திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/87.பகைமாட்சி
1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து
2.வான்சிறப்பு
3.நீத்தார்பெருமை
4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை
6.வாழ்க்கைத்துணைநலம்
7.மக்கட்பேறு
8.அன்புடைமை
9.விருந்தோம்பல்
10.இனியவைகூறல்
11.செய்ந்நன்றியறிதல்
12.நடுவுநிலைமை
13.அடக்கமுடைமை
14.ஒழுக்கமுடைமை
15.பிறனில்விழையாமை
16.பொறையுடைமை
17.அழுக்காறாமை
18.வெஃகாமை
19.புறங்கூறாமை
20.பயனிலசொல்லாமை
21.தீவினையச்சம்
22.ஒப்புரவறிதல்
23.ஈகை
24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை
26.புலான்மறுத்தல்
27.தவம்
28.கூடாவொழுக்கம்
29.கள்ளாமை
30.வாய்மை
31.வெகுளாமை
32.இன்னாசெய்யாமை
33.கொல்லாமை
34.நிலையாமை
35.துறவு
36.மெய்யுணர்தல்
37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்
பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி
40.கல்வி
41.கல்லாமை
42.கேள்வி
43.அறிவுடைமை
44.குற்றங்கடிதல்
45.பெரியாரைத்துணைக்கோடல்
46.சிற்றினஞ்சேராமை
47.தெரிந்துசெயல்வகை
48.வலியறிதல்
49.காலமறிதல்
50.இடனறிதல்
51.தெரிந்துதெளிதல்
52.தெரிந்துவினையாடல்
53.சுற்றந்தழால்
54.பொச்சாவாமை
55.செங்கோன்மை
56.கொடுங்கோன்மை
57.வெருவந்தசெய்யாமை
58.கண்ணோட்டம்
59.ஒற்றாடல்
60.ஊக்கமுடைமை
61.மடியின்மை
62.ஆள்வினையுடைமை
63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு
65.சொல்வன்மை
66.வினைத்தூய்மை
67.வினைத்திட்பம்
68.வினைசெயல்வகை
69.தூது
70.மன்னரைச்சேர்ந்தொழுகல்
71.குறிப்பறிதல்
72.அவையறிதல்
73.அவையஞ்சாமை
74.நாடு
75.அரண்
76.பொருள்செயல்வகை
77.படைமாட்சி
78.படைச்செருக்கு
79.நட்பு
80.நட்பாராய்தல்
81.பழைமை
82.தீநட்பு
83.கூடாநட்பு
84.பேதைமை
85.புல்லறிவாண்மை
86.இகல்
87.பகைமாட்சி
88.பகைத்திறந்தெரிதல்
89.உட்பகை.
90.பெரியாரைப்பிழையாமை
91.பெண்வழிச்சேறல்
92.வரைவின்மகளிர்
93.கள்ளுண்ணாமை
94.சூது
95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை
97.மானம்
98.பெருமை
99.சான்றாண்மை
100.பண்புடைமை
101.நன்றியில்செல்வம்
102.நாணுடைமை
103.குடிசெயல்வகை
104.உழவு
105.நல்குரவு
106.இரவு
107.இரவச்சம்
108.கயமை
1.களவியல்
109.தகையணங்குறுத்தல்
110.குறிப்பறிதல்
111.புணர்ச்சிமகிழ்தல்
112.நலம்புனைந்துரைத்தல்
113.காதற்சிறப்புரைத்தல்
114.நாணுத்துறவுரைத்தல்
115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை
117.படர்மெலிந்திரங்கல்
118.கண்விதுப்பழிதல்
119.பசப்புறுபருவரல்
120.தனிப்படர்மிகுதி
121.நினைந்தவர்புலம்பல்
122.கனவுநிலையுரைத்தல்
123.பொழுதுகண்டிரங்கல்
124.உறுப்புநலனழிதல்
125.நெஞ்சொடுகிளத்தல்
126.நிறையழிதல்
127.அவர்வயின்விதும்பல்
128.குறிப்பறிவுறுத்தல்
129.புணர்ச்சிவிதும்பல்
130.நெஞ்சொடுபுலத்தல்
131.புலவி
132.புலவிநுணுக்கம்
133.ஊடலுவகை
திருக்குறள் பொருட்பால்- அங்கவியல்
[தொகு]பரிமேலழகர் உரை
[தொகு]அதிகாரம் 87. பகை மாட்சி.
[தொகு]- அதிகார முன்னுரை
- அஃதாவது, அறிவின்மை முதலிய குற்றங்களுடைமையான் பகையை மாட்சிப்படுத்தல். அரசர்க்கு எவ்வாற்றானும் பகையின்மை கூடாமையின் மேற் பொதுவகையான் விலக்கப்பட்ட இகலை, ஈண்டுச் சிறப்புவகையான் விதிக்கின்றார் ஆகலின், இஃது அதன் பின் வைக்கப்பட்டது.
குறள் 861 (வலியார்க்கு )
[தொகு]வலியார்க்கு மாறேற்ற லோம்புக வோம்பா ( ) வலியார்க்கு மாறு ஏற்றல் ஒம்புக ஓம்பா
மெலியார்மேன் மேக பகை. (01) மெலியார் மேல் மேக பகை.
தொடரமைப்பு: வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக, மெலியார்மேல் பகை ஓம்பா மேக.
- இதன்பொருள்
- வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக= தம்மின் வலியார்க்குப் பகையாய் எதிர்தலை ஒழிக; மெலியார் மேல் பகை ஓம்பா மேக= ஏனை மெலியார்க்குப் பகையாதலை ஒழியாது விரும்புக.
- உரைவிளக்கம்
- வலியார் என்புழித் துணைவலியும் அடங்கலின், மெலியார் என்புழித் துணைவலி இன்மையும் கொள்ளப்படும். அத்துணைதான் படை பொருள் முதலிய வேற்றுமைத்துணையும், நல்லறிவுடைமை, நீதிநூல் வழி ஒழுகல் முதலிய ஒற்றுமைத்துணையும் என இரண்டாம். அவ்விரண்டும் இல்லாரை வெல்வார்க்கு வலிதொலையாமையின் அவரோடு பகைத்தல் விதிக்கப்பட்டது.
- சிங்க நோக்காகிய இதனுள் பகைமாட்சி பொதுவகையான் கூறப்பட்டது.
குறள் 862 (அன்பிலனான்ற )
[தொகு]அன்பில னான்ற துணையிலன் றான்றுவ்வா ( ) அன்பு இலன் ஆன்று துணை இலன் தான் துவ்வான்
னென்பரியு மேதிலான் றுப்பு. (02) என் பரியும் ஏதிலான் துப்பு.
தொடரமைப்பு: அன்பு இலன், ஆன்ற் துணையிலன், தான்துவ்வான், ஏதிலான் துப்பு என்பரியும்
- இதன்பொருள்
- அன்பு இலன்= ஒருவன் தன் சுற்றத்தின்மேல் அன்பிலன்; ஆன்ற துணையிலன்= அதுவேயன்றி வலிய துணையிலன்; தான் துவ்வான்= அதன்மேல் தான் வலியிலன்; ஏதிலான் துப்பு என் பரியும்= அப்பெற்றியான் மேல்வந்த பகைவன் வலியினை யாங்ஙனந் தொலைக்கும்?
- உரை விளக்கம்
- சற்றமும் இருவகைத்துணையும், தன்வலியும் இலனாகலின், அவன்மேல் செல்வார்க்கு வலி வளர்வதன்றித் தோலையாது என்பதாம். துவ்வான்- துவ்வினைச் செய்யான்.
குறள் 863 (அஞ்சுமறியான் )
[தொகு]அஞ்சு மறியா னமைவில னீகலான் ( ) அஞ்சும் அறியான் அமைவுஇலன் ஈகலான்
றஞ்ச மெளியன் பகைக்கு. (03) தஞ்சம் எளியன் பகைக்கு
தொடரமைப்பு: அஞ்சும், அறியான், அமைவிலன், ஈகலான், பகைக்குத் தஞ்சம் எளியன்
- இதன்பொருள்
- அஞ்சும்= ஒருவன் அஞ்சவேண்டாதவற்றிற்கு அஞ்சாநிற்கும்; அறியான்= அறியவேண்டுமவற்றை அறியான்; அமைவு இலன்= பிறரோடு பொருத்தமிலன்; ஈகலான்= இவற்றின்மேலும், யாவர்மாட்டும் இவறன் மாலையன்; பகைக்குத் தஞ்சம் எளியன்= இப்பெற்றியான் பகைவர்க்கு மிகவெளியன்.
- உரை விளக்கம்
- தஞ்சம் எளியன் என்பன ஒருபொருட்பன்மொழி. இந்நான்கு குற்றமும் உடையான் பகையின்றியும் அழியும் ஆகலின், தஞ்சம் எளியன் என்றார்.
குறள் 864 (நீங்கான் )
[தொகு]நீங்கான் வெகுளி நிறையில னெஞ்ஞான்றும் ( ) நீங்கான் வெகுளி நிறை இலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கு மெளிது. (04) யாங்கணும் யார்க்கும் எளிது.
தொடரமைப்பு: வெகுளி நீங்கான், நிறை இலன், எஞ்ஞான்றும் யார்க்கும் எளிது
- இதன்பொருள்
- வெகுளி நீங்கான்= ஒருவன் வெகுளியின் நீங்கான்; நிறை இலன்= அதுவேயன்றித் தான் நிறையுடையன் அல்லன்; எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது= அவன்மேற்சேறல் எக்காலத்தும் எவ்விடத்தும் யார்க்கும் எளிது.
- உரை விளக்கம்
- நிறை- மறைபிறர் அறியாமை (கலித்தொகை, நெய்தற்கலி: 16); வெகுடன்மாலையன் ஆகலானும், மறை வெளிப்படுத்தலானும், மேற்செல்வார்க்குக் காலமும்ம இடனும் வலியும் அறிந்து சேறல் வேண்டாதாயிற்று. இனி, இனிதென்று பாடம் ஓதி அவன் பகைமை இனிது என்று உரைப்பாரும் உளர்.
குறள் 865 (வழிநோக்கான் )
[தொகு]வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் () வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான்
பண்பிலன் பற்றார்க் கினிது. (05) பண்பு இலான் பற்றார்க்கு இனிது.
தொடரமைப்பு: வழி நோக்கான், வாய்ப்பன செய்யான், பழிநோக்கான், பண்பு இலன், பற்றார்க்கு இனிது.
- இதன்பொருள்
- வழி நோக்கான்= ஒருவன் நீதிநூலை ஓதான்; வாய்ப்பன செய்யான்= அது விதித்த தொழில்களைச் செய்யான்; பழிநோக்கான்= தனக்கு வரும் பழியைப் பாரான்; பண்பு இலன்= தான் பண்புடையன் அல்லன்; பற்றார்க்கு இனிது= அவன் பகைவர்க்கு அப்பகைமை இனிது.
- உரை விளக்கம்
- தொல்லோர் அடிப்பட வழங்கி வந்தது ஆகலின் வழியென்றும், தப்பாது பயன்படுதலின் வாய்ப்பன என்றும், இக்குற்றங்கள் உடையான் தானே அழிதலின் பற்றார்க்கு இனிது என்றும் கூறினார்.
குறள் 866 (காணாச் )
[தொகு]காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் ( ) காணாச் சினத்தான் கழி பெரும் காமத்தான்
பேணாமை பேணப் படும். (06) பேணாமை பேணப் படும்.
தொடரமைப்பு: காணாச் சினத்தான், கழி பெரும் காமத்தான், பேணாமை பேணப்படும்.
- இதன்பொருள்
- காணாச் சினத்தான்= தன்னையும் பிறரையும் தான் அறியாமைக்கு ஏதுவாகிய வெகுளியை உடையான் யாவன்; கழிபெருங் காமத்தான்= மேன்மேல் வளராநின்ற மிக்க காமத்தை உடையவன் யாவன்; பேணாமை பேணப்படும்= அவரது பகைமை விரும்பிக் கொள்ளப்படும்.
- உரை விளக்கம்
- காணாத சினம் என்பது விகாரமாயிற்று. முன்னோனுக்கு யாவரும் பகையாகலானும், ஏனோனுக்குக் காரியந் தோன்றாமையானும், தாமே அழிவர் என்பது பற்றி, இவர் பேணாமை பேணப்படும் என்றார்.
குறள் 867 (கொடுத்துங் )
[தொகு]கொடுத்துங் கொளல்வேண்டு மன்ற வடுத்திருந்து ( ) கொடுத்தும் கொளல் வேண்டும் மன்ற அடுத்து இருந்து
மாணாத செய்வான் பகை. (07) மாணாத செய்வான் பகை.
தொடரமைப்பு: அடுத்து இருந்து மாணாத செய்வான் பகை, கொடுத்தும் கொளல் மன்ற வேண்டும்
- இதன்பொருள்
- அடுத்து இருந்து மாணாத செய்வான் பகை= வினையைத் தொடங்கியிருந்து அதற்கு ஏலாதன செய்வான் பகைமையை; கொடுத்தும் கொளல் மன்ற வேண்டும்= சில பொருள் அழியக் கொடுத்தாயினும் கோடல் ஒருதலையாக வேண்டும்.
- உரை விளக்கம்
- ஏலாதன மெலியனாய் வைத்துத் துணிதலும், வலியனாய் வைத்துத் தணிதலும் முதலாயின. அப்பொழுது அதனாற் சில பொருள் அழியினும் பின் பல பொருள் எய்தற்கு ஐயமின்மையின், கொளல் வேண்டுமன்ற என்றார்.
- இவை ஆறுபாட்டானும் அது சிறப்புவகையாற் கூறப்பட்டது.
குறள் 868 (குணனிலனாய்க் )
[தொகு]குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க் ( ) குணன் இலனாய்க் குற்றம் பல ஆயின் மாற்றார்க்கு
கினனிலனா மேமாப் புடைத்து. (08) இனன் இலனாம் ஏமாப்பு உடைத்து.
தொடரமைப்பு: குணன் இலனாய்க் குற்றம் பலவாயின் இனன் இலனாம், மாற்றார்க்கு ஏமாப்பு உடைத்து.
- இதன்பொருள்
- குணன் இலனாய்க் குற்றம் பலவாயின் இனன் இலனாம்= ஒருவன் குணன் ஒன்றும் இலனாய் உடைய குற்றம் பலவாய வழி, அவன் துணையிலனாம்; மாற்றார்க்கு ஏமாப்பு உடைத்து= அவ்விலனாதல் தானே அவன்பகைவர்க்குத் துணையாதலை உடைத்து.
- உரை விளக்கம்
- குணம்- இறைமாட்சியுட் சொல்லியன. குற்றம்- இவ்வதிகாரத்துச் சொல்லியனவும், மற்றும் அத்தன்மையனவும். துணை- சுற்றம், நட்பு, பொருள், படை முதலாயின. பகைவர்க்கு இவற்றான் உளதாம் பயன் தானே உளதாம் ஆகலின், ஏமாப்புடைத்து என்றார். இலனாய் என்னும் செய்து என்எச்சம் உடையவென வந்த பெயரெச்சக்குறிப்புக் கொண்டது.
குறள் 869 (செறுவார்க்குச் )
[தொகு]செறுவார்க்குச் சேணிகவா வின்ப மறிவிலா ( ) செறுவார்க்குச் சேண் இகவா இன்பம் அறிவு இலா
வஞ்சும் பகைவர்ப் பெறின். (09) அஞ்சும் பகைவர்ப் பெறின்.
தொடரமைப்பு: அறிவு இலா அஞ்சும் பகைவர்ப்பெறின், செறுவார்க்குச் சேண் இன்பம் இகவா
- இதன்பொருள்
- அறிவு இலா அஞ்சும் பகைவர்ப் பெறின்= நீதியை அறிதல் இல்லாத அஞ்சும் பகைவரைப் பெற்றால்; செறுவார்க்குச் சேண் இன்பம் இகவா= அவரைச் செறுவார்க்கு உயர்ந்த இன்பங்கள் நீங்கா.
- உரை விளக்கம்
- உபாயம் அறிதலும், அறிந்தாற் செய்துமுடிக்குந் திண்மையும் இல்லாதாரே பகைவராதல் கூடாமையிற் பெறின் என்றும், அவரை யறிந்து மேற்சென்ற பொழுதே பகையின்மையும் செல்வமும் ஒருங்கே எய்தலின் சேணுடையின்பங்கள் இகவா என்றும் கூறினார்.
குறள் 870 (கல்லான் )
[தொகு]கல்லான் வெகுளுஞ் சிறுபொரு ளெஞ்ஞான்று () கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
மொல்லானை ஒல்லா தொளி. (10) ஒல்லானை ஒல்லாது ஒளி.
தொடரமைப்பு: கல்லான் வெகுளும் சிறுபொருள் ஒல்லானை, எஞ்ஞான்றும் ஒளி ஒல்லாது.
- இதன்பொருள்
- கல்லான் வெகுளும் சிறுபொருள் ஒல்லானை= நீதிநூலைக் கல்லாதானொடு பகைததலான் வரும் எளியபொருளை மேவாதானை; எஞ்ஞான்றும் ஒளி ஒல்லாது= எஞ்ஞான்றும் புகழ் மேவாது.
- உரை விளக்கம்
- சிறுபொருள்- முயற்சி சிறிதாய பொருள். நீதியறியாதானை வேறல் எளிதாயிருக்கவும், அது மாட்டாதானை வெற்றியான் வரும் புகழ் கூடாது என்பதாம்; ஆகவே, இச்சிறிய முயற்சியாற் பெரிய பயன் எய்தக என்றவாறாயிற்று. இதற்குப் பிறர் எல்லாம் அதிகாரத்தோடு மாறாதன்மேலும், ஓர் பொருட்டொடர்பு படாமல் உரைத்தார்.
- இவை மூன்றுபாட்டானும் அதனினாய பயன் கூறப்பட்டது.