திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/117.படர்மெலிந்திரங்கல்

விக்கிமூலம் இலிருந்து

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் காமத்துப்பால்- கற்பியல்[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகாரம் 117.படர்மெலிந்து இரங்கல்[தொகு]

அதிகார முன்னுரை
அது படரான் மெலிந்து இரங்கல் எனவிரியும். அஃதாவது பிரிவாற்றாளாய தலமகள் தான் உறுகின்ற துன்பத்தினை எப்பொழுதும் நினைத்தலின், அந்நினைவான் மெலிந்து இரங்குதல். அதிகாரமுறைமையும் இதனானே விளங்கும்.

குறள் 1161 ( மறைப்பேன்மன்)[தொகு]

(காம நோயை வெளிப்படுத்தல் நின் நாணுக்கு ஏலாது என்ற தோழிக்குச் சொல்லியது. )

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை யிறைப்பவர்க் ( ) மறைப்பேன் மன் யான் இஃதோ நோயை இறைப்பார்க்கு

கூற்றுநீர் போல மிகும். (01) ஊற்று நீர் போல மிகும்.

[தொடரமைப்பு: நோயை யான் மறைப்பேன், இஃதோ இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும்.
]

இதன்பொருள்
நோயை யான் மறைப்பேன்= இந்நோயைப் பிறர் அறிதல் நாணி யான் மறையாநின்றேன்;
இஃதோ இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும்= நிற்பவும், இஃது அந்நாள்வரை நில்லாது நீர் வேண்டும் என்று இறைப்பவர்க்கு ஊற்றுநீர் மிகுமாறு போல் மிகாநின்றது.
உரைவிளக்கம்
அம்மறைத்தலாற் பயன் என் என்பதுபட நின்றமையின்,'மன்' ஒழியிசைக்கண் வந்தது. "இஃதோ செல்வர்க்கு ஒத்தனென்யான்" என்புழிப்போல ஈண்டுச் சுட்டுப்பெயர் ஈறுதிரிந்து நின்றது. இஃதோர் நோயை என்று பாடம் ஓதுவாரும் உளர். அஃது பாடம் அன்மை அறிக. இனி, அதற்கு அடுத்தது நீசெயல் வேண்டும் என்பதாம்.

குறள் 1162 ( கரத்தலுமா)[தொகு]

( ஈண்டை அறியாமல் மறைத்தல், ஆண்டையார் அறியத் தூதுவிடுதல் என்னும் இரண்டனுள் ஒன்று செயல்வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது.)

கரத்தலு மாற்றேனிந் நோயைநோய் செய்தார்க் ( ) கரத்தலும் ஆற்றேன் இந் நோயை நோய் செய்தார்க்கு

குரைத்தலு நாணுத் தரும். (02) உரைத்தலும் நாணுத்தரும்

[தொடரமைப்பு: இந்நோயைக் கரத்தலும் ஆற்றேன், நோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத்தரும்.
]

இதன்பொருள்
இந்நோயைக் கரத்தலும் ஆற்றேன்= இந்நோயை ஈண்டையார் அறியாமல் மறைத்தலும் வல்லேன் ஆகின்றிலேன்;
நோய் செய்தவர்க்கு உரைத்தலும் நாணுத்தரும்= ஆகாக்கால், நோய்செய்தார்க்கு உரைக்கவெனின், அதுவும் எனக்கு நாணினைத் தாராநின்றது, இனி என்செய்கோ?
உரை விளக்கம்
ஒருகாலைக்கு ஒருகால் மிகுதலின் 'கரத்தலும் ஆற்றேன்' என்றும், சேயிடைச் சென்றவர்க்கு இதுசொல்லித் தூது விட்டால், இன்னுமிருந்தேன் என்பது பயக்கும் என்னும் கருத்தால் 'நாணுத்தரும்' என்றும் கூறினாள்.

குறள் 1163 ( காமமு)[தொகு]

(இதுவுமது )

காமமு நாணு முயிர்காவாத் தூங்குமென் ( ) காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும் என்

னோனா வுடம்பி னகத்து. (03) நோனா உடம்பின் அகத்து.

[தொடரமைப்பு: காமமும் நாணும், நோனா என் உடம்பின் அகத்து, உயிர் காவாத் தூங்கும்.
]

இதன்பொருள்
காமமும் நாணும்= காமநோயும் அதனைச் செய்தவர்க்கு உரைக்கல் ஒல்லாத நாணும்;
நோனா என் உடம்பின் அகத்து= தம்மைப் பொறாத என் உடம்பின்கண்ணே;
உயிர் காவாத் தூங்கும்= உயிர் காத் தண்டாக அதன் இருதலையினும் தூங்காநின்றன.
உரை விளக்கம்
பொறாமை மெலிவான்ஆயது. 'தூங்கும்' என்பது, ஒன்றின் ஒன்று மிகாது இரண்டும் ஒத்தசீர என்பது தோன்றநின்றது. தூதுவிடவும், ஒழியவும் பண்ணுவனவாய காம, நாண்கள் தம்முள் ஒத்து உயிரினை இறுவியாநின்றன. யான் அவற்றுள் ஒன்றின்கண் நிற்கமாட்டாமையின் இஃது இற்றே விடும் என்பதாம்.

குறள் 1164 ( காமக்கடன்)[தொகு]

( தலைவியர் காமக்கடற்படார், படினும் அதனை ஏற்ற புணையான் நீந்துக் கடப்பர் என்ற தோழிக்குச் சொல்லியது.)

காமக் கடன்மன்னு முண்டே யதுநீந்து ( ) காமக் கடல் மன்னும் உ்ண்டே அது நீந்தும்

மேமப் புணைமன்னு மில். (04) ஏமப் புணை மன்னும் இல்.

[தொடரமைப்பு: உண்டு காமக் கடலே, அது நீந்தும் ஏமப் புணை இல்.
]

இதன்பொருள்
உண்டு காமக்கடலே மன்னும்= யாவர்க்கும் உளவாய் வருகின்ற இவ்விரண்டன்உள்ளும், எனக்குண்டாகின்றது காமக்கடலே;
அது நீந்தும் ஏமப்புணை மன்னும் இல்= அதனை நீந்தும் அரணாகிய புணை இல்லை.
உரை விளக்கம்
இருவழியும் 'மன்'னும் 'உம்'மும் அசைநிலை. தூதுவிட்டு இதற்குப் புணையாகற்பாலையாய நீயும் ஆயிற்றிலை என்பது கருத்து.

குறள் 1165 ( துப்பினெவ)[தொகு]

(தூதுவிடாமை நோக்கித் தோழியொடு புலந்து சொல்லியது. )

துப்பி னெவனாவர் மற்கொ றுயர்வரவு () துப்பின் எவன் ஆவர் மன் கொல் துயர் வரவு

நட்பினு ளாற்று பவர். (05) நட்பினுள் ஆற்றுபவர்.

[தொடரமைப்பு: நட்பினுள் துயர் வரவு ஆற்றுபவர், துப்பின் எவன் ஆவர் கொல் மன்
]

இதன்பொருள்
நட்பினுள் துயர் வரவு ஆற்றுபவர்= இன்பம் செய்தற்குரிய நட்பின்கண்ணே துன்ப வரவினைச் செய்யவல்லவர்;
துப்பின் எவன் ஆவர் கொல்= துன்பம் செய்தற்கு உரிய பகைமைக்கண் என்செய்வர் கொலோ?
உரை விளக்கம்
துப்புப் பகையும் ஆதல் "துப்பெதி்ர்ந் தோர்க்கே உள்ளாச் சேய்மைய/ னட்பெதிர்ந் தோர்க்கே யங்கை யண்மையன்" (புறநானூறு, 380) என்பதனானும் அறிக. அப்பகைமை ஈண்டுக் காணாமையின் அவர்செய்வதும் அறியப் பெற்றிலேம் என்பதுபடநின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. துயர்வருதலை விலக்கலாயிருக்க அது செய்கின்றிலை எனப் புலக்கின்றமையின், துயர்வரவு செய்தாளாக்கியும், பிறளாக்கியும் கூறினாள்.

குறள் 1166 (இன்பங்கடல்)[தொகு]

( காமத்தான் இன்பமுற்றார்க்கு அதனினாய துன்பமும் வரும் என்ற தோழிக்குச் சொல்லியது. )

இன்பங் கடன்மற்றுக் காம மஃதடுங்காற் ( ) இன்பம் கடல்மற்றுக் காமம் அஃது அடுங்கால்

றுன்ப மதனிற் பெரிது. (06) துன்பம் அதனின் பெரிது.

[தொடரமைப்பு: காமம் இன்பம் கடல், மற்று அஃது அடுங்கால் துன்பம் அதனின் பெரிது.
]

இதன்பொருள்
காம இ்ன்பம் கடல்= காமம் புணர்வால் இன்பம் செய்யுங்கால், அவ்வின்பம் கடல்போலப் பெரிதாம்;
மற்று அஃது அடுங்கால் துன்பம் அதனின் பெரிது= இனி அதுதானே பிரிவால் துன்பம் செய்யுங்கால், அத்துன்பம் அக்கடலினும் பெரிதாம்.
உரை விளக்கம்
மற்று வினைமாற்றின்கண் வந்தது. அடுங்கால் எனவந்தமையின், மறுதலையெச்சம் வருவிக்கப்பட்டது. பெற்ற இன்பத்தோடு ஒத்துவரின் ஆற்றலாம்; இஃது அதனது அளவன்று என்பது கருத்து.

குறள் 1167 ( காமக்கடும்)[தொகு]

(காமக்கடல் நிறைபுணையாக நீந்தப்படும் என்றாட்குச் சொல்லியது.)

காமக் கடும்புன னீந்திக் கரைகாணேன் ( ) காமக் கடும் புனல் நீந்திக் கரை காணேன்

யாமத்தும் யானே யுளேன். (07) யாமத்தும் யானே உளன்.

[தொடரமைப்பு:காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன், யாமத்தும் யானே உளேன்.
]

இதன்பொருள்
காமக் கடும்புனல் நீந்திக் கரை காணேன்= காமம் ஆகிய கடலை நீந்தாதேன் அல்லேன், நீந்தியும் அதற்குக் கரை காண்கின்றிலேன்;
யாமத்தும் யானே உளேன்= அக்காணாமைக் காலம்தான் எல்லாரும் துயிலும் அரையிருள் ஆயிற்று; அவ் அரையிருட்கண்ணும் அதற்கொரு துணையின்றி யானே ஆயினேன்; ஆயும் இறந்துபட்டு உய்ந்துபோகாது உளேனாகாநின்றேன், ஈதொரு தீவினைப்பயன் இருந்தவாறு என்!
உரை விளக்கம்
கடுமை ஈண்டு மிகுதிக்கண் நின்றது. உம்மை முன்னும் கூட்டப்பட்டது. யானே யாயினேன் என்பது, நீ துணையாயிற்றிலை என்னும் குறிப்பிற்று.

குறள் 1168 ( மன்னுயிரெல்)[தொகு]

( இரவின் கொடுமை சொல்லியிரங்கியது. )

மன்னுயி ரெல்லாந் துயிற்றி யளித்திரா ( ) மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா

வென்னல்ல தில்லை துணை. (08) என் அல்லது இல்லை துணை.

[தொடரமைப்பு: இரா அளித்து, மன் உயிர் எல்லாம் துயிற்றி என் அல்லது துணை இல்லை.
]

இதன்பொருள்
இரா அளித்து= இவ்விரா அளித்தாய் இருந்தது; மன் உயிர் எல்லாம் துயிற்றி என்னல்லது துணை இல்லை= உலகத்து நிலைபெறுகின்ற உயிர்களையெல்லாம் தானே துயிலப்பண்ணுதலான் என்னை அல்லது வேறு துணை உடைத்தாயிற்றில்லை.
உரை விளக்கம்
'துயிற்றி' எனத்திரிந்து நின்ற வினையெச்சம், அவாய்நிலையான் வந்த உடைத்தாதலோடு முடிந்தது. துணையோடு ஒன்றுகின்ற உயிர்கள் எல்லாம் விட்டு, இறந்துபடும் எல்லையேன் ஆகிய என்னையே துணையாகக்கோடலின் அறிவின்று என்பது பற்றி 'அளித்து' என்றாள்; இகழ்ச்சிக்குறிப்பு.

குறள் 1169 ( கொடியார்)[தொகு]

( இதுவுமது )

கொடியார் கொடுமையிற் றாங்கொடிய விந்நா ( ) கொடியார் கொடுமையின் தாம் கொடிய இந்நாள்

ணெடிய கழியு மிரா. (09) நெடிய கழியும் இரா.

[தொடரமைப்பு: இந்நாள் நெடிய கழியும் இரா, கொடியார் கொடுமையின் தாம் கொடிய.
]

இதன்பொருள்
இந்நாள் நெடிய கழியும் இரா= காதலரொடு நாம் இன்புற்ற முன்னாள்களில் குறியவாய் அவர் பிரிவு ஆற்றேமாகின்ற இந்நாள்களிலே நெடியவாய்ச் செல்கின்ற கங்குல்கள்;
கொடியார் கொடுமையின் தாம் கொடிய= அக்கொடியாரது கொடுமைக்கு மேலே தாம் கொடுமை செய்யாநின்றன.
உரை விளக்கம்
தன் ஆற்றாமை கருதாது பிரிதலின், 'கொடியார்' என்றாள். கொடுமை- கடிதின் வாராது நீட்டித்தல். அவர் பிரிவானும், நீட்டிப்பானும் உளதாய ஆற்றாமைக்குக் கண்ணோடாமை மேலும், பண்டையின் நெடியவாய்க் கொடியவாகா நின்றன என்பதாம்.

குறள் 1170 ( உள்ளம்போன்)[தொகு]

(நின் கண்கள் பேரழகு அழிகின்றவாகலின் அழற்பாலையல்லை என்றாட்குச் சொல்லியது.)

உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் () உள்ளம் போன்று இள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்

நீந்தல மன்னோவென் கண். (10) நீந்தல மன்னோ என் கண்.

[தொடரமைப்பு: உள்ளம் போன்று உள்வழிச் செல்கிற்பின், என் கண் வெள்ளநீர் நீந்தல.
]

இதன்பொருள்
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின்= மனம்போலக் காதலர் உள்ள தேயத்துக் கடிதின் செல்லவல்லனவாயின்;
என்கண் வெள்ளநீர் நீந்தல மன்னோ= என் கண்கள் இங்ஙனம் வெள்ளமாகிய தந்நீரை நீந்தா.
உரை விளக்கம்
அது மாட்டாமையின், இனி அவற்றிற்கு நீந்துதலே உள்ளது என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசை்ககண் வந்தது. மனத்திற்குச் செலவாவது நினைவேயாகலின் 'உள்ளம்போன்று' என்றும், மெய்க்கு நடந்துசெல்லவேண்டுதலின் கண்கள் அதனொடு சென்று காதலரைக் காண்டல் கூடாது என்னும் கருத்தான் 'செல்கிற்பின்' என்றும் கூறினாள். இதனான் வருகின்ற அதிகாரமுந் தோற்றுவாய் செய்யப்பட்டது.