திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/58.கண்ணோட்டம்
1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து
2.வான்சிறப்பு
3.நீத்தார்பெருமை
4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை
6.வாழ்க்கைத்துணைநலம்
7.மக்கட்பேறு
8.அன்புடைமை
9.விருந்தோம்பல்
10.இனியவைகூறல்
11.செய்ந்நன்றியறிதல்
12.நடுவுநிலைமை
13.அடக்கமுடைமை
14.ஒழுக்கமுடைமை
15.பிறனில்விழையாமை
16.பொறையுடைமை
17.அழுக்காறாமை
18.வெஃகாமை
19.புறங்கூறாமை
20.பயனிலசொல்லாமை
21.தீவினையச்சம்
22.ஒப்புரவறிதல்
23.ஈகை
24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை
26.புலான்மறுத்தல்
27.தவம்
28.கூடாவொழுக்கம்
29.கள்ளாமை
30.வாய்மை
31.வெகுளாமை
32.இன்னாசெய்யாமை
33.கொல்லாமை
34.நிலையாமை
35.துறவு
36.மெய்யுணர்தல்
37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்
பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி
40.கல்வி
41.கல்லாமை
42.கேள்வி
43.அறிவுடைமை
44.குற்றங்கடிதல்
45.பெரியாரைத்துணைக்கோடல்
46.சிற்றினஞ்சேராமை
47.தெரிந்துசெயல்வகை
48.வலியறிதல்
49.காலமறிதல்
50.இடனறிதல்
51.தெரிந்துதெளிதல்
52.தெரிந்துவினையாடல்
53.சுற்றந்தழால்
54.பொச்சாவாமை
55.செங்கோன்மை
56.கொடுங்கோன்மை
57.வெருவந்தசெய்யாமை
58.கண்ணோட்டம்
59.ஒற்றாடல்
60.ஊக்கமுடைமை
61.மடியின்மை
62.ஆள்வினையுடைமை
63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு
65.சொல்வன்மை
66.வினைத்தூய்மை
67.வினைத்திட்பம்
68.வினைசெயல்வகை
69.தூது
70.மன்னரைச்சேர்ந்தொழுகல்
71.குறிப்பறிதல்
72.அவையறிதல்
73.அவையஞ்சாமை
74.நாடு
75.அரண்
76.பொருள்செயல்வகை
77.படைமாட்சி
78.படைச்செருக்கு
79.நட்பு
80.நட்பாராய்தல்
81.பழைமை
82.தீநட்பு
83.கூடாநட்பு
84.பேதைமை
85.புல்லறிவாண்மை
86.இகல்
87.பகைமாட்சி
88.பகைத்திறந்தெரிதல்
89.உட்பகை.
90.பெரியாரைப்பிழையாமை
91.பெண்வழிச்சேறல்
92.வரைவின்மகளிர்
93.கள்ளுண்ணாமை
94.சூது
95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை
97.மானம்
98.பெருமை
99.சான்றாண்மை
100.பண்புடைமை
101.நன்றியில்செல்வம்
102.நாணுடைமை
103.குடிசெயல்வகை
104.உழவு
105.நல்குரவு
106.இரவு
107.இரவச்சம்
108.கயமை
1.களவியல்
109.தகையணங்குறுத்தல்
110.குறிப்பறிதல்
111.புணர்ச்சிமகிழ்தல்
112.நலம்புனைந்துரைத்தல்
113.காதற்சிறப்புரைத்தல்
114.நாணுத்துறவுரைத்தல்
115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை
117.படர்மெலிந்திரங்கல்
118.கண்விதுப்பழிதல்
119.பசப்புறுபருவரல்
120.தனிப்படர்மிகுதி
121.நினைந்தவர்புலம்பல்
122.கனவுநிலையுரைத்தல்
123.பொழுதுகண்டிரங்கல்
124.உறுப்புநலனழிதல்
125.நெஞ்சொடுகிளத்தல்
126.நிறையழிதல்
127.அவர்வயின்விதும்பல்
128.குறிப்பறிவுறுத்தல்
129.புணர்ச்சிவிதும்பல்
130.நெஞ்சொடுபுலத்தல்
131.புலவி
132.புலவிநுணுக்கம்
133.ஊடலுவகை
திருக்குறள் பொருட்பால்- 1. அரசியல்- அதிகாரம் 58. கண்ணோட்டம்
[தொகு]பரிமேலழகர் உரை
[தொகு]அதிகார முன்னுரை: தன்னோடு பயின்றாரைக் கண்டால் அவர் கூறியன மறுக்கமாட்டாமை. இஃது அவர்மேல் கண்சென்றவழி நிகழ்வதாகலின், அப்பெயர்த்தாயிற்று. மேல் வெருவந்த செய்யாமையுள் கூறிய அதனையே சிறப்புப்பற்றி விரித்துக்கூறுகின்றமையின், இஃது அதன்பின் வைக்கப்பட்டது.
குறள் 571 (கண்ணோட்ட)
[தொகு]கண்ணோட்ட மென்னுங் கழிபெருங் காரிகைகண்ணோட்டம் என்னும் கழி பெரும் காரிகை
'யுண்மையா னுண்டிவ் வுலகு. (01)'உண்மையான் உண்டு இவ் உலகு.
- இதன்பொருள்
- கண்ணோட்டம் என்னும் கழி பெரும் காரிகை உண்மையான்= கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற சிறப்புடைய அழகு அரசர் மாட்டு உண்டாகலான்; இவ்வுலகு உண்டு= இவ்வுலகம் உண்டாகாநின்றது.
- உரைவிளக்கம்
- 'கழிபெருங்காரிகை' என்புழி ஒருபொருட் பன்மொழி இவ்வுயிர் அழகது சிறப்புணரநின்றது. இவ்வழகு அதற்கு உறுப்பாகலின், 'உண்மையான்' என நிலைபேறும் கூறினார். இன்மை வெருவந்தசெய்தல் ஆகலின், அவர்நாட்டு வாழ்வார் புலியை அடைந்த புல்வாய்இனம் போன்று ஏமஞ்சாராமை பற்றி, 'இவ்வுலகுஉண்டு' என்றார்.
குறள் 572 (கண்ணோட்டத்)
[தொகு]கண்ணோட்டத் துள்ள துலகிய லஃதிலாகண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃது இலார்
'ருண்மை நிலக்குப் பொறை. (02)'உண்மை நிலக்குப் பொறை.
- இதன்பொருள்
- உலகியல் கண்ணோட்டத்து உள்ளது= உலகநடை கண்ணோட்டத்தின்கண் நிகழ்வது; அஃது இலார் உண்மை நிலக்குப் பொறை= ஆகலான், அக்கண்ணோட்டம் இல்லாதார் உளராதல் இந்நிலத்துக்குப் பாரமாதற்கே, பிறிது ஒன்றற்கு அன்று.
- உரைவிளக்கம்
- உலகநடையாவது ஒப்புரவுசெய்தல், புறந்தருதல், பிழைத்தனபொறுத்தல் என்றிவை முதலாயின. அவை நிகழாமையால் தமக்கும் பிறர்க்கும் பயன்படார் என்பதுபற்றி, 'நிலக்குப் பொறை' என்றார். ஆதற்கு என்பது சொல்லெச்சம்.
- இவை இரண்டு பாட்டானும் கண்ணோட்டத்தது சிறப்புக் கூறப்பட்டது.
குறள் 573 (பண்ணென்னாம்)
[தொகு]பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்பண் என்னாம் பாடற்கு இயைபு இன்றேல் கண் என்னாம்
'கண்ணோட்ட மில்லாத கண். (03)'கண்ணோட்டம் இல்லாத கண்.
- இதன்பொருள்
- பண் என்னாம் பாடற்கு இயைபு இன்றேல்= பண் என்ன பயத்ததாம் பாடல்தொழிலோடு பொருத்தம் இன்றாயின்; கண் என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்= அதுபோலக் கண் என்னபயத்ததாம் கண்ணோட்டம் இல்லாத இடத்து.
- உரைவிளக்கம்
- 'பண்', 'கண்' என்பன சாதிப்பெயர். பண்களாவன பாலையாழ் முதலிய நூற்றுமூன்று. பாடல்தொழில்களாவன: யாழின்கண் வார்தல் முதலிய எட்டும், பண்ணல் முதலிய எட்டும், மிடற்றின்கண் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம் என்னும் ஐந்தும், பெருவண்ணம், இடைவண்ணம், வனப்பு வண்ணம் முதலிய வண்ணங்கள் எழுபத்தாறும்ஆம். இவற்றோடு இயையாதவழிப் பண்ணாற் பயனில்லாதவாறு போலக் கண்ணோட்டத்து இயையாதவழிக் கண்ணாற்பயனில்லை என்பதாம். கண்சென்றவழி நிகழ்தல்பற்றி அதனை இடமாக்கினார். இறுதிக்கட் 'கண்' என்பதனைக் "கண்ணகன் ஞாலம்"‡ என்புழிப்போலக் கொள்க.
- ‡. திரிகடுகம்-1.
குறள் 574 (உளபோன்)
[தொகு]உளபோன் முகத்தெவன் செய்யு மளவினாற்உளபோல் முகத்து எவன் செய்யும் அளவினான்
'கண்ணோட்ட மில்லாத கண். (04)'கண்ணோட்டம் இல்லாத கண்.
- இதன்பொருள்
- முகத்து உளபோல் எவன்செய்யும்= கண்டார்க்கு முகத்தின்கண் உளபோல் தோன்றல் அல்லது வேறுஎன்ன பயனைச் செய்யும்; அளவினான் கண்ணோட்டம் இல்லாத கண்= அளவிறவாத கண்ணோடுதலை உடையவல்லாத கண்கள்.
- உரைவிளக்கம்
- தோன்றல்அல்லது என்னும் சொற்கள் அவாய்நிலையான் வந்தன. கழிகண்ணோட்டத்திலிருந்து நீக்குதற்கு, 'அளவினான்' என்றார். ஒருபயனையும் செய்யா என்பது குறிப்பெச்சம்.
குறள் 575 (கண்ணிற்கணி)
[தொகு]கண்ணிற் கணிகலங் கண்ணோட்ட மஃதின்றேற்கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃது இன்றேல்
'புண்ணென் றுணரப் படும். (05)'புண் என்று உணரப்படும்.
- இதன்பொருள்
- கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்= ஒருவன் கண்ணிற்கு அணியும் கலமாவது கண்ணோட்டம்; அஃது இன்றேல் புண் என்று உணரப்படும்= அக்கலம் இல்லையாயின் அஃது அறிவுடையோரால் புண் என்று அறியப்படும்.
- உரைவிளக்கம்
- வேறு அணிகலம் இன்மையின் 'கண்ணிற்கு அணிகலம்' என்றும், கண்ணாய்த்தோன்றினும் நோய்களானும், புலன்பற்றலானும் துயர்விளைத்தல் நோக்கிப் 'புண்ணென்று உணரப்படும்' என்றும் கூறினார்.
- இவை மூன்று பாட்டானும் ஓடாதுநின்ற கண்ணின் குற்றம் கூறப்பட்டது.
குறள் 576 (மண்ணோடி)
[தொகு]மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோமண்ணோடு இயைந்த மரத்து அனையர் கண்ணோடு
'டியைந்துகண் ணோடா தவர். (06)'இயைந்து கண்ணோடாதவர்.
- இதன்பொருள்
- கண்ணோடு இயைந்து கண்ணோடாதவர்= ஓடுதற்கு உரிய கண்ணோடு பொருந்திவைத்து அஃது ஓடாதவர்; மண்ணோடு இயைந்த மரத்தனையர்= இயங்காநின்றார் ஆயினும், மண்ணோடு பொருந்திநிற்கின்ற மரத்தினை ஒப்பர்.
- உரைவிளக்கம்
- ஓடாதவர் என்புழிச் சினைவினை முதன்மேல்நின்றது. மரமும் கண்ணோடுஇயைந்து கண்ணோடாமையின், இது தொழிலுவமம். இதனைச் சுதைமண்ணோடு கூடிய மரப்பாவை என்று உரைப்பாரும் உளர்.¶ அஃது உரையன்மை, காணப்படுவ கண்ணான்அன்றி அதன்உள்மறைந்து நிற்கின்ற ஒருசார் உள்ளீட்டாற் கூறியமையானும், "மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்ணென்- றிரக்கண்டாய்" † என்பதனானும் அறிக.
- ¶. மணக்குடவர்.
- † முத்தொள்ளாயிரம்.
குறள் 577 (கண்ணோட்டமில்)
[தொகு]கண்ணோட்ட மில்லவர் கண்ணிலர் கண்ணுடையார்கண்ணோட்டம் இல்லவர் கண் இலர் கண் உடையார்
'கண்ணோட்ட மின்மையு மில். (07)'கண்ணோட்டம் இன்மையும் இல்.
- இதன்பொருள்
- கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்= கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணுடையரும் அல்லர்; கண் உடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்= கண்ணுடையவர் கண்ணோட்டம் இலராதலும் இல்லை.
- உரைவிளக்கம்
- கண்ணுடையவர் காட்சிக்கண்ணே அஃதோடும் என்பதுபற்றிக் 'கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்' எனக்கூறிப் பின் அதனை எதிர்மறை முகத்தான் விளக்கினார். உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை.
- இவை இரண்டு பாட்டானும் கண்ணோடாதாராது இழிபு கூறப்பட்டது.
குறள் 578 (கருமஞ்)
[தொகு]கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
'குரிமை யுடைத்திவ் வுலகு. (08)'உரிமை உடைத்து இவ் உலகு.
- இதன்பொருள்
- கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு= முறைசெய்தலாகிய தம்தொழில் அழியாமல் கண்ணோடவல்ல வேந்தர்க்கு; உரிமை உடைத்து இவ்வுலகு= உரித்தாம் தன்மைஉடைத்து இவ்வுலகம்.
- உரைவிளக்கம்
- தம்மோடு பயின்றார் பிறரை இடுக்கண் செய்துழி, அவரைக் கண்ணோடி ஒறாதார்க்கு, முறைசிதைதல் மேல் "ஓர்ந்து கண்ணோடாது" ₥ என்ற முறையிலக்கணத்தானும் பெற்றாம். முறைசிதைய வரும்வழிக் கண்ணோடாமையும், வாராவழிக் கண்ணோடலும் ஒருவற்கு இயல்பாதல் அருமையின், 'கண்ணோட வல்லார்க்கு' என்றும், அவ்வியல்புடையார்க்கு உலகமுழுதும் நெடுங்காலம் சேறலின் 'உரிமையுடைத்து' என்றும் கூறினார்.
- இதனாற் கண்ணோடுமாறு கூறப்பட்டது.
- ₥. திருக்குறள்- 541.
குறள் 579 (ஒறுத்தாற்றும்)
[தொகு]ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்ஒறுத்து ஆற்றும் பண்பினார் கண்ணும் கண்ணோடிப்
'பொறுத்தாற்றும் பண்பே தலை. (09)'பொறுத்து ஆற்றும் பண்பே தலை.
- இதன்பொருள்
- ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்= தம்மை ஒறுக்கும் இயல்புடையார் இடத்தும்; கண்ணோடிப் பொறுத்து ஆற்றும் பண்பே தலை= கண்ணோட்டம் உடையராய்க் குற்றத்தைப் பொறுக்கும் இயல்பே அரசர்க்குத் தலையாய இயல்பாவது.
- உரைவிளக்கம்
- பண்பினார் என்றதனால், அவர் பயிற்சி பெற்றாம். 'ஒறுத்தாற்றும், 'பொறுத்தாற்றும்' என்பன ஈண்டொரு சொன்னீர.
குறள் 580 ()
[தொகு]பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்கபெயக் கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நயத் தக்க
'நாகரிகம் வேண்டு பவர். (10)'நாகரிகம் வேண்டுபவர்.
- இதன்பொருள்
- நஞ்சு பெயக்கண்டும் உண்டு அமைவர்= பயின்றார் தமக்கு நஞ்சிடக் கண்டுவைத்தும் கண் மறுக்கமாட்டாமையின் அதனை உண்டு பின்னும் அவரோடு மேவுவர்; நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்= யாவரானும் விரும்பத்தக்க கண்ணோட்டத்தினை வேண்டுமவர்.
- உரைவிளக்கம்
- நாகரிகம் என்பது கண்ணோட்டமாதல், "முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின்- நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்" என்பதனானும் அறிக.
- அரசர் அவரை ஒறாது கண்ணோடற்பாலது தம்மாட்டுக் குற்றம்செய்துழி என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.