உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/55.செங்கோன்மை

விக்கிமூலம் இலிருந்து

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- 1. அரசியல்- அதிகாரம் 55. செங்கோன்மை

[தொகு]

பரிமேலழகர் உரை

[தொகு]

அதிகார முன்னுரை:

அஃதாவது, அரசனாற் செய்யப்படும் முறையினது தன்மை. அம்முறை ஒருபாற்கோடாது செவ்விய கோல்போறலிற் செங்கோல் எனப்பட்டது. வடநூலாரும் தண்டம் என்றார். அது சோர்வில்லாத அரசனாற் செயற்பாலது ஆகலின் இது 'பொச்சாவாமை'யின்பின் வைக்கப்பட்டது.

குறள் 541 (ஓர்ந்து)

[தொகு]

ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டுந்ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார் மாட்டும்

'தேர்ந்துசெய் வஃதே முறை. (01)'தேர்ந்து செய்வஃதே முறை.

இதன்பொருள்
ஓர்ந்து= தன்கீழ் வாழ்வார் குற்றஞ்செய்தால் அக்குற்றத்தை நாடி; யார்மாட்டும் கண்ணோடாது= யாவர்மாட்டும் கண்ணோடாது; இறை புரிந்து= நடுவுநிலைமையைப் பொருந்தி; தேர்ந்து= அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை நூலோரோடும் ஆராய்ந்து; செய்வஃதே முறை= அவ்வளவிற்றாகச் செய்வதே முறையாம்.
உரைவிளக்கம்
நடுவு நிற்றல் இறைக்கு இயல்புஆகலின் அதனை இறையென்றும், உயிரினும் சிறந்தார்கண்ணும் என்பார் யார்மாட்டும் என்றும் கூறினார். இறைமை இறை எனவும், செய்வது செய்வஃது எனவும் நின்றன.
இதனாற் செங்கோன்மையது இலக்கணம் கூறப்பட்டது.

குறள் 542 (வானோக்கி)

[தொகு]

வானோக்கி வாழு முலகெல்லா மன்னவன்வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன்

'கோனோக்கி வாழுங் குடி. (02)'கோல் நோக்கி வாழும் குடி.

இதன்பொருள்
உலகு எல்லாம் வான் நோக்கி வாழும்= உலகத்து உயிர் எல்லாம் மழை உளதாயின் உளவாகாநிற்குமே எனினும்; குடி மன்னவன் கோல் நோக்கி வாழும்= குடிகள் அரசன் செங்கோல் உளதாயின் உளவாகா நிற்கும்.
உரைவிளக்கம்
நோக்கிவாழ்தல்- இன்றியமையாமை. வானினாய உணவை 'வான்' என்றும், கோலினாய ஏமத்தைக் 'கோல்' என்றும் கூறினார். அவ்வேமம் இல்வழி உணவு உளதாயினும் குடிகட்கு அதனாற் பயனில்லை என்பதாம்.

குறள் 543 (அந்தணர்)

[தொகு]

அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்அந்தணர் நூற்கும் அறத்திற்கு ஆதியாய்

'நின்றது மன்னவன் கோல். (03)'நின்றது மன்னவன் கோல்.

இதன்பொருள்
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது= அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும், அதனாற் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது; மன்னவன் கோல்= அரசனாற் செலுத்தப்படுகின்ற செங்கோல்.
உரைவிளக்கம்
அரசர் வணிகர் என்று ஏனையோர்க்கும் உரித்தாயினும், தலைமைபற்றி 'அந்தணர்நூல்' என்றார். "மாதவர் நோன்பும் மடவார் கற்பும்- காவலன் காவல் அன்றித் தம்காவலான் ஆகலின்1" ஈண்டு அறம் என்றது அவை ஒழிந்தவற்றை. வேதமும் அறனும் அநாதியாயினும் செங்கோல் இல்வழி நடவாவாகலின், அதனை அவற்றிற்கு ஆதி என்றும், அப்பெற்றியே தனக்கு ஆதியாவது பிறிதில்லை என்பார் நின்றது என்றும் கூறினார்.
இவை இரண்டுபாட்டானும் செங்கோலது சிறப்புக் கூறப்பட்டது.
1. மணிமேகலை: சிறைசெய்காதை, வரி: 208-09.

குறள் 544 (குடிதழீஇக்)

[தொகு]

குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னகுடி தழீஇக் கோல் ஓச்சும் மாநில மன்னன்

'னடிதழீஇ நிற்கு முலகு. (04)'அடி தழீஇ நிற்கும் உலகு.

இதன்பொருள்
குடி தழீஇக் கோல் ஓச்சும் மாநில மன்னன் அடி= தன் குடிகளையும் அணைத்துச் செங்கோலையும் செலுத்தும் பெருநில வேந்தன் அடியை; தழீஇ நிற்கும் உலகு= பொருந்தி விடார் உலகத்தார்.
உரைவிளக்கம்
அணைத்தல் இன்சொற் சொல்லுதலும், தளர்ந்துழி வேண்டுவன கொடுத்தலும் முதலாயின. இவ்விரண்டனையும் வழுவாமல் செய்வான் நிலம்முழுதும் ஆளும்ஆகலின் அவனை 'மாநில மன்னன்' என்றும், அவன்மாட்டு யாவரும் நீங்கா அன்பினர் ஆவர் ஆகலின், 'அடி தழீஇ நிற்கும் உலகு' என்றும் கூறினார்.

குறள் 545 (இயல்புளிக்)

[தொகு]

இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்டஇயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட

'பெயலும் விளையுளுந் தொக்கு. (05)'பெயலும் விளையுளும் தொக்கு.

இதன்பொருள்
பெயலும் விளையுளும் தொக்கு= பருவமழையும் குன்றாதவிளைவும் ஒருங்குகூடி; இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட= நூல்கள் சொல்லிய இயல்பாற் செங்கோலைச் செலுத்தும் அரசனது நாட்டின்கண்ணவாம்.
உரைவிளக்கம்
உளி யென்பது, மூன்றாவதன் பொருள்படுவதோர் இடைச்சொல். வானும் நிலனும் சேரத்தொழிற்பட்டு, வளஞ்சுரக்கும் என்பதாம்.

குறள் 546 (வேலன்று)

[தொகு]

வேலன்று வென்றி தருவது மன்னவன்வேல் அன்று வென்றி தருவது மன்னவன்

'கோலதூஉங் கோடா தெனின். (06)'கோல் அதூஉம் கோடாது எனின்.

இதன்பொருள்
மன்னவன் வென்றிதருவது வேல் அன்று கோல்= மன்னவனுக்குப் போரின்கண் வெற்றியைக் கொடுப்பது அவன் எறியும் வேல்அன்று, கோல்; அதூஉம் கோடாது எனின்= அஃதும் அப்பெற்றித்தாவது, தான் கோடாதாயின்.
உரைவிளக்கம்
கோல் செவ்விதாயவழியே வேல் வாய்ப்பது என்பார் 'வேல்அன்று' என்றார். "மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்"2 என்றார் பிறரும். கோடான்3 என்பது பாடமாயின் கருவியின் தொழில் வினைமுதன்மேல் நின்றதாக உரைக்க.
2.புறநானூறு- 55.
3.மணக்குடவர்.

குறள் 547 (இறைகாக்கும்)

[தொகு]

இறைகாக்கும் வையக மெல்லா மவனைஇறை காக்கும் வையகம் எல்லாம் அவனை

'முறைகாக்கும் முட்டாச் செயின். (07)'முறை காக்கும் முட்டாச் செயின்.

இதன்பொருள்
வையகம் எல்லாம் இறை காக்கும்= வையகத்தை எல்லாம் அரசன் காக்கும்; அவனை முறை காக்கும்= அவன்தன்னை அவனது செங்கோலே காக்கும்; முட்டாச் செயின்= அதனை முட்டவந்துழியும் முட்டாமற் செலுத்துவானாயின்.
உரைவிளக்கம்
முட்டாமற் செலுத்தியவாறு, மகனை முறைசெய்தான்4 கண்ணும், தன் கைகுறைத்தான்5 கண்ணும் காண்க. 'முட்டாது' என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது.
இவை நான்கு பாட்டானும் அதனைச் செலுத்தினான் எய்தும் பயன் கூறப்பட்டது.
4. மனுநீதிச்சோழன். (சிலப்பதிகாரம், வழக்குரைகாதை, வரி: 53-55.)
5. பாண்டியன் நெடுஞ்செழியன். (சிலப்பதிகாரம், கட்டுரைகாதை, வரி 42-53.)

குறள் 548 (எண்பதத்தா)

[தொகு]

எண்பதத்தா னோரா முறைசெய்யா மன்னவன்எண் பதத்தான் ஓரா முறை செய்யா மன்னவன்

'றண்பதத்தாற் றானே கெடும். (08)'தண் பதத்தான் தானே கெடும்.

இதன்பொருள்
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்= முறைவேண்டினார்க்கு எளிய செவ்வியை உடையனாய் அவர் சொல்லியவற்றை நூலோர் பலரோடும் ஆராய்ந்து, நின்ற உண்மைக்கொப்ப முறைசெய்யாத அரசன்; தண் பதத்தான் தானே கெடும்= தாழ்ந்த பதத்திலே நின்று தானே கெடும்.
உரைவிளக்கம்
'எண்பதத்தான்' என்னும் முற்றுவினை எச்சமும், ஓரா என்னும் வினையெச்சமும், செய்யா என்னும் பெயரெச்ச எதிர்மறையுள் செய்தல்வினை கொண்டன. தாழ்ந்த பதம்- பாவமும் பழியும் எய்திநிற்கும் நிலை. "அல்லவை செய்தார்க்கு அறங்கூற்றம்"6 ஆகலின், பகைவர் இன்றியும் கெடும் என்றார்.
இதனான் முறைசெலுத்தாதானது கேடு கூறப்பட்டது.
6. நான்மணிக்கடிகை- 85.

குறள் 549 (குடிபுறங்)

[தொகு]

குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்குடி புறம் காத்து ஓம்பிக் குற்றம் கடிதல்

'வடுவன்று வேந்தன் றொழில். (09)'வடு அன்று வேந்தன் தொழில்.

இதன்பொருள்
குடி புறம் காத்து ஓம்பிக் குற்றம் கடிதல்= குடிகளைப் பிறர் நலியாமற் காத்துத் தானும் நலியாது பேணி, அவர்மாட்டுக் குற்றநிகழின் அதனை ஒறுப்பான் ஒழித்தல்; வேந்தன் வடு அன்று தொழில்= வேந்தனுக்குப் பழியன்று, தொழிலாகலான்.
உரைவிளக்கம்
துன்பம் செய்தல், பொருள் கோடல், கோறல் என ஒறுப்பு மூன்று; அவற்றுள் ஈண்டைக்கு எய்துவன முன்னைய என்பது 'குற்றங்கடிதல்' என்பதனாற் பெற்றாம். தன் கீழ்வாழ்வாரை ஒறுத்தல் அறன் அன்மையின், வடுவாம் என்பதனை ஆசங்கித்து, அஃதாகாது, அரசனுக்கு அவரை அக்குற்றத்தின் நீக்கித் தூயராக்குதலும் சாதிதருமம் என்றார்.

குறள் 550 (கொலையிற்)

[தொகு]

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்

'களைகட் டதனொடு நேர். (10)'களை கட்டதனொடு நேர்.

இதன்பொருள்
வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்தல்= அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துத் தக்கோரைக் காத்தல்; பைங்கூழ் களை கட்டதனொடு நேர்= உழவன் களையைக் களைந்து பைங்கூழைக் காத்ததனோடு ஒக்கும்.
உரைவிளக்கம்
கொடியவர் என்றது, தீக்கொளுவுவார், நஞ்சிடுவார், கருவியிற்கொல்வார், கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறனில் விழைவார் என்று இவர் முதலாயினாரை. இவரை வடநூலார் ஆததாயிகள் என்ப. இப்பெற்றியாரைக் கண்ணோடிக் கொல்லாவழிப் புற்களைக்கு அஞ்சாநின்ற பைங்கூழ்போன்று நலிவு பல எய்தி உலகு இடர்ப்படுதலின், கோறலும் அரசர்க்குச் சாதிதருமம் என்பதாயிற்று.
இவை இரண்டு பாட்டானும் செங்கோல்செலுத்தும் வெண்குடை வேந்தற்குத் தீயார்மாட்டு மூவகை ஒறுப்பும் ஒழியற்பால அல்ல என்பது கூறப்பட்டது.