திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/67.வினைத்திட்பம்

விக்கிமூலம் இலிருந்து

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- இரண்டாவது அங்கவியல்[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகாரம் 67. வினைத்திட்பம்[தொகு]

அதிகார முன்னுரை
அஃதாவது, அத்தூயவினை முடிப்பானுக்கு வேண்டுவதாய மனத்திண்மை. அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.

குறள் 661 (வினைத்திட்ப)[தொகு]

'வினைத்திட்ப மென்ப தொருவன் மனத்திட்ப 'வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத் திட்பம்

'மற்றைய வெல்லாம் பிற.(01) ' மற்றைய எல்லாம் பிற.

இதன் பொருள்
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத் திட்பம்= வினைசெய்தற்கண் திண்மை என்று சொல்லப்படுவது, அதனை முடித்தற்குரியானொருவன் மனத்தினது திண்ணம்; மற்றைய எல்லாம் பிற= அஃது ஒழிந்தன எல்லாம் அதற்குத் திண்மையென்று சொல்லப்படா.
உரைவிளக்கம்
ஒழிந்தனவாவன: படை, அரண், நட்பு முதலியவற்றின் திண்மைகள். அவையும் அதற்கு வேண்டுவனவாய் இனமாகலின் 'மற்றைய' என்றும், வேண்டினும் அஃது இல்வழிப் பயனிலவாகலின் 'பிற'வென்றும் கூறினார். இதனால் வினைத்திட்பமாவது, இன்னதென்பது கூறப்பட்டது.

குறள் 662 (ஊறொரா)[தொகு]

'ஊறொரா லுற்றபி னொல்காமை யிவ்விரண்டி 'ஊறு ஒரால் உற்ற பின் ஒல்காமை இவ் இரண்டின்

னாறென்ப வாய்ந்தவர் கோள்.(02)ஆறு என்ப ஆய்ந்தவர் கோள்.

இதன் பொருள்
ஆய்ந்தவர் கோள்= முன் நீதி ஆராய்ந்த அமைச்சரது துணிபு; ஊறு ஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறு என்பர்= பழுதுபடும் வினைகளைச் செய்யாமையும், செய்யும் வினை தெய்வத்தான் பழுதுபட்டவழி அதற்குத் தளராமையுமாகிய இவ்விரண்டின் வழியென்பர் நூலோர்.
உரைவிளக்கம்
தேவர்க்கும் அசுரர்க்கும் அமைச்சுப் பூண்ட வியாழ வெள்ளிகளது துணிபு தொகுத்துப் பின் நீதிநூலுடையார் கூறியவாறு கூறுகின்றமையின், ஈண்டு வினைத்தூய்மையும் உடன் கூறினார். உறுதலையுடையதனை முன் 'ஊறு' என்றமையின், 'உற்றபின்' என்றும், இவ்விரண்டின்கண்ணே பட்டதென்பார் 'இரண்டினாறு' என்றும் கூறினார். ஊறொரார் என்று பாடம் ஓதுவாரும் உளர்; அஃது 'ஒல்காமை' என்னும் எண்ணோடும், 'இரண்டு' என்னும் தொகையோடும் இயையாமை அவர் அறிந்திலர்.

குறள் 663 (கடைக்)[தொகு]

'கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை யிடைக்கொட்கி 'கடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக் கொட்கின்

னெற்றா விழுமந் தரும்.(03) எற்றா விழுமம் தரும்.

இதன் பொருள்
கடைக் கொட்கச் செய் தக்கது ஆண்மை= செய்யப்படும் வினையை முடிவின்கண் புலப்படும் வகை முன்னெல்லாம் மறைத்துச் செய்வதே திட்பமாவது; இடைக் கொட்கின் எற்றா விழுமம் தரும்= அங்ஙனமின்றி இடையே புலப்படுமாயின், அப்புலப்பாடு செய்வானுக்கு நீங்காத இடும்பையைக் கொடுக்கும்.
உரைவிளக்கம்
மறைத்துச் செய்வதாவது, அங்கம் ஐந்தும் எண்ணியவாறு பிறர் அறியாமலும், தானறிந்ததூஉம், தன்னிங்கிதம், வடிவு, செயல், சொற்களான் அவருய்த்துணராமலும் அடக்கிச் செய்தல். அத்திட்பம் ஆண்டன்மையான் வருதலின், 'ஆண்மை' எனப்பட்டது. 'எற்றா விழும'மாவன: பகைவர் முன்னறிந்து அவ்வினையை விலக்குதல், செய்வானை விலக்குதல் செய்வராகலின், அவற்றான் வருவன. 'விழுமம்' சாதிப்பெயர்.
இவை இரண்டு பாட்டானும் அதனது பகுதி கூறப்பட்டது.

குறள் 664 (சொல்லுதல்)[தொகு]

' சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ்'சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணஞ் செயல்.(04) சொல்லிய வண்ணம் செயல்.

இதன் பொருள்
சொல்லுதல் யார்க்கும் எளிய= யாம் இவ்வினையை இவ்வாற்றாற் செய்துமென நிரல்படச் சொல்லுதல் யாவர்க்கும் எளிய; சொல்லிய வண்ணம் செயல் அரியவாம்= அதனை அவ்வாற்றானே செய்தல் யாவர்க்கும் அரியவாம்.
உரைவிளக்கம்
'சொல்லுதல்' 'செயல்' என்பன சாதிப்பெயர். அரியவற்றை எண்ணிச் சொல்லுதல் திட்பம் இல்லாதார்க்கு இயறலின், 'எளிய' என்றார். இதனால் அதனது அருமை கூறப்பட்டது.

குறள் 665 (வீறெய்தி)[தொகு]

'வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்க 'வீறு எய்தி மாண்டார் வினைத் திட்பம் வேந்தன்கண்

னூறெய்தி யுள்ளப் படும்.(05) ஊறு எய்தி உள்ளப் படும்.

இதன் பொருள்
வீறு எய்தி மாண்டார் வினைத்திட்பம்= எண்ணத்தால் சிறப்பெய்திப் பிற இலக்கணங்களாலும் மாட்சிமைப்பட்ட அமைச்சரது வினைத்திட்பம்; வேந்தன்கண் ஊறு எய்தி உள்ளப்படும்= வேந்தன்கண்ணே உறுதலை எய்தலான், எல்லாரானும் நன்கு மதிக்கப்படும்.
உரைவிளக்கம்
'வேந்தன்கண் ஊறு எய்தல்' எடுத்தவினை அதனால் முற்றுப் பெற்றுச் செல்வமும் புகழும் அவன்கண்ணவாதல். எய்தலான் என்பது திரிந்து நின்றது. 'உள்ளல்', மதிப்பான் மறவாமை. இதனால் அதன் சிறப்புக் கூறப்பட்டது.

குறள் 666 (எண்ணிய)[தொகு]

'எண்ணிய வெண்ணியாங் கெய்துப வெண்ணியார் 'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணிய ராகப் பெறின்.(06)திண்ணியர் ஆகப் பெறின்.

இதன் பொருள்
எண்ணிய எண்ணியாங்கு எய்துப= தாம் எய்த எண்ணிய பொருள்கள் எல்லாவற்றையும், அவ்வெண்ணியவாறே எய்துவர்; எண்ணியார் திண்ணியராகப் பெறின்= எண்ணியவர் அவற்றிற்கு வாயிலாகிய வினைக்கண் திண்மை உடையராகப் பெறின்.
உரைவிளக்கம்
எளிதின் எய்துப என்பார், 'எண்ணியாங் கெய்துப' என்றார். அவர் அவ்வாறல்லது எண்ணாமையின் திண்ணியராகவே வினை முடியும்; அது முடிய, அவை யாவையும் கைகூடும் என்பது கருத்து. இதனால் அஃதுடையார் எய்தும் பயன் கூறப்பட்டது.

குறள் 667 (உருவுகண்)[தொகு]

' உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள்பெருந்தேர்க்'உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு

கச்சாணி யன்னா ருடைத்து.(07)அச்சாணி அன்னார் உடைத்து.

இதன் பொருள்
உருள் பெரும் தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து= உருளாநின்ற பெரிய தேர்க்கு அச்சின்கண் ஆணி போல வினைக்கண் திண்ணியாரை உடையது உலகம்; உருவு கண்டு எள்ளாமை வேண்டும்= அதனால் அவரை வடிவின் சிறுமைநோக்கி இகழ்தலை ஒழிக.
உரைவிளக்கம்
சிறுமை, 'எள்ளாமை வேண்டும்' என்பதனானும், உவமையானும் பெற்றாம். 'அச்சு' உருள்கொத்த மரம். 'ஆணி' உருள் கழலாது அதன்கடைக்கண் செருகுமது. அது வடிவாற் சிறியதாயிருந்தே பெரிய பாரத்தைக் கொண்டுய்க்கும் திட்பம்உடைத்து; அதுபோல வடிவாற் சிறியராயிருந்தே பெரிய வினைகளைக் கொண்டுய்க்கும் திட்பமுடைய அமைச்சரும் உளர்; அவரை அத்திட்பம் நோக்கி அறிந்துகொள்க என்பதாம். இதனால் அவரை அறியுமாறு கூறப்பட்டது.

குறள் 668 (கலங்காது)[தொகு]

'கலங்காது கண்ட வினைக்கட் டுளங்காது 'கலங்காது கண்ட வினைக் கண் துளங்காது

தூக்கங் கடிந்து செயல்.(08)தூக்கம் கடிந்து செயல்.

இதன் பொருள்
கலங்காது கண்ட வினைக்கண்= மனந்தெளிந்து செய்வதாகத் துணிந்த வினையின்கண்; துளங்காது தூக்கம் கடிந்து செயல்= பின் அசைதலின்றி நீட்டித்தலை ஒழிந்து செய்க.
உரைவிளக்கம்
கலங்கியவழி ஒழிவதும் செய்வதுபோல் தோன்றுமாகலின், தெளிந்து பலகால் ஆராய்ந்து தாம் செய்வதாக ஓர்த்தவினையைக் 'கலங்காது கண்டவினை' என்றார். துளங்காமை திட்பமுடைமை.

குறள் 669 (துன்பமுற)[தொகு]

'துன்ப முறவரினுஞ் செய்க துணிவாற்றி 'துன்பம் உற வரினும் செய்க துணிவு ஆற்றி

யின்பம் பயக்கும் வினை.(09) இன்பம் பயக்கும் வினை.

இதன் பொருள்
துன்பம் உற வரினும்= முதற்கண் மெய்ம் முயற்சியான் தமக்குத் துன்பம் மிகவருமாயினும்; இன்பம் பயக்கும் வினை துணிவு ஆற்றிச் செய்க= அது நோக்கித் தளராது, முடிவின்கண் இன்பம் பயக்கும் வினையைத் திட்பமுடையராய்ச் செய்க.
உரைவிளக்கம்
துணிவு கலங்காமை. அஃதுடையார்க்கு அல்லது கணிகமாய முயற்சித் துன்பம் நோக்காது நிலையுதலுடைய பரிணாம இன்பத்தை நோக்கிச் செய்தல் கூடாமையின், 'துணிவாற்றிச் செய்க' என்றார்.
இவை இரண்டுபாட்டானும் அவர் வினைசெய்யுமாறு கூறப்பட்டது.

குறள் 670 (எனைத்திட்ப)[தொகு]

' எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்'எனைத் திட்பம் எய்தியக் கண்ணும் வினைத் திட்பம்

வேண்டாரை வேண்டா துலகு.(10)வேண்டாரை வேண்டாது உலகு.

இதன் பொருள்
வினைத்திட்பம் வேண்டாரை= வினைத்திட்பத்தை இது நமக்குச் சிறந்தது என்று கொள்ளாத அமைச்சரை; எனைத் திட்பம் எய்தியக் கண்ணும்= ஒழிந்த திட்பங்கள் எல்லாம் உடையராய இடத்தும்; வேண்டாது உலகு= நன்கு மதியார் உயர்ந்தோர்.
உரைவிளக்கம்
மனத்தின்கண் திட்பம் இல்லாதார்க்குப் படை, அரண், நட்பு முதலியவற்றின் திட்பங்களெல்லாம் உளவாயினும், வினை முடியாதாம், ஆகவே அவையெல்லாம் கெடும் என்பது பற்றி 'உலகுவேண்டாது' என்றார்.
இதனால் வினைத்திட்பம் இல்லாதாரது இழிபு கூறப்பட்டது.