திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/18.வெஃகாமை

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


அதிகாரம் 18 வெஃகாமை[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகார முன்னுரை
அஃதாவது, பிறர்க்குரிய பொருளை வௌவ்க் கருதாமை. பிறர் உடைமை க்ண்டவழிப் பொறாமையேயன்றி, அதனைத் தான் வௌவக் கருதுதலும் குற்றம் என்றற்கு இஃது அழுக்காறாமையின் பின் வைக்கப்பட்டது.

திருக்குறள் 171 (நடுவின்றி)[தொகு]

நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமு மாங்கே தரும்
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும் (01)
பரிமேலழகர் உரை (இதன் பொருள்)
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின்= பிறர்க்கு உரியன கோடல் நமக்கு அறன் அன்று என்னும் நடுவுநிலைமை இன்றி அவர் நன்பொருளை ஒருவன் வெஃகுமாயின்;
குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்= அவ் வெஃகுதல், அவன் குடியைக் கெடச்செய்து, பல குற்றங்களையும் அப்பொழுதே அவனுக்குக் கொடுக்கும்.
பரிமேலழகர் உரை விளக்கம்
குடியை வளரச்செய்து, பலநன்மையும் பயக்கும் இயல்புபற்றி, பொருள் வெஃகின் என்பார், 'நன்பொருள் வெஃகின்' என்றார். பொன்ற வென்பது, 'பொன்றி' எனத் திரிந்து நின்றது. 'செய்து' என்பது சொல்லெச்சம்.

திருக்குறள் 172 (படுபயன்)[தொகு]

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்
படு பயன் வெஃகி்ப் பழிப்படுவ செய்யார்
நடுவு அன்மை நாணுபவர் (2)
பரிமேலழகர் உரை(இதன் பொருள்)
படு பயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்= பிறர் பொருளை வௌவினால் தமக்கு வரும் பயனை விரும்பி, அது வௌவுதற்குப் பழியி்ன்கண்ணே படுஞ்செய்ல்களைச் செய்யார்;
நடுவு அன்மை நாணுபவர்= நடுவுநிலைமை யன்மையை அஞ்சுபவர்
பரிமேலழகர் உரைவிளக்கம்
நடுவு, ஒருவன் பொருட்குப் பிறன் உரியனல்லன் என்னும் நடுவு.

திருக்குறள் 173 (சிற்றின்பம்)[தொகு]

சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்
சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டுபவர் (03)
பரிமேலழகர் உரை(இதன் பொருள்)
சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே= பிறர்பால் வௌவிய பொருளால் தாம் எய்தும் நிலையில்லாத இன்பத்தை விரும்பி அவர்மாட்டு அறனல்லாத செயல்களைச் செய்யார்;
மற்றின்பம் வேண்டுபவர்= அறத்தான் வரும் நிலையுடைய இன்பத்தைக் காதலிப்பவர்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
பாவத்தான் வருதலின் அப்பொழுதே அழியும் என்பார், 'சிற்றின்பம்' என்றார். மற்றை இன்பம் என்பது, 'மற்றின்பம்' என நின்றது.

திருக்குறள் 174 (இலமென்று)[தொகு]

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்
இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம் வென்ற
புன்மை இல் காட்சியவர் (04)
பரிமேலழகர் உரை(இதன் பொருள்)
இலம் என்று வெஃகுதல் செய்யார்= யாம் வறியம் என்று கருதி அது தீர்தற் பொருட்டுப் பிறர் பொருளை விரும்புதல் செய்யார்;
புலம் வென்ற புன்மையில் காட்சியவர்= ஐம்புலன்களையும் வென்ற குற்றம் இல்லாத காட்சியினை உடையார்.
பரிமேலழகர் உரை விளக்கம்
வெல்லுதல் பாவநெறிக்கண் செல்லவிடாமை. புலம் வென்ற புன்மையில் காட்சியவர்க்கு வறுமை யின்மையின் வெஃகுதலும் இல்லையாயிற்று. புன்மையில் காட்சி பொருள்களைத் திரிபின்றி உணர்தல்.

திருக்குறள் 175 (அஃகியகன்ற)[தொகு]

அஃகி யகன்ற வறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்
அஃகி அகன்ற அறிவு என்னாம் யார் மாட்டும்
வெஃகி வெறிய செயின் (05)
பரிமேலழகர் உரை(இதன் பொருள்)
அஃகி அகன்ற அறிவு என் ஆம்= நுண்ணிதாய் எல்லா நூல்களினும் சென்ற தம்மறிவு என்னபயத்ததாம்?
வெஃகி யார்மாட்டும் வெறிய செயின்= பொருளை விரும்பி யாவர்மாட்டும் அறிவொடு படாத செயல்களை அறிவுடையார் செய்வாராயின்.
பரிமேலழகர் உரை விளக்கம்
'யார்மாட்டும் வெறிய செய்த'லாவது, தக்கார்மாட்டும் தகாதார் மாட்டும் இழிந்தனவும் கடியனவும் முதலியன செய்தல். அறிவிற்குப் பயன் அவை செய்யாமை யாகலின் 'அறிவென்னாம்' என்றார்.

திருக்குறள் 176 (அருள்வெஃகி)[தொகு]

அருள்வெஃகி யாற்றின்க ணின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்
அருள் வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள் வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும் (06)
பரிமேலழகர் உரை(இதன் பொருள்)
அருள் வெஃகி ஆற்றின்கண் நின்றான்= அருளாகிய அறத்தை விரும்பி அதற்கு வழியாகிய இல்லறத்தின்கண் நின்றவன்;
பொருள் வெஃகி பொல்லாத சூழக் கெடும்= பிறர் பொருளை அவாவி அதனை வருவிக்கும் குற்றநெறிகளை எண்ணக் கெடும்.
பரிமேலழகர் உரை விளக்கம்
இல்லற நெறியால் அறிவு முதிர்ந்துழியல்லது துறக்கப் படாமையின், அதனைத் துறவறத்திற்கு ஆறு என்றார். கெடுதல் இரண்டறமும் சேரவிழத்தல். சூழ்ந்த துணையானே கெடும் எனவே, செய்தாற் கெடுதல் சொல்லாமலேயே பெறப்பட்டது.

திருக்குறள் 177 (வேண்டற்க)[தொகு]

வேண்டற்க வெஃகியா மாக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்
வேண்டற்க வெஃகி ஆம் ஆக்கம் விளை வயின்
மாண்டற்கு அரிதாம் பயன் (07)
பரிமேலழகர் உரை(இதன் பொருள்)
வெஃகி ஆம் ஆக்கம் வேண்டற்க= பிறர் பொருளை அவாவிக்கொண்டு அதனால் ஆகின்ற ஆக்கத்தை விரும்பாது ஒழிக;
விளைவயின் பயன் மாண்டற்கு அரிதாம்= பின் அனுபவிக்குங்கால் அவ்வாக்கத்தின் பயன் நன்றாதல் இல்லை ஆகலான்.
பரிமேலழகர் உரை விளக்கம்
'விளை' என்பது முதனிலைத் தொழிற்பெயர். இவை ஏழு பாட்டானும் வெஃகுதலின் குற்றம் கூறப்பட்டது.

திருக்குறள் 178 (அஃகாமை)[தொகு]

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்
அஃகாமை செல்வத்திற்கு யாது எனின் வெஃகாமை
வேண்டும் பிறன் கைப் பொருள் (08)
பரிமேலழகர் உரை(இதன் பொருள்)
செல்வத்திற்கு அஃகாமை யாதுஎனின்= சுருங்கன்மாலைத்தாகிய செல்வத்திற்குச் சுருங்காமைக் காரணம் யாதென்று ஒருவன் ஆராயின்;
பிறன் வேண்டும் கைப்பொருள் வெஃகாமை= அது பிறன் வேண்டும் கைப்பொருளைத் தான் வேண்டாமையாம்.
பரிமேலழகர் உரை விளக்கம்
அஃகாமை ஆகுபெயர். வெஃகாதான் செல்வம் அஃகாதென்பதாயிற்று.

திருக்குறள் 179 (அறனறிந்து)[தொகு]

அறனறிந்து வெஃகா வறிவுடையார்ச் சேருந்
திறனறிந் தாங்கே திரு
அறன் அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன் அறிந்து ஆங்கே திரு (09)
பரிமேலழகர் உரை(இதன் பொருள்)
அறன் அறிந்து வெஃகா அறிவுடையார்= இஃது அறன் என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரை;
திரு திறன் அறிந்து ஆங்கே சேரும்= திருமகள் தான் அடைதற்கு ஆம்கூற்றினை அறிந்து அக்கூற்றானே சென்று அடையும்.
பரிமேலழகர் உரை விளக்கம்
அடைதற்காங் கூறு காலமும், இடனும், செவ்வியும் முதலாயின. இவை இரண்டு பாட்டானும், வெஃகாமையின் குணம் கூறப்பட்டது.

திருக்குறள் 180 (இறலீனுமெண்)[தொகு]

இறலீனு மெண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை யென்னுஞ் செருக்கு
இறல் ஈனும் எண்ணாது வெஃகின் விறல் ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு (10)
பரிமேலழகர் உரை(இதன் பொருள்)
எண்ணாது வெஃகின் இறல் ஈனும்= பின் விளைவது அறியாது ஒருவன் பிறன் பொருளை வௌவக் கருதின் அக்கருத்து அவனுக்கு இறுதியைப் பயக்கும்;
வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும்= அப்பொருளை வேண்டாமை என்னும் செல்வம் வெற்றியைப் பயக்கும்.
பரிமேலழகர் உரை விளக்கம்
பகையும், பாவமும் பெருக்கலின் 'இறலீனும்' என்றும், அப்பொருளை வேண்டி உழல்வோர் யாவரயும் கீழ்ப்படுத்தலின் 'விறலீனும்' என்றும் கூறினார். 'செருக்கு', ஆகுபெயர். இதனால் அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன. (இருமை= வெஃகுதலின் குற்றமும், வெஃகாமையின் குணமும் ஆகிய இரண்டு- மெய்)
வேண்டாமை யென்னும் செருக்கு விறல் ஈனும்= வேண்டாமை என்னும் செல்வம் வெற்றியைப் பயக்கும்.