் என்னும் பெயரெச்சத்து எதிர்மறை. ஐயுறாத வடிவாவன: பார்ப்பார், வணிகர் முதலாயினோர் வடிவு.
குறள் 586 (துறந்தார்)
[தொகு]துறந்தார் படிவத்த ராகி யிறந்தாராய்ந்துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து
'தென்செயினுஞ் சோர்வில தொற்று. (06)'என் செயினும் சோர்வு இலது ஒற்று.
- இதன்பொருள்
- துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து= முற்றத் துறந்து ஆராயும் விரத ஒழுக்கினராயும், உள்புகுதற்கு அரியஇடங்கள் எல்லாம் உள்புக்கு ஆராயவேண்டுவன ஆராய்ந்து அறிந்து; என் செயினும் சோர்வு இலது ஒற்று= ஆண்டையார் ஐயுற்றுப்பிடித்து எல்லாத் துன்பமும் செய்துகேட்டாலும் தன்னை வெளிப்படுத்தாதவனே ஒற்றனாவான்.
- உரைவிளக்கம்
- விரதஒழுக்கம் தீர்த்த யாத்திரை முதலாயின. 'செயினும்' என்பது, அறவோர்என்று செய்வாரின்மை விளக்கிநின்றது. மேல் @ நால்வகை உபாயத்தினும், சோர்வின்மை சொல்லிவைத்து, ஈண்டும் தண்டத்தைப் பிரித்துவைத்துக் கூறியது, அதனது பொறுத்தற்குஅருமைச் சிறப்புநோக்கி. இதனுட் 'படிவம்' என்றதனை வேடமாக்கித் 'துறந்தார் வேடத்தராகி' என்று உரைப்பாரும் உளர்.$
@ பார்க்க: 585 ஆம் குறளுரை.
$ மணக்குடவர்.
குறள் 587 (மறைந்தவை)
[தொகு]மறைந்தவை கேட்கவற் றாகி யறிந்தவைமறைந்தவை கேட்க வற்று ஆகி அறிந்தவை
'யையப்பா டில்லதே யொற்று. (07)'ஐயப்பாடு இல்லதே ஒற்று.
- இதன்பொருள்
- மறைந்தவை கேட்க வற்று ஆகி= ஒற்றப்பட்டார் மறையச்செய்த செயல்களை அவர்களுக்கு உள்ளாயினாரால் கேட்க வல்லனாய்; அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று= கேட்டறிந்த செயல்களில் பின் ஐயப்படாது துணியவல்லவனே ஒற்றனாவான்.
- உரைவிளக்கம்
- மறைந்தவை சொல்லுவாரை அறிந்து, அவர் அயிராமல் சென்று ஒட்டித் தாமே சொல்லும்வகை அதற்கேற்ற சொல்லாக, செயலாக முன்னே விளைத்து, அத்தொடர்பால் கேட்குங்காலும், உறாதார்போன்று நின்று கேட்கவேண்டுதலின் 'கேட்கவற்றாகி' என்று்ம், கேட்டறிந்தவற்றைத் தானே ஐயுற்றுவந்து சொல்லின் அரசனால் அவற்றிற்கு ஏற்ற வினைசெய்யலாகாமையின் 'ஐயப்பாடு இல்லதே' என்றும் கூறினார்.
- இவை நான்கு பாட்டானும் ஒற்றினது இலக்கணம் கூறப்பட்டது.
குறள் 588 (ஒற்றொற்றி)
[தொகு]ஒற்றொற்றித் தந்த பொருளையு மற்றுமோஒற்று ஒற்றித் தந்த பொருளையும் மற்றும் ஓர்
'ரொற்றினா லொற்றிக் கொளல். (08)'ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
- இதன்பொருள்
- ஒற்று ஒற்றித் தந்த பொருளையும்= ஓர் ஒற்றன் ஒற்றிவந்து அறிவித்த காரியம் தன்னையும்; மற்றும் ஓர் ஒற்றினால் ஒற்றிக் கொளல்= பிறன்ஓர் ஒற்றனாலும் ஒற்றுவித்து ஒப்புமை கண்டுகொள்க.
- உரைவிளக்கம்
- ஒற்றப்பட்டாரோடு ஒத்துநின்று மாறுபடக்கூறலும் கூடுமாகலின், ஒருவன் மாற்றம் தேறப்படாது என்பதாம்.
குறள் 589 ()
[தொகு]ஒற்றொற் றுணராமை யாள்க வுடன்மூவர்ஒற்று ஒற்று உணராமை ஆள்க உடன் மூவர்
'சொற்றொக்க தேறப் படும். (09)'சொல் தொக்க தேறப் படும்.
- இதன்பொருள்
- ஒற்று ஒற்று உணராமை ஆள்க= ஒற்றரை ஆளுமிடத்து ஒருவனை ஒருவன் அறியாமல் ஆள்க; உடன்மூவர் சொல்தொக்க தேறப்படும்= அங்ஙனம் ஆண்ட ஒற்றர் மூவரை ஒருபொருள்மேல் விட்டால், அம்மூவர் சொல்லும், பயனால் ஒத்தனவாயின் அதுமெய்யென்று தெளியப்படும்.
- உரைவிளக்கம்
- ஆயின் என்பது வருவிக்கப்பட்டது. ஒருவனை ஒருவன் அறியின் தம்முள் இயைந்து ஒப்பக் கூறுவாராகலின் 'உணராமையாள்க' என்றும், மூவர்க்கு நெஞ்சு ஒற்றுமைப்படுதலும், பட்டால் நீடுநிற்றலும் கூடாமையின் 'தேறப்படும்' என்றும் கூறினார். இதனானே அஃது ஒத்திலவாயின் பின்னும் ஆராய்க என்பதூஉம் பெற்றாம்.
குறள் 590 (சிறப்பறிய)
[தொகு]சிறப்பறிய வொற்றின்கட் செய்யற்க செய்யிற்சிறப்பு அறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
'புறப்படுத்தா னாகு மறை. (10)'புறப்படுத்தான் ஆகும் மறை.
- இதன்பொருள்
- ஒற்றின்கண் சிறப்பு அறியச் செய்யற்க= மறைந்தவை அறிந்து கூறிய ஒற்றின்கண் செய்யும் சிறப்பினை, அரசன் பிறர்அறியச் செய்யாது ஒழிக; செய்யின் மறை புறப்படுத்தான் ஆகும்= செய்தானாயின், தன்னகத்து அடக்கப்படும் மறையைத் தானே புறத்திட்டானாம்.
- உரைவிளக்கம்
- 'மறை'யாவது, அவன் ஒற்றனாயதூஉம், அவன் கூறியதூஉம் ஆம். சிறப்புப்பெற்ற இவன் யாவன் என்றும், இது பெறுதற்குக் காரணம் யாதென்றும் வினவுவாரும் இறுப்பாரும் அயலார்ஆகலின், 'புறப்படுத்தானாகும்' என்றார்.
- இவை மூன்று பாட்டானும், ஒற்றரை ஆளுமாறும், அவரான் நிகழ்ந்தனஅறியுமாறும், அறிந்தால் சிறப்புச்செய்யுமாறும் கூறப்பட்டன.