திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/66.வினைத்தூய்மை
1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து
2.வான்சிறப்பு
3.நீத்தார்பெருமை
4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை
6.வாழ்க்கைத்துணைநலம்
7.மக்கட்பேறு
8.அன்புடைமை
9.விருந்தோம்பல்
10.இனியவைகூறல்
11.செய்ந்நன்றியறிதல்
12.நடுவுநிலைமை
13.அடக்கமுடைமை
14.ஒழுக்கமுடைமை
15.பிறனில்விழையாமை
16.பொறையுடைமை
17.அழுக்காறாமை
18.வெஃகாமை
19.புறங்கூறாமை
20.பயனிலசொல்லாமை
21.தீவினையச்சம்
22.ஒப்புரவறிதல்
23.ஈகை
24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை
26.புலான்மறுத்தல்
27.தவம்
28.கூடாவொழுக்கம்
29.கள்ளாமை
30.வாய்மை
31.வெகுளாமை
32.இன்னாசெய்யாமை
33.கொல்லாமை
34.நிலையாமை
35.துறவு
36.மெய்யுணர்தல்
37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்
பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி
40.கல்வி
41.கல்லாமை
42.கேள்வி
43.அறிவுடைமை
44.குற்றங்கடிதல்
45.பெரியாரைத்துணைக்கோடல்
46.சிற்றினஞ்சேராமை
47.தெரிந்துசெயல்வகை
48.வலியறிதல்
49.காலமறிதல்
50.இடனறிதல்
51.தெரிந்துதெளிதல்
52.தெரிந்துவினையாடல்
53.சுற்றந்தழால்
54.பொச்சாவாமை
55.செங்கோன்மை
56.கொடுங்கோன்மை
57.வெருவந்தசெய்யாமை
58.கண்ணோட்டம்
59.ஒற்றாடல்
60.ஊக்கமுடைமை
61.மடியின்மை
62.ஆள்வினையுடைமை
63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு
65.சொல்வன்மை
66.வினைத்தூய்மை
67.வினைத்திட்பம்
68.வினைசெயல்வகை
69.தூது
70.மன்னரைச்சேர்ந்தொழுகல்
71.குறிப்பறிதல்
72.அவையறிதல்
73.அவையஞ்சாமை
74.நாடு
75.அரண்
76.பொருள்செயல்வகை
77.படைமாட்சி
78.படைச்செருக்கு
79.நட்பு
80.நட்பாராய்தல்
81.பழைமை
82.தீநட்பு
83.கூடாநட்பு
84.பேதைமை
85.புல்லறிவாண்மை
86.இகல்
87.பகைமாட்சி
88.பகைத்திறந்தெரிதல்
89.உட்பகை.
90.பெரியாரைப்பிழையாமை
91.பெண்வழிச்சேறல்
92.வரைவின்மகளிர்
93.கள்ளுண்ணாமை
94.சூது
95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை
97.மானம்
98.பெருமை
99.சான்றாண்மை
100.பண்புடைமை
101.நன்றியில்செல்வம்
102.நாணுடைமை
103.குடிசெயல்வகை
104.உழவு
105.நல்குரவு
106.இரவு
107.இரவச்சம்
108.கயமை
1.களவியல்
109.தகையணங்குறுத்தல்
110.குறிப்பறிதல்
111.புணர்ச்சிமகிழ்தல்
112.நலம்புனைந்துரைத்தல்
113.காதற்சிறப்புரைத்தல்
114.நாணுத்துறவுரைத்தல்
115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை
117.படர்மெலிந்திரங்கல்
118.கண்விதுப்பழிதல்
119.பசப்புறுபருவரல்
120.தனிப்படர்மிகுதி
121.நினைந்தவர்புலம்பல்
122.கனவுநிலையுரைத்தல்
123.பொழுதுகண்டிரங்கல்
124.உறுப்புநலனழிதல்
125.நெஞ்சொடுகிளத்தல்
126.நிறையழிதல்
127.அவர்வயின்விதும்பல்
128.குறிப்பறிவுறுத்தல்
129.புணர்ச்சிவிதும்பல்
130.நெஞ்சொடுபுலத்தல்
131.புலவி
132.புலவிநுணுக்கம்
133.ஊடலுவகை
திருக்குறள் பொருட்பால் - 2.அங்கவியல்
[தொகு]அதிகாரம் 66. வினைத்தூய்மை
[தொகு]அதிகார முன்னுரை: அஃதாவது, செய்யப்படும் வினைகள் பொருளேயன்றி, அறமும் புகழும் பயந்து நல்லவாதல். சொல்லேயன்றிச் செயலும் நன்றாக வேண்டும் என்கின்றமையின், இது சொல்வன்மையின் பின் வைக்கப்பட்டது.
குறள் 651 (துணைநலமாக்)
[தொகு]துணைநல மாக்கந் தரூஉம் வினைநலம்துணை நலம் ஆக்கம் தரூஉம் வினை நலம்
'வேண்டிய வெல்லாந் தரும். (01)'வேண்டிய எல்லாம் தரும்.
- இதன்பொருள்
- துணை நலம் ஆக்கம் தரூஉம்= ஒருவனுக்குத் துணையது நன்மை செல்வம் ஒன்றனையும் கொடுக்கும்; வினைநலம் வேண்டிய எல்லாம்தரும்= அவ்வளவன்றி வினையது நன்மை அவன் வேண்டியன யாவற்றையு்ம் கொடுக்கும்.
- உரைவிளக்கம்
- 'வேண்டியஎல்லாம்' என்றது, இம்மைக்கண் அறம், பொருள், இன்பம் முதலாயவற்றையும், மறுமைக்கண் தான் விரும்பிய பதங்களையும். இதனாற் காணப்படும் துணைநன்மையினும் கருதப்படும் வினைநன்மை சிறந்தது என வினைத்தூய்மையது சிறப்புக்கூறப்பட்டது.
குறள் 652 (என்று)
[தொகு]என்று மொருவுதல் வேண்டும் புகழொடு என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
'நன்றி பயவா வினை. (02)'நன்றி பயவா வினை.
- இதன்பொருள்
- புகழொடு நன்றி பயவா வினை= தம் அரசனுக்கு இம்மைக்கண் புகழும் மறுமைக்கண் அறமும் பயவாத வினைகளை; என்றும் ஒருவுதல் வேண்டும்= அமைச்சர்க்கு எக்காலத்தும் ஒழிதல் வேண்டும்.
- உரைவிளக்கம்
- பெருகல், சுருங்கல், இடைநிற்றல் என்னும் நிலைவேறுபாடு காலத்தான் வருதலின், 'என்றும்' என்றார். 'வேண்டும்' என்பது, ஈண்டு இன்றியமையாது என்னும் பொருட்டு.
குறள் 653 (ஓஒதல்)
[தொகு]ஓஒதல் வேண்டு மொளிமாழ்குஞ் செய்வினை ஓஒதல் வேண்டும் ஒளி மாழ்கும் செய் வினை
'யாஅது மென்னு மவர். (30)'ஆஅதும் என்னுமவர்.
- இதன்பொருள்
- ஆஅதும் என்னுமவர்= மேலாகக் கடவேம் என்று கருதுவார்; ஒளி மாழ்கும் வினை செய் ஓஒதல் வேண்டும்= தம் ஒளி கெடுதற்கு்க் காரணமாய வினையைச் செய்தலைத் தவிர்க.
- உரைவிளக்கம்
- 'ஓஒதல்வேண்டும்' என்பது, ஒருசொல் நீர்மைத்து. ஓவுதல் என்பது குறைந்து நின்றது. 'ஒளி' தாமுள காலத்து, எல்லாரானும் நன்கு மதிக்கப்படுதல். 'செய்'யென்னும் முதனிலைத் தொழிற்பெயர் மாற்றப்பட்டது. அன்றிச் செய்வினை என வினைத்தொகை ஆக்கியவழிப் பொருளின்மை அறிக. ஒளிகெட வருவது, ஆக்கம் அன்று என்பதாம்.
குறள் 654 (இடுக்கட்)
[தொகு]இடுக்கட் படினு மிளிவந்த செய்யார்இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
'நடுக்கற்ற காட்சி யவர். (04)'நடுக்கு அற்ற காட்சியவர்.
- இதன்பொருள்
- இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்= தாம் இடுக்கண் படவரினும், அது தீர்தற்பொருட்டு முன் செய்தார்க்கு இளிவந்த வினைகளைச் செய்யார்; நடுக்கு அற்ற காட்சியவர்= துளக்கம் அற்ற தெளிவினை உடையார்.
- உரைவிளக்கம்
- சிறிதுபோழ்திற் கழிவதாய இடுக்கண் நோக்கி, எஞ்ஞான்றும் கழியாத இழிவு எய்தற்பாலது அன்று என்பதூஉம், அஃது எய்தினாலும் வருவது வரும் என்பதூஉம் தெளிவராதலால், 'செய்யார்' என்றார்.
குறள் 655 (எற்றென்)
[தொகு]எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
'மற்றன்ன செய்யாமை நன்று. (05)'மற்று அன்ன செய்யாமை நன்று.
- இதன்பொருள்
- எற்று என்று இரங்குவ செய்யற்க= யான் செய்தது எத்தன்மைத்து, என்று பின் தானே இரங்கும் வினைகளை ஒருகாலும் செய்யாது ஒழிக; செய்வானேல் மற்று அன்ன செய்யாமை நன்று= அன்றி ஒருகால் மயங்கி அவற்றைச் செய்யும் தன்மையன் ஆயினான்ஆயின், பின்னிருந்து அவ் இரங்கல்களைச் செய்யாது ஒழிதல் நன்று.
- உரைவிளக்கம்
- 'இரங்குவ' என முன்வந்தமையின், பின் 'அன்ன' எனச் சுட்டியொழிந்தார். அவ்வினைகளது பன்மையான், இரக்கமும் பலவாயின. அச்செயற்குப் பின்னிருந்து இரங்குவனாயின், அது தீரும் வாயில் அறிந்திலன் எனவும், திட்பம் இலன் எனவும், பயனில்லனவும் செய்கின்றான் எனவும், தன்பழியைத் தானே தூற்றுகின்றான் எனவும், எல்லாரும் இகழ்தலின் பின்னிரங்காமை நன்று என்றார். இதுவும் வினைத்தூயார் செயலாகலின், உடன் கூறப்பட்டது. பிற்றொடருக்குச் செய்வானாயின் அவைபோல்வனவும் செய்யாமை நன்று எனப் பிறர்எல்லாம் இயைபற உரைத்தார்.£
- £. மணக்குடவர்.
குறள் 656 (ஈன்றாள்)
[தொகு]ஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ் செய்யற்கஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
'சான்றோர் பழிக்கும் வினை. (06)'சான்றோர் பழிக்கும் வினை.
- இதன்பொருள்
- ஈன்றாள் பசி காண்பான் ஆயினும்= தன்னைப் பயந்தாளது பசியை வறுமையாற் கண்டிரங்குந் தன்மையன் ஆயினான் எனினும்; சான்றோர் பழிக்கும் வினை செய்யற்க= அது சுட்டி அறிவுடையார் பழிக்கும் வினைகளை ஒருவன் செய்யாது ஒழிக.
- உரைவிளக்கம்
- இறந்த மூப்பினராய இருமுதுகுரவரும், கற்புடை மனைவியும், குழவியும் பசியான் வருந்தும் எல்லைக்கண், தீயன பலவும் செய்தாயினும் புறந்தருக என்னும் அறநூல் பொதுவிதி, பொருள்நூல் வழியொழுகுதலும், அரசர் தொழிற்குரியர் ஆதலும், நன்கு மதிக்கற்பாடும் உடைய அமைச்சர்க்கு எய்தாமைபற்றி இவ்வாறு கூறினார்.
- இவை ஐந்து பாட்டானும், பாவமும் பழியும் பயக்கும் வினைசெய்யற்க என்பது பெறப்பட்டது.
குறள் 657 (பழிமலைந்)
[தொகு]பழிமலைந் தெய்திய வாக்கத்திற் சான்றோர்பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
'கழிநல் குரவே தலை. (07)'கழி நல்குரவே தலை.
- இதன்பொருள்
- பழிமலைந்து எய்திய ஆக்கத்தின்= சாலாதார் தீய வினைகளைச் செய்து, அதனாற் பழியைத் தம்மேற் கொண்டு பெற்றசெல்வத்தின்; சான்றோர் கழி நல்குரவே தலை= அது மேற்கொ்ளளாத சான்றோர் அனுபவிக்கும் மிக்க நல்குரவே உயர்ந்தது.
- உரைவிளக்கம்
- நிலையாத செல்வத்தின்பொருட்டு, நிலையின பழியை மேற்கோடல் சால்போடு இயையாமையின், 'சான்றோர் கழிநல்குரவே தலை' என்றார்.
குறள் 658 (கடிந்த)
[தொகு]கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாகடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவைதாம்
'முடிந்தாலும் பீழை தரும். (08)'முடிந்தாலும் பீழை தரும்.
- இதன்பொருள்
- கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு= நூலோர் கடிந்த வினைகளைத் தாமும் கடிந்துஒழியாது, பொருள்நோக்கிச் செய்த அமைச்சர்க்கு; அவைதாம் முடிந்தாலும் பீழை தரும்= அவை தூயவன்மையின் முடியா, ஒருவாற்றான் முடியினும் பின் துன்பத்தையே கொடுக்கும்.
- உரைவிளக்கம்
- 'முடிதல்', கருதிய பொருள்தருதல். பீழை தருதலாகிய பொருளின் தொழில், அதற்குக் காரணமாய வினைகள் மேல் ஏற்றப்பட்டது.
குறள் 659 (அழக்கொண்ட)
[தொகு]அழக்கொண்ட வெல்லா மழப்போ மிழப்பினும்அழக் கொண்ட எல்லாம் அழப் போம்
'பிற்பயக்கு நற்பா லவை. (09)'பின் பயக்கும் நல் பாலவை.
- இதன்பொருள்
- அழக்கொண்ட எல்லாம் அழப் போம்= ஒருவன் தீவினைகளைச் செய்து பிறர் இரங்கக்கொண்ட பொருள் எல்லாம், இம்மையிலே அவன்தான் இரங்கப் போகாநிற்கும்; நற்பாலவை இழப்பினும் பிற்பயக்கும்= மற்றைத் தூயவினையான் வந்த பொருள்கள் முன் இழந்தான் ஆயினும், அவனுக்குப் பின்னர் வந்து பயன்கொடுக்கும்.
- உரைவிளக்கம்
- 'பின்' எனவே மறுமையும் அடங்கிற்று. பொருள்களான் அவற்றிற்குக் காரணமாய வினைகளது இயல்பு கூறியவாறு.
குறள் 660 (சலத்தாற்)
[தொகு]சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமட்சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசு மண்
'கலத்துணீர் பெய்திரீஇ யற்று. (10)'கலத்துள் நீர் பெய்து இரீஇ அற்று.
- இதன்பொருள்
- சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல்= அமைச்சன் தீய வினைகளாற் பொருள் படைத்து, அதனால் அரசனுக்கு ஏமஞ்செய்தல்; பசுமட் கலத்துள் நீர் பெய்து இரீஇயற்று= பசிய மட்கலத்துள்ளே நீரைப்பெய்து அதற்கு ஏமம் செய்ததனோடு ஒக்கும்.
- உரைவிளக்கம்
- முன் ஆக்கம் பயப்பனபோல் தோன்றிப் பின் அழிவே பயத்தலால், அவை 'சலம்' எனப்பட்டன. ஏமம்ஆர்த்தல் என்பது, 'ஏமார்த்தல்' என்றாயிற்று; ஏமத்தை அடையப்பண்ணுதல் என்றவாறு. இருத்துதல் நெடுங்காலம் இருப்பச் செய்தல். அரசனும், பொருளும் சேரப் போம் என்பதாம். பிறரெல்லாம் ஏமாத்தல் என்று பாடமோதி, அதற்கு மகிழ்தல் என்றும், 'இரீஇயற்று' என்பதற்கு, வைத்தாற்போலும் என்றும் உரைத்தார். அவர், அவை தன்வினையும் பிறிதின் வினையுமாய் உவமையிலக்கணத்தோடு மாறுகோடல் நோக்கிற்றிலர்.
- இவை நான்கு பாட்டானும் அதற்குக்காரணம் கூறப்பட்டது.